26-5-16 கம்பராமாயணம்
இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி
முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை
தந்திருக்கிறேன்
69.
கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.
குடிக்கு
எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்-
செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை
வளம் சுரக்கும்-
நன்செயும் புன்செயும்
ஆகிய நிலங்கள் அளவற்ற
நிறை வளத்தைக்
கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள் நல்ல
இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம்
ஒழுக்கம் சுரக்கும்-
பெறுவதற்கு அரியதாகிய
குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்
70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
ஓர்
குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும்
இல்லாமையால்; கூற்றம்
இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை; தம்
சிந்தையின் செம்மையால்-
அந்நாட்டு மக்களின் மனச்
செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல்
செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு
இல்லை- மேன்மையைத்
தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.
78.
நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
நெல்மலை
அல்லன - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத
இடங்களில்; நிரைவரு தரளம்-
வரிசை வரிசையாக
முத்துக்குவியல்கள் காணப்படும்;
சொல்மலை அல்லன-
சொன்ன அந்த முத்துக்
குவியல்கள் இல்லாத இடங்களில்;
தொடுகடல் அமிர்தம்-தோண்டப்பட்ட
கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை
அல்லன- அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில்;நதிதரு
நிதியம்- நதிகளால்
கொண்டுவந்து குவிக்கப்பட்ட
பொன் முதலிய பொற்
குவியல்களில் பல
இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.
கோசல
நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும் குவிந்து
மலைகளைப் போல
மண்டிக் கிடந்தன
என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.
80.
கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.
கோகிலம்
நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப் பாகு
இயல் கிளவிகள்- அந்நாட்டுப்
பெண்களின் பாகு போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம்;
கேகயம் நவில்வன அவர் பயில்
நடமே- மயில்கள் நடந்து பழகுவன
அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்;
உமிழ்வன நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.
இள
மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும் உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக்
கூறியதால் இது
எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை அணி என்றும் கூறுவர். பாகு இயல்
கிளவி: பாகு போன்ற இனிய மொழி,
கேகயம்: மயில்.
நகை: பல். கிளவி: சொல். தரளம்:முத்து
84.
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
ஓர்
வறுமை இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்;
வண்மை இல்லை-
கொடைக்கு அங்கே இடமில்லை;நேர்
செறுநர் இன்மையால்-
நேருக்கு நேர்
போர்புரிபவர் இல்லாததால்; திண்மை
இல்லை- உடல் வலிமையை எடுத்துக்காட்ட
வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால்-
பொய்ம் மொழி இல்லாமையால்;
உண்மை இல்லை-
மெய்ம்மை தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து
விளங்குவதால்; வெண்மை
இல்லை- வெள்ளறிவாகிய அறியாமை இல்லை.
கோசலை
நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின் சிறப்புத்
தெரிவதில்லை; பகைகொண்டு
போர்புரிபவர் இல்லாதலால் உடல் வலிமையை
உணர வழியில்லை;
பொய் பேசுவோர் இல்லாமையால்
உண்மையின் பெருமை தெரிய வழியில்லை;
கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால்
அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’
என்று
Comments
Post a Comment