Skip to main content

modern capitalism Paul Sweezy

 அமெரிக்க மார்க்சிய அறிஞர்  பால் ஸ்வீசி மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் மறைந்தபோது எழுதிய கட்டுரை ஒன்றை தேடி எடுக்க முடியவில்லை.1949ல் ஸ்வீசி தனது தோழர் லியோ ஹூபர்மென் உடன் இணைந்து புகழ் வாய்ந்த Monthly Review யைக் கொணர்ந்தார். இன்றும் இடது உலகில் பேசப்பட்டு வரும் மாத இதழது. எனக்கு எப்படி யாரால் அறிமுகமானது என மறந்துவிட்டது. 2006 வரை ( எப்போது வாங்க ஆரம்பித்தேன் என்பதும் நினைவில் இல்லை)  வீட்டிற்கு வந்தது. 

அமெரிக்க இதழ் மன்த்லி ரிவ்யூ , கரக்பூர் மே வ ஏஜென்சி ஒன்றின் மூலம் , எனக்கு வந்த நினைவு.   அப்போது அந்த இதழுக்கு உலகம் முழுவதும் 8000 subscribers இருந்திருக்கலாம்.  அதில் ஒரு சந்தாதாரர் என்கிற பெருமிதம் ( தேவையா என்பது வேறு) இருந்த நேரமது.

பழைய party life, Janata weekly of socialists, Mainstream, Frontier weekly என இதழ்கள் ஆண்டுதோறும் bound செய்யப்பட்டதுண்டு. AITUC , CITU, INTUC, BMS, NFTE பத்திரிகைகளை பவுண்ட் செய்த தோழர் தீனன் தானே இவற்றை எடுத்துப் போய் பவுண்ட் செய்து தந்துகொண்டிருந்தார். ஊரில் இருந்த ‘வீட்டு மாடி ‘ நூலகத்திற்காக இருந்தது. சென்னை வரும்போது அப்படியே பெரும்பாலானவற்றை விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில் மறைந்த தோழர் கார்த்தி ஆர்வத்துடன் அவரால் இயன்ற அளவு பராமரித்ததாக தெரிவித்திருந்தார். எல்லாம் soiled ஆக , பிரித்தாலே எனது சைனஸ் வியாதியை தூசு ஒவ்வாமையை அதிகரித்து விடுவதை உணர்ந்தேன். 

எந்த சேர்த்து வைப்பாலும் ஆகப்போவதென்ன என்றாலும், மனம் அவற்றை நாடாமல் இருப்பதில்லை.  பால் ஸ்வீசி புத்தகம் ஒன்றை (மாடர்ன் காபிடலிசம்)  படிக்க ஆரம்பித்த நேரத்தில் , இந்த நினைவுகள் எழுந்தன. அவரின் எழுத்துக்கள் அவ்வப்போது மன்த்லி ரிவ்யூ வில் வரும். ஆர்த்தோடாக்ஸ் மார்க்சியம் குறித்து விமர்சன பார்வை வைத்திருந்தார். அதே நேரத்தில் அம்மார்க்சிய எழுத்தாளர்களின் பங்களிப்பையும் விதந்து பேசுவார். தன் மீது நியோ மார்க்சியர் என்கிற லேபிள் ஒட்டப்படுவதையும் அவர் கவனமாக தவிர்க்க விரும்பினார். 

மார்க்ஸ் காலத்திற்கு பின்னர் பெருமளவில் மாறிபோன புதிய முதலாளித்துவம், ராட்சத கார்ப்பரேஷன்கள்- managerial bureaucrats பங்களிப்புகள், ஏகபோகங்களின் காலத்தில் அரசு நிறுவனத்தின் role, சோவியத்  சோசலிச பொருளாதார கட்டுமான பிரச்சனைகள், புரட்சிக்கு பிந்திய சமூக கட்டுமான பிரச்சனைகள் என ஏராள அம்சங்களில் அவர் தனியாகவும், தன் அறிஞர் தோழர்களுடன் இணைந்தும் ஆய்வுகளை நமக்கு கொடுத்துச் சென்றுள்ளார். 

பொருளாதார அறிஞர்கள் ஸ்கும்பீட்டர், கலேக்கி, கால்பிரயத், பரேட்டோ, மார்ஷல், கீன்ஸ் , பாரன் என பலரும் ( நான் என்னத்த கண்டேன்)  ஸ்வீசி நூலில் வருகிறார்கள். Ten Great Economists, நீலகண்டன் அறிமுகத்தில் வந்த  பொருளாதார மேதைகள் குறித்த மற்றொரு  நூல் ( இரண்டு அட்டைப்படமும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்கு தோன்றும்) என கொஞ்சம் மேய்ந்திருந்தாலும், பொருளாதார அறிவு எனக்கு கிஞ்சிற்றும் இல்லை. ஆனாலும் பால் ஸ்வீசி மற்றும் மன்த்லி  ரிவ்யூ எழுத்தாளர்கள், ஆகார் புக்ஸ் வெளியீடு என அவ்வப்போது தேடிப் போகாமல் இல்லை.   

மார்க்சின் காபிடல் முதல் வால்யூம் இரு முறை , இரண்டாம் வால்யூம் ஒருமுறை, மூன்று பாதியில்- 30- 35 ஆண்டுகளில் பார்த்து கிழித்தது என்கிற லட்சணம் வேறு.  எனக்கு புரியலை என்பதைவிட, என் உழைப்பு அவற்றில் போதவில்லை என்பதுதான் சரியாக இருக்க முடியும்.  அரசியல் பொருளாதாரத்தை வெறும் பார்முலா மாதிரி உள்வாங்க முடியாத கஷ்டம். Abstractions decoding என்பதில் உள்ள சங்கடம். மானுட அறிவெல்லாம் உத்தேச முன்மொழிவுகள் , அவை இறுதியான absolute இல்லை என்கிற மனத்தடை. கடவுள் முதல் கம்யூனிசம் வரை கற்பிதங்களே - பெரும் கதை உரையாடல்களே என்கிற பின்நவீனத்துவ பொல்லாப்பு..என பல ரீங்காரங்கள்.

சில நேரம் காந்தியை காட்டி மனது தப்பிக்கவும் செய்கிறது ( இது ரொம்ப ungandhian நெறி என்றாலும்) . காந்தி சொன்னார்

Every human being has the right to live and therefore find the wherewithal to feed himself and where necessary to clothe and house himself . But for this simple performance we need no assistance from economists or their laws.

Nature produces enough for our wants from day to day, and if only everybody took enough for himself and nothing more, there would be no pauperism in this world..but so long as we have got this inequality, so long we are thieving.

போகட்டும்..பால் ஸ்வீசியை நேசிக்கக்கூடிய மன்த்லி ரிவ்யூ குழாமினர் இருக்கத்தான் செய்கிறார்கள்..

18-6-2024Machinery and Modern Industry என்கிற மார்க்சின் மூலதன வால்யூம் 1  ல் இடம் பெற்ற அத்தியாயத்தை மிகவும் சிலாகித்து பால் ஸ்வீசி பேசுகிறார். 

ஸ்வீசியின் Modern Capitalism Essays ல்  Marx and Industrial Revolution, Marx and the Proletariat, Notes on the centennial of Das Capital போன்றவை , நூலின் இறுதிப் பகுதியில் அடுத்து அடுத்து வைக்கப்பட்டிருக்கும் இயல்கள். கூறுவது கூறல் இருக்கும். அதனால் மார்க்சும் பாட்டாளியும் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, ஸ்வீசி முன் வைக்கும் கருத்துக்களை சொல்ல விழைகிறேன்.

ஸ்வீசியின் இந்த மூன்று இயல்களை வாசிக்கும் போது, காந்திய பொருளாதாரம் குறித்த எண்ணங்களும் எழுந்தது. Non capitalist path alternate economic pattern என்பதற்கு காந்திய பொருளாதாரவாதிகள் அழுத்தம் கொடுத்து ( less capital availability but more work force  context) செயல்பட முனைந்ததை பார்க்க முடிகிறது. போதிய ஆதரவு பெறமுடியாமல், அவர்களால் அதை மேலெடுத்து செல்ல முடியவில்லை. ஸ்வீசியை பார்ப்போம்.

Marx’s conceptualisation of the Industrial Revolution is the basis of his theory of economic development 

For Marx, the essence of the Industrial Revolution was the replacement of handwork of machinery, a process which takes place ‘from  the moment that the tool proper is taken from man and fitted into a mechanism’- construct machines by machines. 

The technical basis ( making science a productive force)  of the industry is revolutionary, while earlier modes of production conservative.

The effects of machinery on the one hand, to expand, homogenise and reduce the costs of production of the labour force and, on the other hand, to slow down the rate of increase of labour force- the demand for labour.

A new and international division of forces suited to the requirements of modern industry  springs up, converts one part of globe into a chiefly agri field for supplying the other part- the industrial field ( ரோசா லுக்சம்பர்க் இது குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார்) 

In Holy Family Marx said  “ when socialist writers ascribe historical role of proletariat, not all because they take proletarians as gods..because it cannot emancipate without abolishing the inhuman conditions 

In Marx’s view the proletariat was not a revolutionary force from its birth but on the contrary acquired this quality in the course of the capitalist development 

In the manufacturing phase of capitalist development, craft consciousness rather than class consciousness as the hall mark of proletariat. Capitalism in its manufacturing stage, technologically conservative , also was highly resistant to political and social change.

Marx viewed a radical change in the mode of production in one sphere of industry involves a similar change in other spheres.  It is the capitalist employment of machinery and not merely capitalism in general, which generates the modern proletariat as Marx conceived. In modern industrial phase , the political power of proletariat also emerging.

Paul Sweezy ‘s equation 

Manufacturing stage : Technology conservative, proletariat non revolutionary 

Modern industrial stage : Technology revolutionary, proletariat also revolutionary. 

இந்த சமன்பாட்டை இன்றுள்ள பொருளாதார சூழலுக்கு நகர்த்திப்பார்த்து- நம்மிடம் வர வேண்டிய கேள்வி 

In the international financial capital neo liberal globalisation stage ? தொழில்நுட்ப வளர்ச்சியும் , ஒரு வகையில் உற்பத்தி கருவிகளாக, தொழிலாளர் புரட்சிகரத் தன்மையும் மார்க்ஸ் காலத்தில் உணர்த்தப்பட்டது போல நேர் விகிதத்தில் அமைகிறதா?

Technology more and more revolutionary but can we say so about proletariat or about working class? Experiences does not help us to say so. Whether the forces of revolutionary ness changed ?

பால் ஸ்வீசி  இப்படி ஒரு முக்கிய கேள்வியையும் மார்க்சியர் விடை தேடுவதற்காக வைத்துச் செல்கிறார். புரட்சிகர சூழல் இல்லாத போது, தொழிலாளர் உணர்வில் ஏற்படும் மாற்றமென்ன.. அது எப்போதும் புரட்சிகர உணர்வின்  உச்சத்திலேயே இருக்கக்கூடியதா?

In the absence of a revolutionary situation, would the proletariat tend to become more or less revolutionary?. It would have been a logical question for Marx  when he was writing the capital, a hundred years later it seems to be not only a logical but an inescapable question for Marx’s followers.

25-6-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு