III
சமுக தத்துவ ஆய்வுகளிலிருந்து மார்க்ஸ் பொருளாதார ஆய்வுகள் நோக்கி தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். கடுமையாக 15 ஆண்டுகள் சொல்லணாத் துயர் சூழ 1867ல் காபிடல் முதல் வால்யூம் வெளியிடப்பட்டது. மற்ற இரு வால்யூம்களும் சரிபார்க்கப்பட்டு நேர் செய்யப்பட்டால் வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. அவர் மறைவிற்கு பின்னர் எங்கெல்ஸ் அப்பணியை செய்கிறார். அதன் ஆங்கில பதிப்பகத்தார் 1888 work deals the system of
capitalistic production which is based on the fact that workman sells his
labour power as commodity என சுருக்கமாக குறிப்பிட்டனர்
. The
transition from capitalism to socialism will have as its political organ the
revoultionary dictatorship of the proletariat என முதலாளித்துவத்திலிருந்து சோசலிச மாறும் கட்டத்திற்கு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் அரசியல் கருவி குறித்து மார்க்ஸ் பரிந்துரைத்தார். அன்று நிலவிய முக்கிய குறை மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் ஆங்கிலேயர்களுக்கு ஜெர்மன் பிரஞ்சு தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் மிக குறைவாக இருந்தனர். Belfort Bax, Hyndman போன்ற சிலர்தான் மார்க்ஸ் இருக்கும்போதே ஆங்கில இதழ்களில் அவரது கருத்துப்பற்றி கட்டுரைகள் எழுதினர்.
நவீன சிந்தனையின் தலைவர்கள் என்ற ஆக்கத்தில் பெல்பார்ட் பாக்ஸ் டிசம்பர் 1881 கார்ல் மார்க்ஸ் குறித்தும் அவரது காபிடலை அறிமுகப்படுத்தியும் எழுதினார். அதில் அவர் முடிக்கும்போது எழுதுகிறார் “I cannot conclude this brief sketch of one of the most
important books of the century, without expressing my surprise that an English
version should not exist of a work, the examples and facts of which are drawn
almost entirely from the history of English industry, and at the same time my
regret that it must remain a sealed volume to all unable to read French or German
with ease. As regards style, I may observe that Karl Marx is only equalled by
one other German writer (Schopenhauer) for fascination and verve. His book
rivets the attention as well by its humour and readily comprehensible
presentation of the most abstract principles, as by the importance of the
subject of which it treats.” இப்படிப்பட்ட அருமையான மிக முக்கிய புத்தகம் இங்கிலாந்தின்
தொழிலை பேசக்கூடிய புத்தகம் ஆங்கிலத்தில் வராமல் இருக்கிறதே என்கிற கவலையை அவர் தெரிவித்திருந்தார்.
பின்னால் ’காபிடல்’ ஆங்கிலத்தில் வந்துவிட்டது.
Hyndmanக்கு கூட கன்சர்வேடிவ் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் மார்க்ஸ் குறித்து
அறிமுகம் கிடைத்தது. அவர் மார்க்சை சந்தித்து உரையாடி வந்தார். அவரின் மேதாவிலாசத்தால் கவரப்பட்டார். Prof Edward S Beesly (IWMA அமர்விற்கு தலைமையேற்றவர்) மார்க்ஸ் குறித்து பெருமிதம் கொண்டவராக இருந்தார். Marx was a walking
encyclopaedia, in knowledge of history, economics and philosophy having had
hardly any equal என பேராசிரியர் எட்வர்ட் பீஸ்லி மார்க்சைப்பற்றி குறிப்பிட்டார்.
Record of an Adventurous Life என்பதில்
Hyndman மார்க்ச்- எங்கெல்ஸ் நட்பு, வேறுபாடுகள் குறித்து எழுதியுள்ளார். மார்க்ஸ்- எங்கெல்ஸ் இருவரும் 1881களில் அவரை நம்ப மறுக்கும் சூழல் ஏற்பட்டது. தன்னிடம் வந்து செய்தி வாங்கிக்கொண்டு அதை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதன் என்கிற கருத்து உருவானது. The Historical Basis of Socialism என்கிற புத்தகத்தை மார்க்ஸ் மறைந்த 1883ல் ஹைண்ட்மேன் எழுதினார். இங்கிலாந்த் ஃபார் ஆல் என்பது முன்னர் எழுதப்பட்டு அது மார்க்சுடன் கருத்து வேறுபாட்டிற்கு காரணாமாயிற்று. மார்க்சின் மூன்றாவது மகள் எலியனார் மார்க்ஸ் சில ஆண்டுகள் ஹைண்ட்மேன் கட்சியில் இணைந்து பணியாற்றினார். எங்கெல்ஸ்க்கு எப்போதும் அவர் குறித்து நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. சார்டிஸ்ட் வகைப்பட்ட இயக்கத்தை புதுப்பித்து டெமாக்ரடிக் ஃபெடெரேஷன் என ஹையிண்ட்மேன் துவக்கினார். மார்க்சிடம் இது குறித்து அவர் விவாதித்ததாகவும் அதன் வெற்றி சந்தேகமே என மார்க்ஸ் கருதியதாகவும் பீர் தெரிவிக்கிறார்.
John Stuart
Mill , August Comte நட்பால் மில் அவர்கள் காம்டேவை ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மார்க்ஸ் மறைந்த 6 ஆண்டுகளில் சிட்னிவெப் எழுதிய இங்கிலாந்தில் சோசலிசம் வெளியாகிறது. அரசியல் பொருளாதார வகைப்பட்டு சோசலிச சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்தன என்பது குறித்து அவர் அதில் எழுதுகிறார். மில்லின் 1848 அரசியல் பொருளாதாரம் பற்றி குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் சோசலிஸ்ட்கள் பொருளாதாரா வரலாற்றில் மார்க்சின் முக்கிய பங்களிப்பை பாராட்டினாலும் கண்மூடித்தனமாக மார்க்சிடம் போகவில்லை என்கிற பதிவை வெப் தருகிறார். மார்க்சின் மூலதன ஆங்கில பதிப்பு உடன் விற்று
தீர்ந்தது . மார்க்ஸ் மறைந்த சில மாதங்களில் ஜனவரி 1884ல் பாபியன் சொசைட்டி நிறுவப்படுகிறது.
Fabius Cunctatorஎன்கிற ரோமன் ஜெனரலின் புகழ்வாய்ந்த அறிவுரையில் வசப்பட்டு For the Right Moment you must wait பாபியன் என்கிற
பெயரை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். பெர்னார்ட் ஷா, சிட்னி வெப், அன்னிபெசண்ட் போன்றவர்
இதில் பணியாற்றினர். Socialism had to be adapted to democracy என்பது மார்க்சியத்திலிருந்து
பாபியனிச மாற்றம் என்றனர். Owenite
Socialism was idyllic; Marxist socialism was revoulutionary and theoretical;
Fabian Socialism is everday politics for social regeneration என்ற விளக்கத்தை தந்தார் பீர்.
Socialism
Critical and Constructive புத்தகம் Ramsay Macdonald எழுதி 1921ல் வெளியானது. Owneite experiments from land
settlements to labour exchanges proved that society must be dealt with as a
whole and that no sections could live ideally within fences.. The first
systematic exposition of Socialist doctrines brought up to his time was that
made by marx not only in his work capital but in letters, memos manifestoes and
articles which he poured out during his long life of ceaseless strife and
controversy என மார்க்ஸ் குறித்து மக்டானல்ட் எழுதினார். அவர் இன்று கிறிஸ்து முகமது மாதிரி ஆக்கப்பட்டுள்ளார். அவரது பொருளாதார கொள்கைகள் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன. அவரது வரலாற்று தத்துவமும் அப்படித்தான். ஆனால் அவர் இன்று
மத தலைவர்கள் போல் வந்தடைந்துள்ள நிலைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. He was the first to give the
working class a hope that by adopting a certain policy they would attain
freedom; the policy which he put before them was one enlivened their spirit,
appealed to their intelligences and set the lines of their battle just in such
a way as to inspire them with the greatest possible fighting zeal both on
account of rich friuts of the victory that was to be gained and of the steely
antagonism against the enemy which it put in their hearts" என அற்புத சித்திரம் ஒன்றை ராம்சே மாக்டானல்ட் வழங்கியிருந்தார்
மார்க்சின் உபரிமதிப்பு கோட்பாட்டை சந்தேகத்திற்குரிய பொருளாதார பார்முலா என்றார் ராம்சே. பொருளாதார விமர்சன பிரதிகள் என்பதை போராடும் வாழும் இயக்கமாக மாற்றினார் மார்க்ஸ். எனவே அவர் personal embodiment of working class
against capitalism and its fight for socialism என ராம்சே மார்க்ஸ்க்கான மரியாதையும் தந்தார். Marx
was greater and more abiding than Marxism.. It is not Marxism that survives but
Marx என்கிற நூதனமான
கருத்தை ராம்சே மக்டானல்ட் 95 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் மறைந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர், சோவியத் புரட்சியின் 5 ஆண்டுகளில் வெளிப்படுத்தினார். ராம்சே மக்டானல்ட் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் முதல் பிரதமராக 1924ல் வந்தவர்.
லேபர் கட்சியின் முக்கிய கொள்கையாளராக இருந்தவர்.
சோவியத் புரட்சி நடந்த காலத்தில் கில்ட் சோசலிசம் என்பது இங்கிலாந்தில் வளரத்துவங்கியது, அதன் கொள்கைகள் குறித்து ஜி டி எச் கோல் எழுதிய self Govt and Industry என்பதில் நாம் அறியமுடியும். State as the Executive of
Ruling class மார்க்சிய பார்வையிலிருந்து மாறுபட்டு State as the political and governmental
institution of citizens and consumers என பேசி வந்தனர். 1880
துவங்கி 30 ஆண்டுகள் பல்வேறு பெயர்களில் சோசலிசம் பேசினாலும் பிரிட்டிஷ் சோசலிஸ்ட்கள் நிலங்களை தேசியமயாமாக்கல் என்பதை வலியுறுத்தினர்.
prof Richard
T Ely 1883 French and German socialism
in Modern Times எழுதினார். நியூயார்க்கில் வெளியானது. மார்க்ஸ் இறந்த ஆண்டில் வந்த புத்தகம்.. மார்க்ஸ் எழுதிய காபிடல் சோசியல் டெமாக்ரட்களுக்கு பைபிள் போல ஆகியுள்ளது என்கிறார் அவர். அப்படி சொல்வதற்கு அது பொருத்தமான ஒன்றும்கூட என்றார். ரிகார்டோவிற்கு இணையான படைப்பது. அதன் ஆழம் காரணாமாக
படிப்பதற்கு சற்று கடுமையாக இருக்கிறது என்றார். Political
economy, especially knows no writer who has influenced both masses and scholars
in a more decided, throughgoing mannner than Karl Marx என்று அவர் அப்புத்தகத்தில் மிகச் சரியாக
135 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸ் மறைந்தபோது அமெரிக்காவில் நடந்த இரங்கல் கூட்டங்களை
குறிப்பாக கூப்பர் சார்பில் நடத்தப்ப்ட்ட பெரும் நினைவாஞ்சலியை அவர் குறிப்பிடுகிறார்.
மார்க்சின் செல்வாக்கில் நடந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு முடிந்துவிட்டதாக நினைக்க
முடியாது என்றும் அய்ரோப்பா அரசாங்கங்களில் அவ்வமைப்பு செலுத்திய செல்வாக்கை குறைத்து
மதிப்பிட முடியாது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
மார்க்சின் துணவியார் ஜென்னி மறைவு, அடுத்து மகள் மறைவு அவரை
உலுக்கின. அவர் உடல்நல்ம் குன்றிப்போனார். எதையும் ஆழ்ந்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
மார்ச் 14 1883 மதியத்தில் தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் மரணித்த செய்தியை
எங்கெல்ஸ் அறிவித்தார்.
சோசலிச சிந்தனைகள் குறித்து பலர் பேசியிருந்தாலும் அதை புரட்சியின் மூலம் நடைமுறைப்படுத்துவதில் தொழிலாளி வர்க்கத்தின் பிரதான பாத்திரத்தை முதலில் அழுத்தமாக வெளிப்படுத்தியவர் மார்க்ஸ் என்ற புகழ் அவருக்கு கிட்டியது. ராம்சே மக்டானல்ட் சொல்வது போல் உலகம் மார்க்சியத்தை புரிந்து
கொண்டதோ இல்லையோ மார்க்சை கொண்டாடுவதை அவரது 200வது பிறந்த நாளில் காணமுடிகிறது. காந்தியை
கொண்டாடிவிட்டு காந்திய சாரங்களை கைவிட்டதுபோல் மார்க்சியம் ஆகிவிடக்கூடாது என்கிற
கவலையை பலரும் வெளிப்படுத்தாமல் இல்லை. இவ்வாண்டு 2017 சோவியத் போல்ஷ்விக் அனுபவத்தின்
நூற்றாண்டு மட்டுமல்ல, காபிடல் வெளிவந்த 150 ஆண்டுகளும் ஆகும். அரசியல் பொருளாதாரம் குறித்த விரிவான கற்கைகளின்
ஆண்டாகவும் இது அமைந்தால் அனுபவங்களும் அறிவும் செழுமையடையும்.
Ref:
1. History of
British Socialism- BEER
2. Life of Marx,
Engels- David Riaznov
3. British Trade Unionism- Works of Sidney, G D H Cole
4. Hyndman - Record of an Adventurous Life
5. Socialism Critical and Constructive- Ramsay
Mcdonald
6. French and German socialism in Modern Times- prof
Richard T Ely
Comments
Post a Comment