https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, July 30, 2016

இரண்டு தமிழ் புத்த்கங்களை படிக்க எனது இரயில் பயணம் உதவின. காரைக்குடி NFTE BSNL மாநாடு ஜூலை 8ல் பரமக்குடியில் நடந்தது. காரைக்குடி தோழர்கள் 3rd AC டிக்கெட் எடுத்து அழைத்தனர்( உடல் நிலை சரியில்லாமல் போய்  மருத்துவரிடம் அழைத்து சென்றதால் அவர்களுக்கு செலவும் கூடியது) சுகவீனத்திலும் நாஞ்சில்நாடனின் சாகித்ய அகாதமி பெற்ற சூடிய பூ  சூடற்க கதை கட்டுரைகளை படிக்க முடிந்தது. கிண்டல், எள்ளல் எழுத்து. மீதி இருந்த பக்கங்களை நேற்று படித்து முடிக்கமுடிந்தது. இப்புத்தகத்தை சிவில் விஜயகுமார் எனக்கு ஓய்வுவிழாவில் வழங்கினார். அவர் ஜூலையில் ஓய்வு பெறுகிறார்.வாழ்த்துகளும் நன்றியும்.

அடுத்த புத்தகம் திரு பி வி கருணாநிதி GM மகள் திருமணத்திற்காக ஜூலை 10ல் தஞ்சை செல்லும்போது படித்த தாகூர் கதைகள். காபூலிவாலா தொடர்ந்து எம்முறை படித்தாலும் மனதை வாட்டுகிறது. லீவு விட்டாச்சு, கனம் கோர்ட்டார் அவர்களே, கண்கள் அற்புதமானவை. தோழர் மு. சிவலிங்கம்  அவர்களின் மொழிபெயர்ப்பு.. நமது துறையில் DE ஆக இருந்த சிறந்த பல்துறை அறிஞர்.  மார்க்சியம், கணிப்பொறி ஆகியவற்றில் உயர் அனுபவங்களை கொண்டு உயர்ந்தவர். அவருக்கும்  வாழ்த்துகள்

No comments:

Post a Comment