Skip to main content

E M S தோழர் நம்பூதிரிபாட் 2

II  இ எம் எஸ் பகுதி 2
 விடுதலைக்கு பின்னர் இந்தியாவிலேயே காங்கிரஸ் அல்லாத முதல் மாநில அரசு என்பது  எம் எஸ் தலைமையில் 1957ல் அமைந்தது மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் கேரளா மாநிலம் நவம்பர் 1956ல் உருவாக்கப்பட்டது. 1957 மார்ச்சில் மாநில தேர்தல் நடந்தது. அரசியல் நிலைத்தன்மை, வளமான கேரளம், சமுக நீதியுடன் கூடிய பொருளாதரா மறுகட்டுமானம் என்ற முழக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. கட்சியின் பொதுச்செயலர் அஜாய்கோஷ்  சுற்றுப்பயணம் செய்து கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே காங்கிரசை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை  அழுத்தமாக எடுத்துரைத்தார்.
CPI 100 இடங்களில் போட்டியிட்டு 60ல் வென்றது. காங்கிரஸ் 124ல் போட்டியிட்டு 43ல் வெற்றி பெற்றது  PSP 62ல் போட்டியிட்டு 9,   RSP 28லும் தோல்வி,  ML லீக் 18ல் போட்டியிட்டு 8யை பெற்றனர். சோசலிஸ்ட் கட்சியின் புகழ்வாய்ந்த பட்டம்தாணுப்பிள்ளை கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு இல்லை என அறிவித்தார். பின்னாட்களில் சோசலிஸ்ட்கள் மத்தியில் குறிப்பாக ஜே பி- லோகியா மத்தியில் வேறுபாடுகள் ஏற்படவும் இவர் காரணமாக இருந்தார். எம் எஸ் தான் முதல்வராக வருவார் என 1957  மார்ச் 23 மாத்ருபூமி -அவருக்கு இருந்த திறமை, செல்வாக்கை குறிப்பிட்டு எழுதியது. மார்ச் 22, 1957ல் சி பி அய் கட்சியின் நிர்வாக குழு எர்ணாகுளத்தில் கூடி எம் எஸ் அவர்களை சட்டமன்றகுழு தலைவராகவும் அச்சுதமேனன் அவர்களை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

தனிப்பட்ட மத உணர்வுகளில் கட்சி தலையிடாது, கம்யூனிச எதிர்ப்பாளர் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் என்ற அறிக்கையை நம்பூதிரிபாட் வெளியிட்டார். 1957 ஏப்ரல் 5 அன்று உலகிலேயே மக்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 11 தோழர்களை கொண்ட அமைச்சரவை என்கிற கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அதிகார மாதிரி ஒன்று உருவானது. நம்பூதிரிபாட்  அப்போது 48 வ்யதில்தான் இருந்தார். மகத்தான மனிதனாக அச்சுதமேனன் கருதப்பட்டார். புகழ்வாய்ந்த நீதிமானாக வி ஆர் கிருஷ்ண அய்யர் உருவாகியிருந்தார். சுகாதார அமைச்சர்  மேனன் விடுதலை போராட்ட வீரர் மட்டுமல்ல, பெரும் அறுவை சிகிட்சை நிபுணர். கல்வி அமைச்சர் பேரா ஜோசப் முண்டேசேரி  ஆசிரியர் இயக்க போராளி, ஏராள புத்தகங்களின் ஆசிரியர், சம்ஸ்கிருதம் குறித்த விமர்சன கட்டுரைகளை எழுதியவர். சபாநாயகர் சங்கரநாராயணன்தம்பி வழக்கறிஞர், விடுதலை போராட்டவீரர் இப்படிப்பட்ட பல  புகழ்வாய்ந்தவர்களின் முகமாக ஆட்சி தெரிந்தது. இந்திய அரசியல் சட்ட எல்லைக்குள் என்ற வரையறையும் புதியவர்களுக்கு இருந்தது.

