Who were Sudras - சூத்திரர்
வரலாறு டாக்டர் அம்பேத்கரின் புகழ் வாய்ந்த ஆய்வுகளில் ஒன்று. 1946ல் இந்நூலை அவர்
வெளியிட்டார். அவரின் நூல்களை பம்பாயில் வெளியிட்டு வந்த தாக்கர் சன்ஸ்
நிறுவனம்தான் இதனையும் வெளியிட்டனர். சூத்திரர் ஆர்யரே- பின்னர் இறக்கப்பட்டனர் என்கிற
முடிவை அம்பேத்கர் இதில் எட்டியிருப்பார். இக்கட்டுரையில் சுருக்கமாக , இது
குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்நூலின் 1947 ஆம் பதிப்புதான்,
அம்பேத்கரின் நூல்தொகைகளில், ஆங்கிலத்தில் 7 வது வால்யூமிலும் ( 1990ல்) , தமிழ்
தொகைகளில் வால்யூம் 13லும் (ncbh 1999) அப்படியே இடம் பெற்றது.
நான் இங்கு சொல்ல வரும் நூல்
1994ல் வாங்கிப்படித்த எ. பொன்னுசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த ‘சூத்திரர்
வரலாறு’. தி நகர் அ ஆ பதிப்பகம் கொணர்ந்த நூல். இந்த மொழிபெயர்ப்பில் , அம்பேத்கர்
எழுதிய நூலில் இருந்த முகவுரைத் தவிர இருக்க வேண்டிய 12 அத்தியாயங்கள் இல்லை. 10
தான் இருக்கிறது. 1946, 1947 மூல நூல் பதிப்புகளிலும், ஆங்கில வால்யூம் 7 லும் 12
அத்தியாயங்கள் இருக்கின்றன. தமிழ் வால்யூம் 13லும் இருக்கிறது.
ஆனால் பொன்னுசாமி மொழிபெயர்ப்பில்
அத் 7 மற்றும் 12 இடம் பெறவில்லை. ஏனோ தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலும்
ஏன் எனச் சொல்லப்படவில்லை. 1994ல் நான் படித்தபோது இதை உணர வாய்ப்பில்லாமல் போனது.
அப்போது இன் டெர்நெட் வசதியில்லை. இப்போது ஒத்துப் பார்த்தபோது, இரு அத்தியாயங்களை
காணாததை உணரமுடிந்தது. அது போல் அம்பேத்கர் preface எழுதிய நாள் என மூல நூலில்,
வால்யூம்களில் அக்டோபர் 10, 1946 என்றிருக்கும். பொன்னுசாமி நூலில் அக் 24
என்றுள்ளது. முழு prefaceம் மொழியாக்கம் பெறப்பட்டதாக உணரமுடியவில்லை.
சரி இந்நூலில் அம்பேத்கர்
வெளிப்படுத்தும் கருத்தாக்கங்கள் சிலவற்றை மட்டும் தொட்டுக்காட்டியுள்ளேன். இனி
டாக்டர் அம்பேத்கர் …
“ லட்சியங்களை அளவுகோல்களாகக்
கொள்வது நல்லது. அளவுகோலின்றி ஏதும் செய்யமுடியாது. ஆனால் அந்த அளவுகோல்
காலத்தினையும் சூழ்நிலைகளையும் ஸ்வீகரித்துக் கொண்டு மாறவேண்டும்.
எந்த ஓர் அளவுகோலும்
நிரந்தரமானதல்ல. நமது அளவுகோல்களின் மதிப்பினை மறு மதிப்பீடு செய்யக்கூடிய
சாத்தியம் எப்போதும் இருக்கவேண்டும். அந்த அளவுகோலுக்கு ஒரு புனித முத்திரை
குத்திவிட்டால் அது எக்காலத்திலும் புனிதமாக்கப்பட்டுவிடுகிறது..”
(டாக்டர் அம்பேத்கர் புருஷ
சூக்தம் பற்றி எழுதும்போது )
“ஆர்ய இனம் என்பதே ஓர்
அனுமானந்தானே தவிர வேறொன்றுமில்லை. …வேதங்கள் ஆர்யன் என்ற இனம் ஒன்று உண்டு
என்பதையே அறியா . ஆர்யர்கள் இந்தியா மீது படையெடுத்தஎவ்வித தடயமும் இல்லை. இந்திய
மக்களாகிய தசா தஸ்யூக்களை ஆர்யர் வென்று அடக்கியதற்கான தடயமும் இல்லை. ஆர்யர்கள்
நிறத்தில், தசா தஸ்யூக்களிடமிருந்து மாறுபட்டவர்கள் என்பதை வேதங்கள் ஏற்கவில்லை”
“ மேற்கத்தியர் ஆர்யர்கள்
படையெடுத்தனர் என்றும், தசாக்களையும் தஸ்யூக்களையும் அவர் வெற்றிகொண்டனர் என
இட்டுக்கட்டினர்…புதிய விளக்கங்கள் வெளிவரத் துவங்கியதும் மேற்கத்தொயரின்
விளக்கங்கள் நீடிக்காது”
“சூத்திரர்கள் ஆர்யர்கள் என்ற
முடிவு மண்டையில் ஆனி அடித்ததைப்போல் தெளிந்து நிற்கிறது. அவர்கள் சத்ரியர்கள்.
ஒரே சந்தேகம் சூத்திரர்கள் இனவழி கூட்டமா என்பதுதான்” ( 200க்கும் மேற்பட்ட பக்க
நூலில் அம்பேத்கர் நான் பார்த்த அளவில் இரு இடங்களில் மட்டுமே திராவிட என்கிற
பதத்தை பயன்படுத்துகிறார். அதேநேரத்தில் சூத்திரர் ஆர்யர்தான், பின்
இறக்கப்பட்டனர் என விவாதிக்கிறார்)
“ஆரம்பத்தில் மூன்று வர்ணங்களே
இருந்துள்ளன. சூத்திரன் தனியான வர்க்கமாக இருக்கவில்லை”
“ சூத்திரர்கள் ஏன்
தாழ்த்தப்பட்டனர்? பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட
போராட்டமே சூத்திரர் தாழ்த்தப்பட்டதற்கான காரணம்”
“ பிராமணர்கள் சத்ரியர்களைச்
சூத்திரர்களாகத் தாழ்த்த பயன்படுத்திய தந்திரம், அவர்களுக்கு பூணூல் போட மறுத்ததே”
“ ஆரம்பகால ஆர்ய சமுதாயம் எல்லா
பிரிவினர்களையும் உபநயனத்தினைப் பொறுத்தமட்டில் ஒரே விதமாகத்தான் நடத்தியுள்ளது” (
பெண்களுக்கும் உபநயனம் இருந்தது)
“ உபநயனம் இல்லையெனில்
அறிவுப்பாதை அடைக்கப்படும். அறிவு, சொத்து உரிமை இருபெரும் தகுதிகளை உபநயனம்
தரும். உபநயனம் செய்து வைக்கும் உரிமை பிராமணனுக்கு மட்டுமே உண்டு”
“ சூத்திர மன்னர்களுக்கும்
பிராமணர்களுக்கும் சச்சரவுகள் இருந்தன. பிராமணர்கள் கொடுமைகளுக்கும்
அவமரியாதைக்கும் உள்ளாயினர். வெறுப்பு கொண்ட பிராமணர் உபநயனம் செய்ய
மறுத்துவிட்டனர்”
“இந்தோ ஆர்ய சமூக சூத்திரன் ஒரு
இனமா, கூட்டமா, குடும்பங்களின் கலவையா நமக்கு தெரியாது. “
டாக்டர் அம்பேத்கர் இந்தோ ஆர்ய
சூத்திரர் குறித்து வந்தடைந்த முக்கிய புள்ளிகள் மேலே சொன்னவைதான். அப்போது இந்து
சூத்திரர் யார் என்கிற கேள்வி அம்பேத்கரின் ஆய்வின் தொடர்வினையாக தொக்கி
நிற்கிறது.
நூலை வாசிக்க முடியாதவர்க்கு
இச்சிறு கட்டுரை உதவக்கூடும்.
Comments
Post a Comment