Skip to main content

Com JAGANNATH SARKAR ஜகன்னாத் சர்கார்

தோழர் ஜகன்னாத் சர்கார்
                         -ஆர். பட்டாபிராமன்
பீகார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர் தோழர் ஜகன்னாத். 1919ல் பிறந்து தனது 20ஆம் வயதில் கட்சியில் சேர்ந்து 22 வயதிலேயே அப்பிரதேச அமைப்பு கமிட்டியின் செயலராக ஆக்கப்பட்டவர். தோழர்கள் பவானிசென், பி சி ஜோஷி, சோமநாத் லாகிரி, சர்தேசாய் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டவர். இந்திரதீப் சின்ஹா, யோகேந்திர சர்மா, சதுரானன் மிஸ்ரா போன்றவர்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். பீகாரில் பல்லாண்டுகள் மாநில கமிட்டிக்கு செயலராக இருந்து இயக்கத்தை வீச்சாக வளர்த்தவர்.
ஜகன்னாத் அவர்களின் தந்தை டாக்டர் அகில்நாத் சர்கார். பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவர். 1920 களில் ஒரிஸ்ஸா, பாட்னா மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர். பூரி பகுதியில் அவர் இருந்தபோது , தாய் பினாபன் பூரி ஜகன்னாதர் தேர் இழுத்து வந்த பிறகு பெற்ற மகவிற்கு ஜகன்னாத் என பெயரிட்டனர். அவர் பூரியில் செப்டம்பர் 25, 1919ல் பிறந்தார். பின்னர் குடும்பம் பாட்னா நோக்கி நகர்ந்தது . ஜகன்னாத் எம் படிக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு ஏற்பட்டது. படிப்பை தொடர்வதா, கட்சிக்கு போவதா என்ற குழப்பம் தெளிந்து பட்டமேற்படிப்பை விடுவிட்டு ஜோஷி அறிவுரையை ஏற்று கல்கத்தா சென்றார்.
பீகாரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் பலர் இருந்த்னர். பின்னர் அதில் தொடர முடியாத நிலையில் 1939ல் பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. கல்கத்தாவில் பவானிசென் தோழர் ஜகன்னாத்திற்கு மார்க்சிய பயிற்சி கொடுத்தார். அங்குதான் அவர் நிருபென் சக்கரவர்த்தி போன்றவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. நிருபென் தனது சக தோழருடன் ஹிஜ்ரி சிறையிலிருந்து ஏறி குதித்து  தப்பி வந்த காலமது. சோமநாத் லாகிரிதான் ஜகன்னாத் அவர்களுக்கு தலைமறைவு கட்சி வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்பிக்கிறார். இரண்டாம் உலகப்போர் சூழல் சோவியத் பங்கேற்பையடுத்து கட்சி நிலைப்பாடு மாறியதால் அவர்களால் பயிற்சியை தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது. பீகார் திரும்பியவுடன் 1941ல் கட்சி கூடி பயிற்சி பெற்ற ஜகன்னாத்தான் பிரதேச கமிட்டி (provincial organizing Committee- POC) செயலர் என்றனர். 1942வரை இப்பொறுப்பில் அவர் இருந்தார்.
தோழர் சர்தேசாய் அவர்கள் பீகார்  மத்திய கமிட்டி பிரதிநிதியாக பீகார் வரும்போதெல்லாம் தொழிலாளிவர்க்க போராட்டம் அதில் பங்கேற்க வேண்டிய அவசியம் குறித்து பேசுவார். சர்தேசாயால் கவரப்பட்ட ஜகன்னாத்  கிரிதி நிலக்கரி தொழிலாளர் மத்தியில் பணிபுரியத் துவங்கினார். அவர்களது வாழ்வியல் தன்மைகள், போராட்டங்களின்போது அவர்களது மனப்பாங்கு, அவர்களது மதரீதியான எண்ணங்கள் அவை இயக்கங்களில் பிரதிபலித்து கொடுத்த அனுபவங்கள் பலவற்றை அவர் பீகாரின் பலபகுதி நிலக்கரி தொழிலாளர் இயக்கத்தில் கற்றார். தனது சில வறட்டுத்தனங்களை களைய அவை உதவியதாகவும் ஜகன்னாத் பின்னாட்களில் தெரிவிக்கிறார்.
இந்திரதீப் சின்ஹா, யோகந்தரமிஸ்ரா, சதுரானன் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், அலி அஷ்ரப், சுனில் முகர்ஜி போன்ற பீகாரின் புகழ்வாய்ந்த பல தலைவர்கள் அவரின் சமகாலத்தவர்களாகவும் பீகார் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களாகவும் விளங்கினர். இந்திரதீப் பின்னாட்களில் விவசாய தொழிலாளர் இயக்கத்திலும் நியுஏஜ்ஜின் சிறப்பான எடிட்டராகவும் உயர்ந்தவர். இந்திரதீப், யோகேந்தர், ஜகன்னாத் பீகார் குழுவினர் 1948களில் தோழர் ரணதிவே தலைமையிலான மத்திய கமிட்டியை கல்கத்தாவில் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவர். கட்சி அதிதீவிர நிலைப்பாடு எடுத்த ஆண்டுகள் அவை. ரயில்வே வேலைநிறுத்தம் இந்திய புரட்சிக்கான அஸ்திவாரம் என ரணதிவே இத்தோழர்களிடம் பேசியதாக  அனில் ரஜிம்வாலே தெரிவிக்கிறார்.
நாடுமுழுதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானது போலவே ஜகன்னாத் உட்பட கட்சித்தலைவர்கள் கைதுப்படலம் நடந்தேறுகிறது, தலைமறைவு டெக்னிக் அப்போது ஜகன்னாத்திற்கு உதவவில்லை. அவர் கழிப்பறையில் பதுங்கி உள்ளதை போலீஸ் மோப்பம் பிடித்து அவரை சிறைக்கு அனுப்புகிறது. மத்திய கட்சியில் தோழர் ராஜேஸ்வரராவ் புதிய தலைமை பீகார் கட்சியை மாற்றுகிறது. அந்நேரத்தில் பொறுப்பிலும் சிறையிலும் இருந்த ஜகன்னாத் புதிய மாற்றத்தில் இடம் பெறவில்லை. பின்னர் அஜாய் தலைமையில் மத்திய கட்சியில் மாற்றம் வருகிறது, பீகாரில் மீண்டும் மாநில செயலராக 1952-56 காலத்தில் ஜகன்னாத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேபோல் 1967-78 காலத்திலும் தொடர்ந்து மாநில செயலராக அவர் செயல்படுகிறார்.
காங்கிரசிற்கு பீகாரில் சோசலிஸ்ட்கள் கர்ப்பூரிதாகூர் , மண்டல் தலைமையிலும் கம்யூனிஸ்ட்கள் ஜே எஸ் (ஜகன்னாத் சர்கார் தனது சக தோழர்களால் JS என அழைக்கப்படலானார்) இந்திரதீப் தலமையிலும் கடும் சவால்களை தந்தனர். 1967ல் காங்கிரஸ் அல்லாத கூட்டணி மந்திரிசபை பீகாரில் அமைந்தது, இந்திரதீப் அதில் வருவாய்துறை அமைச்சராக இடம் பெறுகிறார். வறட்சி பாதித்த பல்வேறு மாவட்டங்களின் நிவாரண பணிகளை அவர் முடுக்கி விடுகிறார். கட்சியின் செயலர் என்ற வகையில் கட்சி முழுமையையும் வறட்சி நிவாரண பணிகளில் ஈடுபடுத்தி மிக முக்கிய பங்களைப்பை ஜே எஸ் செய்கிறார்.
தோழர் ஜே எஸ் சிறந்த மேடை பேச்சாளர் அல்லர். ஆனால் கமிட்டிகளில் அழுத்தமாக  நிதானமாக மற்றவர்கள் ஏற்க தகுந்தவாறு கருத்துக்களை முனவைப்பவர் என சக தோழர்களால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தார். இன்று கட்சியின் மார்க்சிய சிந்தனையாளராக கல்வி இலாகாவிற்கு பொறுப்பாக இருக்கும் அனில்ரஜிம்வாலே குடும்பம் ஜே எஸ் குடும்பத்திற்கு மிக நெருக்கமானது, அனில் தந்தை ரஜிம்வாலாவும் ஜே எஸ் அவர்களும் இணைந்துதான் இந்தி தினசரி ஜனசக்தியை பீகாரில் கொணர்ந்தனர். தோழர் ஜே ஏஸ் அவர்களுக்கு பல்கலைகழக பேராசிரியர்களின் தொடர்பும் பாட்னா புத்திஜீவிகளின் தொடர்பும் இருந்தது. லேபர் இன்ஸ்டிட்யூட்கள், ஆய்வு மையங்கள் துவங்கிட இத்தொடர்புகள் அவருக்கு உதவின. ஜோஷி அதிகாரி ஆய்வு மையம் அமைவதில் அவர் பெரும் பங்காற்றினார்.
Science and people, Social Science Probings போன்ற ஆய்விதழ்கள் வர அவர் உத்வேகமூட்டினார். மார்க்சிய வரலாற்றறிஞர்கள் தேவிபிரசாத், ஆர் எஸ் சர்மா போன்றவர்கள் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தனர். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த நீலம் ராஜசேகர ரெட்டி (குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சகோதரர்) அவர்களும் அப்பத்ரிக்கைகளை  தீவிரமாக கொண்டு செல்லவேண்டிய அவசியத்தை பேசிவந்தார். இக்கட்டுரை ஆசிரியர் (பட்டாபி) ஒருநாள் முழுவதும் தோழர் ராஜசேகர் ரெட்டி அவர்களுடன் இருந்து கட்சி பத்ரிக்கைகள் party Life  குறிப்பாக  Social Science Probings பற்றி  விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. Social Science Probingsயை சி பி எம் கட்சி சார்ந்த  Social scientistவிட அற்புதமாக கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையை  தோழர் ராஜசேகர் வெளிப்படுத்தினார்.
1970 களின் மத்தியில் ஜெயபிரகாஷ் நாராயண் முழுபுரட்சி இயக்கம் பீகாரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொள்கைபூர்வமாக அதை எதிர் கொள்ளவேண்டிய பொறுப்பு பெருமளவு பீகார் கட்சிக்கு வந்தது. அதை திறம்பட தனித்து நின்று கட்சி செய்து வந்தது. அதில் அப்போது மாநில செயலராக இருந்த தோழர் சர்கார் பெரும்பங்காற்றினார். Intellectual Fora பலவற்றில் பங்கேற்று ஜேபி இயக்கத்தின் எதிர் அரசியல் அம்சங்கங்களை சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தார். ஒருமுறை டெல்லி ஜவஹர்லால் பல்கலை அமர்வு ஒன்றில் 1974ல் அவர் உரையை தனிமைப்படுத்தும் முயற்சியை டிராட்ஸ்கியவாதிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர், ஜேபி ஆதரவாளர்கள், ஜனசங்கத்தினர் செய்தனர். ஆனாலும் ஜே எஸ் தனது கருத்துக்களை அழுத்தமாக உறுதியுடன் எடுத்து வைத்த காட்சியை அனில் ரஜிம்வாலே தனது கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். அவரது நேரிய வகைப்பட்ட விவாதமுறை பின்னர் பாராட்டுகளைப் பெற்றது.
பேராசிரியர் டாக்டர் அருண்குமார் தோழர் ஜே எஸ் தெருக்களிலும், செமினார்களிலும் பேசிய ஆழமான கருத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், ஜே எஸ், இந்திரதீப் வகுப்புகளால்  தனது ளமைக்காலத்தில் பயன்பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். ஜே எஸ் எங்களைப் போன்றவர்களுக்கு Comrade Intellectual  ஆக இருந்தார் என்கிறார். நகைசுவை உணர்வுடன் பெரிதாக வாய்விட்டு சிரிக்க தெரிந்த கம்யூனிஸ்ட்டாக நண்பர்கள் மத்தியில் அவர் இருந்தார் என்கிற பதிவும் உள்ளது. இளைஞர்களுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் குறித்து விவாதிப்பவராகவும், அவர்கள் மூலம் அவர்கள் அறிமுகப்படுத்தும் best sellersகளை படிப்பவராகவும் அவர் இருந்தார்.
தொழிலாளர்களும் நமது சமூகத்தில் ஓர் அங்கம்தான் – மற்றவர்களிடம் உள்ள பலம் பலவீனங்கள் அவர்களிடமும் இருக்கும் என தெரிந்து தொழிலாளி வர்க்க மத்தியில் பணிபுரியவேண்டும் என்றார். ஆரம்பத்தில் பீகாரில் சாதி குறித்த தனி கருத்த்ரங்கங்கள் வேண்டாம் என் கருத்து அவர் தெரிவித்திருந்தபோதிலும், தனது தவறை அவர் அவ்வாறு வேண்டும் என யார் தெரிவித்தரோ அவர்களிடம் சென்று திருத்திக்கொள்வதாக வெளிப்படையாக தெரிவித்தார். ஜே எஸ் போன்றவர்களுக்கு 1960 களின் சூழல் லோகியாவின் caste struggle  என்கிற கருத்தாக்கம் எதிர்த்து Class struggle என்பதை தொழிலார்களிடமும் வெகுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனாலும் இந்தியாவின் சமூக எதார்த்தம் என்ற புரிதல் மார்க்சியத்திற்கு விரோதமானதல்ல என்ற கருத்திற்கு அவர் வந்தார்.
 அவர் பழங்குடிகள் மத்தியில் பணியாற்றியவர். அவர்கள் குறித்து எழுதியவர். அவர்களுக்கான கோரிக்கைகள்- கூட்டங்கள்- இயக்கங்கள் கண்டவர். அவர்களுடன் விவாதித்து அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயக்கத்தை முன்கொண்டு செல்லவேண்டும் என அறிவுறுத்தியவர். கல்கத்தா சாந்திநிகேதனில் இதற்கென பல்வேறு ஆய்வார்களின் அமர்வுகளுக்கு துணைநின்றவர்.
 சர்கார் அவர்களை கட்சி டெல்லி மையத்தில் பணியாற்ற அழைத்தது. எப்போதும் பரபரப்பான பீகார் வெகுஜன இயக்க கட்சி சூழலிருந்து மாறுபட்ட, நிதான கதியில் செயல்படும் கட்சி மைய சூழல் தனக்கு பொருந்தவில்லை என்றார் ஜகன்னாத். பீகாரிலும் ஜே பி இயக்கம், மண்டல் எழுச்சிகள், சோவியத் வீழ்ச்சி கியவை தொடர்ந்து கட்சி பலவீனப்படத் துவங்கியது. தோழர் ஜே எஸ் ராஜேஸ்வர் ராவிற்கு பின்னர் பொதுச்செயலராக வருவார் என்கிற நிலை இருந்தது. அவர் நோய்வாய்பட்டு தீவிர அரசியல்பணிகளை மேற்கொள்ளமுடியாத சூழல் எழுந்தது. ஆனால் அவர் தனது அறிவுப்பயணத்தை இறுதிவரை கைவிடவில்லை. தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களிடம் இந்திய அரசியல் போக்குகள், கட்சியின் நிலைப்பாடுகள், சீனகட்சியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தெல்லாம் விவாதிப்பவராக இருந்தார். நிதானமாக மற்றவர்களை ஏற்க செய்திடும் வித்த்தில் அவரது கருத்துக்கள் அமையும். தேசிய கவுன்சில் கூட்டங்களில் அவர் உரையாற்றும் போது உன்னிப்பாக கவனிப்போம் என்றார் பார்வதிகிருஷ்ணன்.

தாகூர்மீது அவருக்கு ஈர்ப்பு இருந்தது. தாகூருடன் சேர்ந்து எடுத்த்க்கொண்ட போட்டோ ஒன்றை தான் தறவிட்ட்தற்காக அவர் வருந்தினார். சாந்தி நிகேதனில்கூட போய் இருந்துவிடலாம என்ற எண்ணம்கூட அவருக்கு இருந்த்தாக அவரை அறிந்த பெர்லின் ஹம்போல்ட் பேராசியர் சுனில் சென்குப்தா தெரிவிக்கிறார். அழகியல் உணர்வுகளை ஜே எஸ் தாகூரிடமிருந்து கற்றதாக அவர் தெரிவிக்கிறார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா