கடந்த ஏப்ரல் 15, 2016 அன்று கடலூரில் அம்பேத்கார் 125க்கான தனித்த கூட்டம் ஒன்றிற்கு தோழர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார். கடுமையான சுற்றுப்பயணம் இருந்தபோதிலும் அம்பேத்கார் சிந்தனை- செயல்பாட்டின் முக்கியத்துவம் உணர்த்தப்படவேண்டும் என்ற கடமையில் அக்கூட்டத்தில் ஆற்றிய உரை சிறப்பாக அமைந்தது. ஓரிரு factual error இருப்பதை நான் உணர்ந்தேன் . அடிப்படையில் மேம்பட்ட உரையாக் இருந்தது. தோழர்கள் பதிவு செய்து அதை 21 பக்க தட்டச்சு செய்து பெரும் உழைப்பை நல்கியுள்ளனர். தோழர் நீலகண்டனின் உழைப்பிற்கு வணக்கம்.
German Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸ் குறிப்பு சிதறல்கள் - ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் . ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு
Comments
Post a Comment