Skip to main content

The Idea of Democracy sam pitroda

may 12 2024
திரு சாம் பிட் ரோடா அவர்கள் குறித்து சர்ச்சை எழுந்தவுடனேயே, அவருக்கு மரியாதை செய்திடும் வகையில் அவரின் The Idea of Democracy யை விரைவில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
35 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உரைகள் சிலவற்றை கேட்க டெலிகாம் ஊழியர்களாக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திரா அம்மையார் காலத்திலிருந்து  இந்தியா வந்து போய், ராஜிவ் காலத்தில் டெலிகாம் மேம்பாட்டிற்காக உழைத்தவர் என்ற வகையில் எங்களின் மரியாதையை அவர் பெற்றிருந்தார். அதன் பின்னரும் மன்மோகன் காலத்தில் கட்டுமான மேம்பாட்டிற்காக அவர் தன் உழைப்பை தந்தவர். 
Better Mission Communication என்கிற அவரது உரைதான் எங்களிடம் முதலில் வந்து சேர்ந்தது. எங்கள் மாநாட்டில் டிஜிட்டல் வழியாக அவரது உரை எங்களிடம் வந்தது.  இயக்கத் தலைவர் தோழர் குப்தாவுடன் அவர் தொடர் உரையாடல்களை மேற்கொண்டிருந்தார். பிட் ரோடாவின்  அன்றைய cDot முயற்சி வெகுவாக இயக்கத்தோழர்களால் பாராட்டப்பட்டது. வழக்கமான bureaucrat ஆக அவர் நடக்காத தன்மையை, அவரை மற்றும் மீமாம்சி போன்றவர்களை பார்த்து உரையாடிவந்த குப்தா, ஜெகன் போன்றவர்கள் எங்களிடம் எடுத்துரைத்தனர்.
உன்னி கிருஷ்ணன் என்கிற ஓர் அமைச்சர் படுத்தியபோது, பிட் ரோடா பக்கம் நின்று அமைச்சருக்கு எதிராக நாங்கள் போராடினோம். இன்று இந்திய டெலிகாம் பட்டி தொட்டியெல்லாம் சென்றிருக்கிறதென்றால், பிட் ரோடா அதற்கு அளப்பறிய சேவையை செய்திருக்கிறார் என்ற எண்ணம் எழாமல் இருக்கமுடியாது.
அவரின் idea of democracy படித்தப் பிறகு ஏதாவது தோன்றினால் சொல்லக்கூடும். 
குஜராத்திலிருந்து சென்று அமெரிக்கா வாழ் , மேற்கு மனிதராக வாழ்ந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி என்கிற எண்ணம் கருகாமல் வாழக்கூடியவர் பிட் ரோடா என்றே எனக்கு தோன்றுகிறது.


18-5-2024
The Idea of Democracy என்கிற நூல் இவ்வாண்டு 2024 ல் வந்த ஒன்று. சாம் பிட் ரோடா எழுதிய இப்புத்தகத்தை பெங்குவின் கொணர்ந்துள்ளனர்.
சாம் பிட் ரோடா இந்திய அமெரிக்க வாழ்நிலைகளின் அனுபவத்தை பெற்ற டெக்னோகிராட். வளர்ச்சி ஆய்வாளர்.  டெலிகாம் நிபுணர் மட்டுமல்ல, இந்தியாவின் knowledge commission ல் பங்காற்றியவர்.  பல ஆய்வுகளுக்காக மதிக்கப்படுபவர்.  
அவரின் மற்ற புத்தகங்கள் dreaming big, Redesign the world. அவற்றை நான் படித்ததில்லை.  ஜனநாயகம் குறித்து அவர் எழுதி சமீபத்தில் வெளியான நூல் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது.
பிட் ரோடா இந்நூலில், தெரிந்த கருத்தாக்கங்கள்,  ஜனநாயகம் குறித்து ஏற்கப்பட்ட மதிப்பீடுகளை சுருக்கமாக நோட்ஸ் போல கொடுத்துவிட்டு, பல்வேறு டேட்டாக்களின் உதவியுடன் அமெரிக்க இந்தியா  மற்றும் பல நாடுகளின் ஜனநாயக பண்புகளின் வீழ்ச்சி, இன்றைய ஆபத்தான போக்குகள் குறித்து இதில் விவாதிக்கிறார்.
இரு பகுதிகளாக நூலை பகுத்துக்கொண்டு முதல் பகுதியில்
The Essence of Democracy 
The workings of Democracy 
The state of global democracy 
Democracy in the US
Democracy in India
என்கிற 5 உபதலைப்புகளில் பொதுவாகவும், குறித்த தன்மையுடனும் விவாதிக்கிறார்.
இரண்டாவது பகுதியில்
Capitalism and Democracy 
Values in Democracy 
Technology and Democracy
Leadership and Democracy
Redesigning Democracy என்கிற 5 அம்சங்களை விவாதிக்கிறார். இந்த அம்சம் ஒவ்வொன்றும் தனி நூல் அளவிற்கான பரப்பை பெறக்கூடியவை.
EIU என்கிற Economist Intelligence Unit 2022 ல் வெளியிட்ட அறிக்கை ,எவ்வளவு நாடுகள் ஜனநாயக தன்மைகளை கொண்டிருக்கின்றன என்கிற index ஒன்றை கொண்டிருந்தது. முழுமையான ஜனநாயகம் என்கிற பகுதியில் உலக மக்கள் தொகையில் 8 சதமே வாழ்கிறார்களாம். Flawed democracy என பழுதடைந்த பகுதிகளில் 38 சதமும், ஏதோ ஏனோ என hybrid வகையில் 18 சதம் என ஜனநாயக காற்றை  எந்த வகையிலாவது சுவாசிப்பவர்கள் 64 சதமே இருக்கிறார்கள்.
அதேபோல voter turnout எப்படி பல்வேறு நாடுகளில் குறைந்துகொண்டே வருகின்றன என்கிற ஆய்வறிக்கையும் வந்துள்ளது. Voter Apathy என்ற வகையில் இது பற்றி சாம் பேசுகிறார்.
Our times are witnessing a fracture in the social contract between citizens and their political elite. They are becoming increasingly estranged என்கிற மதிப்பீட்டை சாம் தருகிறார்.
2016 ஆய்வு EiU படி 72 நாடுகளில் ஜனநாயக மதிப்பீடுகளின்ன்சரிவு பேசப்பட்டுள்ளதை சாம் காட்டுகிறார்.
Rise of populism எப்படி பல நாடுகளில் எத்தகைய எதிர்மறை விளவுகளை தந்து வருகிறது என சாம் சொல்கையில்
An increasing and rather worrying trend across the world is that political parties playing a nationalist feelings, targeting minority communities and inciting hatred against them. என எழுதுகிறார்.
பாப்புலிசம் தனக்கான பெரும்பான்மையை ஏதோவொரு வசியத்தில் கட்டிக்கொள்ளும். தன்னைப் போன்றவர்களை வீழ்த்தியதே, அந்த பிறர் என்கிற மைனாரிட்டிதான்‘  என எதிரியாக அந்த பிறரை சித்தரித்துக்கொண்டே தன்னை பலப்படுத்திக்கொள்ளும். அந்த பழம்பெரும் எதிரிக்கு இன்றைய பலம் என்ன என எதார்த்த பரிசோதனைகளுக்கு அது இடம் கொடுக்காது. ஆயிரம் ஆண்டு, மூவாயிரம் ஆண்டு என எவரும் ஊகித்து  இது தான் உண்மை என அறியமுடியா காலத்திலிருந்து தான் அடைந்து வரும் பாதிப்பை பிரதியாக்கி திரும்ப திரும்ப கதைக்கும்.  தான் விரும்புவதை உண்மைகள் எனச் சொல்லி கோணிப்பைகளை இட்டு நிரப்பி, ஊர் முழுக்க விநியோகிக்கும்.  அதில் தன் அதிகாரத்தை சுவைக்கும். அது தன் தலைமையில் முடிந்த அளவு சமூகத்தை polarise செய்து எதிரும் புதிருமாக்கும்.
