https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, June 29, 2016

அக்களூர் ரவி தமிழகத்தில் முக்கிய மொழிபெயர்ப்பாளராக உயர்ந்து வருகிறார். இதுவரை எட்டு புத்தகங்களை தனது கடின உழைப்பின் மூலம் தமிழுக்கு சேர்த்திருக்கிறார். மொழிபெயர்க்க மிகவும் கடினமான ஆங்கில எழுத்துமுறையில் உருவான Sunil Khilnani ன் Idea of Indiaவை பொறுமையாகவும் பொறுப்புடனும் மொழிபெயர்த்தும் அவரின் ஒப்புதலுக்காக காத்துஇருப்பதாக அறிகிறேன். ரவியின் மிகப் பெரிய மொழிபெயர்ப்பில் ஒன்றாக BARACK OBAMA-Dreams of My Father என் கதை என்ற தலைப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அப்போது 100 பக்கங்கள் படித்துவிட்டு நான் முடிக்காமல் விட்டுவிட்டேன்.ஆங்கிலத்தில் 470 பக்க அளவில் உள்ள புத்தகம்- ரவியால் 680 பக்க மொழிபெயர்ப்பாக மலர்ந்தது. தற்போது முழுமையாக முதல் பக்கத்திலிருந்து படித்து அப்புத்தகத்தைமுடிக்க முடிந்தது. ரவியின் கடும் உழைப்பிற்கு எனது வணக்கம்.
தோழன் ரவி வேறுயாருமல்ல.. நமது மாயவரம் ரவிதான். NFTE இயக்கம் வளர உழைத்த தோழன்தான். தற்போது சென்னையில் JAO . அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என தமிழக எழுத்துலகம் அங்கீகரிக்கும் நாளை நோக்கி நானும் காத்திருக்கிறேன். ரவிக்கு வாழ்த்துகள்


No comments:

Post a Comment