Skip to main content

Terry's Why Marx was Right ?

 டெரி ஈகிள்டன் அவர்களை எனக்கு பேரா வி இராமசாமி தான் அறிமுகப்படுத்தினார். எங்கள் இளம் கம்யூனிஸ்ட்கள் குழுவில் சற்று மூத்தவர் தோழர் இராமசாமி.  அப்போது அவருக்கு மணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். எங்களுடன் எங்களை ரசித்து கொண்டாடி பல மணிகள் ஒன்றாக இருப்பார்.  தோழர் தா பாண்டியன்  , ஹிரன் முகர்ஜி கட்டுரை எனில் உற்சாகம் பொங்கப் பேசுவார்.

திரு வி க  அரசு கல்லூரியில் முற்போக்கு சிந்தனை கொண்ட பல பேராசிரிய பெருமக்கள் இராமசாமி கூட நின்றனர்.  மறைந்த பேரா அறிவழகன் , சுவாமிநாதன், பாலு, பழநி, கெளதமன் என தொடர்  பேராசிரிய தலைவர்கள்  இருந்தனர். வங்கி தொழிற்சங்கத் தலைவர் ரகுவின் அறை நல்ல சந்திப்பு விவாத இடமாக இருக்கும். ரகு இப்போது பொள்ளாச்சியில் அதே துடிப்புடன் செயலாற்றி வருகிறார்.

பேரா இராமசாமி  உதவியால்தான் அங்கு சமூகவியல் பேரவை துவங்க முடிந்தது. தோழர் வெங்கட் ராமன் ( மணியரசன் தோழர்) தோள் கொடுத்தார். பின்னர்   பேரா கெளதமன் பொறுப்பேற்று நடத்தினார்.  பேரா இராமசாமியும் நானும் இணைந்து ராஜிவ் காலத்தில் கொணரப்பட்ட கல்விக்கொள்கை குறித்து பிரசுரம் எழுதி வெளியிட்டோம். மக்ரோத் கமிஷன், யுஜிசி பரிந்துரைகள் குறித்து கல்லூரி ஆசிரியர்களிடம் பேச தொழிற்சங்க கவுன்சில் செயலர் ( 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்க அமைப்பு) என்கிற வகையில் வாய்ப்பு கொடுத்தனர்.   இன்றும் 45 ஆண்டுகளுக்கு மேலாக அக்கூட்டமைப்பை தோழர்கள் திறமையாக நடத்தி வருகின்றனர். ஊர் முழுவதும் ஏராள இளம் தொழிலாளர்களை அவ்வமைப்பு ஈர்த்தது.  ஏராள இயக்கங்களை நடத்திவரும் அமைப்பாக இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் மத்தியிலும்  அவ்வப்போது பேச முடிந்தது. கல்லூரி நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆவணங்கள் கூட அக்கல்லூரி வரலாற்றுத்துறை வழியாக வாங்க முடிந்தது. செகுவார புத்தகங்களை நான் கொடுத்த நினைவு. மார்க்சிய புத்தகங்கள் இப்போது கல்லூரியில் பராமரிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.

பிறை அறிவழகன் தான் நுகர்வோர் கவுன்சிலின் தந்தை என அறியப்பட்டார்.  அவர் சீடர்கள் இன்றும் நுகர்வோர் கவுன்சிலை சிறப்பாக நடத்தி வருகின்றனர். பேரா சுவாமி, பேரா பழநி கல்லூரி ஆசிரிய சங்க மாநில பொதுச் செயலர்கள் ஆயினர்.

தோழர் இராமசாமி பின்னர் செனட் உறுப்பினராகி  திருச்சிக்கு சென்றுவிட்டார். கல்லூரி நூலகத்திற்கு பல மார்க்சிய எழுத்தாளர்களின் புத்தகங்களை , அதிக பிரச்சனை ஏதுமின்றி அங்கு வாங்க முடிந்தது. ஈகிள்டன் புத்தகங்களும் அப்படித்தான் அங்கு வந்தது. Critical Theory, Literary criticism போன்ற நூல்களை  பேரா இராமசாமி, இளைஞனாகிய என்னிடம் படிக்க சொன்னார். குறிப்பெல்லாம் எடுத்து அவருடன் ஏதோ தெரிந்த அளவு உரையாடிய  நினைவு. எழுதச் சொல்லி தூண்டுவார். சரி செய்து கொடுப்பார். என் கட்டுரைகள் நியு ஏஜில் வந்தது குறித்து மகிழ்ந்தவர். 