இப்படி நாடுகளின் ஜனநாயக மதிப்பீடுகள் விழும்போது , அம்மக்களுக்கு நேரிடும் சில அம்சங்களை பிட் ரோடா சொல்கிறார்.
Undermining civil society 
Undermining independence of the institutions 
Abuse of Executive powers
Demonisation and intimidation of political opponents 
Control of the media and narratives
Tech fuelled disruption and misinformation 
நீளம் அஞ்சி நிறுத்துகிறேன். சாம் மேலும் எப்படி அழைத்துப் போகிறார் என்பதை பின்னர் பார்க்கலாம்.
18-5-2024

பிட் ரோடா - ஜனநாயகம்   2
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அரசியல் அமைப்பு சட்டம் பற்றி பேசும்போது, உள்ளதை உள்ளபடி ஷரத்து என்றால் ஷ்ரத்தாக குறிப்பிட்டு சொல்வது உகந்தது. வியாக்கியானங்கள் வேறு வேறாக இருக்கலாம். 
முகப்புரை என்றால் அதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் சொல்லவேண்டும். அதை அவரவர் கோணத்தில் வியாக்கியானப்படுத்தலாம்- அழுத்தம் தந்து விளக்கலாம். ஆனால் preambleல் இல்லாத ஒன்றை கவனக்குறைவாகவோ அல்லது போகிற போக்கிலோ இருப்பதாக சொல்லி செல்லக்கூடாது. இப்படியான ஒன்றை ( தவறென சொல்லலாமா?) பிட் ரோடா செய்துள்ளார்.
முகப்புரையில் உள்ள முக்கிய பதங்களையெல்லாம் சொல்கிறார்- அதே நேரத்தில் ஆர்ட்டிக்கில் 1 யை அதில் ஏன் சேர்த்து சொல்கிறார் எனத் தெரியவில்லை. அதை அவர் செய்திருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது. அவர் எழுதிய வரிகள்
The Preamble declares that India , that is Bharat, shall be union of states, a sovereign, socialist, secular, democratic republic committed to securing justice, liberty , equality and fraternity for all its citizens.
மற்ற எல்லாவற்றையும் முகப்புரை பேசுகிறதே தவிர, India that is Bharat, shall be union of states என்கிற declarative clause அதில் இல்லை என்பதை எப்படி பிட் ரோடா போன்ற ஒருவர் காணத்தவறினார் எனத் தெரியவில்லை.  
சில நேரங்களில் over confidence நம்மை ஏமாற்றிவிடும். இது குறித்து அவர் நண்பர்கள் எவரும் சுட்டிக்காட்டாமல் விட்டனரா?
பிட் ரோடா வேறு ஒரு இடத்தில்
Capitalism and private business have a complex and multi faced role in promoting democratic values and contributing to the development of democratic institutions என எழுதுகிறார். சோசலிச சிந்தனையுடையவர்களுக்கு இதில் கருத்து மாறுபாடு இருக்கலாம். நமது நாட்டில் கார்ப்பரேட்கள்  கட்சிகளுக்கு கொடுக்கும் கோடி கொடைகள், என்ன மாதிரியான ஜனநாயக விழுமியங்களை உற்பத்தி செய்கின்றன என்கிற கேள்வி வராமல் இருக்காது.
சட்டம் இயற்றும் அவை நேர்த்தியைப் பொறுத்தே ஜனநாயகம் தழைக்கும் என்கிற , நமது அனுபவத்திற்கு பொருத்தமான கருத்தொன்றை பிட் ரோடா எழுதுகிறார்.
Democracy can thrive best if it has a vibrant, knowledgeable, dedicated, courageous and legitimate legislature with character.
பிட் ரோடா பேசும் , இப்படியான நேர்த்தி கூடிய அவை வேண்டுமெனில், கட்சிகள் அனுப்பவேண்டிய வேட்பாளர்கள் தேர்வில் , அக்கட்சித் தலைமையின் கடமையும் பொறுப்பும் பிரதிபலிக்க வேண்டும்.  அவையின் கண்ணியம் என்பது , ஆளுங்கட்சியின்  மேஜை தட்டல் அல்லது கேலி கூச்சலிலோ- அல்லது எதிர் கட்சிகளின் அமளி மற்றும் நிரந்தர வெளிநடப்புகளிலோ இருக்க முடியாது. விவாதத்திற்கு உகந்த சூழலை , விவாதத்தை பொறுப்புடன் உருவாக்குதல் என்பதில் கட்சி  விசுவாசம் தாண்டிய  உறுதிப்பாடு அவை உறுப்பினர்க்கு பழக்கமானால் , ‘அவை கண்ணியம்’ என்பதற்கான index உயரும்.
எம்பி அல்லது எம் எல் ஏ அவை செயல்பாடுகள் என்பதற்கான index ஒன்றை தொகுத்து வெளியிடும்  legislative members index மக்கள் முன்னர் ஆண்டுதோறும் எல்லா மொழிகளிலும் வைக்கப்படுதல் நலம். உலக நாடுகளின் சபாநாயகர்கள் நேர்மை பாரபட்சமற்ற  செயல்பாடு குறித்தும், இந்திய சட்டமன்ற நாடாளுமன்ற சபாநாயகர் செயல்பாடுகள் குறித்தும் தனியான index ஆண்டுதோறும் மக்கள் முன்னர் வைக்கப்படுதல் நலம். 
AI போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் அவை செயல்பாடுகள் குறித்த முழு பதிவையும் அலசி  ஆய்ந்து , அவை யின் நேர்த்தி அல்லது அவலங்களை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி , awareness அதிகமாக்க வேண்டிய அதி அவசரத்தை இந்திய ஜனநாயகம் கோருகிறது.
19-5-2024


31-5-2024
சாம் பிட்ரோடா நூலில் தோழர் குப்தா
சாம் பிட்ரோடா அவர்களின் The Idea of Democracy குறித்து இதற்கு முன்னர் இரு இடுகைகளை செய்திருந்தேன். 2024- இந்த ஆண்டு வந்த புத்தகம். அவர் தன் நூலில் எங்காவது டெலிகாம் தொழிற்சங்கம் குறித்தோ, தோழர் குப்தா குறித்தோ எழுதியிருப்பாரா என்ற கேள்வி என்னுள் இருந்தது.
240 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தில் பக் 172 ல் தோழர் குப்தா பெயரும் ரகுபீர் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளன.  ரகுபீர் பற்றி ஒரு வரி செய்தி, அவர் கைத்துப்பாக்கியுடன் அலுவலகம் வருவாரா என்பதுதான். காங்கிரஸ் சார்பாக இயங்கிவந்த FnTo என்கிற இயக்கத்தலைவர் அவர். அவர் துப்பாக்கி கதை சிற்றூரில் இருந்த என்வரை அப்போது பரவியிருந்தது.
NFTE  இயக்க மாபெரும் தலைவர் தோழர் குப்தா குறித்து உயர் மதிப்பீடும்,  கம்யூனிஸ்ட் என்றும், அதே நேரத்தில் அவர் கம்யூட்டர்மயம் வேலைவாய்ப்பை ஒழித்துவிடும் என அஞ்சினார் என்ற செய்தியும்  பிட்ரோடாவால் சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களின் உணர்வை உயர் நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி, அச்சத்தை போக்கக்கூடிய வகையில் உறுதிமொழிகளையும் அவற்றின் நடைமுறையாக்கத்தையும் தோழர் குப்தா உறுதி செய்பவராக இருந்தார் என்பது நம்மைப் போன்றவர்க்கு தெரிந்த குப்தாவின் மறுபக்கம். அதேபோல் கம்யூட்டர் வருவதால்  வேலை போய்விடும்  என அன்று , சில தோழர்கள் அரசியல் போட்டியில் செய்திட்ட  அதீத பெரும் பயமுறுத்தல்களிலிருந்து தொழிலாளர்களை விடுவித்து, நம்பிக்கை கொடுத்து அனைவருக்கும் கேடர் சீரமைப்பு வழி மூலம் கம்யூட்டர் பயிற்சியுடன் உயர் சம்பளத்திற்கும் அழைத்துச் செல்ல, குப்தா பிட்ரோடாவை  சம்மதிக்க வைத்த காட்சிகள் நம்மால் மட்டுமே உணரத்தக்கவை.  
1989 தீபாவளி பரிசென BSc First class  ஊழியர்களிடம் இருந்தால் straight JTo  அதிகாரி பதவி என்கிற ஏற்பை பிட்ரோடா செய்தும் , தொழிற்சங்க rivalry காரணமாக, அதை அவரால் அமுல்படுத்தமுடியாமல் போனது.
அவர்  சேர்மனாக  வருவதை சங்கங்கள் எதிர்த்தன. அமெரிக்க வேலை, தனியார்மயத்திற்கானது என எதிர்த்தனர் என பிட் ரோடா எழுதியது ஏனோ? தோழர் குப்தாவை பொறுத்தவரை காந்தி மற்றும் டாங்கேவிடமிருந்து அவர் கற்று நடைமுறைப்படுத்தியது Hold the bull by horns. எனவே எவருக்கும் வாய்ப்பளிக்காமல் , அவர் குறித்து முன் கூட்டிய அனுமானம் கொள்கிற கம்யூனிஸ்ட் அல்ல அவர்- prejudice கொண்ட கம்யூனிஸ்ட் அல்ல அவர். வேறு அரசியல் சார்புடைய  டெலிகாம் தலைவர்களுக்கு அமெரிக்க ஊடுருவல் என்கிற எண்ணம் இருந்திருக்கலாம். தொழிற்சங்கங்களை வீழ்த்திட  பிட் ரோடா என்கிற பயம் தோழர் குப்தாவிற்கு அறவே இல்லை. சாம் பிட்ரோடா அப்படி எழுதியிருப்பது அதீத ஊகம். அவர்கள் எனக்கு நண்பர்கள் ஆயினர். ஒத்துழைத்தனர். டெலிகாம் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டதில் தொழிற்சங்க தலைவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்கிற நேர்மையான பதிவையும் சாம் செய்துள்ளார்.
சாம் பிட் ரோடாவின் பக் 172 வரிகள் , அந்நாட்கள் நினைவிற்கு என்னை கொண்டு சென்றது.  இந்நூலில் சாம்  எழுதிய வரிகளைத் தந்துள்ளேன்.
I had a new set of challenges. While at C DOT we had over 500 people, at the telecom commission we had as many as 5,50,000 employees- manual labourers, manufacturing workers, field operators, engineers etc.
The unions were hostile to my becoming the chairman because they believed, through rumours, that I was planted by vested American interests to privatise telecom and, in the process, kill the labour unions. They were determined to make my life miserable.
I recall how one one of the leaders, Raghubir Singh, used to bring a loaded gun to the office- that I was shocked at this was an understatement. 
The other leader , Om Prakash Gupta, a communist , was very concerned about my technology background. He firmly believed that computers were invented to eliminate jobs. Since I was pushing for computerisation of the railway reservation system, it was an area of concern for many in the government. The labour unions , particularly, were dead against my so called capitalist and western ideas.
Here also, the Gandhian leadership style came to my aid in winning labour leaders’ hearts and minds through long conversations with them steeped in truth, trust and love. I realised that they were great people who had never received a proper hearing or attention from the leadership. These labour leaders eventually became close friends, came home for dinner and worked to support me at every step. They were part of telecom revolution in India.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா