கம்பராமாயணம்: பாலகாண்டம் நகரப்படலம், அரசியற்படலம் பகுதியிலிருந்து பிடித்த சில வரிப் பாடல்கள்
126.
வானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.
வான்
உறு நிவந்தன - (அந்நகரத்து மாளிகைகள்) வானமளவும் உயரந்து இருப்பவை; வரம்பு இல்செல்வத்த- அளவற்ற செல்வத்தை உடையன; தான் உயர்
புகழ்என- எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும்படி;
தயங்குசோதிய- விளங்கும் ஒளி உடையன; ஊனம் இல் அற
நெறிஉற்ற - குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும்;கோன்நிகர்- அரசைனைப் போன்று வாழும்; எண்இலாக் குடிகள்தம் கொள்கை சான்றன-
எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச்சான்றாக உள்ளனவாம்.
அந்நகரத்து மக்கள் ஒழுக்கத்தில் சிறந்து- அற நெறியில் நின்று அரசர்களைப் போல வசதியுடன் வாழ்வதற்கு அவர்கள்
வாழும் இம்மாளிகைகளே சான்றாக விளங்குகின்றன என்பதாம்.
132.
மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே!
துன்னிய
தமனியத் தொழில் தழைத்த- உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய
கட்டப்பட்ட; அக்கன்னி நல்நகர்- அந்த அழிவில்லாத மா நகரின்;
மின்என விளக்கு என-
மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும்; வெயில் பிழம்பு என-சூரியக்
கதிர்களைப் போலவும் உள்ள; நிழல் கதுவலால்- ஒளி தன் மீது
படுவதனால்; அப்புலவர் வானம் பொன் உலகு ஆயது- அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.
அமரர்
உலகம் பொன்னுலகமாய் பொலிவதற்குக் காரணம் அயோத்தி மாநகர் பொன்னால்
அமைந்து, தீப ஒளி, சூரியனின் கதிர்கள் ஆகியவை போல
ஒளிர்வதால் அப்பேரொளியால் தேவஉலகு பொன்னுலகாயிற்று
137.
பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப தண் நிலா.
பந்துகள் பயிற்றுவார் மடந்தையர் இடை- பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து; முத்தினம் சிந்துவ-
(அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன; அவை திரட்டுவோர்- அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும்; அந்தம் இல் சிலதியர்- அளவில்லாத பணிப்
பெண்கள்; ஆற்று குப்பைகள்-குவித்த அந்த முத்துக்
குவியல்கள்; சந்திரன் ஒளிகெட தண் நிலா
தழைப்ப- சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா
ஒளி தழைப்பனவாம்.
பெண்கள்
பந்து விளையாடும் இடங்களில் அணிகலன் முத்துகள் சிதறி விழ. பணிப்பெண்கள் அவைகளை எல்லாம்
சேகரித்து ஆங்காங்கு குவித்து வைக்கின்றனர். அந்தக் குவியல்கள் சந்திர ஒளி கெடுமாறு- வெண்மைநிற ஒளியை உடையனவாய் விளங்குகின்றன.
165.
தெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க. நாளும்.
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.
தெள்வார் மழையும் திரை ஆழியும்
உட்க - தெளிந்த நீரைத்தரும் மேகங்களும் அலைகளை உடைய கடலும்
அஞ்சும்படி; நாளும் வள்வார்
முரசம் அதிர் மாநகர்- நாள்தோறும் தோல்
வாரினால் கட்டிய பேரிகைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்நகரில்; வாழும்
மாக்கள்
- வாழ்கின்ற ஐயறிவே உடைய மாக்களிடையே கூட; கள்வார்
இலாமைப் பொருள் காவலும் இல்லை - களவு
செய்பவர் இல்லாமையால் பொருள்களைக் காவல் காப்பவரும் இல்லை; யாதும் கொள்வார் இலாமை
கொடுப்பார்களும் இல்லை- எதையும்
யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் அந்த நகரத்தில் இல்லை.
வறுமைப்
பிணியும். அதன் காரணமாகச் செய்யும்
களவு முதலிய வஞ்சகச்
செயல்களும் அயோத்தி நகரில் இல்லை
என்பது கருத்து. மாக்கள் என்பது அறிவில்
தாழ்ந்தவர்களைக் குறிக்கும் “மாவும் மாக்களும்” ஐயறிவினவே” என்பது
தொல்கப்பியம் அறிவுக் குறை உள்ளவர்களிடை களவு செய்யும்
கீழ்மை இல்லை
என்பது கருத்து.
166.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது
நிற்பார் பிரர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர்
என்று அங்கு எவரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே-
அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும்
கல்வி. பொருள் ஆகிய
எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை
உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை.
உடையவர்களும் இல்லை.
இப்பாடல்
அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச்சிறப்பினையும்
தெரிவிக்கிறது. கல்லாத வீணரைப்
‘பிறர்’ என்றார்.அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ. செல்வர்.வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.
171.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
அன்னான் -
மன்னர் மன்னனான அத்தயரதன்; எவர்க்கும்-தனது ஆட்சிக் கடங்கியகுடிமக்கள் எவர்க்கும்; அன்பின்தாய் ஒக்கும் -அன்பு
செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்; நலம் பயப்பின் தவம்
ஒக்கும் - நன்மை
செய்வதில் தவத்தைப் போன்றவனாவான்;
முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்-தாய்தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று. இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச்
செய்யும் தன்மையினால்; சேய் ஒக்கும்
- அவர்கள்
பெற்ற மகனை ஒத்திருப்பான்;
நோய் ஒக்கும்என்னின்
- குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் -
அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி
ஆயப்புகுந்தால்-நுணுக்கமான கல்வித்துறைகளை
ஆராயப்புகும் போது; அறிவுஒக்கும்- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.
தாயன்பு
சிறந்தது.
“தாயினும் சாலப்பரிந்து” என. இறையன்புக்கே தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது
குடிமக்களிடம் தாய் போல் அன்புடையவன். நன்மை புரிவதில் தவம் போன்றவன்;நற்கதியடையச் செய்வதில் சேய்
போன்றவன்; நோயுறும் காலை.அதைப்
போக்கும் மருந்து போன்றவன்;
ஆராய்ச்சிக்கு உதவும்அறிவு போன்றவன்
என்றெல்லாம் தயரதனுடைய பண்பைச்சிறப்பித்துக் கூறுகிறார். குருகுமாரனான சிரவணனுடைய பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து- அவர்களைச்
செல்கதி உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்” என்பது சிறப்பாகப் பொருந்துவதொன்றுதானே! ‘அறிவு’ குணவாகு
பெயராய் அறிவுடையானை உணர்த்தி நின்றது.
311.
எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயைும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
எதிர்
வரும் அவர்களை- தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப்பார்த்து; எமை உடை
இறைவன் - எம்மை
ஆட்கொண்டஇறைவனாகிய ராமபிரான்; முதிர்
தரு கருணையின் - முதிர்ந்தகருணையினால் (தனது); முகமலர்
ஒளிரா - மலர் போன்ற முகம்ஒளிர; எதுவினை - எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ?;இடர்
இலை (கொல்)- துன்பமெவும் இல்லையன்றோ?; நும்மனையும்இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ?; மதிதரு குமரரும் வலியர்கொல் எனவே - அறிவு மிக்க
பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கிறார்களா? என்றெல்லாம் கேட்கவே.
Comments
Post a Comment