முதல்வராக பதவியேற்றவுடன் தங்கள் நிலைகளை விளக்கி இ எம் எஸ் உரையாற்றினார். நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர்கள். கடும் பிரச்சனைகள் நிலவும் மாநிலத்தை ஆள முன்வருவது என்பதே கடுமையானது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு குரல்கள் வருகிறது. நால்புறமும் நிற்கும் வரையறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றவேண்டும். கற்பனைக்கு எட்டாத விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ள சூழல் பழக்கமாகவேண்டும். நாங்கள் தனிப்பட்ட நபர்களாக இவ்வேலையில் நுழையவில்லை. நிறுவனவகைப்பட்ட ஒன்றில் நுழைகிறோம். நாங்கள் கட்சியின் பிரதிநிகள் மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுள்ளோம். .மத்திய காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகள் பலவற்றை முன் இருந்த காங்கிரஸ் கேரளா மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டன. அதை நாங்கள் செய்து முடிப்போம். சோசலிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள்  ஒத்துழைப்பை கோருகிறோம். We are being elected ‘Not as Representative of Party but as Representative  of People’ என்கிற நம்பூதிரிபாட் உரையின் வரி மகத்தான வழிகாட்டும் வரியாக தொடர்ந்து காப்பாற்றப்பட்டிருந்தால்  கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை தந்திடும் கட்சியாக இருந்திருக்கமுடியும். வெகுஜன இயக்கங்களிலும் பிளவுகள் தவிர்க்கப்பட்டிருக்கமுடியும்.
நேரு உட்பட பலர் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியால் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் கூட்டம் ஒன்றில் நேரு ’கம்யூனிஸ்ட்கள்’ வெளிநாட்டின் செல்வாக்கில் இருப்பவர்கள், பொறுப்பற்றவர்கள் என்ற கடும் விமர்சனங்களை வைத்தார். அரசியல் அமைப்புப்படியும் மத்திய அரசு- மாநில அரசுகள் உண்மையான ஒத்துழைப்பும் இருக்கும்போதுதான் எங்களது கம்யூனிச அரசாங்க சோதனை வெற்றி பெற முடியும் என்ற கடிதத்தை ஏப்ரல் 1957லேயே நேருவிற்கு இ எம் எஸ் எழுதினார். Red Interlude in Kerala என்கிர பிரசுரத்தை கேரளா காங்கிரஸ் வெளியிட்டது. அதில் கம்யூனிஸ்ட்கள் எவ்வாறு வென்றனர் என்பதை ஆய்வு செய்தனர். பல்வேறு பத்ரிக்கைகள் கம்யூனிஸ்ட் கேடர்கள் பல கிராமங்களில் மக்களுடன் என படம் பிடித்தன. நாயர்கள், ஈழவர், தாழ்த்தப்பட்டவர்கள்  வாக்குகளால்தான் வெற்றி என சிலர் தெரிவித்தனர். நியுயார்க்டைம்ஸ் பத்ரிக்கை காங்கிரஸார்களின் திறமையற்ற நிர்வாகம், ஊழல்தான் கம்யூனிஸ்ட்களை ஆட்சிக்குவர உதவியது என எழுதியது. கம்யூனிஸ்ட்களின் தியாகமும் தன்னலமற்ற தொண்டால்தான் மக்கள் ஆதரவை பெறமுடிந்தது என ஏ.கே கோபாலன் கருத்து தெரிவித்திருந்தார்.


1957 துவங்கி ஆட்சியில் இருந்த 28 மாதங்களில் 175 அசெம்பிளி அமர்வுகள் நடத்தப்பட்டன. மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.. கல்விஅறிவு பரப்புதலிலும் ஊர்தோறும் நூலக இயக்கத்திலும் ஆசிரியர்கள் முன்நின்றனர். நிலசீர்திருத்தம், குத்தகைதார் உடைமை, விவசாய தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் கல்விக்குமான சட்டங்கள் மக்கள் ஆதரவை பெற்றன. ஜனநாயக போலீஸ் கொள்கை என்பதும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக தொழிற்தகராறுகளில் முதலாளிகளுக்கு ஆதரவாக, நிலத்தகராறுகளில் ஜமின்களுக்கு ஆதரவாக தலையிடுவதை கட்டுபடுத்தியது.  18 தொழில்களில் குறைந்தபட்ச சம்பளம் சட்டத்தை இயற்றியது, பேறுகால சட்டம் போட்டது. மே தினம் சம்பளத்துடன் விடுமுறையானது, காண்ட்ராக் தொழிலாளர்க்கு என 42 லேபர் சொசைட்டி உருவாக்கப்பட்டது போன்றவை ஆட்சி அமுல்படுத்திய  சில நல்ல திட்டங்கள். விவசாய சீர்திருத்தங்களில் கோபம் கொண்ட பிரிட்டிஷ் தோட்ட அதிபர்கள், நிலபிரபுக்கள், காங்கிரஸ், பிரஜா சோசலிஸ்ட்கள், ரோமன் கத்தோலிக் பிஷப்கள் என அணிசேர்க்கை போராட்டங்களை உருவாக்கின.  மொரார்ஜிதேசாய், டி டி கே, இந்திராகாந்தி போன்றவர்கள் வெளிப்படையாக தங்கள் விமர்சனங்கள் மூலம் ஊக்கப்படுத்தினர். கேரளா சோதனை அனுமதிக்கப்பட்டால் , அந்த தொற்று (Infection) நாடு முழுவதும் பரவிவிடும் என காங்கிரஸ் கமிட்டியில் பேசப்பட்டதாக தனது பதிவில் அஜாய் கோஷ் தெரிவிக்கிறார். நாடு முழுதும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன. கேரளாவில் வன்முறை, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போராட்டங்கள்  உருவாக்கப்பட்டன.

1959 ஜூலை31 அன்று நம்பூதிரி அவர்களின் சி பி அய் ஆட்சி 356 விதியை பயன்படுத்தி நேரு சர்க்காரால் கலைக்கப்பட்டது. மக்களின் பெரும்பான்மை பெற்ற மாநில ஆட்சி இந்திய குடியரசில் முதல்முதலாக கலைக்கப்பட்ட நிகழ்வாகவும் அது அமைந்தது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எவ்வாறு கேரளா நம்பூதிரி அரசாங்கம் குந்தகம் விளவித்தது என குடியரசுதலைவர் ராஜேந்திரபிரசாத் பிரகடனத்தில் தெரிவிக்கப்படவில்லை

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு