என்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்ற நிலை இருந்து வந்தது. மண்டை காயக்கூடிய மார்க்சிய எழுத்துக்களை மட்டும்தான் பழக்கம் காரணமாக படிக்க முடியுமோ என்ற நிலை..
சில நண்பர்கள் என்னை Raw எனக்கூட விமர்சித்த காலமுண்டு.. சில இலக்கிய எழுத்துக்களை தற்போது படிக்க முடிகிறது. தக்கையான சாதாரணமாக புரிந்து கொள்வதற்கு எந்த உழைப்பும் தேவைப்படாத சாவி அவர்களின் என்னுரை 101 பக்க தொடர் கட்டுரைகள்- வார இதழில் வந்து புத்த்கமாக மாறியதொன்று.. ஒரே மணியில் படிக்க முடிந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னுரை.. ராஜாஜி, சதாசிவம், பெரியார், காந்தியென மிகச் சாதாரண பதிவுகள். கண்டிப்பாக படிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டிய புத்தகமாக படவில்லை.
German Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸ் குறிப்பு சிதறல்கள் - ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...
Comments
Post a Comment