Skip to main content

Lohia on Marxism லோகியா பார்வையில் மார்க்சியம் 2

II லோகியா பகுதி 2
மார்க்சின்பொருளாதார அம்சங்கள் மீது பெருமளவு தனது கருத்துக்களை மார்க்சிற்கு பிந்திய பொருளாதாஆய்வில் முன்வைக்கிறார் லோகியா. பண்டம் உழைப்பு மதிப்பு, உபரிமதிப்பு, மூலதனம், முதலாளித்துவ நெருக்கடி என விவாதிக்கிறார். முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் ஓட்டாண்டியாக இராமல் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்து இருப்பது குறித்து விவரிக்கிறார். நடுத்தர வர்க்கமாக மாறிய பாட்டாளிகள் குறித்து சொல்கிறார். தந்து நெருக்கடிகளை சமாளித்து மீளும் சக்தி முதலாளித்துவத்திற்கு இருக்கிறது என்பதை கம்யூனிஸ்ட்கள் காத்தவறிவிட்டனர் என 70 ஆண்டுகளுக்கு முன்பு அவர்  தனது விமர்சனத்தை முன்வைத்தார். இன்று லோகியாவதிகளால் இந்த விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் மீது வைக்க முடியாமல் போகலாம். அதேபோல் மூலதன பெருக்கம் என்பது வறுமைபெருக்கம் மட்டுமே என்பதையும் நிருபிக்கமுடியவில்லை என்றார் லோகியா.
தொழிலாளிவர்க்கம் என நாம் பேசுவதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்றார் லோகியா. தொழிலாளிவர்க்க ஒற்றுமை என்பதும் கூட சாத்தியப்படாமலே இருக்கிது என்றார்.. மார்க்ஸ் வரையறுத்தபடி வளர்ந்த நாட்டில் புரட்சி என்பது நடைபெறாமல், ருஷ்யாவில் நடைபெற்றதை நாம் எப்படி விளங்கி கொள்வது என்றார். டிராட்ஸ்கி வவரித்த  பலவீன கண்னி மூலமா என கேள்வி எழுப்ப்பினார். ரஷ்ய புரட்சியை மார்க்சிய விளக்கங்கங்களில் தேடிக்கொண்டிருப்பதை  ற்கமுடியவில்லை என்றார். முதலாளித்து இரும்பு கூட்டிலிருந்து வர்க்கப் போராட்ட பறவை பறந்தோடியது பற்றிய விளக்கங்கள் போதுமானதாக இல்லை என ஏகடியம் பேசினார் லோகியா. மார்க்ஸ் கூறியது மெய் என நிரூபிக்க கம்யூனிஸ்ட்கள் தங்கள் நேரத்தை முழுதும் செலவழிக்கிறார்கள் என விமர்சித்தார்.,
மூலதன குவிப்பு, ஏகபோகம் உருவாதல் ஆகியவற்றில் மார்க்சியத்தை நிராகரிக்க முடியாது என்பதை ஏற்கிறார் லோகியா. ஆனால்  ஏழ்மை, வர்க்கபோராட்டம், புரட்சி ஆகிய விதிகளில் அதனால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை என்கிறார். முதலாளித்துவத்தின் இறுதி கட்டமே ஏகாதிபத்தியம் என்கிற லெனினிய வரையறுப்பில் அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. ஏகதிபத்தியம்,முதலாளித்துவம் இரண்டும் சேர்ந்தே வளர்வதாக அவர் கருதினார்.முதலாளித்துவம் வளர்வதற்கு இடமில்லாத நிலையில் போர்கள் ஏற்பட்டன  என்பதை அவர் ஏற்கிறார். ஏகாதிபத்திய எல்லைக்குள் பல முதலாளித்துவங்கள் செயல்படுவதாக அவர் விளக்கினார். முதலாளித்துவம் குறித்த மார்க்சிய வரையறுப்புகள் மேற்கு அய்ரோப்பிய  நிலவரங்களின் விளக்கங்களாகவே உள்ளன என்றார். அமெரிக்கா, ஜப்பான் வரையறைகள் கூட பின்னர்  நுழைந்தவையே என்கிறார். இந்தியாவில் 1950களின் ஆரம்பங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமா அமெரிக்கா ஏகாதிபத்தியாமா என்ற விவாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளில் பெருமளவு எதிரொலித்தது.

உள்நாட்டு, வெளிநாட்டு இயக்கங்களுக்கு இடையிலான பரஸ்பர பாதிப்புகள் குறித்த முழுமையான கொள்கையை மார்க்சியம் உருவாக்க தவறிவிட்டது என்கிறார். லோகியாவிற்கு ரோசா லக்சம்பர்க் ஆய்வுகள் கிட்டியதா என தெரியவில்லை. உழைப்பை லட்சியவாதம் சார்ந்த ஒன்றாக மார்க்சியவாதிகளை மார்க்சியம் பேசவைத்துவிட்டது. ஏகாதிபத்திய நாடுகளில் உழைப்பும் காலனிநாடுகளில் உழைப்பும் வேறானவை என்பதற்கு லோகியா அழுத்தம் தருகிறார்.அவற்றின் மதிப்புகளும் வேறானவை என்றார். உபரி மதிப்பு என்பதில் தொழிலாளரின் அவசியத்தேவை என தனியாக இருக்கிறதா எனவும் வினவுகிறார். வரலாற்றின் நிலவரப்படித்தான் தேவைகள் நிர்ணயிக்கப்படுவதாக சொல்லி செல்கிறார். பட்டினி நிலையில் இருந்துகொண்டு காலனி தொழிலாளி உழைக்கவேண்டிய நிர்பந்தம் குறித்த புரிதல் தேவைப்படுகிறது என்கிறார். கோடானுகோடி காலனி தொழிலாளர்களின் ஆவிகள் கண்காணாமல் நின்று ஏகாதிபத்திய நாடுகளின் தொழிற்சாலைகளை  ஓட்டுகின்றன என கவித்துவமாக பேசுகிறார். ”பெரிபெரி சுரண்டல்” என்பதை  அவருக்கு தெரிந்த வகையில் பேசியிருக்கலாம். இவற்றை முழுமையாக பார்க்காமல்  உழைப்பின் கூலிக்கும் உற்பத்தி மதிப்பிற்கும் உள்ள முரண்பாட்டில்தான் முதலாளித்துவம் வளர்கிறது என சொலவது பழைய பாட்டி அர்த்தம் புரியாமல் பாடிக்கொண்டிருபதுதான் என விமர்சிக்கிறார். வளர்ந்த முதலாளித்துவ நாட்டின் தொழிலாளர்களில் உயர் ஊதியக்காரர்கள்  காலனி நாட்டு சுரண்டலில் ஒரு பகுதியை பெறாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார் லோகியா.
உபரிமதிப்பை கம்யூனிஸ்ட்கள் கூறுவது போல் கணக்கிடமுடியாது என்ற முடிவிற்கு லோகியா வருகிறார். தனது வரையறை என்ன என்பதை எடுத்துரைக்கிறார். குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் ஒரு தொழிலாளி பெறும் ஊதியம் எவ்வளவு, அக்காலத்திய உற்பத்தியில் ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி பங்கென்ன – அதன் வித்தியாசம்தான் உபரிமதிப்பு என்பதுதான் சரியான கணக்கீடு. இந்த கணக்கீட்டை உலகளாவியது என்று பேசுகிறார்.  காலனிகள் முதலாளித்துவத்தின் கிராமங்கள் என பேசும்போது ரோசாலக்சம்பர்க் அருகில் வருகிறார். நமது நகரங்கள் கிராமங்களை சுரண்டுவதைவிட காலனிநாடுகளை முதலாளித்துவ நாடுகள் சுரண்டுவது மிக அதிகமானது என்கிறார். இருவட்ட கருத்துதனை புரிந்து கொள்ளாமல் உபரிமதிப்பு கணக்கீட்டை சரியாக வரையறுக்க முடியாது என்கிறார்.

உள்நாட்டு விநியோகம் என்பதில் மட்டும் முதலாளித்துவ நெருக்கடி என பார்த்து நின்றுவிடக்கூடாது. ஏகாதிபத்திய இயக்க வேகத்தில் காலனிகள் நலிவிற்கும், புதிய சுரண்டல் மேய்ச்சல்நிலம் நோக்கி ஏகாதிபத்தியம் செல்வதற்கு ஏற்படும் காலதாமதத்திலும் நாம் நெருக்கடிகளை புரிந்துகொள்ளவேண்டும் என தனது ஆய்வு பார்வையை மேம்படுத்துகிறார். மூலதனம், உழைப்பு இரண்டுமே புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மாற்றம் பெறுகின்றன. புதிதாக காலனிகள் கிடைக்கவில்லை எனும்போதெல்லாம் பொதுநெருக்கடி எனும் பிரச்சனையை சந்திக்கிறோம் என்ற முடிவிற்கு வருகிறார். காலனிநாடுகளைத்தான் இவ்வகை நெருக்கடிகள் அதிகம் பாதிக்கும் என்கிறார். எனவே தான் காலனி தொழிலாலர்களின் எழுச்சி மிக முக்கியமாகிறது. இந்த முற்போக்கு பாத்திரத்தை நாம் உணரவேண்டும் என்கிறார். ருஷ்ய புரட்சியைக்கூட மார்க்சிய உலகம் இவ்வாறு ஏற்றால்தான்  விளக்கமுடியும் என்கிறார்.
ருஷ்யா சோவியத்தில் இலாப நோக்கில்லை என்றாலும் முதலாளித்துவ தொழில்நுட்ப அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றவர் லோகியா. ஒருநாட்டின் தொழில் நிறுவன பிரச்ச்னை வேறு- அது தனிஉடைமையா அல்லது பொது உடைமையா என்பது வேறு என்கிறார். விஞ்ஞானத்தை உற்பத்திக்கு பயன்படுத்தவேண்டிய எந்த நாட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு ஒன்றுடன் ஒன்று இயங்குபவை. முந்திய ஆண்டுகளில் சேமித்த உழைப்பு சக்தியே சோசலிச பொருளாதாரத்தில் மூலதனமாகிறது. கனரக எந்திரங்களாக காட்சி அளிக்கிறது. அதே நேரத்தில் குவியல் முறையில் எந்திரங்களை புகுத்தி பொருளாதாரத்தை நவீனப்படுத்தும் முயற்சி வறட்டுத்தனமாக அங்கு நடைபெறுகிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்தார். வளைந்து கொடுக்காத பொருளாதாரமாகி அங்கு குழப்பம் உருவாகலாம் என எச்சரிக்கை தந்தார். சோசலிச பொருளாதாரத்திகேற்ப உற்பத்தி முறைகளை ருஷ்யா சொந்தமாக உருவாக்கவில்லை. அங்கு அதிகார விநியோகமுறை நிலவுகிறது. அது தாறுமாறாக இருக்கும் நிலையில் அரசு உதிர்வது எப்படி என வினவினார், மேற்கூறிய அவரது கருத்துக்கள் எல்லாம் 1940களிலேயே தெரிவிக்கப்பட்டவனவாக இருக்கின்றன.
 ருஷ்யா சோசலிசத்துடன் ஏற்படும் மோதலால் உலக முதலாளித்துவம்   சிதையும் என்பதை ஏற்பதற்கில்லை என்றார் அவர். உலகப்போரை சமாளிக்க ருஷ்யாவும், முதலாளித்துவ நாடுகளும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளையே மேற்கொண்டன. தற்காப்பு முறைகளில் வேறுபாடு ஏதுமில்லை. சோசலிசத்துடன் மாறுபட்ட அரசாங்கங்களின் உதவியுடன்தான் போரின் நிலைமைகள் மாற்றப்பட்டன, இதை சோசலிசத்தின் வெற்றி என பார்க்கமுடியவில்லை என்ற தனது பதிவை அவர் முன்வைத்தார்.
மார்க்ஸ்  மேற்கு அய்ரோப்பிய நலன்களே உலக நலன்கள் என கருதிவிட்டார். ஏகாதிபத்திய உழைப்பு- காலனி உழைப்பு என்ற பிரிவினை குறித்து மார்க்சியர் ஏன் பேசவில்லை என்கிறார். பின்தங்கிய நாடு ஒன்று விரைவில் மாபெரும் சக்தியாக வளரமுடியும் என்பதை ருஷ்யா உலகிற்கு காட்டியுள்ளதை ஏற்று பாராட்டினார் லோகியா, ஆனால் உலகிற்கான ஒரேபாதை, வழிகாட்டி என்பதை ஏற்கமுடியவில்லை என்கிறார். மார்க்க்சியத்தின் சிறந்த அம்சம் தனி சொத்துரிமை மீது பற்றில்லாதது, சுரண்டல் சொத்து சமூககேடு என்பதை அது உயர்த்தி பிடிக்கிறது என்பதில் தனது ஏற்புகளை வெளிப்படுத்துகிறார். லெனின் பெருந்தலைவர்தான் ஆனால் அவரது ஏமாற்றுகளில் உடன்பாடில்லை என்கிறார் லோகியா. புரட்சிக்காக கொலைகளையும் பொய்களையும் நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார். தங்களிடம் ஆகப்பெரிய சித்தாந்தம் இருக்கிறது என்றும் அதற்காக அனைத்து தியாகங்களுக்கும் தயார் என மார்க்சியர்களிடம் பெருமிதம் இருக்கிறது. ஒழுக்க நெறிகள் போன்றவையெலாம் சிறு விஷயங்கள்- பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருதி ஒதுக்குவதை ஏற்கமுடியவில்லை என தனது மாறுபட்டினை தெரிவிக்கிறார். ஈசோ உபநிடதம் மன அளவில் சொத்து பற்றிய எண்ணத்தை அழிக்க நினைக்கிறது. மார்க்சியம் புற வடிவில் அதை செய்யப்பார்க்கிறது என்று சொல்லி இருமையில்லை ஒருமை என்ற வாதம் நோக்கி நகர்ந்துவிடுகிறார் லோகியா.
லோகியாமார்க்ஸ் காந்தி சோசலிசம்’ என்ற புத்தகத்தை எழுதினார்கம்யூனிச நாடுகள் என சொல்லப்படும் ருஷ்யா சீனா தங்களுக்குள்ளே கூட சமத்துவத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. சீனனும் ருஷ்யனும் சமமாகவில்லை என  தனது  கருத்தை கட்டுரைகளில்  குறிப்பிட்டிருந்தார். சோவியத் லாபியின் பேச்சை அப்படியே செவிமடுத்து பெருந்தொழில்கள் தேசியமயம் என சோசலிசத்திற்கான கெட்ட துவக்கத்தை இந்தியா கண்டது என்ற விமர்சனத்தையும் லோகியா முன்வைத்தார். இந்திய வரலாற்றை மார்கஸ் சொல்வது போலவோ அல்லது அதே போல் டாங்கே தனது புத்தகத்தில் எழுதியது போலவோ விளக்க முடியாது. இங்கு சாதியின் பின்புலத்தை கணக்கில் கொள்ளாமல் வரலாற்றை விளக்க முடியாது என்றார்.
மனித ஆளுமையை சிறுமைப்படுத்திடும் எந்த பொருளாதாரா ஏற்பாடும் அரசியல் ஏற்பாடும் ஏற்பதற்கில்லை என்றார். மனிதனை மையமாக வைத்து பேசுவதுதான் தனது சோசலிசம் என்றார். கோமிண்டர்ன் கம்யூனிசம் மனித மாண்புகளை தூக்கி நிறுத்தும் வகையில் நடைமுறையில்  செயல்படவில்லை என தீர்ப்பிட்டார் லோகியா. ஆசியவகைப்பட்ட சோசலிசம் என அவர் பேசும்போது முதலாளித்துவத்தையும் கோமின்பார்ம் சோசலிசத்தையும் நிராகரிப்போம் என்றார்.  கோமின்பார்ம வகைப்பட்ட சோசலிசம் அதன் நடைமுறைகள் Dignity of Man என்ப்தை சிறுமைப்படுத்திவிட்டதாக உணர்ந்தார். சமுகநீதி, தேசியமயம் மற்றும் கூட்டுறவுமுறை, மக்களுக்கான ஜனநாயக உரிமைகள், எதிர்கட்சி செயல்பாடுகள், அதிகாரிவர்க்க நிர்வாகமுறையை மட்டுப்படுத்தி, ஜனநாயக அம்சங்கள் நிறந்த நிர்வாக முறை, நீதி நியாயங்களை புறந்தள்ளாத பன்னாட்டு உறவுகள் என தங்கள் ஆசிய சோசலிசம் அமையவேண்டும் என்றார்.
போர்க்குண போராட்டங்கள் என்பதற்கு அவர்  constructive Militancy-  Militant Construction என புதிய  இரு முழக்கங்களை வித்தியாசமான பார்வையில் தந்தார். கும்பலாக இருந்தாலே அழிவுவேலைகளை செய்வது என்பதற்கு நேர்மாறாக போர்க்குணம் என்பதை ஆக்கவேலை என்பதுடன் அவர் இணைத்தார். Immediacy in struggle and Organisation, permanent civil disobedience போன்ற கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில்தான் மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம் எழுதினார். வரலாறு எழுப்பும் பல கேள்விகளுக்கு மார்க்சிய பதில்கள் போதவில்லை என்ற பொதுகருத்து சோசலிஸ்ட்கள் மத்தியில் இருந்தது. மனிதவரலாற்றை Logic of Events என்பதுடன் Logic of will ம் சேர்ந்தே நடத்துகின்றன என்பார் லோகியா. வர்க்க வேறுபாடுகளும் சாதிய அடுக்குமுறை ஏற்றத்தாழ்வுகளும் உள்ள இந்திய சமூகத்தை நாம்தான் புதிய வகையில்ன் புரிந்து கொள்ள வேண்டும். Dialectical Materialism  - dialectical Idealism ஒன்றுடன் ஒன்று அனுசரனை கொள்ளத் தேவையுள்ளதாக அவர் கருதினார் பின்னாட்களில் அவர் ஏழுவகை புரட்சி என பேசிவந்தார்.
1952 பன்ச்மாரி மாநாட்டில்” it is silly to be a Gandhiyan or Marxist and it is equally so to be an anti Gandhiyan and anti- Marxist. There are priceless treasures to learn from Gandhi as from Marx” என பேசினார்..  சோசலிசத்தை நாம் தொடர்ந்து Borrowed Breadhல் வைத்திருக்கக் கூடாது என்றார். தன்னை மார்க்சியவாதி என்றோ எதிர்- மார்க்சியவாதி என்றோ அடையாளப்படுத்த வேண்டாம் என்று  கேட்டுக்கொண்டவர் லோகியா.
Ref:
Marxism-Gandhism-Socilism  by Lohia
Economics After Marx by Lohia
Ram Manohar Lohia- Vision and Ideas Edited by Verinder Grover

Janata Weekly Articles

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா