https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, February 5, 2017

Lohia on Marxism லோகியாவின் பார்வையில் மார்க்சியம்

லோகியாவின் பார்வையில் மார்க்சியம்
                                                                           -ஆர்.பட்டாபிராமன்
நவீன அரசியல் சித்தாந்தத்தில் ராம் மனோகர் லோகியா முக்கிய பங்களித்தவர். விடுதலை போராட்டம், காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட், சோசலிஸ்ட் இயக்கங்கள் என பயணித்தவர். தான் சரி என கண்டறிந்தவற்றிற்காக போராடியவர். மார்சியம்- காந்தியம்- ஆசியவகைப்பட்ட ஜனநாயக சோசலிசம் என பேசிவந்தவர். இந்திய வரலாற்றை வெறும் வர்க்க போராட்டம் என சுருக்கிவிடமுடியாது. சாதிய வரலாறை பார்க்காமல் இந்திய வரலாற்றை அய்ரோப்பிய நான்கு கட்ட சமுக அமைப்பு என மார்க்சிய விளக்கத்தினுள் அப்படியே பொருத்திவிட முடியாது என பேசியும் எழுதியும் வந்தவர் . சாதி குறித்த விரிவான உரையாடலை  நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் நடத்தியவர்.
லோகியா  மார்க்சை விட காந்தியிடம் நெருக்கமாக வந்தவர். நேருவுடன் நட்பும் கடும் எதிர்ப்புகளையும் கொண்டிருந்தவர். ஜெயபிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் போன்றவர்களுடன் ஒன்றாக நின்று பணியாற்றியவர். அவர்களுடன் கடுமையான வேறுபாடுகளை பகிரங்கமாகவும் வைத்தவர். சோசலிஸ்ட் இயக்கம் மிக கடுமையான உடைவுகளுக்கு உள்ளாகி தனது அரசியலை நீர்க்க செய்துகொண்டுவிட்ட இன்றைய சூழலிலும்  அவரது ழுத்துக்களின் பொருத்தப்பாடு குறித்த உரையாடல்களை உதிரியாக உள்ள லோகியா சிந்தனைவாதிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவரது சில முக்கிய ஆக்கங்கள் இப்போதும் பேசப்படுகின்றன.  70 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடத்திய மார்க்சியம்- சோசலிசம் குறித்த ரையாடல்கள், சமத்துவம் குறித்த பேச்சுகள், உலக மனம்- மானிடவர்க்கம் போன்றவை தொடர் விவாதத்திற்கு உரியனவாக இருக்கின்றன, அவரது எழுத்துக்களில் சில முக்கியமானவை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ளன. மார்க்ஸ்- காந்தி- சோசலிசம், மார்க்சிற்கு பிந்திய பொருளாதாரம்,  Meaning of Equality, caste essays- speeches, சரித்திர சக்கரம் போன்றவை பொருட்படுத்த வேண்டிய ஆக்கங்களாக உள்ளன.
 மார்கிசயர் பேசிவருகி வரலாற்று பொருள்முதல்வாத சமுக கட்டங்களை அப்படியே உலக நாடுகள் முழுமைக்கும் பொருத்த முடியாது என்பது அவரது முடிபு. இந்திய மார்க்சியர் சிலர் அடிமை சமுதாயம் இருந்ததாக பேசுவது அவருக்கு திரித்துக் கூறலாகவே படுகிறது. அதே போல் உலகம் முழுமையும் ஒரே கட்டத்தில் நிலபிரபுத்துவமும் ஏற்பட்டிருக்கமுடியாது. சோசலிசம் ஏற்பட்டு விஞ்ஞானத்தை பூரணமாக பயன்படுத்திவிட்டால்  பொன்னுலகம் என்று பேசுவது யாந்திரிகமானது போன்ற விமர்சனங்களை லோகியா தொடுக்கிறார்.
ஹெகல் மனித ஆன்மாவின் வளர்ச்சி என்றார். சிலரின் விடுதலையிலிருந்து அனைவருக்குமான விடுதலை நோக்கி என அவர் வரலாற்றை விவரித்தார். மார்க்ஸோ வரலாறு என்பதே வர்க்கப்போராட்டத்தின் வரலாறு தான் என்கிறார். வர்க்கப்போராட்டம் என்பதை லோகியா மறுக்கவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு பாட்டாளிகளுக்கான வேறுபாடு என்ற ஒன்றை மார்கஸ் கவனிக்க தவறினார் என்கிறார் லோகியா. உலக ரகசியங்களை வெளிப்படுத்திய பொருள்முல்வாத விளக்க சாவி மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளி எந்த இருளை அகற்றியது என தெரியவில்லை என்கிறார். ஒன்றுக்கு மேற்பட்ட விதிவிலக்குகள் கொள்ளும் எதுவும் எப்படி பொதுவிதியாக இருக்கமுடியும் என கேள்வி எழுப்பினார். இந்தியாவும், எகிப்தும் ஒருகாலத்தில் மிக உன்னத நிலையில் இருந்தன. ஆனால் அவை ஏன் விழுந்தன என்பதை வரலாற்று 4 சமுக அமைப்புகள் பார்வையில் விளக்க முடியவில்லை. வ.பொ.மு கண்ணோட்ட்த்தில் முன்னும் பின்னுமான நிலைகளில் எப்படி மாறுபாடுகள்   இச்சமுகங்களில் ஏற்பட்டன என்ற விமர்சனபூர்வமான  கேள்வி அவரிடம் வெளிப்பட்டது.
பொருள்முதல்வாதம் கூட ஐரோப்பிய பெருமிதவாதமாகவே தனக்கு படுவதாக அவர் எழுதினார். ஒரு குறிப்பிட்ட நிலையில் வளர்ச்சி பெற்றதாக விளங்கும் சமூகம் இருவகை போராட்டங்களை சமாளிக்கிறது. உள் வர்க்கப்போராட்டங்கள், வெளி சக்திகளுடன் போராட்டங்கள். நமது நாட்டில் வர்க்கப்போராட்டங்கள் சமாளிக்கப்பட சாதிய உருவாக்கங்கள் நடந்தன. உள்ளே சாதிய தாக்குதல்கள், வெளிசக்திகளின் தாக்குதல்கள் என சமாளிக்க முடியாமல் போகும்போது அழிவை தவிர வேறு வழி என்ன என்கிறார் லோகியா. இதனால் வர்க்கங்களை ஒழிக்கவேண்டும் என்ற ஆர்வம் யாரைவிடவும் தனக்கு குறைவானதல்ல எனவும் பேசுகிறார்.
ஒரு நாகரிகத்தில் சமத்துவம்- வர்க்கம்- சீர்குலைவு, நீதி- வருணம்- தேக்கநிலை என சக்கர சுழற்சி நடைபெறுகிறது. புராதன இந்தியா, ரோம் ஆகியவற்றின் வர்க்கங்களும் நவீன அய்ரோப்பிய வர்க்கங்களும் வெவ்வேறானவை. உலக நிலைகளை கண்ணுற்றால் ஒரே உலகம், வர்க்கமற்ற சமுகம் உருவாகிவிடும் என்பதற்கான நம்பிக்கை பொய்த்துவருகிறது என தனது கவலையை அவர் பகிர்ந்துகொண்டார். உள்நாட்டில் அனைத்தும் திருப்தி- வெளிஉலகில் அமைதி தவழும் பொற்காலம் என்பது வெறுங்கனவாகவே தோன்றுகிறது என்றார்.
சமுதாயங்களின் போக்கு மனித வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதுபோல் தோற்றமுற செய்யலாம். அதற்குரிய புத்திசாலி திட்டம் என ஏதும் காப்படவில்லை என விசனப்படுகிறார். தானும் தன் குடும்பமும் சுகமாக வாழவேண்டும் என்கி வேட்கைதான் உயரிய தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு அடிப்படை. சோவியத் ருஷ்யாவும், அமெரிக்காவும் இந்த தூண்டலில்தான் பாடுபடுகின்றனர். சொத்துரிமை என்பது இங்கு பிரச்சனையாகவில்லை. தொழில் அபிவிருத்தி மூலம் வாழ்க்கைத்தர உயர்வு என இரு சமுகங்களும் முதலாளித்துவம்- கம்யூனிசம்  என இரு சாராரும் நம்புகின்றனர். ருஷ்யாவில் உணவு பிரச்சனை தீர்க்கப்பட்டது சாதனை என பேசப்படுகிது.  நிலப்பரப்பு, குறைந்த மக்கள் சமுகம் ஒன்றை இந்தியா போன்ற அதிக மக்கள் குறைந்த நிலப்பரப்புடன் ஒப்பிட முடியாது. ருஷ்யாவில் சதுர மைல் ஒன்றில் 20 பேரும், இந்தியாவில் 300 பேரும் வாழ்கிறார்கள். சரித்திர பூகோள நிலைகளை கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும்  ஒப்பீடும் அதே முறையை எடுத்துக் கொள்வதும் எதிர்மறை விளைவுகளைக் கூட உருவாக்கும் என்றார்.
வர்க்கம், போராட்டம், ஜனநாயகம் என்பதெல்லாம் கூட திரிக்கப்படுகிது. என்றோ ஒருநாள் வரப்போகும் பொற்காலத்தின் பெயரால் அன்றாட தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன.. உடடியாக பெறப்படவேண்டிய பலவற்றை தியாகம் செய்ய கோரப்படுகிது. நல்லமுடிவு வரும் என சொல்லி தீய வழிகளில் அழைத்து செல்லப்படுகிறோம் என காந்திக்கு நெருக்கமாக வந்து தனது விமர்சன உரையாடலை முன்வைக்கிறார் லோகியா. இதே விமர்சனத்தை காந்தி பேசிவந்த ராமராஜ்யம் குறித்தும் மற்றவரால் சொல்லமுடியும்.

கருத்துமுதல்வாதம்- பொருள்முதல்வாதம் என நவீனமனம் இரண்டாக பிளவுபடுத்திவிட்டது. இரண்டிற்குமான முரண்பாடு தனக்கு தோன்றவில்லை என்றார் லோகியா. சரித்திரத்தில் நாம் பேசும்சோகன், புத்தனைவிட புரா ராமனும் சிவனும் மக்களை கவ்வி பிடித்துள்ளனர். அவர்களைபற்றி மக்கள் அதிகம் பேசுவது  ஏன் என வினா எழுப்பினார் லோகியா. அன்பு, பக்தி, தயை போன்ற புனைவுகள் அய்க்கியம் ஒன்றை உருவாக்குவதை நாம் பார்க்காமல் இருக்கக்கூடாது என்கிறார். மனிதகுல வாழ்விற்கு வரலாறு உரைநடை என்றால், தொடர்ந்து மக்களிடம் செல்வாக்கு செலுத்திவரும் புரா புனைவுகள் கவிதைகள் போல் இருக்கின்றன என்றார். வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, புராங்களிலிருந்தும் கூட மனிதகுல வரலாற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிது என்றார். மதம் குறித்த விவாதத்தில் மதம் அபின் என்ற மேற்கோள்களுடன் நிற்க முடியாது. ஒழுக்கம், தனிநபர் குணநலன் மேம்பாடு ,பண்பாட்டுபோதனையில். கருணை புலனடக்கம் என்பதில் நாம் மதம் என்பதை ஒதுக்கமுடியாது என கருதினார். பொருளாதாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நிரந்தர பகைத்தனமை இல்லாமல் உறவு ஏற்படவேண்டும் என்றார்.
புரட்சிக்கு புனிதமான நோக்கத்துடன் உறவுகொள்ள வேண்டும்.. இல்லையேல் எழாது- நிற்காது என்றார். நல்ல ஒன்றை தீய வழிகளால் அடையமுடியாது என்கிற காந்தியத்திற்கு அவர் வந்து சேர்கிறார்.  முதலாளித்துவம்- கம்யூனிசம் என்று பேசும் நாடுகளின் நடைமுறை எந்த வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை- தன் நாட்டு மக்கள் உயர்வு என்பதே இருவருக்கும் உந்து சக்தி என சமதூர விமர்சன நிலைக்கு போனார் லோகியா. ’இருதுருவ மோதல்’ உலகிற்கு நன்மை செய்யவில்லை என்றார். அடிமைகள் எஜமானன் பக்கம் நிற்பது போலவே பிற நாடுகள் துருவம் சார்ந்து நிற்கின்றன என்றார்.


போராட்டமின்றி எந்த மாற்றமும் வராது என்பதை ஏற்கும் லோகியாவால் அது ரத்தக்களறி மூலம் வந்தால்தான் சிறப்பு என்பதை ஏற்கமுடியவில்லை.  உலகம் அநீதிக்கு தலைவணங்காமை- சட்ட மறுப்பு என்ற வடிவங்களை உணரத் துவங்கிவிட்டது என்றார். சோசலிச மாநாடு ஒன்றில் எதிர்கால ஜனநாயகத்திற்கு இன்று சர்வாதிகாரம் என்பதும், தேச விடுதலைக்கு துரோகம் (வெள்ளையனே வெளியேறு போராட்டம்) செய்வதும்தான் கம்யூனிச வழிகளா என உரக்க கேள்வி எழுப்பினார். ஆச்சார்யா நரேந்திர தேவ் போன்றவர்கள் நாம் மார்க்சியவாதிகள் தான். மார்க்சியத்தை மீட்டவர்கள் என சொல்லலாம் என்று இடைமறித்தைக்கூட கேலியாகத்தான் லோகியா பார்த்தார். அரசியல் செயல்பாடு என்பதில் எந்த ஒரு தனிமனிதனுடைய சிந்தனையையும் முழுமையாக மையம் கொண்டிருக்கக்கூடாது என வாதிட்டார் லோகியா.. அதேநேரத்தில் மனிதன் என்றுதான் நாம் சிந்தனையை ஆராயவேண்டியுள்ளது . அவர்கள் சிந்தனை உதவலாம் ஆனால் அதே ஆதிக்கமாகி அழுத்தக்கூடாது என்றார். காந்தி மார்க்ஸ் விஷயத்தில் இதை கூடுதல் பொறுப்புடன் பார்க்கவேண்டியுள்ளது என்றார். இதில் வரலாற்றில் தனிநபர் பாத்திரம் என்ற மார்க்சிய ஆய்வை லோகியாவால் ஏற்க முடிகிறதா என்பதை அறியமுடியவில்லை..

No comments:

Post a Comment