Skip to main content

Com JAGANNATH SARCAR தோழர் ஜகன்னாத் சர்கார் 2

II
மார்க்சிய மூல நூல்களை கற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஜே எஸ் ஒருவர். கிராம்ஸியைகூட அவர் கற்றதாக அறிகிறோம். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் புத்தகங்களையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் புத்தகங்களையும் கூட அவர் படிக்க தவறியதில்லை. எல் கே அத்வானியின் சுயசரிதையையும் அவர் படித்தார். பீகாரின் சாதி, உபசாதி அம்சங்களை வரலாற்று பார்வையில் அவர் தெரிந்துகொண்டார். புரா இலக்கியங்களையும் அவர் படித்தார். மதுபானி ஓவியங்களுக்கு பின்னால் உள்ள சாதி, மத கண்ணீர் கதைகளை எடுத்துரைப்பவராக இருந்தார். அவரை நாங்கள் சமுகவியலராகவே பார்த்தோம் என கல்கத்தா ஸ்காட்டிஷ் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தருண் சன்யால் தெரிவிக்கிறார்.
பீகாரில் சி பி அய் அக்டோபர் 20, 1939ல் 19 தோழர்களுடன் துவக்கப்பட்டது. இரண்டுமாத காலத்தில் டிசம்பர் 1939ல் ஜகன்னாத் கட்சியில் இணைக்கப்படுகிறார். புகழ்வாய்ந்த மிக உயர் பதவிகளில் இருந்த தாய்வழி, தந்தைவழி குடும்ப மூத்தவர்கள் ஜகன்னாத், அவரது சகோதரர் கட்சி வாழ்க்கையினால் பெரிதும் கவலைக்கு உள்ளாயினர். அவரை ICS ஆக உயர் பதவியில் பார்த்திட தந்தை கனவு கண்டார். 200 புத்தகங்கள் இதற்காகவே தருவிக்கப்பட்டு வீட்டில் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மகன் ஜகன்னாத் கல்கத்தா கட்சிப்பணி என சென்றார். தாய் மனநோய்க்கு உள்ளானாதாக அறிகிறோம்.
1964ல் கட்சி பிளவின் போது சேதாரம் இல்லாமல் பீகார் கட்சியை காத்து நின்றது, கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்வதற்குரிய சூழலை உருவாக்கியது 1967ல் காங்கிரஸ் அல்லாத மந்திரிசபை உருவாக்கம், 1970 நிலமீட்பு இயக்கத்தில் பல தோழர்களை கட்சி பலிகொடுத்து ஆயிரகணக்கான மக்கள் பயனுற நிலப்பகிர்வு, ஜே பி இயக்கம் எதிர்த்த கொள்கை போராட்டம், கட்சி திட்ட்த்தை மாறிவந்துள்ள உலக, இந்திய நிலைகளுக்கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்கி உட்கட்சி போராட்டம் , பழங்குடி மக்கள் இயக்கம், புத்திஜீவிகளை கட்சிபால் கொணர்தல் போன்றவற்றில் அப்பரிய பங்கை செலுத்தியவராக  தோழர் ஜகன்னாத் சர்கார் செயல்பட்டவர். தலைவராக உயர்ந்த நிலையிலும் தன்னை தினந்தோறும் புதிய விஷயங்களில் update செய்து கொள்வது- தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது என்பதற்கு அவர் முன்னுதாரணமாக இருந்தார். Sharp scientific intellect, Marxist outlook, Comradely behaviour-  இதுதான் தோழர் ஜகன்னாத் என்று எழுதினார் தோழர் பரதன்.
 தோழர் ரதிவே கட்சியின் பொதுச்செயலராக இருந்த தருணத்தில் தோழர் ஜகன்னாத்தின் ராமகிருஷ்ண மிஷன் தொடர்புகளை பி டி ஆர் கண்டித்தார். ராமகிருஷ்ண மிஷன் சார்ந்த அவ்யானந்த மகராஜ் என்பார்தான் ஜகன்னாத் அவர்களுக்கு முதலில் மார்க்சிய நூல் ஒன்றை படிக்க தந்தார் என்பது தோழர் ரணதிவேவிற்கு தெரியாது என்கிறார் ஜே எஸ். ரால்ப் பாக்ஸ் எழுதிய லெனின் குறித்த நூல் அது என தனது நினைவில் சொல்கிறார். ராஞ்சி சிறையில் ஜே எஸ் இருந்தபோது அவர் கேட்கும் புத்தகங்களை கொண்டு போய் கொடுப்பது மற்றும் சிறைகளை மாற்றியதால் குடும்பம் பட்ட துயர்களை அவரது துணவியார் நிலிமா சர்கார் பகிர்ந்துகொண்டுள்ளார்.
 ஜே எஸ் செவ்வியல்  இந்துஸ்தானி இசைப்பிரியர். பண்டிட் ரவிசங்கர் மற்றும் உஸ்தாத் அலிகான் ஜுகல்பந்திதனை ரசித்து அவர் உரையாடுவார் என அறியமுடிகிது. தனக்கு எவ்வவு வேலை தொந்திரவு இருந்தாலும் தனது டைகளை தானே துவைத்து உலர்த்தும் பழக்கமுள்ளவராக இருந்தார் ன அவருடன் பழகிய பாலிடெக்னிக் ஒன்றின் பேராசிரியர் சுப்ரதாகோஷ் தெரிவிக்கிறார். அவரின் பொறுமை, சுகட்டுப்பாடு எங்களை வியக்கவைக்கும் என்கிறார். லியுஷோஷியின்  How to be a Good Communist  என்பதன் உருவமாக அவரை நாங்கள் உணர்வோம் என்கிறார்.
அவரது துணவியாரின் சகோதரரும் இவரால் கட்சி வாழ்க்கைக்கு ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் மூலம் மொகித்சென் சுயசரிதை, மாவோ பற்றி அவரது டாக்டர் எழுதிய Private Life of Mao, காஸ்ட்ரோ நினைவுகள் குறித்தும் அவர் படித்து சக தோழர்களுடன் விவாதித்தார் என அறிகிறோம்.  1968 செக்கோஸ்லோவியா மீதான சோவியத் படையெடுப்பை அவர் ஏற்கவில்ல்லை.. விமர்சனம் இருந்தது என்கிறார் சமித் கோஷ். ஜெர்மானியர் ரசோஜின் என்பார் எழுதிய வேத இந்தியா நூல் குறித்து சக தோழர்களுடன் விவாதித்ததாக அறியமுடிகிறது. காயத்ரி மந்திரம் பற்றி ஆர்வமூட்டும் ஆய்வுப் பார்வை அவரிடம் இருந்தது. விஸ்வாமித்திரர்  ஆர்யர் அல்லாதவர்களை ஆர்யர்களாக மாற்றி inclusive societyக்கு முயற்சித்ததாகவும் வசிஸ்டர் ஆரியர் தூய்மைவாதம் பேசியதாகவும் அவரது கட்டுரை பேசுகிது. தாகூர், நஸ்ருல், ஷேக்ஸ்பியர் மேற்கோள்கைகளை அவர் உரையாடலில் பயன்படுத்துவார் என டாக்டர் அர்ஜித் தாஸ் குப்தா தெரிவிக்கிறார். டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் குறித்து தன்னிடம் அவர் உரையாடியதாக  அவர் எழுதுகிறார்.
தோழர் S G சர்தேசாய் அவர்களுடன் ஜே எஸ் அவர்களுக்கு நெருக்கம் இருந்த்து. சர்தேசாய் உறவினர் G S  சர்தேசாய் என்கிற வரலாற்று அறிஞருடன் ஜே எஸ் அவர்களின் மாமா ஜாதுநாத் நெருங்கிய நண்பராக இருந்தார். குடும்ப பழக்கமாகவும் இருந்தது. சர்தேசாயும், ஜகன்னாத்தும் கட்சி விஷயங்கள் குறித்து கடித போக்குவரத்து செய்திருப்பதாக அறியமுடிகிது அவை பராமரிக்கப்பட்டு வெளிப்பார்வைக்கு வந்தால் மேலும் இயக்க ய்விற்கு உதவியாக இருக்கலாம். ஜே எ ஸ் சர்தேசாயின் கடிதம் ஒன்றை (ஜனவரி 29, 1989) சுட்டிக்கட்டுகிறார். சர்தேசாய் சோவியத் நிலை குறித்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அப்போது மெயின்ஸ்ட்ரீமில் கட்டுரைகள் எழுதிவந்தார். அக்கடிதத்தில் அவர் வெளிப்படையாக விமர்சனம் வைத்துக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிது. During the Emergency, Dange once referred to Indira as revolutionary democrat in a meeting of the National council, and not one of us got up to protest against such nonsense”   என்றும் அதே போல் EMS காங்கிரஸ் எதிர்ப்பில் எந்த சாத்தானுடனும் கூட்டு என பேசிவந்ததை விமர்சித்தும் அக்கடிதம் முடிகிது.
 ஆங்கில பேராசிரியை அர்ஜித் அவர்களுக்கு அவர் ஒருமுறை பேட்டி அளித்தார். அதில் வங்க கம்யூனிஸ்ட் (அவரது சமகால) முன்னோடிகள் ஜோதிபாசு, புபேஷ்குப்தா, இந்திரஜித் குப்தா ஆகியோர் லண்டனில் பிரிட்டிஷ் தலைவர்கள் ஹாரிபாலிட், பென்பிராட்லி, ரஜினிபாமித்த் செல்வாக்கில் கம்யூனிஸ்ட்களாக மாறி வந்ததை குறிப்பிடுகிறார். அவர்களிடத்து ஹாரால்ட் லாஸ்கியின் செல்வாக்கும் இருந்தது என்கிறார். தனக்கு பின்னர் அடுத்த ஆண்டில் 1940ல் ஜோதிபாசு கட்சிக்கு வந்ததாக தெரிவிக்கிறார். நிருபன், ஜகன்னாத் போன்ற நாங்கள் லண்டன் செல்வாக்கில் இல்லாமல் இங்கு பவானி, லாஹிரி செல்வாக்கில் மார்க்சியம் கற்றதாக தெரிவிக்கிறார்.
 கட்சி பிவு குறித்த கேள்விக்கு ஜோதிபாசு அதற்காக பெருமளவு இங்கி வேலை செய்யவில்லை என்றும் அஜாய், புபேஷ், ஜோதி மூவரும் மற்றவர்களை Convince செய்துவிடலாம் என்றே பேசி வந்தனர் என்கிறார். ஆனால் 1964 சி பி எம் உருவானபோது ஜோதிபாசு அதன் பொலிட்ப்யூரோவில் இடம் பெற்றது irony  முரண் என்கிறார். ஜோதிபாசு மறைவுடன் சகாப்தம் ஒன்று முடிவுற்றதாக கருதமுடியுமா என கேட்டபோது அவர் almost (க்குறைய) என ஒரு வார்த்தையில் பதில் தருகிறார். ஜோதிபாசு அவர்களின் நிலசீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களை அவர் தெரிவித்தார்.
ஜே எஸ் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியதாக அறிகிறோம். அவற்றில் பல தொகுக்கப்படவில்லை என்கிறார்கள் சில முக்கிய கட்டுரைகளை தொகுத்து Selected Essays  கொணர்ந்துள்ளனர். விடுதலை போராட்டத்தின் பன்முகம், இந்திய விடுதலை 50 ஆண்டுகள், காந்தி, நேரு, சோசலிசம், சோசலிச மார்க்கம், மதசார்பின்மை, இஸ்லாம், வங்க விடுதலை, சாதியின் வேர்கள், பழங்குடிகள், தேசபக்தி, ஜனநாயகம், மத்தியத்துவ ஜனநாயகம், பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கம், நக்சலைட் இயக்கம், ஜேபி இயக்கம், காயத்ரி மந்திரம், நிலக்கரி தொழிலார் இயக்க அனுபவம், தோழர்கள் டிமிட்ரோவ், சர்தேசாய், ராஜேஸ்வர்ராவ் போன்றவை சில முக்கிய கட்டுரைகள்.
 காந்தி குறித்த பார்வையில் கம்யூனிஸ்ட்களின் தவறு குறித்த சுயவிமர்சனத்தை அவர் முன்வக்கிறார். காந்தியடிகளின் உயிர்த்தியாக 50 ஆண்டுகள் ஒட்டி 1998ல் அவர் கட்டுரை ஒன்றை எழுதுகிறார்.  பிரிட்டிஷாரை பின்வாங்க செய்து வெளியேற்றும் போராட்ட்த்தில் -அகிம்சை முறையில் மக்களை திரட்டிய போராட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார் என்கிறார். He never surrendered to British rule. Inch by inch he made the rulers to retreat. That was that Indian people saw. And the understanding of the communist in this regard was rather puerile   - கம்யூனிஸ்ட்கள் புரிதல் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என கடும் சுயவிமர்சனத்தை வைக்கிறார். அவரின் அகிம்சை , ஒத்துழையாமை எனும் ஆயுதங்கள் இன்றும் பொருத்தமானவை என்கிறார்.
நேரு அவர்களின் நூற்றாண்டு ஒட்டி 1989ல் கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டது. நேரு இந்திய விடுதலைப்போரை பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகவும் புரிந்துகொண்டவர். நமது உயர் கலாச்சாரம் குறித்து கொண்டாடும் அதே நேரம் வழக்கொழிந்தவைகளை விமர்சித்தவராகவும் அவர் இருந்தார். அரசியல் விடுதலை என்பது பொருளாதார விடுதலையாக மாறும்போது தான் வெகுமக்கள் முன்னேற்ம் என்பதையும் அவர் புரிந்தவராக இருந்தார். தனது கொள்கைகள் மூலம் சோசலிசம் என அவர் பேசினாலும் வளர்ந்தது முதலாளித்துவம்தான் என  ஜே எஸ் நிதான பார்வையுடன் நேருவை அணுகுகிறார். காங்கிரசின் வலதுசாரி பிரிவிற்கு அவர் சில நேரங்களில் பணிந்துபோனார் என்லவீனத்தையும் ஜே எஸ் எடுத்து வைக்கிறார். நேரு மதசார்பின்மை, ஜனநாயக நிறுவனங்களை தூக்கிப்பிடிப்பவராக பொதுவாக இருந்தார் என்ற மதிப்பீட்டையும் வைக்கிறார். இன்று அவை சோதனைக்கு உள்ளாகிவருகின்றன என்கி கவலையையும் அக்கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.
 வங்கதேச விடுதலையை வர் வரவேற்றார். அதே நேரத்தில் தனது எச்சரிக்கையையும் அவர் வெளியிட தவறவில்லை. ஒருநாட்டில் ஜனநாயகம் என்பதை பிற நாடு ஒன்றின் படையெடுப்பின் மூலம் கொணரமுடியாது. அங்குள்ள மக்களின் உர்வுகள் மூலம் ஜனநாயகம் கட்டப்படவேண்டும் என்றார். பாகிஸ்தான் இஸ்லாமிய ஜனநாயகம் என பேசியபோது அது குறித்து தனது கருத்தை அவர் வெளியிட்டார்.  Theocracy   மதஅடிப்படையிலான என்பதை theo- democracy  ( democracy limited by the words of God) கடவுளின் வார்த்தைக்குள் நின்று அடங்கும் ஜனநாயகம் என்பதாக அவர்கள் பேசிவருகின்றனர் என்றார். 
இந்தியாவானாலும், உலகில் எந்த நாடாக இருந்தாலும் மதத்தின் பெயரால் ஆட்சி என்றால் முதலில் அங்கு பலியாவது மக்களின் இறையாண்மையும் ஜனநாயகமும்தான் என்றார். மதசார்பற்ற அரசு என்பதை அவர் உயர்த்தி பிடித்தார். மதம் மக்களை மீட்பதற்கு பதில் அவர்கது மூளையில் முறிவை உருவாக்கிவிடுகிது என்றார். மதத்தில் அதன் நம்பிக்கைதான் ஆக உயர்ந்தது. உலகியல் வாழ்வில் சட்டங்கள்தான் மேலானது. ஆனால் எங்கள் மதநம்பிக்கைக்கு சட்டங்கள் கட்டுப்படவேண்டும் எனும்போது சமுகம் பதட்டம் அடைவதாக அவர் கருதினார்.
பேராசிரியர் வாசி அகமது என்பாருக்கு அவர் இந்தியாவில் சாதிகளின் வேர்கள் குறித்து எழுதினார். வேத உபநிடதங்கள், புத்தம், மனு, பகவத்கீதை, மாக்ஸ்முல்லர் என மேற்கோள்களை காட்டுகிறார். அவரின் புரிதல் விரிவை நாம் உணரமுடிகிரது. புத்தம் வர்ந்தபோதிலும் சாதிபழக்கம் முறியடிக்கப்படவில்லை. சைதன்யர் போன்றவர்களை பற்றியும் அவர் அதில் குறிப்பிடுகிறார். இந்திய சமூக சூழலில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டங்களை அவர் தெரிவிக்கிறார். இந்திய அரசியல் சட்டம் பல தடைகளை உடைத்திருந்தாலும் சாதியின்  சமுக தாக்கம் செல்வாக்குடன் நிற்கிறது என்றார்.
கர்பூரிதாகூர் முன்மொழிவுகள் பிற்பட்ட வகுப்பாரை கைதூக்கி சமுகத்தில் சமநிலைக்கு உயர்த்திடத்தான். புதிய சாதி ஒன்றின் மேலாதிக்கத்திற்கு அல்ல என அவர் தெளிவு படுத்தினார். முஸ்லீம்கள் சிலர் பீகாரில் பிற்பட்ட முஸ்லீம்  மோர்ச்சா என துவங்கியபோது அவர்களுக்கு அறிவுரை நல்கினார். இஸ்லாமில் இல்லாத சாதி பழக்கத்தில் சிக்கி தங்களது ஒற்றுமையை சிதைத்துவிடக் கூடாதென்றார். இதற்காக குரானின் பல பகுதிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
வளர்ச்சி குறித்தும் பழங்குடிகள் அதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்தும் அவர் கட்டுரைகள் தந்தார். அவர்களின் காலம் காலமான வாழிடம் , காடுகளின் பொருளாதாரம் , பழக்கங்கள் ஆகியவற்றின் அழிவாக வரும் வர்ச்சியை அவர்கள் எதிர்ப்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் ஜே எஸ். அவர்கள் சமுகத்தில் தனிசொத்துரிமை, அதன் அடிப்படையில் உற்பத்தி, சந்தை பொருளாதாரம் என்பதெல்லாம்  கிடையாது என்பதையும் நாம் உணரவேண்டும் என்கிறார்.
 கிரிட்டிக் எனும் இதழில் 2001ல் சோவியத் வீழ்ச்சி, சோசலிச கருத்தாக்கம் குறித்து அவர் நீண்ட கட்டுரை எழுதினார். In earlier times, the communists of india thought a non peaceful path or civil war unavoidable. The second congress of CPI in 1948 reiterated this path. But experiences of this path proved its fruitlessness and the communists slowly reoriented themselves for such transmission thro peaceful path. Emergence of CPI as the second largest party in the parliament in 1952 and its securing majority in Kerla in 1957 strngthened confidence in peaceful pathவன்முறை இல்லாத  அமைதி வழியில் மாற்றத்தின் சாத்தியப்பாடு பர்றி பேசுகிரார்.
நக்சல் இயக்கம் பர்றி பேசும்போது “A group of communists broke away from the mainstream communist movement and dogmatically advocated non peaceful path and civil wars. They advanced slogans like power flows thro the barrel of Gun, Not by ballots but by bullets. They tried to build liberated areas என்கிற விமர்சன் பார்வையை வைக்கிறார். அரசின் அங்கங்கள் எனப்படும் ராணுவம், அதிகாரவர்க்கம், போலீஸ் மற்றும் பலபடியிலான நிர்வாகம் போன்றவை மக்கள் நலனுக்கு உகந்த வகையில்  பயன்படுத்தப்படவேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கிறார். இடதுசாரி ஜனநாயக மாற்று அரசாங்கம்- அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உரிய மாற்றங்களுடன் என்பது குறித்தும் சொல்கிறார்.
1990ல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிப்படையாக கட்சி செய்து கொள்ளவேண்டிய மாற்றம் குறித்து விவாதிக்கிறார். ஜனநாயக மத்தியத்துவம் என்பதை அவர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார். If we relax the existing rule of democratic centralization and permit the minority to express its views  publicly, it will facilitate such discussion on a very wide scale. If the CPI relaxes the rules in the aforesaid manner, it may encourage other parties based on Marxism to do likewise. In a way it will help such parties to come close leading to ultimate unity of the communist movement, a goal that we cherish. The rigidities of the existing rules obstruct the process” என சோதிக்கப்படவேண்டிய மாற்றம் ஒன்றை கட்சியில் கோரினார் ஜே எஸ்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜகன்னாத் சர்கார் அவர்கள் ஏப்ரல் 8 2011 அன்று பாட்னாவில் மறைந்தார்.


Ref:
Articles by Various Professors and Party Leaders about Jagannath  sarkar
Selected Essays of Jagannath


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு