Skip to main content

Gandhi His Life and Thought

 


கிருபளானி அவர்கள் எழுதிய  Gandhi His Life and Thought சற்றுப்பெரிய -500 பக்கங்களை மிகக்கூடிய புத்தகமானாலும்- very good account எனச் சொல்லமுடியும். அவர் எப்போதுமே ஆவணக்காரராகவே எழுதும் முறை கொண்டவர். அவர் அறிந்த விஷயங்கள், refer செய்து எழுதும் அம்சங்கள் எல்லாவற்றிற்கும் முடிந்தவரை fact sheet வைத்திருந்தவராக இருந்தார்.

அடிப்படையில் பேராசிரியராக, காந்தியுடன் அவ்வப்போதான சகப்பயணியாக, காங்கிரஸ் செயலராக- தலைவராக,   ஆசாத்  நேரு மற்றும் சோசலிஸ்ட்களுடன் பெரும் விவாதக்காரராக கிருபளானி இருந்தார்.  

கிருபளானியின் இந்த புத்தகத்தை பப்ளிகேஷன் டிவிஷன் காந்தியின் நூற்றாண்டை முன்வைத்து 1969 அக்டோபரில் கொணரவிரும்பியது. Builders of Modern India வரிசையில் 1970ல் வந்தது. இதன் 5வது பதிப்பு 2019ல் காந்தியின் 150யை ஒட்டி வந்தது. ரூ 300க்கு publication division/ Amazon வழி பெறமுடிந்த ஒன்றுதான்.  நல்ல அக்கவுண்ட் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்திய நூல். கிருபளானியின் எழுத்துக்களை வாசித்தவன் என்கிற வகையில் அவருக்கு bias ஏதும் இல்லவே இல்லை என சொல்லமுடியாது.

இந்த நூலிலிருந்து சில வரிகளைத் தருகிறேன். காந்தி நேருவை வாரிசு என விளித்தது தொடர்பாக, கிருபளானி என்ன புரிதலை வெளிப்படுத்தினார் என்பதைக் காட்டும் வரிகள்..

“ it was at this meeting ( Wardha Jan 1942) that Gandhiji talked of Jawaharlal as his political heir. He said Jawaharlal had been opposing him in life but after his death he would speak his language.

Whether Jawaharlal spoke Gandhiji’s language after his death is for history to decide. As for his being heir to Gandhiji, this has been misunderstood. It had nothing to do with the Prime Ministership of India. Gandhiji himself not being PM could not have named a successor for that position. What he meant was that Jawaharlal would carry on the struggle for the attainment of the independence of India after him. Somewhere Jawahar himself has given this interpretation of what Gandhiji meant by the word heir..”

கிருபளானி எப்படி லாஜிக்காக எழுதுகிறார் பாருங்கள்.  பலர் இந்நூலை படித்திருக்கக்கூடும். இணையத்திலும் கிடைக்கிறது. இதுவரை வாய்ப்பு பெறாதவர் நேரமும் ஆர்வமும் கிட்டும்போது  இந்த பெரிய நூலை பார்க்கலாம்.

 10-6-2024


2


ஆச்சார்யா கிருபளானி எழுதியுள்ள Gandhi His Life and Thought குறித்து முன்னர் இடுகை ஒன்றை செய்திருந்தேன். சற்று பெரிய நூல்- 514 பக்கங்கள். நல்ல ஆவணம் என எனக்கு தோன்றியதை குறிப்பிட்டிருந்தேன்.

முதல் 300 பக்கங்கள் காந்தியின் வாழ்வு - நிகழ்வுகள் போராட்டங்கள், உறவுகள், உரையாடல்கள் என கிருபளானி அடுக்கியிருப்பார். நந்தா, பியாரிலால், டெண்டுல்கர், பி சி கோஷ், ஜியாப்ரே போன்றவர்களை ஆங்காங்கே துணைக்கு வைத்திருப்பார். ஆசாத் அவர்களின் India wins Freedomத்தில் இடம் பெற்றுள்ள பல கருத்துக்கள்- நினைவுகள் தவறு என்றோ, ஞாபக மறதி என்றோ பல இடங்களில் சுட்டிக்காட்டியிருப்பார். ஆங்காங்கே கிருபளானி காந்தியிடம், நேருவிடம், படேலுடன்- பெரும்பாலும் ஆசாத்துடன் மாறுபட்டதையும் சொல்லிச் செல்வார்.

இங்கு நான் எழுத வந்தது, நான் வியந்து போன அவரின் முக முக்கிய எழுத்துப்பகுதியாக இந்நூலில் இடம்பெற்றுள்ள பகுதி 2 குறித்துதான்-  வெறும் 125 பக்கங்களில் His Thought ( Gandhiji’s) என்று காந்தியின் செயல் சார்ந்த சிந்தனைப் பிழிவை brilliant styleல்  , grip செய்யக்கூடிய மொழி நடையில் கிருபளானி தந்திருப்பார். கிருபளானி எழுத்துக்களை சற்று வாசித்தவன் என்கிற வகையில் , சில இடங்களில் அவர் தன் text யை நகர்த்துவது அற்புதம் என வாய் திறந்து சொல்ல வைக்கிறது. 

நல்ல மொழிபெயர்ப்பாளர் எவரேனும் தமிழில் இந்த 125 பக்கங்களையாவது கொணர்ந்தால், காந்திய தமிழ் கிட்டங்கிக்கு பெரும் சேவையாக இருக்கும்.  கிருபளானியின் இந்த 125 பக்கங்கள் நல்ல வழிகாட்டும் பகுதியாக எனக்குத் தென்படுகிறது. காந்தி குறித்து critics சொல்லக்கூடிய பல்வேறு விமர்சனங்களுக்கும் தான் அறிந்த அளவில் தெளிவை இப்பகுதியில் கிருபளானி தந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கிருபளானியின் இந்நூல் தமிழில் வந்திருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. 

இப்பகுதியில் 125 பக்கங்களுக்குள் கிருபளானி விவாதித்திருக்கும் சில topics 

 1. An Integral Approach to Gandhian Thought

 2. Gandhiji and Religion

 3. Theory of Satyagraha

 4. Political Thought

 5. Economic Thought 

 6. Social Reform and Untouchability 

 7. Gandhiji and the Muslims

 8. Gandhiji and Women

 9. Prohibition 

 10. Constructive programme

 11. Gandhiji and organisation

 12. Gandhiji and Marx

 13. Was Gandhiji Modern?

 14. Gandhiji as world citizen

எவ்வளவு முக்கியமான விவாத தலைப்புக்களை அவர் எடுத்துக்கொண்டுள்ளார். 54 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 களில் எழுதப்பட்ட நூல் என்பதையும் மனதில் நாம் சேர்த்து பார்க்க வேண்டும். காந்தியுடன் சக பயணியாக அவரை நேசித்து, முரண்பட்டு பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி வாழ்ந்த மனிதர் ஒருவரின் எழுத்து என்பதன் சிறப்பையும் நாம் சேர்த்து கவனிக்க வேண்டும். அருகில் இருந்து காந்தியின் அசைவுகளை ‘ தெய்வ நிலைக்கு பார்த்தவர் அல்ல கிருபளானி. சக அரசியல் பயணியாக , உடன் நின்ற வகையில் அவரை உள்வாங்கியவர்.  கிருபளானி எழுதிய பலவரிகளை தரவேண்டும் போல் இருந்தாலும், அது இங்கு இயலாது. சில வரிகள்

Gandhiji was not an intellectual in the academic sense of the term ( அதானப் பார்த்தேன்). He was not a scholar or a philosopher. He was not a theoretician. His thinking had the quality of a creative genius ( பாருங்கள் என்ன அருமையான உள்வாங்கல்) and not that of a student. He was pre eminently a man of action. He has written a great deal but his writings are designed as a guide to action (  கவனிக்க வேண்டிய இடம்) and not for the acquisition of knowledge. They are generally concerned with the solution( தீர்விற்கான தவிப்புடன்)  of his actual problems, arising out of the many sided and complex situations of his time.

The discussion of theory is always brief and sketchy..explanations  were brief and suited to the person, place and occasion. The guidance given was practical…Gandhiji has written few books. They are not written with the object of explaining his system of thought rationally logically argued in all its implications..

Gandhiji as practical reformer, relied more on example  than on precept or preaching. Gandhiji’s ideas are new and revolutionary. He did not acquire his ideas and knowledge merely  from  books ( பட்டாபி கவனிக்க) . Much of his knowledge was the result of direct contact with life ( மார்க்சியர் பேசும் learn from the masses) and practical experience it offered.

He placed his ideas before public not in the language of learned but in that of the average intelligent of man and woman. In that he did not use the philosophic and technical language of schools. He described his own observations and his reactions..His practical schemes of work and his explanations, therefore, crated his philosophy. …He viewed life as an organic whole. …

Gandhiji seeks to synthesise the material and spiritual, the individual and the collective life. As occasion demands, he emphasises the one or the other. He often said that he could ‘ carry God to the poor In a bowl of rice’

சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அரசியல் உலகு தேர்தல் உத்திக்கான ஒற்றைப் பாதையாக்கப்பட்டுவிட்டது. அந்த சத்த உலகில் வாக்கு மாற்றத்திற்கான செலாவணியாக காந்தியோ மார்க்சோ தென்படவில்லை என்பதை அறிய முடிகிறது.  கிருபளானி சொல்கிறார் 

The moral decay of a people has always preceded their physical and material degeneration. In India all intellectual transactions are carried on through counters which have no exchange value in reality.

வாய்ப்பும் நேரமும் கிடைப்பவர்  இந்த 125 பக்கங்களை படித்து பார்க்கலாம்

16-6-2024

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...