Skip to main content

Pattabi's New E Book Caste Essays

 

சாதி எனும் பிசாசு

(சாதி குறித்த பன்முகக் குரல்கள்)

முன்னீடு

சாதி குறித்து வாசித்தல் வழி எழுதிய 21 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆவணம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. கடந்த  5 ஆண்டுகளில் இணையத்திலும், முகநூலிலும் அறிமுகப்படுத்திய கட்டுரைகள் இவை. பல்வேறு அறிஞர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தந்த சில புரிதல்களை இத்தொகுப்பை படிப்போர் உணரமுடியும். அவரவர் சாய்வுக் கோணத்தில் அவர்களது எடுத்து வைப்புகள் அமைந்திருக்கும்.

எவரும் சாதி குறித்த முழுமையை தந்துவிடமுடியாது. ஆங்காங்கே கிடைக்கும் perceptions,  உரிமைகோரல்களை, மேலேறுதல் என்கிற தவிப்பின் போராட்டங்களை உணர்த்துதல் என்கிற அளவில் அவற்றை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

சாதிப்பற்று - caste patriotism அரசியலில், பொருளாதாரத்தில், சமூக நடவடிக்கைகளில் ஏதோவொருவகையில் முகம் காட்டாமல் இல்லை. ஓட்டரசியல் இதற்கான நல்ல விளைநிலமாகவும் மாறியுள்ளது. சாதிக்கு அப்பாற்பட்டு வர்க்கமாக மக்களை திரளச் செய்தல்- உணரவைத்தல் என்பதில் இடது அரசியல் வெற்றியை பெறமுடியாமல் போயுள்ளது. வர்க்கத்தில் சாதியும், சாதிக்குள் வர்க்கமும் இருப்பதை உணர்ந்த போராட்டம் தேவை என அவர்கள் கருதத்துவங்கியுள்ளனர்.

  பிராமணர் அல்லாதார் இயக்கம் என்கிற வகையில் இடைநிலை சாதிகளின் caste Hindus கூட்டமைப்பாக திராவிட இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ’ஆர்யருக்கு/ பார்ப்பனர்க்கு எதிர் திராவிட பெருமிதம்’ என்பதில் அதன் வெற்றியை நன்றாக உணரமுடியும். சுயசாதி உணர்வுகளுக்கு மேலாக ஒற்றை திராவிட இனப் பெருமிதம் என்பதில் அதனால் வெற்றி பெற முடிந்ததா என்பது சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. அவ்வுணர்வு கருத்தியல் உணர்வாகவும், சுய சாதி உணர்வு மனரீதியான உணர்வாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

அம்பேத்கரியர்களாலும் தங்களின் முன்னேற்ற empowerment agenda தாண்டி, சாதி ஒழிப்பு என்பதில் எதையும் செய்யமுடியவில்லை. பிராமண கருத்தியல் எதிர்ப்பில் இடைச்சாதிகளுடன் கூட்டணியும், சொந்த empowerment க்கான போராட்டங்களில் அவர்களுடனான முரணும் இருப்பதைக் காணமுடியும்.

திராவிடமா தமிழ் இன தேச உணர்வா என்கிற போராட்டம் ஓரளவிற்கு நடந்து வருகிறது. தமிழ் இன தேசப் பற்றாளர்களும் அதை சாதி உணர்விற்கு மேல் ஒன்றாக தமிழன் என்ற ஒற்றைக்கட்டாக உருவாக்க முடியவில்லை.

இந்து என்கிற ஒற்றை அடையாளத்தில் சாதியை தாண்டி திரளச் செய்தல் என்பதில் அரசியல் வெற்றி வலதிற்கு கிடைத்திருந்தாலும், சாதிய உணர்வுகளுக்கு மேல் இந்து பெருமிதம் என்பதை அவர்களாலும் கொணரமுடியவில்லை. ’முஸ்லீம் எதிர் இந்து பெருமிதம்’ என்கிற வெற்றி அளவிற்கு ’சாதிக்கு மேம்பட்ட இந்து பெருமிதம்’ என்பதை வலது அரசியலால் கொணர முடியவில்லை. அதனால் ’பிராமண கருத்தியல் மேலாண்மை’ என்கிற குற்றச்சாட்டை உடைக்க முடியவில்லை. இந்துக்களில் ’சாதி சமத்துவம்’ என்பதற்கே தாங்கள் நிற்கிறோம் என்கிற நம்பிக்கையை உருவாக்க இயலவில்லை. அவர்களின் இருப்பிற்கான பெரும் போராட்டமது.

சமூகத்தின் அரசியல் பொருளாதார அந்தஸ்து காரணியாக சாதி இன்னும் தன் இடத்தை பெரிதாக வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அனைத்தும் சாதிவழியில் தீர்வைக் கோருகிறது என்கிற பேச்சும் பெரிதாக செயல்படுகிறது. ’Brahminical Ideology -Brahminical Kshatria execution’  என்பதிலிருந்து சாதி  ’Brahminical Ideology - execution  mostly by all  castes’ என்கிற அரசியல் அதிகார சுற்றிற்கு சென்றுவிட்டது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் பிறப்பின் அடிப்படையில் என்கிற பிராம்மண கருத்தியலின் செயல் வாகனங்களாக அனைத்து சாதிகளும் ஆகியுள்ளன. எனக்கு மேல் எந்த சாதியும் இல்லை- கீழும் எந்த சாதியும் இல்லை- அனைத்து சாதிகளும் சமம் என்கிற உளவியல் அநேகமாக இல்லை எனலாம். சாதி ஒழிப்பு என்பது நல்லெண்ண முழக்கமாக இருக்கிறது. caste Patriotism என்கிற சாதிபக்த உணர்வு நகர்ப்புறங்களிலும், மேற்கு நாடுகளில் குடியேறுபவர்களிடமும் கூட குறையவில்லை. சாதிப்பகைகள் திருமண பந்தம் என்கிற அம்சத்தில் அதன் உஷ்ணத்தைக் காட்டுகின்றன.

சாதியும் தன்னளவில் அப்படியே தேங்கி நின்றுவிடவில்லை. ஆங்காங்கே சலனங்கள்  அசைவுகள் தென்படாமல் இல்லை. தன் இறுக்கத்தை பொதுவெளிகளில் குறைத்துக்கொண்டும், உள்ளிடங்களில் அதன் இருப்பை வைத்துக்கொண்டும் சாதி சமூகம் திருமணம் மற்றும் சடங்குகளின் வழி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. பொது வெளி மதிப்புகள் கூடி , உள்ளிட ஆசாரங்கள் மதிப்பிழத்தல், திருமணத்திற்கு ’சாதி பிரதான அடிப்படை காரணி’ என்பது பலமிழத்தல் என்கிற காலவெளியில் அதன் வீச்சு இற்றுப்போகலாம்.  குடும்ப உடைவுகள் சமூக மீறல்கள் என்கிற போராட்டங்கள் வலுப்பெறும்போது மீத மிச்ச எச்ச சாயல்கள்  என அது ஓயலாம்.  அடையாளப் போராட்டங்கள் எவ்வழியில் சமூகத்தை அழைத்துப் போகுமோ ..ஊகிக்கமுடியவில்லை. 

இந்த நூலில் தொகுக்கப்பட்டவை பல்வேறு ஆய்வாளர்களின் பன்முகக் குரலை எதிரொலிக்கின்றன. அவற்றில் அரசியல் பாசம் ஏதும் இல்லை எனச் சொல்லமுடியாது என்றே கருதுகிறேன். சாதி குறித்து ஏராள ஆய்வுகள் இருக்கின்ற சூழலில், சிலவற்றை ஒருசேர இங்கு அறிமுகம் என்கிற அளவில் வாசகர் பார்க்க முடியும். மேலும் ஆர்வம் ஏற்பட்டால் தேடிச் செல்ல முடியும். வாசகர் எவருக்காவது பயனளித்தால், இத்தொகுப்பு அதன் முக்தியைப் பெறும்.

சென்னை

22-6-2024                                  - ஆர் பட்டாபிராமன்


 

    உள்ளே…

1. சாதிக்கு எதிராக காந்தி

2. அம்பேத்கரும் பட்டியல் சாதியினரின் அரசியல் அதிகாரமும்

3. காஞ்ச அய்லய்யாவின் நான் ஏன் இந்துவல்ல

4. இந்திய சமூகவியலாளர்கள் சாதி குறித்து...

5. சாதி வர்க்க சேர்மானம் குறித்த ஆய்வுத்தாள்

6. ராம் சரண் சர்மாவின் ’சூத்திரர் ஆய்வு

7. அம்பேத்கரின் சூத்திரர் வரலாறு

8.  Caste Its Twentieth Century Avatar

9. Caste as Social capital

10. varna Jati Caste

11. இ எம் எஸ் சாதி வர்க்கம் கட்சிகள்  

12. பிராமணர் அல்லாதார்  பிரதிநிதித்துவம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றம்   

13. காகா கலேல்கர் கமிஷன் பற்றி மண்டல் கமிஷன்

14. சசிதரூரின் அம்பேத்கர்

15. தாட்சாயிணி வேலாயுதம் (1912-1978)

16. கம்யூனிஸ்ட் தோழர் ஆர் பி மோர்- நினைவு குறிப்புகள்

17. மாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல்

18. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உழைப்பாளர்  சாதி

19. தமிழகத்தில் அடிமை வியாபாரம்

20. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

21. இந்தியாவில் உற்பத்தி உறவுகளின் மாற்றம்

22. கில்பர்ட் சிலேட்டரின் திராவிடர்


To read the book click

https://ia600406.us.archive.org/12/items/caste-essays/caste%20essays.pdf


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு