Skip to main content

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள்

 

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகள்

 

நடந்து முடிந்த 2024 தேர்தலில் இடதுசாரிகள் எங்கு நின்றார்கள் , அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி அமைந்தது எனப் பார்க்கத் தோன்றியது. மாநிலவாரியாக ஒவ்வொரு தொகுதியையும் எடுத்துக்கொண்டு இந்த தேடலை நடத்தவேண்டியிருந்தது. 543 தொகுதிகளையும் பார்க்க சில மணிநேர உழைப்பு தேவைப்பட்டது. அப்படிப்பார்க்கும்போதுதான் , பல குறைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான தேர்தல் ஆணையத்தின் வேலை மலைப்பை உணரமுடிந்தது. இதன் பொருள் அவர்கள் மீதான விமர்சனங்களுக்கு பொருள் இல்லை என்பதல்ல. வேலை கடினமான ஒன்று எனப் புரிந்துகொள்ள முடிந்தது. கட்சிகள் , சுயேட்சைகள் என்ற ஜனநாயக உரிமையில் ஏராள  non serious players.  அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி வாக்கு சீட்டு , எண்ணிக்கை, ஒவ்வொருவருக்குமான சின்னம், வாக்கு எண்ணிக்கை முடிவுகள்- தொகுதிவாரியாக என்கிற பெரிய வேலையை செய்திடும் இன்ஸ்டிட்யூஷன் அது. 543 தொகுதி பெயரை மட்டுமாவது எழுதிப்பார்த்தால் வேலை புரியும்.

 

2024 ல் மக்கள் பொதுவாக மேம்பட்ட புரிதலுடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் . மாநிலத்திற்கு மாநிலம் புரிதல் மாறுபட்டுள்ளது என்பதும் கண்கூடு. கட்சிகள் மகிழ்ச்சியடையவும், அதே நேரத்தில் கவலையுடன் தங்கள் நிலையை பரிசீலிக்கவும் மக்கள் அவர்களை வைத்துள்ளனர். மாநிலங்களுக்கு மாநிலம் மக்களின் மனநிலை மாற்றத்தை பார்க்க முடிகிறது. தமிழக மக்கள் திமுக அணிக்கு 40 (39+1) வழங்கி அக்கட்சிகளின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளனர்.

பாஜக கட்சியோ, திரு மோடியோ தோற்கடிக்கமுடியாத அல்லது தோற்கடிக்கப்படகூடாத சக்தி அல்ல என்பதை மக்கள் தெரிவித்துள்ளனர். திரு மோடி அவர்களின் உடல் அசைவு மொழி காட்டுகிற அலட்சியம் அதிகாரத்துவம், அவரின் தேர்தல்கால கண்ணியக் குறைவான பேச்சுகள் , இந்துகடவுளர்களிடம் அவர்  மிகையாக காட்டிய ஆராதனைகள் ஆகியவற்றை இந்துக்களில் ஒரு பகுதியினர் ரசிக்காமல் நிராகரித்துள்ளனர். முஸ்லீம்கள் தங்கள் முழு எதிர்ப்பை வாக்குகள் வழி காட்டியுள்ளனர். ஆனாலும் அவரால் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. பாஜக தான் தவறவிட்டுள்ள உட்கட்சி ஜனநாயகத்தை காக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் ராகுலுக்கு நம்பிக்கை கூடியுள்ளது . ஏற்கத்தகுந்தவராக மாறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த முழுமையாக வட்டார மாநில கட்சிகளை நம்பவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. காங்கிரஸ் இந்த நிலையில் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு , சுயசோதனையும் தேவைப்படுகிற கட்சியாகவே இருக்கிறது. அங்கும் மேம்பட்ட மனம் திறந்த செயலுக்கு உத்வேகம் கூட்டக்கூடிய உள் விவாதங்கள் தேவைப்படலாம்.

 

வட்டார கட்சிகள் எல்லாமே , விடுதலைக்கு பின்னர் உச்சமாக கோலோச்சிய காங்கிரசை வீழ்த்தியே வளர்ந்தன. அவைகளின் பிறப்பு வளர்ச்சி என்பதெல்லாம் காங்கிரஸ் வீழ்ச்சியை வைத்தே இருந்தன. பல மாநிலங்களில் வட்டார கட்சிகள் காங்கிரஸ் செல்வாக்கை கணிசமாக குறைத்து விட்டன. காங்கிரசை பலவீனப்படுத்துதல் என்பதில் இடதுசாரிகளுக்கும் அப்போது கணிசமான பங்கிருந்தது.

 

தேசிய அரசியல் Congress centric என்பதிலிருந்து BJP centric ஆக மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ பாஜகவோ வலுவாக இருக்கும் மாநிலங்களில் தேசிய கட்சிகளை துடைத்தெறிந்து வட்டார கட்சிகளின் உதயம் வளர்ச்சி என்பதும் முற்றிலுமாக நிறைவேறும் என்றால் மட்டுமே , மய்ய ஆட்சி என்பது மாநில கட்சிகளின் கூட்டாட்சி என்ற திசையை எடுக்கும். அது ஒரு வகை புதிய சோதனையாக இந்திய அரசியலில் இருக்கும். Union of states என்பது பல நேரங்களில் union by states என்று புரிந்துகொள்ளப்படுவதைக் காண்கிறோம். இதுவரை கூட்டணி ஆட்சியில் தேசிய கட்சி தான் மய்ய அச்சாக இருந்துள்ளது.

இம்முறை தேர்தலில் இந்திய அரசமைப்பு சட்டம் முக்கிய இடத்தை பிடித்தது. திரு ராகுல் கூட்டங்களில் அப்புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். திரு மோடி மூன்றாவது முறை பிரதமர் என்றவுடன் அப்புத்தகத்தை வணங்கினார். அரசமைப்பு சட்டம் என்றால் பொதுபுத்தியில் டாக்டர் அம்பேத்கர் என்கிற பதிவு உள்ளது . அவர் சிலைகளில் அதை வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் தேர்தல் என்பதோ வேறாக இருக்கிறது. மாயாவதி அவர்களின் பிஎஸ்பி யோ, வேறு எந்த அம்பேத்கரிய கட்சிகளோ வாக்குகள் பெறாமல் செல்வாக்கை செலுத்தாதைக் காண்கிறோம். ராம்விலாஸ் பஸ்வான் கட்சி தனக்கான ஆறுதலைப் பெற்றிருக்கிறது.

 

இனி இடதுசாரிகளுக்கு வருவோம். இந்தியா கூட்டணியில் நின்று தேர்தலை சந்தித்தனர். இந்துத்துவா அரசியலை கடுமையாக விமர்சித்தனர். மோடியின் செயல்பாடுகள் , திட்டங்களை கடுமையாக விமர்சித்தனர். அதானி அம்பானி இந்திய பெரு முதலாளிகளுக்கு , குரோனி காபிடலிசத்திற்கு ஆதரவான அரசு என்கிற விமர்சனம் இருந்தது. வெளிநாட்டுக்கொள்கை குறித்த விமர்சனங்களையும் வைத்தனர். வேலையினமை குறித்த விமர்சனம் இருந்தது. ஆனால் இந்திய முதலாளித்துவ உறவுகள்- நிலச் சீர்திருத்தம்- சுரண்டல் என மார்க்சிய புரிதல்களுடன் கூடிய சொல்லாடல்கள் குறைவாக இருந்தன. தேர்தலில் அவை பொதுவாக எடுபடாமல் போன அனுபவமும் காரணமாக இருக்கலாம். மாநில கட்சிகளின் முழக்கங்களுக்கு அவர்கள் மாடலை சிறப்பித்து சொல்லுதல், மத்திய மாநில உறவுகள் குறித்த உரையாடல்கள் இருந்தன.

 

விடுதலை அரசியல் தன்கால கட்சிகளின் உடைவுகளை  பெரிதும் பார்த்து வருகிறது. காங்கிரஸ் பல உடைவுகளைக் கண்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உடைந்தன. சோசலிஸ்ட்கள் சிதறினர். மாநில கட்சிகளும் ஆங்காங்கே உடைவுகளை சந்தித்தே வருகின்றன. வலதுசாரி ஜனசங், இந்து மகாசபா சோதனை வழி பாஜக  தன்னை உருத்தேற்றிக்கொண்டுள்ளது. பாஜக உட்கட்சி விவாதம் கடந்த 10 ஆண்டுகளில் சரிந்தே போனது. ஆர் எஸ் எஸ் அல்லாத பல சக்திகளை வாக்கரசியல் பலத்திற்காக அது சேர்த்துக்கொண்டது. மோடி ஆர் எஸ் எஸ்க்கும் மேலானவர் எனக் காட்டத்துவங்கினார்.  பாஜக உள்மோதல்கள்  வலுத்து வலது கட்சியின் உடைவுகள்  உருவாகுமா என்கிற கேள்வி பதிலுக்கு காத்து நிற்கிறது. அப்போது வலதின் சிவசேனா போன்ற பிரிவு கூட லிபரல் செண்ட்ரிஸ்ட்களால் சேர்த்துக்கொள்ளப்படும் காட்சிகள் உருவாகலாம்.

 

 

 

                                                                                2

 

தேர்தல் கமிஷன் தனது இணையத்தில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 36க்கான - மாநிலவாரியாக தொகுதிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 53 கட்சிகளின் பெயர்களுடன் அவர்களின் அனைத்திந்திய வாக்கு சதத்தை வெளியிட்டுள்ளது. இதில் 40 கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர்.

 

அகில இந்திய வாக்கு சதத்தில் பாஜக 36.6 சதத்தை, காங்கிரஸ் 21.19 சதத்தைப் பெற்று தவிர்க்கமுடியாத தேசிய பெரும் கட்சிகளாக தங்களைப் புலப்படுத்திக்கொண்டுள்ளன. வட்டார அரசியல் இடங்களில் தங்களை வலுவாக நிரூபித்த  சமாஜ்வாடி 4.58 திரிணமூல் 4.36 தெலுங்கு தேசம் 1.98  , திமுக 1.82  எனப் பெற்றுள்ளன.    ஒயெஸ் ஆர்  2.06,  பகுஜன் 2.04 , அதிமுக 1,39 பெற்றன.

 

சிபிஅய்  0.49 , சிபிஎம் 1.76, சிபிஎம் எல் லிப  0.27 பெற்றன. நோட்டா என்பதில் தேர்தல் ஆணையம் 0.99 சதத்தைக் காட்டியுள்ளது. இடதுசாரிகளில் இக்கட்சிகளுடன்  பார்வார்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும்  சோசலிஸ்ட் யூனிட்டி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து அவர்கள் பெற்ற வாக்குகள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.

 

 

 

சிபிஅய்

 

ஆந்திரா, அஸ்ஸாம்,  பீகார், ஜார்கண்ட், கேரளா, சட்டிஸ்கர், மத்தியபிரதேசம், ஒரிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உபி, மேவ என 12 மாநிலங்களில் நின்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலங்களில் பெற்ற வாக்குகள் தரப்பட்டுள்ளன. கேரளாவில் கடுமையான போட்டியை காங், பாஜக இரு கட்சிக்கும் தந்ததைக் காணலாம்.  நின்ற மாநிலங்களில் சிபிஅய் வேட்பாள தோழர்கள் பெற்றவை.

 

ஆந்திராவில் குண்டூர் வாக்குகள் 8637  

அஸ்ஸாம் லக்கிம்பூரில் 19631

ஜார்கண்ட் சட்ராவில் 14122 , ஹசாரிபாக்கில் 10468, தும்கா 11506  லோஹர் டாகா 16793

கேரளா வயநாட்டில் 283023 , மாவேலிக்காரா 358648, திருவனந்தபுரம் 247648, திருச்சூர் 337652

பீகாரில் பெகுசராய் 5,67,851 

சட்டிஸ்கர் பஸ்தார் 35887

மத்தியபிரதேசத்தில்   சிதி 20290, ஷாடல் 19883 , கார்கோன் 14686

பர்பானி 6649 

 ஒரிசா ஜகத்சிங்பூர் 8130 

பஞ்சாப் பரிதாகோட் 14590

 தமிழ்நாட்டில்  திருப்பூர்  472739    நாகை  465044 ( வெற்றி பெற்ற இரு தொகுதிகள்)

உபியில்         பைசாபாத் 15637        லால்கஞ் 12271      கோஷி 6993    ராபர்ட்ஸ்கஞ் 23852

மேற்கு வங்கத்தில் காட்டல் 74908   மேதினிப்பூர் 57785

 

தேர்தலுக்கு பின்னரான தன் அறிக்கையில் சிபிஅய்  (ஜூன்5 2024) , பாஜக தோல்வி, இந்தியா கூட்டணி வெற்றியை சுட்டிக்காட்டிவிட்டு, இடதுசாரிகள் பெற்ற இடங்கள் குறித்து விரிவாக பரிசீலனை தேவைப்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளது.

The results of the 18th Lok Sabha election have ended the one party authoritarian, corporate backed communal fascist rule of BJP headed by the Prime Minister Narendra Modi. The people of India have given their verdict in defence of our constitution and secular democratic fabric of our country and against the politics of hate, discriminations, growing unemployment, attacks on federalism, minorities, democratic and human rights and unparallel miseries of the people with high price rise.

CPI congratulates the people for opposing and challenging the BJP by giving their verdict in defence of “Idea of India” enshrined in the constitution.

While congratulating the parties of INDIA block for their performances, CPI believes that the BJP could have been cut to size more if there could have been better seat-sharing among the partners and united campaigns.

CPI also wants to register its criticism against the Election Commission of India for its failure to contain the hate speeches by Narendra Modi on the issues of communal polarization

CPI will continue to play its important role within the INDIA block as it can play an important role in mobilizing the Indian people in defence of their fundamental rights and for a better future.

The results of the Left as a whole and CPI in particular demands proper introspection. Party will critically review the election results when detailed reports will be available.

 

                                                                       3

சிபிஎம்

அஸ்ஸாம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மேவ ஆகிய மாநிலங்களில் நின்றது. தமிழ்நாட்டில் இரு இடங்கள், கேரளாவில் 1, ராஜஸ்தானில் 1 என நான்கு இடங்களை பெற முடிந்தது. கேரளாவில் காங்கிரஸ் பாஜக எதிர்த்து கடும் போட்டியையும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் மற்றும் பாஜக எதிர்த்து போட்டியையும் இக்கட்சி தோழர்கள் எதிர்கொண்டனர். சிபிஎம் நின்ற தொகுதிகளும் பெற்ற வாக்குகளும்..

தமிழ்நாடு திண்டுக்கல் 670149    மதுரை 430323 ( இரு தொகுதிகளிலும் வெற்றி)

ராஜஸ்தான் சிகார் 659300  வெற்றி

கேரளா ஆலத்தூர் வெற்றி 403447

கேரளாவில் நின்ற பிற தொகுதிகள்:   காசர்கோட்  390010        கண்ணூர் 409542  வடகரா 443022  கோழிக்கோடு  374245

பாலக்காடு 345886 சாலக்குடி  330417  எர்ணாகுளம் 231932  இடுக்கி 298645 ஆலப்புழா 341047 பத்தனம்திட்டா 301504   அட்டிங்கல் 327367

ஆந்திரத்தில் அரகு  1,21,129  

அஸ்ஸாம் பர்பேடா 96138 

ஜார்கண்ட் ராஜ்மஹல் 37291 

கர்நாடகா சிக்கபல்லபூர் 4557

மகராஷ்ட்ரா ஹிங்கோலி 14644

ஒரிஸ்ஸா புவனேஸ்வர் 4148

தெலங்கானா போங்கீர் 28730

திரிபுரா கிழக்கு 290628

மேவ முர்ஷிதாபாத் 518227  கிருஷ்ண நகர் 180201  பாரக்பூர் 109564 டம்டம் 240784   பஷீர்ஹட் 77899  மதுரபூர் 61100

ஜாதவபூர் 258712  கல்கத்தா தெற்கு 168531  ஹவுரா 152005 ஸ்ரீராம்பூர் 239146 ஹூக்ளி 139919  டைமண்ட் ஹார்பர் 86953

ஆரம்பாக் 92502 பர்துமான் புர்பா 176899 துர்காபூர் 153829   ஜார்கிராம் 77302  பங்குரா 105359 அசன்சால் 105964  

போல்பூர் 99383    ஜல்பைகுரி 74092   ராணாகாட் 123810

தேர்தல் முடிவுகளை அடுத்து சிபிஎம் கட்சி வெளியிட்ட அறிக்கை  (ஜூன் 4 2024) பாஜக வீழ்ச்சியை, இந்தியா அணி முன்னேற்றத்தை சொல்கிறது. இடதுகள் சற்று முன்னேறி இருப்பதாகவும் சொல்கிறது’

 

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

People’s Verdict: Setback for BJP

The results of the 18th Lok Sabha election are a setback for the BJP. It has lost its majority in the Lok Sabha which it had got in the past two Lok Sabha polls in 2014 and 2019. This is a stinging blow to the image of invincibility built around Narendra Modi, who had boasted about winning 400 seats in this election.

The elections were held in the background of all out attacks on the opposition parties, misuse of Central agencies and massive use of money power. The Polit Bureau congratulates the people for standing up to these authoritarian attacks and safeguarding the Constitution, democracy and civil rights.

The INDIA bloc has put up a creditable showing having taken up the issues of unemployment, price rise, agrarian distress and the attacks on democracy and the Constitution. They were able to a considerable extent counter the communal electioneering indulged in by Modi and the BJP.

The results would have been more adverse for the BJP and the NDA if the Election Commission had ensured a level-playing field. It’s abject failure to curb the inflammatory communal rhetoric of Narendra Modi and enforce the Model Code of Conduct is a blot on the reputation of the Commission.

The CPI(M) and the Left parties have registered a marginal improvement in their tally. A more detailed analysis will be undertaken after the full election results are available.

The verdict signals that the people are going to fight back all attacks on democracy, the Constitution and their livelihood.

 

                                                                                          4

 

சிபிஎம் எல் லிபரேஷன் :

பீகார் ஒரிஸ்ஸா பகுதிகளில் தன் செல்வாக்கை காட்டியுள்ளது

பீகார் அர்ரா 529382   கராகட் 380581    இரு தொகுதிகளிலும் வெற்றி

பீகார் நாலந்தா 3903038 

ஒரிஸ்ஸா கோராபுட் 14852

ஆந்திராவில் காக்கிநாடா 2823

 

அகில இந்திய பார்வர்ட் பிளாக்   AIFB

அஸ்ஸாம், கர்நாடகா, பீகார், ஆந்திரா, மேவ, உபி என பல மாநிலங்களில் நின்றாலும் பல இடங்களில் 5000க்கும் குறைவான வாக்குகளையே இக்கட்சி பெற்றுள்ளது. சில தொகுதிகளின் வாக்குகள் மாதிரிக்காக…

பீகார் பாடலிபுத்ரா 1302, பூர்ணியா 6854

மபி கஜூரஹோ 50215   

மகாராஷ்ட்ரா நாக்பூர் 567 வார்தா 1438 மாதா 3067 மும்பாய் வடகிழக்கு 678

 ஆந்திரா நந்தியால் 642, கடப்பா 755, ராஜம்பேட் 5672, மசூலிப்பட்டினம் 5254

ஜம்மு காஷ்மீர் அனந்நாக்1562  ஜம்மு 984

தெற்கு டெல்லி 540   பெர்ஹாம்பூர் 2291  தெலங்கானா செவல்லா 3748 மகபூபாபாத் 39136 ஜாகிராபாத் 1769 

உபி கன்னோஞ் 801  பஸ்தி 2998 மீர்சாபூர் 3487 கான்பூர் 465

மேவ கூச்பிகார் 30267   பரசத்

நேதாஜிக்கான செல்வாக்கை வாக்குகளில் இக்கட்சியால் பெறமுடியவில்லை

 

ஆர் எஸ் பி

ஆர் எஸ் பி கொல்லத்தில் 443628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்கு அது சிபிஎம்மை தோற்கடித்தது.

பஞ்சாப் நின்ற இரு இடங்களில் 1000க்கும் குறைவாகவும், மேவ நின்ற மூன்று இடங்களில் அலிப்பூர் 39709 , ஜாய்நகர் 40113, பலூர்கஹட் 54217 பெற்றது

ஆர் எஸ் பி ஆந்திராவில் நர்சரபேட் 1245, இந்துபூர் 2051, நெல்லூர் 2804

 

SUCI Communist

பீகார், சட்டிஸ்கர், குஜராத், ஹரியானா, கேரளா, மேவ , டெல்லி, மபி ஆந்திரா, அஸ்ஸாம், ஜார்க்கண்ட்  கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் 151 இடங்களில் நின்றது. இடதுசாரி கட்சியிலேயே மிக அதிக இடங்களில் நின்ற கட்சி. தேர்தல் முடிவைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் நின்றிருப்பார்கள் போல இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் 1000க்கும் குறைவாகவும் பெற்றுள்ளனர். சில இடங்களில் 2000-4000 அளவில் பெற்றுள்ளது. சிப்தாஸ்கோஷ் இக்கட்சியை தொடங்கும்போது பெரும் கனவுடன் இருந்தார்.

 

இந்திய அரசியல் தேர்தலில் 2024ல் இடதுசாரிகள் ஒன்றாக ஏறக்குறைய 3 சத வாக்கைப் பெற்றுள்ளனர். இது பல வட்டார கட்சிகளைவிடக் கூடுதலானது என்றாலும், அவர்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகவே இருக்கிறது.  Self Introspection  எப்படி வரப்போகிறது எனப் பார்ப்போம்.

 

10-6-2024


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு