https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, February 27, 2017

விவேகானந்தர் பார்வையில் 2

II
எங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது. ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறுபடுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது.
மனித வளர்ச்சி நாகரீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்துவதாகவே உள்ளது. மாறுபட்ட நடவடிக்கைகள் மூலம் இக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாறுபட்ட மனித இனங்கள் முயற்சித்தன. தங்கள் மக்களின்மீது பேரன்பும், பிறர்மீது வெறுப்பும் என்பது தொழிற்பட்டது. பெர்சியா எதிர்ப்பில் கிரீஸ், கார்த்தேஜ்- ரோம்,  காபீர்- அரபியர், ஸ்பெயின் – பிரான்ஸ், பிரான்ஸ்- இங்கிலாந்து என ஒன்றை விஞ்சி ஒன்றின் முன்னேற்றம் எட்டப்பட்டன. இவர்கள் ஒன்றுபட்டும், வேறுபட்டு நின்று எதிர்த்தும் கொண்டனர்.
உலக வரலாற்றை பார்த்தால் ஒவ்வொரு கட்ட்த்திலும் ஒரு பெரும் ஆன்மா, அவரது சிந்தனைகளை பின்தொடர்ந்த மக்கள் என்பதை காண்கிறோம். மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தேவை இயக்கிக்கொண்டே இருக்கிது. பிராமணர்கள் கற்பதுதான் சக்தி என்றனர். சத்திரியர் வாள் என்னர். வைஸ்யர் மின்னும் தங்கம் என்றனர். ஆனால் கவனிக்கவே பெறாத அடித்தட்டு வர்க்கம் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருந்தது. யார் ஆண்டபோதும் அது அமைதியாக எதிர்க்க சக்தியின்றி உழைத்துக் கொண்டேயிருந்தது.
சமுகத்தில் ஒரு கட்டத்தில் சில குடும்பங்கள் கையில் சாதியிடத்தில் அறிவு குவிப்பு, வலு பெருக்கம், செல்வக்குவிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவை சாசுவதாக நீடிக்க வேண்டியதில்லை. அவைகள்  diffuse – அதாவது பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் சுவாமி. அறிவோ அதிகார குவிப்போ செல்வமோ ஓரிடத்தில் என நிலைப்பெற்றுவிட்ட சமூகம் அழிந்துவிடும் என்கிறார்.
”அதிபெளதிகா அதிதெய்விகா அத்யத்மிகா” (Adhibhautika,  Adhidaivika,  Adhyatmikaa) என்ற மூன்றுவகை துன்பங்கள் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இயற்கை பேரிடர்கள், சமூக தீமைகள், ஒருவரின் மோசமான உணர்ச்சி தூண்டல்களின் மூர்க்கம் ஆகியவற்றையே இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த மூன்றையும் சமூகம் வெல்லவேண்டும். வெல்லவேண்டியது அவசியம் என்கிறார்.
றிவிற் சிறந்தவர் சிலர் இருக்கலாம். உடல் வலு சிலரிடம் இருக்கலாம். ஆனால் இவை சலுகையாகிவிடக்கூடாது சமூக பயன்பாட்டிற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார். இயற்கை சார்ந்த வேறுபாடுகள் இருந்தாலும் சமுகம் எனில் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும் என்கிறார். இன்று பிராமண சிறுவன் கற்க ஓராசிரியர் போதும் எனில்  சண்டாள சிறுவனுக்கு பத்து ஆசிரியர் தேவைப்படுகிது என  affirmative action பற்றி  அவர் பேசி நம்மை பிரமிக்க வைக்கிறார். அப்போதுதான் வாய்ப்புகள் நேராகும் என்கிறார். நீ அரசாள்கிறாய்- நான் செருப்பு தைக்கிறேன் என்பதற்காக. என்னைவிட நீ உயர்ந்தவன் என ஏற்பதற்கில்லை என்கிறார். எங்கு போனாலும் சாதி குழுக்கள் இருக்கின்றன. இதன் பொருள் சிலருக்கு மட்டும் உயர் சலுகைகள் என்பதாகக் கூடாது. ஒரே கடவுள்தான் நம் இருவரிடமும் உறைந்துள்ளார். பின் எதற்கு தனி உயர் சலுகை என கேட்கிறார். சுந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் முதல் நிபந்தனை என திரும்ப திரும்ப அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.
புரோகித வர்க்கம் நாகரிகத்தின் வருகையாகவும், பொருட்களின் மீதான கருத்துக்களின் ஆதிக்கமாகவும் இருந்தது. மானுட வர்க்கம் அநீதி, சுயநலம், கபடத்திற்கு பலியானது. அதீத இயற்கையின் குரலுக்கு செவிமடுப்பது என் பெயரில் அறிவும் ஞானமும் புதியன காண்பதும் முடங்கின. ஆனால் இயற்கை எப்போதும் புத்தாக்கத்தைதான் வரவேற்கும். தானே பின்னிய சிலந்தி வலையில் அவ்வர்க்கம் மாட்டிக்கொண்டது. தாங்க முடியாத எண்ற்ற சடங்குகள், ஆசாரங்கள், பழக்கங்கங்கள் என சமூகத்தை  இரும்பு சட்டகத்தில் வைத்துவிட்டது. அவநம்பிக்கையின் ஆழ் உறக்கமது. எனவே வலையை அறுத்தெறிய வேண்டும். அதன் அடித்தளத்தை ஆடவைக்கவேண்டும். பிராமர்கள் மீது சமூகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது.  தனக்கான  SEPULCHRE எனும் கல்லறையை தன் கரங்களாலேயே கட்டிக் கொண்டுவிட்டது. தனக்கான சிதையை அதுவே மூட்டிக்கொள்வது சரியானதேயாகும்.
அரசனோ பாதி கடவுள்- பாதி மிருகமாக இருந்தான். அவனுக்கு தேவை என்றால் தனது கூரிய நகங்களால் அப்பாவிகளை பிளந்து இரத்தம் குடிக்கும் மிருகமாக இருந்தான். சமூகத்தேவைகள்தான் அரசனை பிறப்பித்தன. சிதறிகிடப்பவர்களை திரட்டி ராஜ்யம் மைக்கும் பணி செய்யப்பட்டது. இன்பவேட்கைகளில் மட்டும் அவன் ஆழ்ந்துவிடவில்லை. கலை ,அறிவியல் ,சிற்பம் ,இசை,ஓவியம் என புத்தாக்கங்களும் நடந்தேறின. தங்களின் சாகசங்களை உலகிற்கு உணர்த்தவேண்டிய தேவை இருந்தது. ஒப்பில்லாத இறை அவதாரம், இறை ஏற்பாடு என தங்களை அவர்கள் காட்டிக் கொள்ளவும் செய்தனர். அரச கட்டளைக்கு பயந்து பல திறமையாளர்கள் தங்கள் கைவண்ணங்களை ராஜ விசுவாசத்திற்காக செய்ய்யவேண்டியிருந்தது. நகரங்கள் எழுந்தன. குடிகளுக்கு தந்தையெனப்பட்டார் அரசர். கேள்வி கேட்கமுடியாத பணிவு கோரப்பட்டது. எதிர்ப்பு ராஜதுரோகம், பாவம் என்று சொல்லப்பட்டது. தண்டனைக்கு உரியதானது. ஆனால் சமூகம் வலுவாக இருக்குமிடத்தில் ’கோவிற்கு’ எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல ராஜ்யங்கள் இன்று மியூசியத்தில் என்கிறார் விவேகானந்தர்.
வைஸ்யர்கள் அனைத்து தங்கமும் தங்களிடத்தில் என்றனர்.  நாங்களும் அதிகாரமிக்கவர்கள் என உரிமைகோரலாயினர். அதே நேரத்தில் பிராமணர். சத்திரியர் குறித்த அச்சமும் அவர்களிடம் இருந்தது. தங்கள் வர்த்தகத்தை நாடு கடந்து எடுத்து சென்றனர். கலாச்சாரம், அறிவுத்திறனும் கூடவே சென்றது.
ருஷ்யா சீனாவில் சூத்திரர் ஆட்சி எழும் என கணித்தவர் விவேகானந்தர் என அவரது சகோதரர் புபேந்திரநாத் தத்தா தனது பதிவாக செய்துள்ளார்.  சூத்திரர் எனும் உழைக்கும் மக்கள் எழுவர்- shudra hood உருவாகும் என்றார். சோசலிசம், அனார்க்கிசம், நிகிலிசம் என பேசப்படுவதெல்லாம் சமூக புரட்சியின் வாகனகங்களாக அமையும் என்றார் ( ருஷ்யா அனார்க்கிஸ்ட்களை சந்தித்து உரையாடியவர் விவேகானந்தர்) சூத்திரர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி பரவும். ஆனால் தனித்த அறிவுஜீவிகள் குறைவர் என்றார் சுவாமி.
முகலாயர் ஆட்சியில் குரான் செல்வாக்கு பெற்றது, சமஸ்கிருத செல்வாக்கு குறைந்தது (இந்துக்களில் அரசு வேலைகளில் பெர்ஷியன் தெரிந்தவர் வைக்கப்பட்ட சூழல் இருந்தது) புத்தர்களின் வீழ்ச்சிக்கும் முகலாயர் வருகைக்கும் இடையில் ராஜபுத்திரர் ஆட்சி எழுந்தாலும் அது வெற்றிபெறவில்லை என்கிறார். சங்கரர் ராமானுஜர் தத்துவங்கள் உறங்கின.  பின்னர் மாராட்டியர், சீக்கியர் விழிப்புணர்வு ஏற்பட்டது. அக்பர் போன்றவர் மக்களுக்கு நல்வாழ்வை தந்தனர் என சுவாமி குறிப்பிட்டு சொல்கிறார். அதே நேரத்தில் பலர் அவுரங்கசேப் போல இருந்தனர் எண்ற குறிப்பையும் தருகிறார்.  யுதிஷ்ட்ரர், ராமர், அசோகர், அக்பர் ஆகியோரை  தெய்வநிகர் அரசர்கள் என பட்டியலிடுகிறார்.
எண்ணிக்கையில் அதிகமிருந்தும் சூத்திரர் ஆட்சி ஏன் அமையவில்லை என்ற விவாதத்திற்கு காரணம் சிலவற்றை பதிலாக தருகிறார். அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. எப்போது அடி விழும் எனக் கூட அறியாமல் உழைக்க வேண்டும். தாங்களும் மனிதர்கள்தான் என்கிற உணர்வு அவர்களிடமே வற்றிப்போன நிலை. உயர்வர்க்கத்தை அண்டித்தான் வாழ்க்கை என்ற நிலை. மேற்கின் கல்வி வந்தாலும் அவர்களிடம் போகாத நிலை- கற்கவோ, சொத்துரிமை பெறவோ வாய்ப்பில்லாத வாழ்க்கை சூழல் என பல்வேறு தடைகளை அவர் பட்டியலிடுகிறார். நம்பிக்கை இருக்கிறது அவர்கள் எழுவர். காணமால் அடிக்கப்பட்ட அந்த உழைக்கும் மனிதனை மீண்டும் நாம் கண்டறிவோம் என கடமை உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர்.

சுரண்டல் வடிவங்களை பற்ரியும் பிராமண வர்க்கம், சத்த்ரிய வர்க்கம், வைஸ்ய வர்க்கம் எவ்வாறு சுரண்டியது என விவரிக்கிறார். எந்த வர்க்கத்தின் சக்தியும் அதிகமாக குவியும்போது சுரண்டல் தீவிரப்படும் என்கிறார். கடவுள் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். ஓருயிர் மூலம் அவர் பிற உயிரை காயப்படுத்துவதில்லை என்கிற கீதையின் (அத் 18 பாடல் 28)  பாடலை உயிர்களை சமநோக்கு கொண்டு பார்க்கவேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். ஞானம், பலம், செல்வம் எதுவானாலும் அது diffuse  ஆகவேண்டும் என்பதை பலமுறை சொல்கிறார். என்னுடையது என முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம் என உபதேசிக்கிறார்.
சூத்திரர் ஆட்சியில் சுரண்டல் இருக்குமா என்பதையும் அவர் விவாதிப்பது அவரது பார்வைதீர்க்கத்தை உணர்த்துகிறது. பின்வரும் கருத்துக்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விவேகானந்தர் இதை சொல்லியிருக்க முடியாது. அவர் அப்போது உயிருடன் இல்லை. ருஷ்ய புரட்சியின் போது லெனின் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்றார். ஆனால் ஆகஸ்ட் 1918ல் சோவியத்துகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவை என உத்தரவு போட்டார்.  கட்சித்தலைவர்களின் புரட்சிகர குழு சோவியத்துக்களை நடத்தும் என்றனர். தொழிலாளர் சங்கங்கள் கட்சி, அரசாங்க தலைமைக்குள் கொணரப்பட்டன. அவர்களுக்கு அரசாங்கம்தான் வழிகாட்டுகிறது. உழைப்பவர் அதிகாரம் என்பதில் நாம் கவனம் கொள்ளவேண்டிய ஜனநாயக அம்சமாக இதை நாம் புரிந்து கொள்ளலாம்.


இந்திய சமூக மாற்றத்தில் மதத்திற்குரிய பங்கு குறித்து சுவாமி பேசுகிறார். இந்தியாவின் மொழிபோல மதம் இருக்கிறது என்கிறார். சார்வாகர், ஜைனர், புத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர், பிரம்ம சமாஜ், ஆர்ய சமாஜ் என அனைவருமே சமூக தேவைகளுக்காகவே பயணப்பட்டனர். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக பேசினர். சங்கரர் சாதி ஏற்படுத்துவராக இருந்தார். உலகில் சாதியிருக்கலாம். ஆனால் இங்கு இருப்பது போல் எங்கும் இல்லை. சாதி தவிர்க்க முடியாதென்றால் எனக்கு டாலர் சாதி தேவையில்லை என்கிறார். கலாச்சார மேன்மையும், பரிசுத்தமும், தியாகமும் நிறைந்ததுதான் தேவை என்றார். வேதாந்தத்தில் சாதி ஏற்கப்படவில்லை என்கிறார். Trade Guild வம்சவழி வளர்ச்சியில் சாதி உருவாகி, அரசியல் ஆட்சிகளால் கெட்டிப்பட்டுப்போனதாக விவேகானந்தர் தெரிவிக்கிறார். சாதிகள் இல்லாவிட்டால் நாம் எங்கே நின்றிருப்போம்- முகலாயர் அழித்திருப்பர்- அய்ரோப்பியர் ஆய்வேது எனவும் பேசுகிறார். அதே நேரத்தில் சாதி பிறப்பில் புனிதம் என்பது மாயைதான் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார். 

No comments:

Post a Comment