Skip to main content

Risala E Deeniyat இது தான் இஸ்லாம்

 

இது தான் இஸ்லாம்என்கிற மூல நூல் வந்து 90 ஆண்டுகள் ஆகப்போகிறது. Risala E Deeniyat என்று மெளலானா மெளதூதி அவர்கள் உருது மொழியில் எழுதிய நூல். 1952ல் தமிழாக்கம் பெற்றது. பாகிஸ்தான், இந்தியா இஸ்லாமிய பள்ளிகளில் பாடப்புத்தகமாகவும் வைக்கப்பட்ட ஒன்று. இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் பெறப்பட்ட நூல்.

பேரா குர்ஷித் அஹ்மத் அவர்கள், அடிக்குறிப்புகளுடன் 1970 ல் மேம்படுத்தப்பட்ட நூல். மஹதி அவர்கள் மொழிபெயர்ப்பில் 2017 பதிப்பை படிக்க வாய்ப்பு கிடைத்தது. மெளலான மெளதூதி அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அறிஞர் என இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமிய வாழ்க்கைத்திட்டம், வணக்கமுறை, பிரார்த்தனை தத்துவம், ஈமானின் அம்சங்கள், வாழ்க்கை அணுகுமுறை ஆகியவற்றை எளிமையாக படம் பிடித்துக்காட்டும் நூல் என்கின்றனர்.

அவரவர் மத அனுசரிப்புகள் அந்தந்த மதத்தினருக்கு முக்கியமானவை. புண்படுத்தாமல் இருப்போமாக.

இனி நூலில் பேசப்பட்டுள்ள சில அம்சங்கள்..

இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ, தனி சமுதாயத்துடனோ தொடர்பு கொண்டதாயில்லை. அதன் பெயரே குறிப்பிட்ட அம்சத்தையும், சிறப்பையும் வெளிப்படுத்துகிறது..இந்த மதம் மனிதரால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. குறிப்பிட்ட சமுதாயம், நாடு என்கிற வரையறைகள் இல்லை. ஒவ்வொரு காலத்திலும் வாய்மையும் நேர்மையும்வாய்ந்த பண்புள்ளமக்கள் அனைவரும் முஸ்லீம்களாய் இருக்கிறார்கள். இருப்பார்கள்

இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அவனுடைய ஆணைகளை நிறைவேற்றுவதற்கே இஸ்லாம் என்ற பெயராகும்

குர்ஷித் அஹ்மது அடிக்குறிப்பு : இஸ்லாம் என்பதற்கு மற்றொரு பொருள் சாந்தி என்பதாகும். இறைவனுக்கு அர்ப்பணித்து கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் சாந்தியை பெறுதல்

இறை நிராகரிப்பு ஓர் அறியாமையாகும். மூல அறியாமையே அதுதான்.. இறை நிராகரிப்பு ஒரு கொடுமையாகும். அது இறைவனுக்கு எதிராகப் புரட்சி, நன்றி கொல்லல், இரண்டகம் செய்தல் ஆகும்

எந்த அறிவு தன்னைப் படைத்தவனையே அறிந்துகொள்ளவில்லையோ அந்த அறிவு எப்பொருளைத்தான் சரியானது என அறிந்துகொள்ளப் போகிறது. புத்தி கோணல்வழியில்தான் செல்லும்

என் எஜமானனாகிய இறைவன் , என் சக்தியையும் அறிவையும் எவ்வளவு அதிகப்படுத்தி இருக்கிறானோ அதைக்கொண்டு என்னுடைய நன்மைக்காகவும், எல்லா மக்களுடைய நன்மைக்காகவும் பாடுபடுவேன் என்கிற உறுதி மேற்கொள்வது செயலாற்றுவதே இறைவனுக்கு செலுத்தும் நன்றியாகும்

ஒரு முஸ்லீம் எவ்வாறு வாழவேண்டும் என்பதை நன்கு புரிந்து ஒரு போதும் அவன் உலகில் இழிவுபடுத்தப்பட்டவனாகவோ, தாழ்த்தப்பட்டவனாகவோ, அடிமைப்பட்டவனாகவோ இருக்க முடியாது. அவன் எப்போதும் மேலாதிக்கம் செலுத்துபவனாயும் ஆணையிடுபவனாயுமே இருப்பான் என்கிற நம்பிக்கை ஏற்படும்

இறைவன் ஒருவனே, அவனுடைய இறைமையில் அவனுக்கு இணை, துணை யாருமில்லை

நம்பிக்கை ( ஈமான்) இல்லாமல் எந்த மனிதனும் முஸ்லீம் ஆகமுடியாது..எங்கு நம்பிக்கை இல்லையோ அங்கு இறைநிராகரிப்பு ( குப்ரு) இருக்கும். அதற்கு மற்றொரு பொருள் இறைவனுக்கு எதிரான புரட்சியாகும்

இறைத்தூதர்களைத் தவிர வேறு எவர் மூலமாகவும் உங்களுக்கு சரியான விஷய ஞானம் கிடைக்காது. சரியான ஞானமின்றி இஸ்லாமிய வழிமுறையில் நடக்க முடியாது

ஒருவரை இறைத்தூதர் என்று ஒப்புக்கொண்ட பின்பும் அவர் சொல்லை ஒப்புக் கொள்ளாதிருத்தல் அறிவுடைமையாகாது. அவர் கூறுபன யாவும் இறைவனின் சார்பாகக் கூறப்படுவன. அவர் செய்வன யாவும் இறைவனின் விருப்பப்படி செய்யப்படுவனயாகும்

எந்த விஷயம் இறைவனுக்கு எதிரானதோ அது ஒரு போதும் உண்மையானதாகவோ, சத்தியமானதாகவோ இருக்கமுடியாது

அரபு மொழியை பாருங்கள். அது தேனினும் இனிய மொழி, அதை கேட்கும்போது காதுகளில் தேன் பாய்வதைப் போல இருக்கும். இசைநயம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும். குர் ஆன் போன்ற வேத நூலுக்கு இத்தகய மொழியே அவசியமாயிருந்தது

குர்ஷித் அவர்களின் அடிக்குறிப்பு: திருக்குர் ஆனும் ஹதீஸூம் இஸ்லாத்தின் நிலையான மாறா அடிப்படைத் தத்துவங்களை விளக்குகின்றன..நிலையான வாழ்க்கை தத்துவங்களுக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கும் ஏற்ப, மனித சமுதாய பரிணாமம் நிரந்தரமாக இயங்க ஓர் அமைப்பை ஏற்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான்.

காபிர் இறை மறுப்பாளன், முஷ்ரிக் இறைவனுக்கு இணை வைப்பவன், நாத்திகன் ஆகியோரிலிருந்து ஒரு முஸ்லீமை வேறுபடுத்துகிற கலிமா லா இலாஹ இல்லல்லாஹூ- அதாவது அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறு எவரும் இல்லை. இந்த கலிமா தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும்

இக்கலிமா மனிதனிடம் தன்னம்பிக்கையுடன் பணிவுடைமையும் உருவாக்குகிறது. உளத்தூய்மை நன்னடத்தை தான் ஈடேற்றம் என்பதை அறிய வைக்கும். .மனத்திருப்தியை ஏக தெய்வக் கொள்கையால் தவிர வேறு எந்த கொள்கையாலும் பெறமுடியாது

அல்லாஹூ எனும் சொல் உண்மையில் இணைதுணையற்ற ஏக இறைவனின் பெயராகும்

முஹம்மத் ( ஸல்) அவர்கள் இறைவனின் உண்மையான தூதர். அவரது அறிவுரை முற்றிலும் நிறைவு பெற்றது. எல்லாத் தவறுகளிலிருந்தும் தூய்மையாக இருக்கிறது. அவர்கள் இறைவனின் இறுதித் தூதர்

அல்லாஹ், ஒவ்வொருவருவருடைய நல்ல கெட்ட செயலையும் நிறுத்துப்பார்ப்பான்.. எவருடைய தீச்செயலின் தட்டு தாழுமோ அவருக்கு தண்டனை அளிப்பான். எவர்கள் மன்னிப்பு பெறுகிறார்களோ அவர்கள் சுவர்க்கம் புகுவர். தண்டனை பெற்றவர் நரகம் செல்வர்

ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் , படைப்பினங்களையும் அழித்துவிடுவான். அந்த நாளின்பெயர் கியாமத். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ் முன் கொண்டுவரப்படுவர். அதற்கு ஹஷர் எனப் பெயர்

அய்ந்து விஷயங்களின் மீது நம்பிக்கை

இணை துணையற்ற ஏக இறைவன் அல்லாஹ்

இறைவனுடைய வானவர் மீது

இறுதி வேதம் புனிதக் குர் ஆன் மீது

இறுதி தூதர் முகம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மீது

மறுமை வாழ்வு மீது

இறைவனுக்கு கீழ்ப்படிந்துஅடிமையாகி தொண்டு செய்வது வழிபாடு. நீங்கள் அப்து அடிமை. அல்லாஹ் உங்கள் ஆபூத் அரசன்

எதன் மீது நாம் ஈமான் நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ அதனை நாள்தோறும் அய்ந்து முறை சொல்லாலும் செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறை தொழுகையாகும்

அல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி ஜமாஅத்துடன் தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். ஒருமுறை வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான்.

ரமளான் மாதம் வந்ததும் வைகறை முதல் மாலைவரை உண்ணல், பருகல் அறவே நின்றுவிடுகிறது. அல்லாஹ் குறிப்பிட்ட மாதத்தில் நோன்பைக் கடமையாக்கியிருக்கிறான். அனைவரும் சேர்ந்து நோற்கவேண்டும்

ஜகாத் - அல்லாஹ் பணக்காரர்களின் செல்வத்தில் இரண்டரை சதவீதப் பங்கை ஏழைகளுக்கென்று தீர்மானித்திருக்கிறான். இது இஸ்லாத்தின் மிகப்பெரிய தூண். தன்னலம், பொருளாசை தீய குணங்களை விலக்குகிறது. முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது. எந்த முஸ்லீமும் நிர்க்கதியாகிவிடக்கூடாது

ஹஜ் வாழ்வில் ஒரு முறையாவது நிறைவேற்ற வேண்டியது. புனித மக்கமா வரை போய்வரும் செலவை தாங்கக்கூடியவர் கடமை

ஜிஹாத் இஸ்லாமிய ஷரீ அத் மொழியில் இஸ்லாமிற்காக முயன்று உழைப்பது என்பதாகும். இஸ்லாத்தின் பகைவர்களுடன் செய்யும் போருக்கு குறிப்பாக ஜிஹாத் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

தீன் இறை வழிபாட்டில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இணையாக்கக்கூடாது. இந்த ஈமான் , இந்த வழிபாடு தீன் ஆகும். ஷரீஅத் வணக்க முறைகள், வாழ்க்கை விதிகள், பரஸ்பர விவகாரம், தொடர்புகள் பற்றிய சட்டங்கள், ஆகுமானவை ஹலால், ஆகாதவை ஹராம் முதலியவை குறித்தவை ஷரீஅத் எனப்படும்

இரண்டு மூலாதாரங்கள் ஒன்று புனித குர்ஆன், இரண்டாவது ஹதீஸ். குர் ஆன் இறைமறையாகும். அதன் ஒவ்வொரு சொல்லும் அல்லாஹ்வுடையதாகும். நபித் தோழர்களுடன் கேட்ட பல விஷயங்கள் மனப்பாடமாகி, எழுதி வைத்துக்கொண்டவை நூலானது. இவ்விதம் ஹதீஸ் பெரிய கரூவூலம் சேகரிக்கப்பட்டது. குர் ஆன், ஹதீஸ் பற்றி நன்கு அறிந்த மார்க்க அறிஞர்கள் தொகுத்து சொன்னவை ஃபிக்ஹூ ஆகும்

ஃபிக்ஹூ வெளிப்படையான செயலுடன் தொடர்புடையது. மனநிலை எப்படி என்று எது கவனிக்கிறதோ அது தஸவ்வுஃப் என்பதாகும்

மனித உறவுகளின் தொடக்கம் குடும்பம். குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள்.இஸ்லாம் வெளியே வேலைகளை ஆண்களிடம் விட்டுள்ளது. அவசியம் இருந்தால் ஒழிய வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என பெண்களுக்கு கட்டளையிட்டுள்ளது. அமைதியாக வீட்டுக்கடமைகளை நிறைவேற்ற வேண்டும்

ஓர் ஆண் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையில் உள்ள பகுதியையும், பெண் முகம் கைகளைத் தவிர உடலின் எப்பகுதியையும் காட்டவே கூடாது. ஷரீஅத் மொழியில் ஸத்ர் எனப்படும்

முஸ்லீம்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து கல்வி, கலை கற்றுக்கொள்ள, பலன் மிக்க வழிகளை அறிந்துகொள்ள அனுமதியுண்டு

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு