https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, May 4, 2017

மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx) 4



IV இங்கிலாந்தில் மார்க்ஸ் மறைவு குறித்து
1849முதல் அவர் மறைவுக்காலம்வரை மார்க்ஸ் இங்கிலாந்துவாசியாகவே இருந்தார். 1849-56 களில் அவர் குடியிருந்த டீன் தெருவிலிருந்து 10 நிமிட நடையில் பிரிட்டிஷ் ம்யூசியம் இருந்தது. .
லண்டன் பத்ரிக்கைகளும் பெருமளவு செய்தி வெளியிடவில்லை. லண்டன் Annual Register ஆண்டு இதழ் மார்க்ஸ் சோசலிச தலைவர்களுள் முதன்மையானவர், காபிடல் சோசலிசத்தின் பாடப்புத்த்கம் என தெரிவித்தது. Guardian, Jewish Chronicle போன்றவை எச்செய்தியும் மார்க்ஸ் மறைவு குறித்து போடவில்லை. Illustrated London News Obituary பகுதியில் மார்க்ஸ் மறைவு இடம் பெறவில்லை. லண்டனுக்கு வெளியே மான்செஸ்டர் கார்டியனில் செய்தி கட்டுரை இடம் பெற்றது. லண்டன் டெய்லி நியுஸ் வெளியிட்ட தவறான தகவலை குறித்து மார்க்சின் புதல்வி எலியனார் ஆசிரியர்க்கு கடிதம் மார்ச் 19, 1883ல் எழுதினார்.
லண்டனில் வெளியான டைம்ஸ் மார்ச் 17 1883ல் அதன் பாரிஸ் நிருபர் மூலம் வந்த  மார்க்ஸ் மறைவு செய்தியை வெளியிட்டது. முதலாளித்துவம் மீது தாக்குதல் தரும் மிக முக்கிய காபிடலை அவர் எழுதினார். சிலகாலமாக அவர் நோய்வாய்பட்டு பலவீனமாக இருந்தார் என்கிற செய்தியை தந்தது டைம்ஸ். மேற்குறித்த பத்ரிக்கைகளில் அவர் காபிடல் எழுதியது சோசலிச இயக்கத்திற்கு கலங்கரை விள்க்ககமாக இருந்தது, பிரெளதானுடன் வாதிட்டது போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தன.
ஜெர்மனியில் கார்ல்காட்ஸ்கி நடத்திய நியு ஜெயிட் மற்றும் இரு பத்ரிக்கைகள் செய்தி வெளியிட்டன. புடாபெஸ்ட்டில் அர்பெய்ட்ட்ர் வோஷென் கிரானிக்கிளில் பாரிஸ் கம்யூன் தலைவர்களுள் ஒருவரான லியோ ஃப்ராங்கல் மார்க்ஸ் குறித்து அஞ்சலி கட்டுரை எழுதியிருந்தார். பிரஞ்சு பத்ரிக்கைகள் சில தலையங்கம் எழுதியிருந்தன. மார்க்சின் மருமகன் சார்லஸ் லோங்கே  தொடர்புடைய பத்ரிக்கை லா ஜஸ்டிஸ் எழுதியது. சில அனார்க்கிஸ்ட்கள் சோசலிஸ்ட்களை எரிச்சல் படுத்திய இரங்கல் செய்திகளை தந்ததாக அறிய முடிகிறது. Vossische Zeitung பெர்லின் பத்ரிக்கை சோசலிஸ்ட்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர் என அஞ்சலி செய்தது. கார்ல்மார்க்ஸ் எனும் பெரும் சுரங்கத்திலிருந்து நாணயங்களை உருவாக்க வேண்டிய கடமை பெபல், லீப்னெக்ட் போன்றவர்க்கு இருப்பதாக அப்பத்ரிக்கை சுட்டிக்காட்டியது.

Scholarly heaven star என அழைத்த புடாபெஸ்ட் பத்ரிக்கை அவர் பூமியில் நடந்த சிறந்த மனிதர் என்றது. தொழிலாளர் விடுதலை எனும் லட்சியம் சார்ந்து தன் வாழ்க்கையை அற்புதமாக்கி கொண்டவர் அவர் என்றது. அவர் தன் படைப்பின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும்போதே  மரணமடைந்துவிட்டார். La proletaire மார்ச் 24 1883ல் மார்க்ஸ் இணையற்ற விமர்சனாவாதி, சிந்தனையாளர் என்றது. அவர் கடவுள் இல்லை . ஆனால் ஓவன், செயிண்ட் சைமன், பூரியர் , பிரெளதான் போல் விஞ்சி நிற்கிறார் என்று எழுதியது. மார்க்சின் உற்றார் வருத்தப்படும் அளவிற்கு கருத்துதனை தற்போது சொல்ல விரும்பவில்லை எனவும் எழுதியது.
அந்நேரத்தில் இத்தாலியில் மார்க்சின் செல்வாக்கைவிட பகுனின் செல்வாக்குதான் கூடுதலாக இருந்ததாக எங்கெல்ஸ் தெரிவித்தார். மிலான் ரோமில் இருந்து வந்த ஜனநாயக சோசலிச பத்ரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. சில முக்கிய பகுனிஸ்ட்கள் பின்னர் மார்க்சியர்களாகவும் மாறினர். டுரின் பகுதி பேராசிரியர் லோரியா மார்க்சுடன் உரையாடல் நடத்தியிருந்தார். ஜாரின் ருஷ்யாவில் மார்க்ஸ் மறைவு செய்தி பெருமளவு வெளியிடப்பட்டிருந்தது. மாஸ்கோ நியூஸ், வார்சா டைரி, வோல்கா மானஜர் , வீக் போன்ற பலவகைப்பட்ட அரசியல் சிந்தனைகள் உள்ள பத்ரிக்கைகள் காபிடலின் ஆசிரியர், சிறந்த சோசலிஸ்ட் என புகழாரம் சூட்டின.
மாஸ்கோ லா சொசைட்டி சார்பில் மார்ச் 28 அன்று நினைவாஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. மாஸ்கோ பல்கலைகழக பொருளாதார பேராசிரியர் சுப்ரோவ் அதில் உரையாற்றினார். பீட்டர்ஸ்பர்க் செண்ட்ரல் பல்கலைகழக மாணவர் வட்டம் முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். மறைவை அறிந்த அவர்கள் மார்க்ஸிற்கு மலர்வளையம் என்கிற கட்டுரையை  வெளியிட்டிருந்தனர். ருஷ்ய சோசலிஸ்ட்களான பிளக்கானோவ், அக்சல்ராடு , வெரா சசூலிச்  ஜூரிச் சோசியல் டெமாக்ரட் பத்த்ரிக்கையில் கூட்டாக இரங்கல் செய்தி தந்திருந்தனர். நிதி திரட்டி அவரது ஆக்கங்கங்களை மக்கள்முன் கொண்டுசெல்வோம் என்றனர். மாஸ்கோ பத்ரிக்கைகள் மார்க்சை அற்புதமான நவீன பொருளாதார அறிஞர் மற்றும் பிரதிநிதி என அழைத்திருந்தன.
Capital is necessarily the result of plunder என்று கிண்டல் தொனியில் பீட்ட்டர்ஸ்பர்க் பத்ரிக்கை சிட்டிசன் செய்தி போட்டிருந்தது. Most of all, people see that what these learned men offer for the future of society is a vague, mysterious, colorless and purely materialistic communal life என்கிற விமர்சன பார்வையுடன் மார்க்ஸ் மறைவை வெளியிட்டது.
சுவிட்ஜர்லாந்த் பத்த்ரிக்கை சோசியல்டெமாக்ரட் மார்க்ஸ் சோசலிசத்திற்கு விஞ்ஞான அடிப்படைகளை உருவாக்கியவர் என்றது. அவரின் அறிவுப்புதையலும் விமர்சனகூர்மையும் நிகரற்றவை என்றது. தனது மகத்தான படைப்புகள்மூலம் அவர் அவருக்குரிய நினைவு சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் என்றது.
மார்க்ஸ் குறித்து இத்தாலியில் லோரியா எழுதியிருந்தவற்றைப்பற்றி பின்னர் கிராம்சி போன்றவர்கள் விமர்சித்தனர். லோரியா  historical Economism என்று பேசியதை கொச்சை மார்க்சியம் என கிராம்சி விமர்சித்தார். ஆனால் மார்க்ஸ் குறித்து லோரியா இத்தாலியில் செல்வாக்கு பெற்ற நுவா அண்டொலொஜி பத்ரிக்கையில் எழுதியதை பேரா பிலிப் போனர் பாராட்டி சொல்கிறார்.
NewYorker Volkszeitung பத்ரிக்கையில் மார்ச் 18 1883ல் மார்க்சும் ருஷ்ய சோசலிஸ்ட்களும் என்கிற கட்டுரையை செர்ஜியஸ் என்பார் எழுதினார். N G Chernishevsky என்கிற மூத்த ருஷ்ய சோசலிச சிந்தனையாளர்தான் மார்க்சின் எழுத்துக்களுடன் 1850களில் தொடர்பு வைத்திருந்தார். 1860களில் ருஷ்ய பத்த்ரிக்கை சுதந்திரம் சற்று தளர்த்தப்பட்டபோது காபிடலை மொழிமாற்றி கொணரவேண்டும் என ருஷ்ய சோசலிஸ்ட்கள் முயற்சி எடுத்தனர். ருஷ்ய புரட்சிகரவாதிகளிடமும் மார்க்சிஸ்ட்கள், பகுனிஸ்ட்கள் என்கிற உடைவு ஏற்பட்டது. ஆனால் ருஷ்யாவிற்கு மார்க்ஸ் அந்நியர் அல்லர், நம்மவர் என்கிற அளவு செல்வாக்கு பெருகியது என அப்பத்ரிக்கை எழுதியது. பிளக்கானாவ் போன்ற மூத்தவர்கள் கூட பகுனின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு மார்க்சியம் நோக்கி வந்தவர்கள்தான்.
ஆம்ஸ்டர்டாமில் வந்த டான் பத்ரிக்கை கட்டுரையில் சமுகத்தின் நலன்களை ஒன்றிணக்கும் மகத்தான மனிதர்கள் வரிசையில் மார்க்ஸ் இணைந்துவிட்டதாக எழுதியது. நம்முடைய காலத்தின் ஈடி இணையற்ற பொருளாதார மேதை என்றது. Men of Importance என்பதை எழுதிய   Kerdijk என்பார் கம்யூனிஸ்ட் அறிக்கையை விமர்சித்து தனது மார்க்ஸ் குறித்த செய்தியை தந்த்திருந்தார். அவரது விமர்சனம்”Communist Manifesto the language of demagogue without conscience" என்பதாக இருந்தது.
Achille Loria  எழுதியதில்  கார்ல் மார்க்ஸ் வேறுநாடுகளுக்கு குடியேறியது அவரின் சிந்தனையை போர்க்குணத்தை  ஆற்றலை மேம்படுத்திவிட்டது. சோசலிசத்தின் தாந்தே மார்க்ஸ் என்றார் லோரியா. லாசேலும் மார்க்சும் ஹெகலிடமிருந்து எடுத்துக்கொண்ட வித்தியாசப்பட்ட அமசங்களை அக்கட்டுரையில் லோரியா விளக்குகிறார். Scholastic Socialism is thus a product of Marx's revitalisation of economic index... by Capital he awoke the sleeping politics of his time என லோரியா  எழுதினார். மார்க்சின் Theory of Value அறிமுகப்படுத்தி அவரது மகள் எலியனார் மார்க்ச் ஜூன் 1883ல் ப்ராக்ரஸ் இதழில் எழுதினார்.
Chicago Tribune ஜனவரி 5 1879ல் மார்க்ஸ் கொடுத்த பேட்டியில் கட்சி அல்ல, தேசம்தான் புரட்சி செய்யவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். அதேபோல் காபிடலை ஆங்கிலத்தில் ஜெர்மன் மூலத்திலிருந்து கொண்டுவருவது கடினம் என்றும் பிரஞ்சு மொழியில் வந்துள்ள மொழிபெயர்ப்பிலிருந்து கொண்டுவரலாம் எனவும் மார்க்சிடம் (1880) கருத்து இருந்தது.
 மார்க்சின் மகள் லாரா லபார்க் எங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ், எலியனார் இருவரும் literary Executors என சொன்னதை கேள்விக்கு உட்படுதியதாகவும் அறியமுடிகிறது. எங்கெல்ஸ் அது தனது சொற்றொடர்தான் என அவருக்கு பதில் எழுதியதாகவும் தெரிகிறது.
மார்க்சின் 200வது

Ref
1. Karl Marx Remembered Comments at the time of his  death
2.மார்க்ஸ்- எங்கெல்ஸ் நினைவுகுறிப்புகள்


No comments:

Post a Comment