changes In Relations of Production in India- Our political program என்கிற சிபிஅய் மாவோயிஸ்ட் 272 பக்க பெரும் ஆவணம் 2021ல் வெளிவந்தது. இந்திய சமூகம், வர்க்க உறவுகள், இந்தியாவில் நடந்த சமூக மாற்றங்கள் குறித்து அத்தோழர்களின் மத்திய கமிட்டி புரிதலை அவர்கள் இதில் தந்துள்ளனர்.
பல இடங்களில் மார்க்ஸ் லெனின் மாவோ மேற்கோள்கள் பார்முலா வகைப்பட்டு வந்தாலும், அத்தோழர்கள் தாங்கள் சரி என வந்தடைந்த புரிதலுக்கான உழைப்பை தந்துள்ளனர் . சிந்துவெளி ஆர்ய சமூகத்திலிருந்து அவர்கள் இந்திய வரலாற்று பொருள்முத வாதத்தை கட்ட முயல்கின்றனர். வர்ண- சாதி பதங்களையும் வர்க்க பதங்களுடன் இணைத்து தங்கள் புரிதலை தருகின்றனர்.
வழக்கமான அரைக்காலனிய அரை நிலபிரபுத்துவ ஆயுதம் தாங்கிய நிலம் சார்ந்த போராட்ட புரிதலே முன்வைக்கப்படுகிறது. இவர்கள் சிபிஎம்மிலிருந்து விலகி நக்சல் பாதை எனப்போய் 55 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா முதலாளித்துவ பாதையில் நுழைந்துவிட்டது என்று சொல்பவர்களை ஏகாதிபத்திய தாசர்கள் என்பர். இங்கு இருப்பது தரகு முதலாளித்துவம் என மதிப்பிடுவர்.
பண்டைய இந்திய சமூக உருவாக்கத்தை அவர்கள் 4 கட்டங்களாக சொல்கின்றனர். 1800-1000 பி சி- கால்நடை வளர்ப்பு ஆரம்ப விவசாயம் . இக்கட்டம் பற்றி கால் நடை மேய்ச்சல் தொழிலைவிட ஆரம்ப விவசாயம் அதிகமானதென்றாலும், வர்க்க சமூகங்கள் உருவாகவில்லை என கணிக்கின்றனர்.
அடுத்தக் கட்டம் 1000- 600 பி சி- கலப்பை உழவு- நாடோடி வாழ்விலிருந்து நிலையான விவசாய வாழ்க்கை நோக்கி- இரும்பின் பயன்பாட்டால் உற்பத்தி கருவிகளில் மாற்றம். உற்பத்தி பெருகி உபரி உருவானதாம். இங்கு அவர்கள் தருவது
varana system provided new social system and new relations of production..shudra varna rose from non Aryans. Kshatriyas and Brahmins became the ruling class and Vysas the agri making peasants. Dasas and other non Aryan savages were turned servants and shudra by varna
இங்கு அம்பேத்கர் பார்வையிலிருந்து சற்று மாறுபட்டு இவர்கள் எழுதுகின்றனர். அம்பேத்கர் சூத்திரர்கள் ஆர்யர்களிலிருந்து வீழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதினார்.
கிரேக்க சமூகம் போல அடிமை சமூகம் இந்தியாவில் இல்லை. ஆரம்பத்தில் சூத்திரர் நேரிடையாக உற்பத்தியில் பங்கேற்கவில்லை என மாவோயிஸ்ட்கள் சொல்கின்றனர். In this stage Shudras did not have direct participation in production.
மூன்றாம் கட்டம் வர்ண சமுதயம் 600-200 பி சி இக்கட்டம் நிலபிரபுத்துவம் நோக்கி நகரும் கட்டம் என்கின்றனர். இங்கு மாவோயிஸ்ட் எழுதுவது
The heads and priests from Aryan gens were taken into Kshatriya and Brahman varnas and the defeated Aryan and non Aryans tribes changed to Shudra varna. இங்கு அம்பேத்கர் ஆய்வை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
பிராமண புரோகித வர்க்கம் வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கியது. நாளடைவில் விவசாயம், தொழில்களை செய்வோர் சூத்திரர் ஆயினர். விவசாயம் செய்த சூத்திரர் நால்வகை வர்ணத்தில் வந்தாலும், தசாக்கள் கால்நடை தோல் உரித்தல் போன்ற வேலைகளில் வைக்கப்பட்டனர்.
புத்த, ஜைன காலத்தில் கிராமங்கள் நிலைப்பெற்று , பழங்குடிகள் கான்பெடரேஷன் என்பது அரசுருவாக்கம் பெற்று, நகரங்கள், சாம்ராஜ்ய வளர்ச்சிகள் என மாறின. புத்தம் அமைதியை அகிம்சையை போதித்தது. வர்த்தகர்கள் ஆதரவைப் பெற்றது. அரசு ஆதரவும் கிடைக்கலானது. விவசாய வர்க்க சமூகம் உருவாதலில் அதன் பங்காற்றியது.
அடுத்த 4வது கட்டம் 200 பி சி- 400 ஏ டி. வர்ண சமுகம் சாதி சமூகமாக எழுதல். நிலபிரபுத்துவ சமூகத்திற்கு நல்ல அடித்தளம் எழலானது. புத்தத்திற்கு போட்டியாக பிராம்மணியம் எழுந்தது. மனுஸ்மிருதி இக்காலத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.
சூத்திர என்கிற வர்ணப்பிரிவு உருவாக்கம் என்பது அடிமை சமூகம் போன்றதல்ல. இங்கு they were not personal slaves to anyone என்கிற முக்கிய கருதுகோளுக்கும் மாவோயிஸ்ட்கள் வருகின்றனர். ஆர்யர் அல்லாதவர் சூத்திரர் வர்க்கப்போராட்டமே இல்லை என சொல்ல முடியாவிட்டாலும். வர்ண முறை என்பதால் வலிந்த போராட்டங்கள் இல்லாமல் போனதெனலாம்.
பண்டைய சமூக கட்டங்கள் பற்றி மட்டுமே அவர்களின் ஆவனத்திலிருந்து சில கருத்தாக்கங்களை இங்கு வெளிப்படுத்தியுள்ளேன். பிரபுத்துவ சமூகம், பிரிட்டிஷ் ஆட்சியில் காலனி உற்பத்தி முறை, 1947-90 கால செமி கலோனியல் செமி ஃப்யூடல் முறை, இந்த அரை காலணி சமூகம் மீதான் உலகமய தாக்கம் 1991-2020 என அவர்கள் ஒவ்வொரு காலத்தின் உற்பத்தி உறவுகள் தாக்கம் பற்றி இந்த ஆவணத்தில் பேசுகின்றனர்.
வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.
Comments
Post a Comment