சரி. ஏன் இந்த நினைவுச் சுழல் இப்போது. காரணம் ஈகிள்டன் தான். Why Marx was Right - Terry Eagleton படிக்க ஆரம்பித்ததால், ‘பழைய நினைப்பு பேராண்டி’ வந்தது.  ஈகிள்டனின் why Marx was right 2011ல் வெளியான ஆய்வு நூல். கல்கத்தா சீகல்ஸ் போட்ட பதிப்பைத்தான் நான் பார்த்தேன். சீகல்ஸ் குவார்ட்டர்லி கூட ஓரிரு முறை வாங்கிய நினைப்பு ( எல்லாம் தான்    என்ன செய்து…என்பது வேறு) .

ஈகிள்டன் தன் ஆய்விற்கு மார்க்ஸ்  குறித்து மிக அதிகமாக வந்திருந்த , சொல்லப்படுகிற 10 விமர்சனங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றிற்கும் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தை அமைத்துக்கொண்டார். முன்னால் preface   இறுதியில் conclusion என அவர் நூலை அடுக்கியிருப்பார். மார்க்ஸ் குறித்து விமர்சிப்பவர்கள், அவர் விமர்சனத்திற்கு நல்ல பதிலை தேடக்கூடியவர்கள் ஈகிள்டனை படிக்கலாம். மார்க்சியம் மீது விருப்பம் கொண்டவர் , சற்று மெதுவாக உள்வாங்கி இந்நூலை படிப்பது நலம். எந்த emotional bondsம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு reason out செய்து தன் பார்வையை ஈகிள்டன் பின்னியிருப்பார். 

மார்க்சியம் குறித்து பொதுவாக சொல்லப்படும் விமர்சனங்களை வைத்துவிட்டு, தான் அறிந்த பதில்களை ஈகிள்டன் தந்திருப்பார். அவர் விவாதிக்க எடுத்துக்கொண்ட விமர்சனங்களை மிகச் சுருக்கமாக இங்கு தந்துள்ளேன்.

மார்க்சியம் முடிந்து விட்டது.அவ்வளவுதான். Marxism is finished

மார்க்சியம் கோட்பாடு என்கிற அளவில் மகிழ்விக்கலாம். நடைமுறையில் அது பெரும் கொடுங்கோன்மை- திரள் கொலை. Marxism may be well in theory . Whenever put into practice , the result has been terror tyranny mass murder.

மார்க்சியம் தீர்மானகரவாதம். மனிதர்களை வரலாற்றின் கருவியாக குறைத்துவிடுகிறது. தனி நபர் சுதந்திரத்தை அனுசரிப்பதில்லை. Marxism a form of determinism. It sees men and women simply as tools of history, strips their freedom and individuality.

மார்க்சியம் உடோபிய கனவு. மானுட இயல்பை கவனிக்காத, எதார்த்த புறக்கணிப்பு. Marxism is a dream of Utopia. Marx’s vision of the future reflects the absurd unreality  of his politics whole

மார்க்சியம் எல்லாவற்றையும் பொருளாதாரவாதத்தில் சுருக்கிவிடுகிறது. வரலாற்றின் பன்முக அனுபவங்களை இப்படி ஒரு தட்டில் சுருக்கிவிட முடியாது. Marxism reduces everything to economics- economic determinism. Marx was simply an inverted image of the capitalist system he opposed- varied range of historical experiences cannot be crammed into a single rigid framework.

மார்கஸ் பொருள்முதல்வாதி. அவர் குரூரமாக மதத்தை மறுக்கிறார். மானுடரின் ஆன்மீக உலகம் குறித்து அவர் கவலைப்படவில்லை. Marx was a materialist. He was brutally dismissive of religion, for him end justifies means. He had no interest in the spiritual aspect of humanity

மார்க்சியம் வர்க்கம் என்பதின் மீது தீரா தாகத்துடன் இருக்கிறது. அவர் புரிந்து பேசிய தொழிலாளி வர்க்கம் காணாமல் போய்விட்டது. நாம் வாழும் உலகில் வர்க்கம் பொருட்டே அல்ல. Marxism obsession with class-  fond hope of working  class usher socialism  disappeared- we live in a social world where class matters less and less

மார்க்சியம் வன்முறை அரசியல் வழியை போதிக்கிறது. சிறு புரட்சிகர குழுவின் ஆயுதப்போராட்டம் மூலம்  ஆட்சி- பெரும்பான்மை மக்களை  கட்டுப்படுத்த விழைகிறது. எனவே அதற்கு ஜனநாயகத்துடன் பொருந்த முடியாது. Marxists advocate violent political action. A small band of insurrectionists rise up, overthrow state and impose its will on the majority. Marxism and democracy are daggers drawn.

மார்க்சியம் ஆக உயர் அதிகார அரசை கட்டமைக்க விழைகிறது. அது கொடுங்கோன்மைக்கு இட்டுச் செல்கிறது. தனிநபர் சுதந்திரம் என்பதை இல்லாமல் ஆக்குகிறது.  மக்களுக்காக கட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும். கட்சிக்காக அரசு எடுத்துக்கொள்ளும். அரசுக்காக தனி ஏக அதிகாரம் கொண்டவர் வருவார்.  Marxism believes in all powerful state- by means of despotic power. People will give way to party- party to state and state to monstrous dictator- power will put an end to individual freedom.

சமூகம் பழைய வர்க்கப்போராட்டம் என்பதிலிருந்து  மார்க்சியம் தாண்டிய புதுவகை தீவிர போராட்டங்களை கண்டு வருகிறது.  அவை மார்க்சியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டன. Radical movements sprung up from outside Marxism- from an antiquated class struggle forms to new forms of political activism- left marxism well behind.

டெரி ஈகிள்டன் அடுக்கிக்கொண்டு விவாதித்துள்ள 10 முக்கிய விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. தனது why Marx was right  240 பக்க அளவிலான நூலில் , தான் தேடி உணர்ந்த பதில்களை மிகவும் கோர்வையாக , எதார்த்தம் சிதறாமல்,  மேற்கோள்களுக்குள் அதிகம் அடைந்துவிடாமல், கற்பனைகள் கலக்காமல் தர முயற்சித்துள்ளார்.

வாய்ப்புள்ளோர் வாசித்து பார்க்கலாம். மார்க்சிய கிடங்கிற்கு தேவைப்படும் நூல்களில் ஒன்றை ஈகிள்டன் கொடுத்துள்ளார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

22-6-2024


மார்க்ஸ் ஏன் சரியானவர் என்கிற why Marx was right? டெரி ஈகிள்டன் நூலை அறிமுகப்படுத்தி முன்னர் ஒரு போஸ்ட் செய்திருந்தேன். அதில்  மார்க்ஸ், மார்க்சிசம் குறித்த 10 பெரும் விமர்சனங்களை அவர் எவ்வாறு தொகுத்துக்கொண்டு, தன் புரிதலை நூலில் தந்தார் என்பதை சற்று தொட்டுக்காட்டியிருந்தேன்.

இந்த இடுகையில், டெரி மார்க்சை மார்க்சியத்தை எப்படி புரிந்து கொண்டுள்ளார் என்பதற்கான, சில மாதிரிகளை , அவரது மொழியில் கீழே அடுக்கியுள்ளேன்.  மார்க்ஸ் குறித்து புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும் கூட கடுமையான உழைப்பு தேவைப்படும். ஒருவர் பேசுகிற, எழுதுகிற அம்சத்தை பார்க்கையில் அவர் உழைப்பு குறித்த புரிதலும் நமக்கு கூடவே கிட்டும்.

புரிதலோ, விமர்சனமோ அது ஆழமானதாக, பெரும் தேடல் தவிப்பின் பாற்பட்ட உழைப்பு வழி கிட்டும்போது , அவற்றை பொருட்படுத்தி பார்க்க வேண்டும். ஈகிள்டன் அப்படியான உழைப்பை இந்நூலில் செய்திருப்பார். ஏற்கலாம், மறுக்கலாம்- அது அவரவர் கொண்டிருக்கக்கூடிய நேர்மையான பயிற்சி சார்ந்த ஒன்று. இனி ஈகிள்டன் புரிதலிலிருந்துநிதானமாக வாசிக்கும்போது, ஈகிள்டன் நல்ல விவாதத்தை தருகிறார் என புரிந்துகொள்ளலாம்.

Marxism is a critique of capitalism

Capitalism has brought about great material advances. But why do we continue to indulge the myth that the fabulous wealth generated by this mode of production will in the fullness of time become available to all?

Ideally socialism requires a skilled educated political populace, civic institutions, enlightened liberal traditions and the habit of democracy.

Socialists will no doubt continue to argue about the detail of a post capitalist economy. There is no flawless model currently on offer.

Two major doctrines lie at the heart of Marx’s thought. The primary role played by the economic in social life, the other is the idea of succession of modes of production.

Marx is using history in the sense of significant course of events, not as synonym for the whole of human existence to date. Marx believes that the productive forces have a tendency to develop as history unfolds. This is not to claim they progress all the time. History is not at all a tale of progress.

Marx clearly thinks that material wealth can damage our moral health.

Productive forces and productive relations do not dance harmoniously hand in hand throughout history.  Historical determinism is a recipe for political quietism. Marx does not think that the inevitability of socialism means we can all stay in bed.

Class comes over whenever material production is so organised as to compel transfer of surplus labour to others in order to survive.

Marx wrote so : History does nothing, it possesses no immense wealth, it wages no battles. It is man , the living real man who does all that..history is nothing but the activity of man pursuing his aims.

Marx was a prophet not a fortune teller. The idea that history is moving onwards and upwards to a state of perfection is not a leftist one.

The future is open, but it is not totally open. Nature does not guarantee that socialism will follow on the heels of capitalism. There are many different futures implicit in the present..socialism represents in one sense of break from the present. Realism and vision go hand in hand.

To see a relationship as exploitive, you need to have some idea of what a non exploitative relationship would look like. Ideals are signposts, not tangible entities. They point us the way to go.

Communism would not spell the end of human strife..envy, domination, possessiveness, competition would still exist. So Marxism holds out no promise of human perfection.

The aims of Marxism is just not just material. Materialists are not those who deny the spiritual, but those who remind us that spiritual fulfilment requires certain material conditions

Marx was a sworn enemy of uniformity. Neither it is possible to have a social order in which everyone is equal. Genuine equality means not treating everyone the same, but attending equally to everyone’s different needs.  In Marx’s view, socialism is pluralistic order.

Marx wrote so in German Ideology: “The class that is ruling material force of society is at the same time the ruling intellectual force” .  Only through the collective practical activity of the majority people can the ideas which govern ourselves be really changed.

The claim that everything for Marx is determined by economics is an absurd oversimplification. Classes truly become classes when they become conscious of themselves as such. The prejudice that thought is independent of reality is itself shaped by social reality.

Practice is clearly a material affair, but it is also, inseparably, a matter of meanings, values, purposes and intentions. Human consciousness requires a great deal of material stage setting. Marx thought that those who controlled material production tended to control mental production as well.

Marxism is not a theory of everything.

Class is a question where you stand in the mode of production- what you are doing. Class changes its composition all the time. The working class does not cease to interest Marxists the moment it acquires colour TV etc. it is its place within capitalist mode of production which is most decisive. The working class includes all those selling their labour power to capital.

For Marxism, a revolution is not characterised by how much violence it involves. Revolutions are usually a long time in the brewing. You can socialise industry by Govt order, but legislation alone cannot produce men and women who feel different from their grandparents. That involves healthy lengthy process of education and cultural change.

Revolution cannot be handed down to you by a tight knit vanguard of conspirators. Nor do revolutionaries reject parliamentary democracy. What Marx rejected was the sentimental myth of the State as a source of harmony uniting different groups. The State Marx approved of was the rule of citizens of themselves, not a minority over a majority.

Marx’s critique of capitalist economy is closely bound up with the concern for Nature. Human beings for Marx is part of Nature yet able to stand over against it. He dreams also of an ultimate unity between Nature and humanity.

டெரி அவர்களின் 250 பக்க விரிவான ஆய்வில் ஆங்காங்கே  நான் பறித்துப் போட்ட வரிகள் மேலே. குறுக்கு வெட்டு புரிதலை அவை தரலாம். டெரி போல ஏராள மார்க்சிய எழுத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. தாகம் உள்ளவர் தணித்துக்கொள்ளலாம்.

28-6-2024


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா