Skip to main content

BIPIN CHNDRA PAL பிபின் சந்திர பால்

பிபின் சந்திர பால்

வாழ்நாள் முழுதும் பத்திரிகையாளராக உணர்ச்சிபெருக்கு  உரையாளராக இருந்தவர் பிபின் சந்திரபால்வங்க வாரப்பத்திரிகையில் 1880ல் தனது சோதனையை அவர் துவங்கினார். ட்ரிப்யூன், நியுஇந்தியா, வந்தே மாதரம், ஸ்வராஜ், இந்து ரிவ்யு, இண்டிபெண்டட், டெமாக்ரட், வங்காளி என தின, வார, மாதப்பத்திரிகைகள் பலவற்றை  கொணர்ந்து அவற்றில் எழுதினார். அவ்வப்போது மாடர்ன் ரிவ்யு, ஸ்டேட்ஸ்மேன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவராக இருந்தார் பிபின்.
பேனாவை திறமையாக எழுத்துலகில் கையாண்ட பலர் வெளிமேடைகளில் மின்னியதில்லை. ஆனால் பிபின் மேடைகளிலும் கிளர்ச்சி பிரச்சாரகராக இருந்தார். தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முடியாத பிரவாக பேச்சாளராக இருந்தார் என அரவிந்தர் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார். மிகச்சிறந்த உரையாளர் ஸ்ரீநிவாச சாஸ்த்ரி 1907ல் சென்னையில் பிபின் உரையை கேட்டவுடன் ஓர் உரை இவ்வளவு பெரும் வெற்றியை உருவாக்கும் என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது என்றார்.


பிபின் சந்திர பால் தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தின் போயல் என்ற கிராமத்தில் 1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்தார். தாயார் நாராயணி. செல்வச் செழிப்பான வைணவக் குடும்பத்தில் பிறந்த பிபின் சந்திர பாலின் தந்தையார் ராமச்சந்திர பால் பாரசீக மொழியில் விற்பன்னர், சிறிய அளவு நிலங்களின் சொந்தக்காரர். தந்தை ராமசந்திர பால் கட்டுப்பாட்டிற்கு பெயர்போனவர். சாணக்யா நீதிகளை அறிந்தவர். பிபின் மீது அன்புகாட்டி அவரை  பிரசிடென்சி கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு பிபின் பாலுக்கு பிரம்மசமாஜ் தொடர்பு ஏற்படுகிறது.
பிபினிடத்தில் ராஜாரம் மோகன்ராயின் சீர்திருத்த சிந்தனைகள் தாக்கத்தை உருவாக்கின. அவர் ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பத்தோடு கொண்டிருந்த பந்தங்களையே துறக்க வேண்டி வந்தது. கல்கத்தாவின் மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிபின் சந்திரபால் தனது படிப்பைத் தொடர முடியாத காரணத்தால், அவர் தலைமை ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பின்னாட்களில் அவர் கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராக பணி செய்த போது ஷிவ்நாத் சாஸ்திரி, SN பேனர்ஜி, BK கோஸ்வாமி போன்ற தேசபக்தர்களை சந்திக்க நேர்ந்தது.
தேச பக்தி அவரை ஆட்கொண்ட காரணத்தால், தனது வேலையையே கூட உதறித் தள்ளி அரசியலை தனது முழு நேரப் பணியாக மேற்கொண்டார்  வழக்கம்போல் மற்ற தந்தையைப்போலவே அவரது தந்தைக்கும் வருத்தம் நேர்ந்தது. பணம் அனுப்புவதை தந்தை நிறுத்துகிறார். தொடர்பு அறுந்துபோகிறது. பிபின் தனது வாரிசு இல்லை என்கிற அறிவிப்பை தந்தை வெளியிடுகிறார். ஊர் கம்யூனிட்டி பிபினை சாதி பிரஷ்டம் செய்கிறதுவறுமையுடனான போர் தொடங்கி நீடித்தது. பிரம்மசமாஜின் ஷிவ்நாத் சாஸ்த்ரி பிபினுக்கு பெங்களூரில் வேலை ஒன்றை பெற்றுத் தருகிறார். வேலையைவிட்டு பின்னர் கல்கத்தா திரும்பிய பிபினை தந்தை சந்தித்து ஏற்றுக்கொள்கிறார். சொத்தையும் எழுதித் தருகிறார்.
1886 மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வில் பிபன் பங்கேற்கிறார். 1907வரை அவர் தொடர்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவந்தார். 1907ல் காங்கிரசில் ஏற்பட்ட முறிவு அவரை திலகருடன் வெளியேறவைத்தது. மீண்டும் அவர் காங்கிரஸ் அமர்விற்கு 1916ல் திரும்புகிறார். மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் தொடர்பான ஹோம்ரூல் கமிட்டி உறுப்பினராக திலகருடன் இங்கிலாந்திற்கு 1916ல் செல்கிறார்.
கேசவ் சந்திர சென்னிற்கு அடுத்தது இவர்தான் என்கிற அடையாளத்தை பிரம்ம சமாஜில் பிபின் பெறத்துவங்கினார். பினாய் குமார் சர்கார் புரட்சிகர வங்க தேசியத்தின் தந்தை பிபின் என்றார். அவரின்  Indian Unrest மெட்ராஸ் உரை the most auhtoritative programme of advanced political thought of India  என புகழப்பட்டது.
லார்ட் மிண்டோ வைஸ்ராய்  1907ல் இந்திய செயலர் லார்ட் மார்லிக்கு பிபினின் தேசத்துரோக உரைகளை அனுமதிக்கக்கூடாது என்று எழுதினார். மெட்ராஸ் அட்வகேட் ஜெனரல் அவரது உரை தீப்பற்றக்கூடிய  ஒன்றுதான் ஆனால் தேசத்துரோக வகைப்பட்டதல்ல என விளக்கம் தந்தார். அவரது உரையில் பிரிட்டிஷ் ஆட்சியுடன் பொருதுதல் இருந்தது. ஆனல் தனிப்பட்டவர் மீதான தாக்குதலோ வன்முறை தூண்டலோ பொதுவாக இல்லை என்ற கருத்தும் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்தது.
1908-11 அவரது இங்கிலாந்து வாசம் அவரது சிந்தனையை மேலும் மேம்பட வைத்தது. அவரது முக்கிய ஆக்கமான  Nationality and Empire உருவாகவும் உதவியது.  Cooperative partnership with Britain  என அவர் பேசினார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பதை காமன்வெல்த் ஆக அவசியம் கருதி வைத்துக்கொள்ளலாம் என்றார். பின் நாட்களில் ராஜாஜி, நேரு போன்றவர்கள் இதை பேசினர்.
வந்தே மாதரம் வழக்கில்  அரோபிந்தோவுக்கு எதிராக சாட்சியம் கூற மறுத்ததால், பிபின் சந்திர பாலர் 6 மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இவரது தாக்கம் நாடு முழுக்க எதிரொலித்தது. பாரதத்தின் தென் கோடியில் இருந்த திருநெல்வேலி ஜில்லாவரை அவர் கருத்துக்களை ஏற்று செயல்படத் துடித்த புரட்சியாளர்கள் பலர் இருந்தார்கள். இவர் விடுதலையைக் கொண்டாடும் வகையில் இராமநாதபுரத்தில் சுப்பிரமணிய சிவாவும், வ.உ.சியும் பெரும் உணர்ச்சிப் பெருக்கான கூட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தார்கள். பிபின் சந்திர பாலர் பின்னர் சுப்பிரமணிய சிவா ஏற்படுத்தவிருந்த பாரத மாதா கோயிலுக்கும் உறுதுணையாக இருந்தார்.
1904ம் ஆண்டு பம்பாயில் நிகழ்ந்த இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம், 1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டம், சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், 1923ம் ஆண்டு ஏற்பட்ட வங்காள ஒப்பந்தம் ஆகியவற்றில் பெரும்பங்கு ஆற்றினார். அவர் 1896ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பாரபட்சமானதாக இருந்ததால், ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெற 1887ம் ஆண்டு தீவிரமாக தன் வாதங்களை முன்வைத்தார். நாட்டில் சமுதாயக் கேடுகளை களைய வேண்டும் என்பதிலும், தேசிய உணர்வுகளை மக்கள் மனங்களில் தூண்டி விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
அவரின் புத்தகமான The New Economic Menace of India மூலம்  இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும், குறைவான பணி நேரத்தையும் கோரினார். ஏழைகளுக்காக அவர் கொண்டிருந்த அக்கறையால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் போராடினார். பிரிட்டிஷார் இந்தியாவை பொருளாதார ரீதியாக கொள்ளையடிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்தவர் பிபின் சந்திர பாலர்.
கிலாஃபத் இயக்கத்துக்கு எதிராகவும், காந்தியடிகளின் யதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகவும் கடுமையாக குரல் கொடுத்த பிபின் சந்திர பாலர் 1922ம் ஆண்டு தொடங்கி தன் வாழ்வின் பின்னாட்களில் தன்னை காங்கிரஸின் அனைத்து வேலைகளிலிருந்தும் ஒதுக்கிக்கொண்டு, தனிமையும், கொடும் ஏழ்மையும் நிறைந்த வாழ்க்கையைக் கழித்தார். அவர் மே மாதம் 1932ம் ஆண்டு 20ம் தேதி இந்த உலக வாழ்வைத் துறந்தார்.
அவரது வாழ்க்கை வரலாறு குறித்த பெரும் புத்தகம் ஒன்றை வாழ்க்கை மற்றும் காலம் குறித்த நினைவுகள் என்ற பெயரில் அவர் எழுதினார். பிபின் சந்திரபால் கீதை உபநிடதங்கள் பற்றி ஆர்வமாக கற்றறிந்தார். தனிமனிதரும்  சமுகமும்  சார்பு கொண்டுதான் நிற்க வேண்டியுள்ளது. தனிமனிதன் தன்னை சமுக வாழ்வின் ஊடாகத்தான் நிறைவெய்திக்கொள்ள முடியும். பிற படைப்புகளிலிருந்து அவன் வித்தியாசப்படுவது அவனை அவனால் அறிந்துகொள்ள முடிவது என்பதில்தான்- அதாவது சிந்தனை ஆற்றல்- தியாகம்- உணர்ச்சிகள் போன்றவைகளால்தான். ஒருவரை அறிந்துகொள்ள வேண்டுமெனில் அவரின் சமுக அமைவை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தன்சரிதை என்பதும் உள்ளார்ந்த சமுக வரலாற்றின்  இழுவைகள், சர்வாம்ச வளர்ச்சிக்கான தேடல் வெளிப்பாடுகள்- விமர்சன விளக்கங்கள் என்பனவே ஆகும்.  Every biography is also a socail history  என தன் காலமும் நினைவுகளும் என்பதில் அவர் எழுதினார். ’தன்வாழ்வு’ என்பது ஒருவர் வாழும் காலத்துடன் ஊடும்பாவுமாக நெய்யப்படுகிறது என்பதை அவர் அதில் எடுத்துரைக்கிறார்.
பால் அவர்களின் தந்தை பெர்ஷியன் புலமையாளர். டாக்கா நீதிமன்றத்தில் பணிபுரிந்தார். தாயார் நாரயணி தந்தைக்கு இரண்டாம் மனைவி. குழந்தைப்பேறு இன்மையால் முதல் மனைவி வற்புறுத்தி இரண்டாவது மணம் செய்துகொண்டார். பிபின்பால் 10வயதுவரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. வீட்டில் சமஸ்கிருதம், மந்திரங்கள், கிருஷ்ண வழிபாடுகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. கணிதம் கற்பிக்கப்பட்டது. தந்தையின் சிறப்பு காரணமாக நல்ல அரிசி உணவு, மீன், பால் கிடைக்கப்பெற்றன. வேலையாட்கள் என்பார் மாதம் எட்டணாவிற்கு உழைக்க கிடைத்தனர்.
சில்ஹெட்டில் பெரும் வீடு  1860-70ல் அவர்களுக்கு மாதம் ரூ 8 வாடகையில் கிடைத்தது. அது 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு இருந்தது. அரபி கற்பதற்காக அவர் மெளல்வியிடம் அனுப்பப்படுகிறார். பின்னர் ஆங்கில மொழிப் பயிற்சியும்  அவருக்கு கிடைக்கிறது. பள்ளிக்கூட காலத்திலேயே ஏராள ஆங்கில இலக்கிய புத்தகங்களை அவர் படிக்கத்தொடங்கினார். சில்ஹெட் வீட்டின் சுற்றுக்காடுகள் சீரமைக்கப்பட்டு அக்கம்பக்கத்தில் உறவினர்கள்  குடியேறத்துவங்கினர். பிபின் தந்தையார் வீட்டில் ஏராள உறவுக்காரர்கள் தங்கி ஒன்றாக இருந்தனர். 20 நபர்களுக்கு சமைக்கும் பொறுப்பு அவரின் தாய்க்கு இருந்தது.
அக்காலத்தில் இவை குறித்தெல்லாம் வீட்டுப்பெண்கள் புலம்பாமல் சேவைமனப்பான்மை என்கிற பெருமித உணர்வுடன் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். தந்தையின் நண்பர்களுக்காக மாதம் சனிக்கிழமை ஒன்றில் நூற்றுக்ககணக்கானவர்களுக்கு சமைத்து போடுதலும் நடந்தது. குழந்தைகளை அமரவைத்து அவர்களுடன் தானும் அமர்ந்து ஊட்டும் காட்சியும் வீட்டில் நடந்தது. தன் தாயைப் பற்றி அவரின் நேர்த்தி குறித்து அற்புத நினைவுகளை பிபின் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீட்டில் வெளியிலிருந்து வந்து தங்கிய குழந்தைகளுக்குத்தான் தாயார் முன்னுரிமை தருவார். அவர்கள் தாயைவிட்டு இங்கு வந்து தங்கியுள்ளனர். நம் குழந்தைகள் அதைப் புரிந்து சரிகட்டிக்கொள்ள தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற அறிவுரையை அவர் பிபினுக்கு தருவார்.
வீட்டின் வேலைக்காரர்களையும் அவர்கள் சாதியென்ன என்பதை பார்க்காமல் மாமா, அண்ணா என அழைக்க குழந்தைகள் கற்றுக்கொடுக்கப்பட்டனர். வேலைக்காரர்களும் தாயாரை அக்கா, தந்தையை மாமா என்றழைப்பர். சாதன் என்கிற கழிப்பறை சுத்தம் செய்யும் தொழிலாளி கூட அவ்வாறே அவ்வீட்டில் அழைக்கப்பட்டார். நாங்கள் அவரை ராம்தான் மாமா என்று அழைப்போம் என தன் சிறு வயது நினைவுகளை பிபின் எடுத்துச் சொல்கிறார் . தந்தை வீட்டு மனிதர்களுக்கு என்னவகை உணவோ அதுதான் வேலைக்காரர்களுக்கு தரப்படவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார்.
ஊரில் வைணவ வழிபாடு சைதன்யரை கொண்டாடும் மரபு- ராதை கிருஷ்ண கொண்டாட்டங்கள் , தேர்த்திருவிழாக்கள் இருந்தன. மணிப்புரி குடும்பத்தார்கள் மிகத்தூய்மையாக காணப்படுவார்கள் என்கிற செய்தியையும் பிபின் பகிர்ந்துகொள்கிறார். வீடுகளில் புத்தகங்களை எடுத்து வைத்து சரஸ்வதி பூஜைகள் நடக்கும் பழக்கத்தை சொல்கிறார்.  துர்கா பூஜை கொண்டாட்டங்கள் பற்றியும், அந்நகரில் ஈத் தொழுகையை பார்க்க தந்தையார் குழந்தைகளை அழைத்து சென்றதையும் பிபின் நினைவலையாய் விவரிக்கிறார். பொதுவாக இரு மதக்காரர்களுக்கும் இணக்கமும் நல்லுறவும் இருந்ததை குறிப்பிடுகிறார்.
சாதிகள் வேறுபாட்டை அவரவர் இயல்பாக எடுத்துக்கொண்டது போல் இருந்ததாக குறிப்பிடுகிறார். ஒன்றாக சாப்பிடமுடியாது என்பதும் இயல்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார். அதே நேரத்தில் தீண்டப்படாதவர்கள் பிராமணர்களை, உயர் சாதியினராக கருதப்பட்டவர்களை மாமா காக்கா என அழைப்பது இயல்பாக இருந்தது. வீட்டு நிகழ்வுகளில்கூட கிராமத்தில் அவர்களுக்கான பாய்களில் அமர்ந்து பிற சாதிக்காரர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்க முடிந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். மனுவை பின்பற்றி சாதி அம்சங்களை கண்டிப்பாக பின்பற்றிய பிரிவினர்களும் இருந்தனர் .
துர்காபூஜையின்போது நான்கு நாட்கள் விருந்துகள் பெரும் அளவில் நடந்தன. தலித்கள் உட்பட்டவர்களுக்கு உணவு, அரிசி, காய் கனிகள், மீன் தரப்பட்டுவந்தன. சமைத்த உணவை இஸ்லாமியர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களுக்கு அரிசி, பழவகைகள் தரப்பட்டு வந்ததாக பிபின் குறிப்பிடுகிறார்.
1875-78 கல்கத்தாவில் கல்லூரி காலத்தில்தான் தேசியம் குறித்த சிந்தனைகள் தன்னிடம் பற்றியதாக பிபின் எழுதுகிறார். சுரேந்திரநாத் பானர்ஜியின் ஈர்ப்பு மாணவர்களிடம் இருந்தது . சமஸ்கிருதம் மக்களின் பேச்சுமொழியாக இல்லை. அவ்வாறு ஒருபோதும் இருந்ததாகவும் தெரியவில்லை. தாங்கள் போட்ட சமஸ்கிருத நாடகங்கள் கூட பிராகிருத் எனும் மக்கள் மொழியிலேயே இருந்தன என தன் கல்லூரரி கால நினைவுகளை அவர் சொல்கிறார்.
பிபின் சந்திரா என்பதற்கு வங்க மொழியில் காட்டு நிலவு எனப்பொருள். அவரிடம் அனைத்திலும் உக்கிரம் காணப்பட்டது.. மெட்ராஸிற்கு வந்த முதல் வங்காளி கேசவ் சந்தர் சென். அவர் 1860களிலேயே வந்திருக்கிறார். பிபின் 1881ல் மெட்ராஸ் வருகிறார். பெரும் தனவந்தர் ஆற்காடு நாராயணசாமி முதலியார் பிரம்ம சமாஜிற்கு ஆதரவாக இருந்தார். பெங்களூரில் அரசாங்க காண்ட்ராக்டராக இருந்து சம்பாதித்தவர். அவரது தொடர்பு கிட்டுகிறது.
கல்கத்தாவிலிருந்து மெட்ராஸ் வரவேண்டும் என்றால் அப்போது பம்பாய் வந்துதான் ரயிலில் பயணிக்கவேண்டும்.பேஷ்வாக்கள் 50 ஆண்டுக்கால ஆட்சியில் மகராஷ்ட்ரா ’நேஷனல் ஸ்டேட்’ ஆகவே வளர்ந்திருந்தது என்கிறார் பிபின். மெட்ராஸில் புட்சிய பந்தலு என்கிற தெலுங்கு பிரம்ம சாமாஜி பிபினை ரயில்நிலையம் வந்து அழைத்து செல்கிறார். அங்கிருந்துதான் பின்னர் பிபின் பெங்களூர் ஆசிரியப்பணிக்காக செல்கிறார்.
2
The New economic Menance to India  என்கிற அவரது புத்தகத்தை 1920ல் மெட்ராஸ் கணேஷ் அண்ட் கோ ரூ2 க்கு வெளியிட்டது. 33 தலைப்புகளில் பிரிட்டிஷ் பொருளாதார கொள்கையால் இந்திய வளங்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டன என்பதை அப்புத்தகம் விவரித்தது. பிரிட்டிஷ் கல்விமுறையால் படித்த நமது இந்தியர்களோ அரசியல் விடுதலை என்ற ஒன்றில்தான் கவனம் குவிக்கிறார்கள். அதன் பொருளாதார சுரண்டலை போதுமான அளவு கவனப்படுத்திக்கொள்ளவில்லை என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டனில் அரசர்/அரசி என்பது Constitutional monanrch  ஆனால் இந்தியாவிற்கோ absolute monarch என்கிற இரட்டை நிலை பிரிட்டிஷ் பாரபட்ச ஆட்சியை அவர் அதில் விமர்சித்திருந்தார். இம்பீரியல் எம்ப்ரிசிம், ஒயிட்மேன் பர்டன் போன்ற பதங்களை விளக்கி விமர்சிக்கிறார். Dependent Empire  எனப்படுவது இந்தியா பிரிட்டனின் பொருளாதார நலன்களுக்கு அவசியப்படுவதாகவும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை தரும் இடமாகவும் இருக்கிறது.
 பிரிட்டன்  தாமஸ் மன்ரோ மூலம் ’ட்ரஸ்ட் அய்டியா’ பேசியது என்பதை எடுத்துக்காட்டினார். " We should look on India not as a temporary possession, but as one to be maintained permanently until the natives shall in some future age have abandoned most of their superstitions and prejudices and become sufficiently enlightenned to frame a regular govt for themselves and to conduct and preserve it" இவ்வகை தர்மகர்த்தா சிந்தனை இந்திய நலன்களுக்கு உதவப்போவதில்லை என்றார் பிபின்
அரசியல் மேலாண்மையில் மோதல்கள் இல்லாமல் இருக்காது. தேச அரசுகள் இதை சந்திக்கின்றன. அரசர், அரிஸ்டோகிராட் பகுதி, அல்லது பிரான்சில் சொல்வதுபோல் பூர்ஷ்வா என மேலாண்மையில் மோதல் இல்லாமல் இருக்காது என அப்புத்தகத்தில் சொல்கிறார் பிபின். அவைகளெல்லாம் வர்க்க ஆட்சியே என்பதையும் சொல்கிறார். எது இங்கிலாந்திற்கு லாபமோ அது இந்தியாவிற்கு நட்டமாகவே இருக்கும் என்றார் பிபின். 1800களின் துவக்கத்தில் வலுவாக இருந்த இந்திய வர்த்தகம் மான்செஸ்டரை வாழவைக்க எவ்வாறு தியாகமாக்கப்பட்டது என்பதை பிரிட்டிஷ் எழுத்தளர்களிடமிருந்தே எடுத்துக்காட்டுகிறார்.
1800களின் இறுதிவரையில் பிரிட்டன், அமெரிக்க தொழிலாளர்கள் நிலை மேம்படவில்லை. பியானோ வாசிக்கும் சுகத்தில் அவர்கள் இல்லை. இன்று பலரிடம் சைக்கிள் இருக்கிறது, சற்று மேம்பட்ட வாழ்க்கை கிடைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் நிலை வேறாக இருக்கிறது. இந்தியாவில் தொழில் முன்னேற்றம் வருவதற்கு அந்நிய முதலீடுகள் தேவை என்பதை மறுக்கவில்லை. இதன் பொருள் வாருங்கள் இந்திய வளங்களை கொள்ளைக்கொண்டு போங்கள் என்பதல்ல என்றார் பிபின். வருகின்ற மூலதனம் அதனால் உருவாகும் தொழிலில் இந்தியர் பயிற்சிவிக்கப்படவேண்டும். அது அவர்களின் மாரல் மற்றும் அறிவுசார் சொத்துடைமையாக வேண்டும் என்கிற பொருளாதாரப் பார்வையை பிபின் முன்வைத்தார். அந்நிய கம்பெனிகள் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அந்த பாக்டரிகளில் தொழிலாளர்களுக்கு உடல் நல உத்தரவாதம், அறிவுக்கல்வி ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். உரிய சட்டப்பதுகாப்பு வேண்டும்.
லார்ட் கர்சான் நிர்வாகமும் சுரண்டலும் அரசாங்கத்தின் கடமைகளில் பகுதிகளே என வெளிப்படையாக பேசியதை பிபின் சுட்டிக்காட்டினார்.  Exploitation and Administration were parts of the same duty in the GOI. Recognise that capital does not wrap itself in the flag of any one country. It is International. It is like the wind which bloweth where it listeth, and comes and goes as it will  என கர்சான் பேசியதை சொல்லி அதை தனது விமர்சனம் மூலம் எதிர்கொண்டார் பிபின். மூலதனத்திற்கு சர்வதேசத்தன்மை உண்டுதான். ஆனால் ஜெர்மன் மூலதனத்தை பிரிட்டிஷ் ஏற்கிறதா எனக் கேட்டார் பிபின். Foreign Capital and National Autonomy  என்கிற விளக்கத்தை அவர் தந்தார்.
அரும்பும் நிலையில் இருக்கும் உள்நாட்டு தொழில்களை வளர்ந்த வெளிநாட்டு கம்பெனிகளுடன் நியாமற்ற போட்டியில் ஈடுபட செய்வதை அவர் விமர்சித்தார்.  protection  என்பது காலகாலத்திற்கும் இருக்கவேண்டும் என்பதில்லை- ஆனால். இந்திய இளம் கம்பெனிகளுக்கு இந்த பாதுகாப்பை பிரிட்டிஷ் கம்பெனிகளிடமிருந்து உருவாக்கித்தர வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் இதை செய்யவில்லை என்றார். உண்மையில்  huge business amalgamations may be a possible danger to a democratic state  என்கிற பெருந்தொழிலின் கேடு குறித்த தீர்க்கமான பார்வையை பிபின் முன்வைத்தார். அது அரசாங்கத்தை மூலதனம் பக்கம் அவர்களின் நலன்களுக்காக சாயவைக்கும் என்றார்.
அய்ரோப்பாவில் பல நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தின் தொழிலாளிவர்க்கம் பொதுவாக சோசலிசவாதிகளாகவே உள்ளனர். நிலமும் வேலையும் பெரும் தனியார்களிடம் இல்லாமல் பொறுப்பேற்கவேண்டிய அரசின் வசம் இருக்கவேண்டும் என்பது சோசலிச கருத்தாக உள்ளது என எழுதினார் பிபின்.  அரசாங்க சோசலிசத்திற்கான வர்க்க இயக்கமாக அய்ரோப்பாவில் தொழிலாளர் வர்க்கம் வளர்கிறது என்றார். ஆனால் பிரிட்டிஷாரின் புதிய பொருளாதார மறுகட்டுமான கொள்கை இந்த சோசலிச இயக்கத்திற்கு முடிவுகட்ட விழைகிறது என சாடினார் பிபின்.
கடந்த முதல் உலக யுத்தம் செலவு 52000 மில்லியன் ஸ்டெர்லிங். பிரிட்டனின் கடன் 1919ல் 6099 மில்லியன் ஸ்டெர்லிங். யுத்தத்திற்கு முன்னர் அதன் கடன் 650 மில்லியன் ஸ்டெர்லிங் ஆக இருந்தது. யுத்தம் சுமத்திய நிதி நெருக்கடியிலிருந்து இம்பீரியல் பிரிட்டன் மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆகும் என கணித்தார் பிபின்.  Empire Resources Development  கமிட்டியின் பெயரில் சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதாக பிபின் விளக்கினார்.
Mobilisation of India's Agricultural Resources  என்கிற பெயரில் நடைபெற்ற மோசமான பாதிப்புகள் குறித்து அவர் பேசினார். இந்திய விவசாயிகள் எதை பயிரிடவேண்டும் எவ்வளவு என்கிற உரிமைமீதான தாக்குதலை சித்தரித்தார். கட்டாயமுறை உகந்ததல்ல.  An Economic man always produces that which pays him most .. any interference wiil inflict injury on the entire economy of his life  என்பதை அவர் எடுத்துரைத்தார். 1909-18 ஆகிய 10 ஆண்டுகளின் ஏற்றுமதி இறக்குமதி இந்திய வர்த்தகம் பற்றி அவர் ஆய்ந்தார். யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் ஏற்பட்ட மாற்றங்களை அவர் கண்டறிந்து குறிப்பிடுகிறார். மிகக் குறைவான வர்த்தக உறவுகளில் இருந்த ஜப்பான், அமெரிக்கா வர்த்தகம் வளர்ந்துள்ளதை அவர் காண்கிறார். ஜப்பான் பிரிட்டனுக்கு அடுத்த இடத்தை ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்தில் பிடித்துள்ளதை அவர் காட்டுகிறார்.
டாட்டாவிற்கு லண்டனின் அலுவலகம் இருக்கிறது. அதைப் பெறுவதற்கு டாட்டாவும் கஷ்டப்பட்டதை அறியமுடியும். நமக்கு வலுவான ஏஜன்சிகள் வெளிநாடுகளில் இல்லையெனில் நமது வர்த்தகம் பாதிக்கும் . வலுவான இந்தியர் வங்கிகள் வலைப்பின்னல் நமக்கு இல்லாமல் இருக்கிறது. அவை நமது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு மிக முக்கிய பங்களிப்பாக இருக்கும். தேச வர்த்தகம் வளர்வது பற்றி அவர் கவலையுடன் விவாதித்தார். பிரிட்டன் மாதிரியிலான தொழில்மயமாக்கம் என்பதை அவர் சந்தேகத்துடன் அணுகினார். அதில் ஓரளவாவது வெற்றி பெற நமது உற்பத்தி பொருட்களை கொண்டு கிடத்த நுகர்வோர் நாடுகள் தேவை.  European Industrailaism  வழியில் indian economic Regeneration  என்பது குறித்து அவர் எச்சரித்தார்.
Dangers of imitating European Industrialism In India  என்பது குறித்து தனியாக கட்டுரை எழுதினார்.  Machineries- labour saving- Unemployement  பொருளாதார உறவு பற்றி எடுத்துரைத்தார். Our skilled laboureres, who produced all our old manufacturers, were thus hardly labourers in the European sense. They were both masters and workmen combined in one. They worked together upon the principle of cooperative labour, and on communistic basis; each family is joining together and pooling both their labour and their material for the production... there was no one to claim as capitalist..  என்று வரலாற்று பின்புலத்திலிருந்து இந்திய உற்பத்தி முறையின் தன்மையை அவர் விளக்கினார்.
பிரிட்டன் நாடாளுமன்றம் என்னதான் ஜனநாயகம் உரிமை கோரிக்கொண்டபோதும் அது முதலாளித்துவ குணம் கொண்டதாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் அமைச்சரவை புளுட்டோகிரசிக்கு (பண ஆதிக்கம்) அடிமையாகவே உள்ளது. நமக்கு இந்த வலிமையான ஆளும்பகுதியை எதிர்க்க இன்று தெரியும் வழி பிரிட்டனின் தொழிலாளிவர்க்கம்தான் என்றார் அவர். லேபர் சோசலிஸ்ட் இயக்கம்தான். ஆனால் உள்நாட்டில் முதலாளித்துவம் எதிர்த்தும் பிரிட்டிஷ் முதலாளித்துவம் எதிர்த்தும் நாம் போராட முன்வராவிட்டால் பிரிட்டிஷ் தொழிலாளிவர்க்கம் நம்மை சீண்டாது என்றார்.
Organise Indian Labour   என்ற அத்தியாயத்தை அப்புத்தகத்தில் அவர் எழுதினார். பிரிட்டன் தொழிலாளரைப்போலவே வேலைநேரம், இணையான ஊதியம் என்பதை முழக்கமாக்கவேண்டும் என்றார். இந்தியாவில் ரயில்வேயில், சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளி ஏன் பிரிட்டனைவிட குறைவான கூலி பெறவேண்டும் என்கிற கேள்வியை அவர் எழுப்பினார். தொழிலாளி எந்த நிறமானால் என்ன சமவேலைக்கு சம சம்பளம் என்றார். நமது தொழிலாளிக்கும் அமெரிக்க தொழிலாளி சொல்வது போல வாரத்தில் 48 மணி வேலைநேரம்தான் இருக்கவேண்டும் என்றார். இதற்கு சட்டம் மூலம் பாதுகாப்பு வேண்டும். இந்தியாவில் சுரண்டும் மூலதனம் 150 முதல் 400 சத லாபம் பெறுவது ஏன் ? அனைத்தையும் அபகரித்து செல்லவிடக்கூடாது என்றார். உரிய சட்டவழிகள் வேண்டும் என்றார்.
மனிதனை மட்டப்படுத்துவது அவனுள் உரைந்து நிற்கும் தெய்வத்தை மட்டப்படுத்துவதற்கு சமம்.  The bondage of Man hurts the freedom of God  என்பதை உணர்வோம் என்றார். மனிதனின் உயர்வு என்பதுதான் நாம் நடத்தவேண்டிய மதப்புனிதம் என்றார் பிபின்.

3
An Introduction to the study of Hinduism- மதங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்வு என்கிற புத்தகத்தை பிபின் எழுதினார். கல்கத்தா, பக்சார் சிறைகளில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட ஒன்று. ஆகஸ்ட் 1908ல் புத்தகம் வெளியானது.
முதல் அத்தியாயத்தில் முதல் வரியிலேயே இந்துயிசம் என்றால் என்ன என்கிற கேள்வியை எழுப்பி அதற்கு இதுவரை திருப்திகரமான பதில் ஏதுமில்லை என்பதையும் சொல்கிறார். நமது மகத்தான அறிவுத்திறன் கொண்ட புத்திமான்கள் கூட இதை ஆய்ந்து சொல்லவில்லை என்கிறார். இந்துயிசம் என்பது பலவற்றை கொண்டுள்ள சிறிய அளவே சொல்லப்பட்ட ஒன்று. உலகம் முழுதும் அப்பெயர் போய் இருக்கிறது. சிலர் மதம் என்றும் பிறர் அப்படி ஏதுமில்லை சமுக பொருளாதார ஏற்பாடு எனவும் பேசியுள்ளனர் என்றார்.
The contradictions of tenets, the complexities of disciplines, the varieties of cultures that go to form what we know Hindusism today, are absoultely bewildering, and we cannot blame people for having failed to discover the unity that underlies these  என்கிற குழப்பம் நிறைந்த அம்சத்தை சுட்டிக்காட்டினார்.
 மாக்ஸ்முல்லரின் ஆய்வுகளை பிபின் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் இறங்குகிறார். இந்துயிசம் என்பது பிற வரலாற்று மதங்களைப் போன்றதல்ல. அது  community or family of religion some lower and earlier, some in higher and advanced என்றார். அவர் இந்துயிசம், ஜுடாயிசம் என்பதை எதினிக் மதங்களாகவும் அவற்றிலிருந்து பிறந்தவைகளாக புத்தம், இஸ்லாம் போன்றவை  credal Type  எனவும் வகைப்படுத்துகிறார். The uniformity of Creed and the necessary uniformity of discipline and worship and ritual, leave no room for vital divergence of thoughts or cultures within credal system.. contradictory things cannot find a place in  என்கிற விளக்கத்தை கிரிடல் வகப்பட்ட மதங்களுக்கு தருகிறார். எதினிக் மதம் கிரீடல் ஸ்டேஜ் என்பதற்கு போகாமல் யுனிவர்சல் ஆவது  குறித்து அவர் விளக்குகிறார். அது மதங்களின் மியுசியமாகிறது. அங்கு ஆராய்ச்சி மாணவர் பழமையை இருப்பதின் ஒளியிலிருந்து பேசவேண்டிய நிலையும் உருவாகிறது.
இந்துயிசமாக இருந்தாலும் இஸ்லாமாக இருந்தாலும் அவை சில அதிர்ச்சிகளை உலக சிந்தனைகள் பெயரில் நேரிடையாக மறைமுகமாகவோ  உணர்த்த வேண்டியதாயிற்று. சிலவற்றை உள்வாங்கவும் நேரிட்டது. இதை அவர் அழகாக எடுத்து சொல்கிறார்  The religious life and thought of the nation at large seem to be slowly but surely breaking out of their old moorings without competent knowledge and guidance. It is an age of universal questioning and universal doubt and restatement of old verities of life has become imperative to settle these at rest in every part of the civilised world.
இந்துயிசம் குறித்த நமது விரிவுரைகள் இன்றுள்ள பொருள்முதல்வாதம் அல்லது பகுத்தறிவாத செல்வாக்கிற்கு உட்பட்டோ அல்லது பழம்பெரும் உள்ளுணர்வுவாத கண்மூடித்தனமான விடாப்பிடிவாத செல்வாக்கிலோ இருக்கின்றன. மேலை நாட்டு புத்திமான்களான ஜோன்ஸ், கோல் புருக்,  ஹேமன் வில்சன், மூர் போன்றவர்கள் இந்துயிசம் குறித்து விமர்சனபூர்வ ஆய்வுகளில் ஈடுபட்டனர். இவர்கள் தத்துவவாதிகளாக இல்லாததால் அவர்களால் சிலவற்றிற்கு போதுமான விளக்கம் தர இயலவில்லை. பின்னர் வந்த கிறிஸ்துவ நற்செய்தியாளர்களோ கிறிஸ்து தத்துவம் என்கிற எல்லைக்குள் நின்று விளக்கம் தந்தனர் என இந்துயிச ஆய்வுகள் எவ்வாறு நடந்தன என்பதை பிபின் எடுத்து சொல்கிறார். மாக்ஸ் முல்லரின் அறிவியல் ஆய்வை ஒப்பீட்டளவில் ஏற்கலாம் என்கிறார்.
அவர் மொழியியல் துறையில் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தின் என்பதையும் ஆய்வு செய்தார். ஜெர்மன் ஆக்கங்களை அவர் எடுத்துக்கொண்டார்.  Structural affinity among these different languages  என்பதை பிபின் ஆய்விற்கு அவசியம் என்கிறார்..  வரலாற்றிற்கு முந்திய மொழிகளின் பந்தம் மட்டுமல்ல சிந்தனை பந்தம் என்கிறார்.  prof Muller sought to solve it by ascribing it to an innate sense of the infinite in man..  இந்த பார்வையில் சமஸ்கிருதத்தில், கிரேக்கத்தில் நமது முன்னோடி மனிதர்கள் என்ன பதிவிட்டுள்ளார்கள் என்பதை அவர் ஆய்ந்தார். இந்த இயற்கை மதம் என்பதிலிருந்து கடவுட்கொள்கை, தியோசாபிவரை முல்லர் செல்கிறார்.In his studies of the vedic religion, he has presented the world the naturalistic religion of the primitive Hindus  என முல்லர் ஆய்வு பற்றி சொல்கிறார் பிபின்.
இந்த இயற்கைவாதம் இந்துயிசத்திற்கு மட்டுமானதல்ல என்கிறார் பிபின். கிரேக்க ரோமில் காணமுடியும் . ஹீப்ருவில் மோனோதீயிசம் என்பது பேசப்பட்டாலும் அங்கும் பழைய ஆவணங்களில் பிற கடவுள் மறுப்பு இல்லை என்கிறார் பிபின். ’கவுன்சில் ஆப் காட்ஸ்’ என்பது சொல்லப்பட்டு அதில் இஸ்ரேல் கடவுள் உயர்ந்தவர் என பேசப்படுவதாக பிபின் சொல்கிறார். The God of Israel does not, in the earlier records, claim authority over other nations  என சொல்கிறார். அய்ரோப்பிய வாசகர்களுக்கு உதவும் வகையில் முல்லர் இந்து துறவிகள் பேசியவற்றையும் அலெக்சாந்த்ரியா தந்தையர் ஒரேகன், கிளமண்ட் போன்றவர் பேசியதையும் அவர் ஒப்பிட்டு விளக்கினார்.
மத விவகாரங்களின் ஆய்விற்கு அறிவியல் தத்துவம் ஆகியவைகளின் துணை தேவை என்றார் பிபின். மதம் என்பதே இந்த இரு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்திய அனுபவத்தில் மதமும் தத்துவமும் ஒன்றாகவே உள்ளது என்கிறார். The science of Religion means a systematised knowledge of religious experiences. Metaphysics  இல்லாமல் நேரம், இடம் என்பதை கணிதம் பேசமுடியாது என்றார். எனவே இவ்வாய்வு மெட்டாபிசிக்ஸ் சயின்ஸ் கலந்த ஆய்வு என்கிறார்.  டேவிட் ஹ்யூமின் ஆய்வுகளை பற்றி பிபின் பேசுகிறார்.  Evoultion of Religion however must follow the universal lines of mental or emotional- evoultion must follow the Dialetics of Reason .. As all evoution in the words of Herbert Spencer is from Homogeniety to differentiation and from differntiation to integration..  இது மத பரிணாமத்திற்கும் பொருந்தும் என்கிறார்.
மனித மத ஆய்வில் ஒப்பீட்டு முறை, வரலாறு எந்த முறையானாலும் அது காரணகாரிய அறிவின் இயக்கவியலுடன், பரிணாம விதிகளுடன் தொடர்பாகியிருக்கவேண்டும் .இவ்வாறு  mental evoultion  என்பதிலிருந்து பார்க்கும் போதுதான்   Negro Fetishism- Hindu Idolatry  யை புரிந்துகொள்ளமுடியும். அதேநேரத்தில் எல்லாமே ஒப்பிடக்கூடியவைதானா என்பதில் அவருக்கு சந்தேகமிருந்தது. இரண்டின் வரலாற்று வளர்ச்சியில் தொடர்பு உள்ளதா என்கிற கேள்வியை அவர் எழுப்புகிரார்.  Isolated similarities or even apparent identies do not justify scientific comparision  என்கிறார். ஒப்பீட்டுமுறையில் பெறப்பட்ட தரவுகளை அதன் போதாமை தவறுகளை  General Law of Evoultion  மூலம் சரி செய்துகொள்ளவேண்டும் என்கிறார் பிபின். பண்டைய பழங்குடிகளிடம் இருந்த மணவிலக்கு முறையை இன்று வளர்ந்த ஆங்கிலேயர் மணவிலக்குடன் ஒப்பிட்டு பேசுவதில் உள்ள குறையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 The evoultion of religion means the evoultion of man's ideas, sentiments and activities in relation to God, or whatever may stand to Him, for the time being for that complex concept. It is essentially mental or psychological evoultion and it must consequently follow the dialectic of reason  என்கிற தெளிவான பார்வையை அவர் முன்வைத்தார். In evoultion , religion is perpetually changing  என்றார். பரிணாம வளர்ச்சிக்கு டார்வீனிய நேர்கோட்டு அம்சம் என்ற புரிதல் தவறு என்றும் அது  not rectlinear but spiral  என்கிற ஹெகலிய மார்க்சியவகைப்பட்ட டயலக்டிக்ஸ் அணுகுமுறையை பிபின் நெருங்குகிறார். ஆனால் மார்க்சிய இயக்கவியல் என்கிற பதத்தை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் ஹெகலியம் எனப்பேசுகிறார்.
  Pure Being is Pure Nothing  என்பது ஹெகல் கருத்தாகும் என்கிறார் பிபின். பரிணாம மதம் முற்று முழுதான அதன் இறுதியை நிர்வாணம் என்கிற நிலையை அடைந்துவிட்டது என நாம் சொன்னால் அது  ceased to evolve any more  என்றாகிவிடும் . அது வாழும் மதமாக இல்லாமல் செத்ததாகிவிடும் என்றார். புத்த, இஸ்லாமிய, கிறிஸ்துவ credal  மதங்கள் அப்படியொரு fianlity வந்ததுபோல் உரிமை கொண்டாடுகின்றன . ஆனால் வரலாற்றின் போக்கில் அதன் ’நற்செய்தி புரிதலுக்காக’ ஏராள முரண்பட்ட மோதல்கள் நிகழாமல் இல்லை என்கிறார் பிபின். வளர்ச்சியை  Thesis, anti thesis, synthesis   மூலம் விளக்குகிறார்.
The history of religious progress is really the story of the recurrent conflicts between ancient tradition and modern experience  இந்த மோதலுக்குரிய தீர்வென்ன - இணக்கப்படுத்துவது எப்படி என அவர் சிந்திக்கிறார்.  Thought life cannot bear contradictions, its very soul is harmony-  எனவே சிந்ததிஸ் என்கிறார். வேதபிரதிகள் கூட ஏககால அனுபவங்களின் பிரதிபலிப்பல்ல. தொடர்ந்த பல காலங்களின் பிரதிபலிப்பாகா இருப்பதால்தான் அதில் பல்வேறு அனுபவங்களை பார்க்கமுடிகிறது என்கிறார்.  For instance, the first and the tenth  mandala of Rig Veda- a gradual growth from a particularistic and naturalistic to a kind of universal and monothestic idea of the godhead as seen in the well known text- The one truth, the Brahmins call by various names, such as, Indra, Varuna, Rudra etc என எடுத்துக்காட்டி விளக்குகிறார்.
  எனவே இந்த அத்துனை பிரதிகளையும் ஒரே ஸ்டேஜ் இந்து பரிணாம வளர்ச்சி என்பது சரியல்ல என்றார். உபநிடதங்களுக்கும் இது பொருந்தும் என்கிறார். மாக்ஸ்முல்லர் வேத வளர்ச்சி 500 ஆண்டுகள் இருக்கலாம் ; உபநிடத வளர்ச்சி 200 ஆண்டுகள் இருக்கலாம் என்றார். திலகரோ தனது ஆய்வில் பல நூற்றாண்டுகளின் தொகுப்பு என்றார் .புராண இந்துயிசம் கூட அப்படித்தான்.
when God whether He be seen or unseen, finite or infinite, becomes an object of man's knowledge..The Upanishads say that the Supreme knows everything but of Him is no knower and thus cut off the very roots of all objective ideas concerning the God head. Brahman and self are one- is the real subjectivism of the upanishads  என்கிறார் பிபின்
Infinite  என்பது குறித்து அவர் மாக்ஸ்முல்லருடன் மாறுபாடுகிறார். பிபினுக்கு  infinite is intutional. அதே நேரத்தில் அதற்கு புற தூண்டல் அவசியம் என்பதை அவர் ஏற்கிறார். மலை, கடல், இருட்டு , வானம் போன்ற இயற்கை அம்சங்கள் அவனுக்கு  infinite  என மாக்ஸ்முல்லர் சொல்கிறார். இதை  not-me  Idham not Aham  Face to face with a power-not-Himself என பிபின் சொல்கிறார்.  Not me in nature is the origin of all nature-deities  என வந்தடைகிறார் பிபின். வேத- ஹெல்லனிய தெய்வங்கள் இவ்வகையானவை என்கிறார். ஹ்யூம், ஸ்பென்சரை அவர் ஆய்வு செய்கிறார். இயற்கை தெய்வ வழிபாடு என்கிற உணர்வுடன் தனது மூதாதையர் வழிபாடு என்கிற இரு உணர்வு நிலைப்பற்றி சொல்கிறார்.
 மனிதன் சமுக உயிரியாக இல்லாத நேரம் என ஏதுமிருக்காது என்பதை சொல்லி இந்த  social bond an essential element of his religion  என வரையறுக்கிறார்.  Nature and Society, these two constituted always the two agencies that worked up everywhere the religious consciousness of mankind  என்கிற விளக்கத்தை அவர் தருகிறார். இயற்கை- முன்னோர் வழிபாடு என்கிற இரட்டைத்தன்மை வேத இந்துயிச பரிணாமத்தில் முக்கியமானதாக இருக்கிறது என வந்தடைகிறார். பிரம்மன், பிராஜாபதி- தேவர்- பிதுர் என்பன மூலம் இதை அவர் எடுத்து சொல்கிறார். தீ உள்ளிட்ட பஞ்சபூத வழிபாடு, ஹிரண்யகர்ப்ப போன்றவற்றை சொல்கிறார். கிரேக்கர்கள் மதத்தை சூழலுடன் ஆன இசைவு என புரிந்திருந்தனர்.
மதத்தின் வரலாறே மனிதன் சூழலை புரிந்து அவன் அளித்த விளக்கம், மோதல், இணக்கம் ஆகியவற்றின் வரலாறுதான் என்பதை அவர் ஏற்றார். The history of Religion is only the history of the attempt that man has always made with varying success to adjust himself to his physical, his mental, his moral or social, his civic and economic conditions, and, through this progrssive adjustment, to develop the highest possibilities of his nature, and realise the loftiest promise of his soul  என்ற அருமையான வரையறையை பிபின் நல்கினார்.
Human emotions, reason, Will  என்கிற உளவியல் வெளிச்சத்திலும் மதப் பரிமாணம் ஆய்வுக்குரியதாக இருக்கிறது. அதன் முதல்கட்ட பரிமாணம் Naturalistic or Perceptive  என்கிறார். வேதக்கடவுள்கள் visible objects  ஆக இருப்பதை சொல்கிறார். ஹீப்ருவிலும் இதை உணரமுடியும். இஸ்லாம் முகமது காலத்தில்  perceptive என்பது reflective state of religious evoultion ஆகிறது என மதிப்பிடுகிறார்.
Deities of primitive man perceived by his sensus. அதாவது ஆரம்பகால வழிபாடு தெரிந்தவைகளை கண்ணுற்றவைகளை வழிபடுவதாக இருந்தது, கிறிஸ்துவம், இஸ்லாமில் கூட கிறிஸ்து, முகமது என்கிற உணர்வின்றி வழிபாடு இல்லாமல் இருக்கிறது என்கிற விளக்கத்தை அவர் தருகிறார். இவ்விடத்தில் உருவ வழிபாடு என்பதை நெருங்கும் அவரது கருத்தாக்கம் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அவரைப்பொறுத்தவரை  both Christianity and Islam in their originasl forms do not represent a speculative, but simply a reflective phase of religious evoultion. Reflective Stage என்பது Religious imaginationக்கு இடமளிக்கும் என்கிறார்.  All idealisation demands an exercise of the imagination and religious imagination takes precedence of phiolosophical or metaphysical speculations in the history of religious evolution everwhere என்கிறார்
 உலக மதங்கள் ஏன் தமக்குள் வேறுபடுகின்றன என்கிற கேள்வியும் அவரிடம் எழுகிறது. இதற்கு அவர்  element of permanence  and an element that is peculiar   என்கிற காரணங்களைத் தருகிறார். மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பென எடுத்துக்கொண்டு அவர் விளக்க்குகிறார். மொழியின் கட்டமைப்பு அம்மக்களின்  mental lifeயை காட்டும் என்கிறார். Language an index to mental life  என்கிறார். இனங்களின் சிந்தனை கட்டுமானம் எண்ண ஒழுங்குமுறையை உருவாக்குவதாகவும் அவர் எழுதுகிறார். இந்தோ ஆர்ய இனம் பற்றி  குறிப்பிடுகிறார். இவ்வகை race consciousness can explain the fundamental difference between one religion and another  என அவர் வந்தடைகிறார். எனவே இன குணநலன்கள் பற்றிய ஆய்வும் மத ஆய்விற்கு தேவைப்படுகிறது என்கிறார்.
ஹீப்ரு அராபியம் ஒரே ஸ்டாக் என சொல்கிறார். Judaic Islamic legalism  ஒன்று என்கிறார். ஆனால்  christian legalism slightly different  என்கிற முடிவிற்கு அவர் வருகிறார். புத்தம் வளைந்து கொடுக்காதது என்றும்  no getting out of law, except through the law itself- buddhistic law is impersonal, absoulte , eternal  என எழுதுகிறார்
அவர் தனது ஆய்வின் முடிவாக திரும்ப திரும்ப சொல்வது  the religious phenomena in general is that religion is man's attempt to adjust himself to his NOT_ME, with a view to realise the highest end of his existence  என்பதாகவே இருக்கிறது. அதேபோல் கடவுள் என்கிற கருத்தாக்கத்திலும் அவர் திரும்ப திரும்ப சொல்வது மனிதன் தொடர்ந்து கடவுளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறான் என்பதாக உள்ளது. Man has always made and is still making his God, everywhere after himself.
நம் காலத்திற்கு மதம் பெரும்பாலும் ஊகமாகவே இருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய மனிதன் போன்ற சூழல் இல்லாத நம் வாழ்வில் மதம் என்கிற பழக்கம் இல்லாமல்கூட உயிர்வாழமுடியும்.  We have separated our physical, our intellectual, aesthetic and even our ethical life from our religious life. For primitive man religion was everything  என்றார் பிபின். நவீன அய்ரோப்பிய சிந்தனை புதிய கூட்டிணைவிற்கு அழைத்து செல்கிறது. காண்ட், ஹெகல், ஷெல்லிங், கதே, எமர்சென், டென்னிசன், பிரவுனிங், இப்சன், டால்ஸ்டாய் விட்மேன் என புதிய சிந்தனையாளர்கள் இந்த உயர்ந்த கூட்டிணைவிற்காக நிற்கிறார்கள் என்றார் பிபின்.
தனிமனிதனுக்கும் சமுகத்திற்குமான உறவு கிரேக்க சிந்தனையில் எப்படி தொழிற்படுகிறது- இந்து சிந்தனையானது எப்படி உள்ளது என அவர் பேசுகிறார். இங்கு  self itself was that end - Society only a school  என்கிறார்.  Natural objects and phenomena had always to him a soul reference.Hindus saw the whole in the parts- Greeks saw parts in the whole. The Hindu civilisation is an example of opposite process. It leads- the search of the whole in the parts- to pantheism in theology, determinism in ethics, and to a fatal fatalism in the general philosophy of life.It leads to absoulte quietism   என்பது அவர் விளக்கமாக இருக்கிறது.

4
பிபின் சந்திர பால் இந்திய விடுதலைக்கால புரட்சிகர கருத்துக்களின் தந்தையாக கருதப்பட்டவர். லால்-பால்-பால் என லாலாஜி, திலகருடன் இணையாக பார்க்கப்பட்டவர். காந்திக்கு முந்திய தலைமுறை. அவரின் எழுத்துக்கள் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கொடுக்கின்றன. அவரின்  Soul Of India  கிறிஸ்து மதத்துடன் மட்டுமல்ல பிரிட்டிஷ் குழந்தைகள் இந்திய சிந்தனைகள் குறித்து முறையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதன் விழைவில் எழுதப்பட்டது.

The New Economic Menance to India  என்ற புத்தகம் இந்தியாவின் வளங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை குறித்து விவரிக்கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருத்தாக்கம், தொழிலாளிவர்க்கம் இந்தியாவில் அணிசேரவேண்டும், பிரிட்டிஷ் சோசலிசம் தாக்கம் போன்ற நிலைகளுக்கு மிக அருகாமையில் அவர் வருகிறார்.
அடுத்த புத்தகம்   An Introduction to Hinduism- Comparative study of Religion என்கிற மதம் பற்றிய அறிவியல்- தத்துவ ஆய்வு. இதில் அவர் ஹெகல் முறையை எடுத்துக்கொள்கிறார். 1910க்கு முன்னர் இந்திய தலைவர் ஒருவர் ஹெகல் சிந்தனையுடன் தொடர்பில் இருந்தது  ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது. காண்ட், டால்ஸ்டாய், இப்சன், எமர்சன், மாக்ஸ்முல்லர் என பல பெரியவர்களின் கருத்துக்களுடன் இருந்த சிந்தனை உறவை காணமுடிகிறது. இந்துயிசம் சிறப்பானது என்கிற கருத்துக்கு அவர் வந்தடைந்தாலும்  வேறு மதங்கள் மீது எவ்வித துவேஷமும் இல்லாமல் இருக்கும் அவரின் ஆய்வுமுறை மிக வித்தியாசமானதாக தெரிகிறது. நமது நவீன உலகத்திற்கு மதம் மிக அடிப்படையாக இருக்க வேண்டியது கூட இல்லை என்கிற பார்வையையும் அவரால் அறிவியல் தத்துவ வலுவான பின்புலத்துடன் சொல்லமுடிந்தது..
மனித அர்த்தங்களில்தான் நாம் தெய்வத்தை கண்டுணரமுடியும் என்பதையே அனைத்து மத ஆன்மீக வாழ்வியல் அனுபவங்கள் சொல்கின்றன. திலகர், அரவிந்தர், லாலாஜி ஆகியோர்கள் இந்து மறுமலர்ச்சிவாதத்திற்கு நின்றார்கள். அவ்வாறே பிபினும் நின்றார் என்கிற பொதுப்பார்வை இல்லாமல் இல்லை. இந்து மறுமலர்ச்சி Hindu Revivalism என்கிற பெயரில் நடந்துவருவதென்ன என அவர் பேசினார். இந்து நம்பிக்கைகளை  ideals களை புதுப்பிப்பது என்கிற பெயரில் பண்டைய உபநிடதங்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல் சங்கர வேதாந்தம், சடங்குகள், சிம்பலிசம், புராண கற்பனைகள் ஆகியவற்றிலிருந்து  சாதிய ஒதுக்கல் போன்ற வளைந்துகொடுக்கா தன்மை, பிராம்மண உயர்வு போன்ற மதத்தின் ’சூப்பரியற்கைவாதத்தை’ புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற விமர்சன பார்வை அவரிடத்தில் இருந்தது. நவீன கருத்துக்களின் வரவு பிராம்மண மேலாதிக்கத்தின் செல்வாக்கை குறைத்து வருகிறது என்கிற திருப்தியை அவர் வெளியிட்டார்.
அவரின் இங்கிலாந்து அமெரிக்க பயணங்கள் சமுக அரசியல் கருத்துக்களை செழுமைப்படுத்த அவருக்கு உதவின. அதே நேரத்தில் தேசாபிமானம் என்பது அவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அமெரிக்காவின், இங்கிலாந்தின் உத்வேகம், அழகு, வளம் என்பதை கண்ணுறும் அதேவேளையில்  சொந்த நாடு குறித்த எண்ணங்கள் கூடுதலாக வலிமைப்பெறுகின்றன என அவர் தெரிவித்தார்.
மதகுருமார், அரசர், அரசியல்வாதி, சமுக சீர்திருத்தவாதி என எந்த பெயரில் மக்கள் விரும்பாத கருத்துக்களை அவர்கள் மீது திணித்தாலும் அது சரியில்லை என அவர் கருதினார். The world is neither  a creation of Reformers nor is it a practice ground for them. I am no longer inclined to suppose the people bad in a feat of doing good to the world  என அவர் பேசினார்.  No philosophy of life which does not accept this world as real, can find us a basis for our social work  என அழுத்தமாக அவர் சொன்னது சங்கரரின் மாயாவாதம் குறித்த விமர்சனமாக நாம் எடுத்துக்கொள்ளலாம்
அவர் சாதி ஒழிப்பு என்பதை பேசவில்லை. ஆனால் தளர்வுகள் குறித்து உரையாடிவந்தார்.  The don't touchism is the Highest weakness of Hinduism  என்றார்.  This caste system has not been dropped down from heaven all on a sudden. It did not have its articulate and pervasive form at the very inception of our social life.Neither it has been built up by selfish ordesigning people. with the passage of time, it has gradually arisen out of our society's own needs, to play its game as an adjuct to oursocial development. There is nothing supernatural or necromancy in it  என்ற விளக்கம் அவரிடம் கிடைக்கிறது.  With our false pride of caste we are stabbing Hinduism at its source  எனவும் அவர் விசனப்பட்டார்.
வர்ணாஸ்ரமம் என்ற பெயரால் இங்கிலாந்தில் உள்ள வர்க்கப் போராட்டம் போன்ற நிலையைத்தான் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதைக்கொண்டு இந்து நாகரீகத்தை கலாச்சாரத்தை காப்பாற்ற முடியாது-அழிவிற்குத்தான் உதவும் என்ற எச்சரிக்கையை அவர் தந்தார். குழந்தை திருமணமுறை எதிர்த்தும் விதவைகளுக்கு சமுகம் இழைக்கும் அநீதிகளுக்காகவும் மறுமணத்திற்காகவும் அவர் கடுமையாக போராடினார். அவரே சுரேந்திரநாத் அவர்களின் உறவுக்கார விதவைப்   பெண்ணை மணந்தார். அவருக்கு கடுமையான மிரட்டல்கள் வந்தன. ஒருமுறை அவர்மீது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார். குறி தவறியதால் அவர் தப்பி பிழைத்தார். பெண்களுக்கு திருமண வயதை உயர்த்த சட்டம் என பேசும்போதெல்லாம் கலாச்சார ஆபத்து- மதத்திற்கு ஆபத்து என கூக்குரல் எழும்பும் ஆனாலும் நாம் உறுதியாக செயல்படவேண்டும் என்றார் அவர். அதற்கான பொறுக்குகுழு உறுப்பினராகவும் அவர் 1924ல் இருந்தார். அப்போது குறைந்தவயது 14 ஆவது இருக்கவேண்டும் என சொன்னதற்கே எதிர்ப்பு வந்தது.
1909ல் அவர் இங்கிலாந்தில் இருந்தபோது பெண்களுக்கு ஓட்டுரிமை என்கிற  women Suffragist  இயக்கம் தீவிரமாக எழுந்தது. அவரும் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். இந்தியாவிலும் பெண்களின் சமுக அரசியல் உரிமைக் கிளர்ச்சிகளில்  இளைஞர்கள் முன்நிற்கவேண்டும் என அவர்  தெரிவித்தார்.
அவர் சமஸ்கிருதம் தேவை எனக் கருதினார்.   சிவில் சர்வீஸ் தேர்வில் சமஸ்கிருதம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தியாவின் இணைப்புமொழியாக இந்துஸ்தானி என அவர் பேசிவந்தார். என் தலைமுறைக்கு கிடைத்த சமஸ்கிருத, அறிவியல் கல்வி என் பேரக்குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றார்.  sanskrit and Science  என முழங்கி வந்தார்.
வந்தே மாதரம் என்கிற பத்திரிகை வாயிலாக அவர் 1908ல் Passive Resistance- ஒத்துழையாமை குறித்து ஏராள கட்டுரைகள் எழுதினார். அது  a kind of confrontation between civic people and civic Govt  என்பதாக அவர் விளக்கினார். அரவிந்தர் பிபின்தான் இந்தியாவின் Prophet of passive Resistance  என்று புகழ்ந்துள்ளார். காந்தியடிகள் பின்னர் சத்தியாக்கிரகம்- ஒத்துழையாமை என்கிற வகையில் அதை மக்கள் இயக்கமாக பெரிய அளவில் உருவாக்கினார். ஒட்டுமொத்த உள்நாட்டு திறமைகளின் ஊக்குவிப்பாக அரசாங்கம் இருக்கவேண்டுமே தவிர தலையிட்டு தொந்திரவு செய்வதாக இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் சுயசார்புள்ள பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றார் பிபின். நமது புதிய தேசம் குறித்த பார்வை முற்றுமுழுமையான தற்சார்பு, சுயஉதவி தன்மையினதாக இருக்கவேண்டும் என்றார்.
1906ல் காங்கிரஸ் தலைமைக்கு திலகரா- தாதாபாய் நெளரோஜியா என்கிற கேள்வி வந்தது. பிபின் திலகர் கருத்துக்களுடன் உடன்பட்டு போகக்கூடியவராக இருந்ததால் அவர் தாதாபாயை எதிர்க்கிறார் என்ற செய்தி பரவியபோது அதை அவர் மறுத்தார்.  தாதாபாய் கொண்டிருக்கும் அரசியல் விடுதலை குறித்த கருத்துக்களில் தான் வேறுபடுவதாக தெரிவித்தார். Self Govt of Colonial type  என்கிற தாதாபாய் முன்மொழிவை எதிர்த்து  free India என பிபின் பேசிவந்தார். விடுதலைப்பெற்ற இந்தியா பிரிட்டனுடன் தோழமை கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்றார். தீவிரவாதிகளின் கருத்துக்களை பைத்தியக்காரத்தனம் என விமர்சித்த கோகலேவிற்கு பதிலை பிபின் எழுதினார் The colonoal ideal is a false ideal என்பதை எடுத்துக்கூறி  The madness Sir is not all on our side என்று எழுதினார்.
ஸ்டேட்ஸ்மேன் நிருபரிடம் அவர் பக்சார் சிறையிலிருந்து வெளிவரும் நேரத்தில் விளக்கம் ஒன்றை அளித்தார். என்னை தீவிரவாதி என சொல்கின்றனர். ஆனால் நான் சமுகவியல்வாதி அவ்வளவுதான் என்றார்.
மறுமலர்ச்சி என்பது குறித்து அவர் 1928 டிசம்பரில் எழுதினார் The revival does not mean a return to a stage of evolution that has already been passed, or the resumption of dead or decadent forms of national thought or instruments and agencies of national life. No Nation can go back to its past, not even the Indian nation; not can it by any magic or mantram bodily bring back its past and set it up in the midst of the living currents of the present.   மறுமலர்ச்சி என்பது வழக்கொழிந்த சிந்தனைகளுக்கு சென்று அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதல்ல. பரிணாம வளர்ச்சியில் கடந்தவைகள் கடந்தவைவைதான் என்றார். கலை, கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் இன்று எதிர்ப்படும் பிரச்சனைகளுக்கு  மறைந்து  போய்வரும் சில கலாச்சார கூறுகளை இன்றுள்ள காலநிலைக்கேற்ப சேர்த்து இணைத்தல் என்பதே மறுமலர்ச்சி என்றார்.  Helping the lost ideals of culture to be incorporated in new forms and institutions in harmany with the new and changed conditions of life of the modern men  என மறுமலர்ச்சி குறித்த தனது பார்வையை தந்தவர் பிபின்.
பிபின் தன்விருப்பம் போல காங்கிரசிற்குள் உள்ளேயோ வெளியேயோ தனி அமைப்பை உருவாக்கி நடத்தும் அளவிற்கு நிதி பின்புலம் உடையவராகவில்லை. அவரின் குடும்ப வாழ்க்கைக்கே போராடுபவராக இருந்தார். திலகர் அன்னிபெசண்ட் ஹோம்ரூல் இயக்கத்தில்கூட தனக்கென தனி முத்திரை பதிப்பவராக இருந்தார். 1924 துவங்கி கல்கத்தா செண்ட்ரல் அசெம்பிளியில் மூன்று ஆண்டுகள் தனது வாதத்திறமையால பலரின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் கூட கட்சியின் முடிவுகள் என்றில்லாமல் சுயேட்சையான சிந்தனைகளை வெளிப்படுத்துவராக இருந்தார்.  Mere politics is unscrupulous but Statesmanship having its eye on universal interests என்பார். அவருக்கும் சி ஆர் தாஸ் அவர்களுக்கும் ஏற்பட்ட வேறுபாடுகளால் அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகிக்கொள்ளாமல் இருந்தனர். அரசியலாக இருந்தாலும் தேச வாழ்வு என எடுத்துக்கொண்டாலும் அவர்  thought leader, dynamic intellectual  என்பதாகவே வெளிப்பட்டார்.  Revive the habit clear and free thinking in our intellectual classes என வற்புறுத்தியவர் பிபின்.
முதலில் முஸ்லீம் பின்னர்தான் இந்தியர் என்ற பார்வைக்கு பதில் முதலில் இந்தியர் பின் தான் ஒரு முஸ்லீம் என்கிற பார்வை இஸ்லாமியர்களிடம் பலப்பட்டால்தான் இந்து முஸ்லீம் பிரச்சனை முழுமையாக தீரும் என்கிற கருத்து அவரிடம் இருந்தது. கிலாபத் இயக்கம் மத தீவிரவாதங்களுக்கு துணையாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை அவரிடமிருந்து வந்தது. இந்து வகுப்புவாதம்- முஸ்லீம் வகுப்புவாதம் என மோதிக்கொள்ளும் இரு வகுப்பாராக மாறிவிடக்கூடாது எனவும் அவர் பேசினார். இந்துராஜ்யம்- முஸ்லீம் ராஜ்யம் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையில் நாம் சர்வ அராஜகத்தை உருவாக்கிவிடக்கூடாது என்றார்.
The attainment of real democratic self government or responsible govt in India must mean the ultimate transference of the authority of British parliament over Indian Administration to Indian Legislatures  இவ்வாறு விடுதலை பெற்ற சுயாதீன செயல்பாடுள்ள நாடுகளின் உலக கூட்டமைப்பு பற்றியும் அவர் பேசினார். தேசிய- சர்வதேசிய இணைப்பு என்பதை அவர் விளக்கினார். அமைதியான சட்டபூர்வ வழிகளில் என்பதை அவர் சுட்டிக்காட்டிவந்தார்.
 1919 அமிர்தசரஸ் காங்கிரசில் திலகர் பிபின் காந்தி மூவரும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்த்ருத்தங்கள் குறித்து மூன்று பார்வைகள் வைத்தனர். காந்தி loyal cooperation, திலகர் responsive coopeartion, பிபின் opposition என்றனர்.. Non cooperation must be our cry and policy -  It is passive resistance என்றார் பிபின்.  சட்டம் ஒழுங்கை காத்து அமைதியை நிலைநாட்டுவது அரசின் பிரதான கடமை என்பதால் அதை சீர்குலைக்கும் இயக்கங்களை நாம்  Constitutional movement  என கருத முடியாது என்கிற ஒத்துழையாமை இயக்க எல்லைகளையும் அவர் குறிப்பிட்டார்.  1920ல் காந்தி ஒத்துழையாமை என பேசியபோது பிறர் அதை கொண்டாடிய அளவு புதிய சிந்தனையாக அவர் ஏற்கவில்லை. அது குறித்து முன்பே தான் பேசிவிட்டதாகவே பிபின் கருதினார்.
காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை சொல்லி மோதிலாலுக்கு அவர் கடிதம் எழுதினார். பத்திரிகை பொறுப்பிலிருந்தும் விடுவிக்க வேண்டினார்.  Hero worship  ஆபத்தானது.  I am not blind to the possibilities of good in the great hold that Mahatmaji has got on the populace. But there is the other side, and in the earlier stages of democracy these personal influences , particularly when they are due to inspiration of medieval religious sentiments, are simply fatal to its future என குறிப்பிட்டிருந்தார்.
5
வங்கத்தின் காங்கிரஸ் மாநாடு 1921 மார்ச்சில் நடைபெற்றது. பிபின் தலைமையுரை நிகழ்த்தினார். மக்களை தன்னால் வசீகரிக்கமுடியவில்லை என்றார். எனக்கு உண்மை தெரிவதால் நான் அரை உண்மைகளை பேசுவதில்லை என்றார்.  காந்தி சொன்னால் Divine revealation மற்றவர் பேசுவதெல்லாம்  human fancies என்பதை அவர் ஏற்கவில்லை.  I regret my inability to accept pontifical authority in politics after I have discarded it in religion  என தன் நிலையை அவர் தெளிவுபடுத்தினார். மக்கள் சத்தமிட்டு பேசவிடாமல் செய்ததை பார்த்து தான் வெளியேறிவிடுவதாக சொன்னார். அரவிந்தரால் வங்கத்தின் வலுவான மூளை என வர்ணிக்கப்பட்ட பிபினை பொறுமையிழந்த கூட்டம் கேலிக்குரியதாக்கியது.
தாகூருக்கும் காந்தியின் ஒத்துழையாமை political asceticism என்பதாகவே தெரிந்தது. காந்தியுடன் தனிப்பட்ட சண்டை என ஏதுமில்லை என்பதையும் பிபின் தெளிவுபடுத்தினார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவ்வாறு எடுத்துக்கொண்டுவிட்டனர் என்றார். காந்தி 1924ல் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு காலவரையற்ற பட்டினியை அறிவித்தபோது பிபின் அவரை மிக உயர்வாக பேசினார். ராஜாராம்மோகன்ராய்க்கு அடுத்து மதிக்கப்படவேண்டியவராக கருதினார்
வரலாற்று கட்டங்கள் எதிர் எதிர் சந்திப்பு மோதல் காரணமாக புதிய சேர்மானங்கள் உருவாகிவருகின்றன. அது கலாச்சார அணிசேர்க்கைகளாகின்றன. இதையே பிபின்  distinctive indian culture,which is at once larger than Hindu or Islam or Christian culture  என எழுதினார் பிபின். 1907 லேயே அவர் இந்தியாவை பெடரல்ஸ்டேட் என்கிற பார்வையுடன் பார்த்தார். I am neither Hindu nor Mohamedan in the religious sense. From a larger view, I may honestly claim to be both Hindu and Mohamedan  என்றவர் பிபின்.  Modern state is an absolute secular state..our first duty must be to get rid of the old theocratic ideas of the Religion which must be religiously kept apart from politics.. The injunctions of the religious scriptures of different denominationsmust under no circumstances be permitted to interfere with civic duties and responsibilities என எழுதினார்.
1925 ஜனவரியில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இதை மேலும் அவர் உறுதிபட தெரிவிக்கிறார்.  The Hindu's Srauta Sutra or Manava Dharma Shastra shall have no place in the laws and codes of Modern national state in india; nor will any recognition to the injunctions of the Quoran and the Islamic codes except so far as these may relate to the strictly personal and private life and the communal relations of the Mahomedans  என எழுதினார்.
அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் கட்டமைக்கப்படாத எந்த ஒன்றும் ஜனநாயகமாகாது . சிறுபான்மை கம்யூனிட்டியை பெரும்பான்மை கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது அரசிற்கான இழுக்கு  பொறுப்பு என்கிற உணர்வுவேண்டும் என்றார். மதம் சார்ந்தவர் என்கிற உணர்வைவிட பொதுவான  Civic Community  என்கிற உணர்வு பலப்படவேண்டும் என்றார். Constitution do not createman, and as long as you have not got men religiously eager to advance the common interest in preference to personal or communal interests  என்பதை அழுத்தமாக வலியுறுத்தியவர் பிபின்.  வேர்க்கால் ஜனநாயகத்தில் அவர் நம்பிக்கை வைத்தவர். இருகட்சி ஆட்சிமுறை நல்லது என்றார். கூட்டணி சர்க்கார் என்கிற குரூப் சிஸ்டம் பயனளிக்காது எனக் கருதினார்.
 பொருளாதார கோட்பாடுகளில் சோசலிசம் என்பதற்கு மிக நெருக்கமாக அவர் கருத்துக்களை தெரிவித்துவந்தார். அதேநேரத்தில்  State socialism was absoultely fatal to the evolution of real democracy under a despotic administration  என்கிற எச்சரிக்கையையும் அவர் தந்தார். அது தனிநபர் ஊக்கத்தை சிறிது சிறிதாக அரித்துவிடும் என்கிற கருத்தை அவர் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவர் போல்ஷ்விக்குகளை பாராட்டி கருத்துக்களை சொல்லி வந்தார். பின்னர் பயங்கரவாதம் மூலம் ஆட்சியை பிடித்து நடத்தி வருபவர்கள் என்கிற கருத்து அவருக்கு உருவானது. இதற்கு அவரின் இங்கிலாந்து தொடர்பு காரணமாக இருந்திருக்கலாம்.
 மார்க்ஸ் உடன் தொடர்பில் இருந்த  H M Hyndman  பழக்கம் பிபினுக்கு இருந்துள்ளது, ஹைண்ட்மேன் மார்க்சை பாராட்டி நட்பு கொண்டவராகவும் லஸ்ஸேலுடன் சேர்ந்துகொண்டு மார்க்சை விமர்சிப்பவராகவும் இருந்துள்ளார். ஏங்கெல்ஸ் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்க்சின் புதல்வி எலியனார் ஹைண்ட்மேனுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். பிபினை பொறுத்தவரை ருஷ்யாவில் நாடாளுமன்ற நடைமுறை இல்லாததும் அனைவருக்கும் வாக்குரிமை செயல்படாமையும் ஏற்பிற்குரியன அல்ல எனக் கருதினார்.  There are undoubtedly many things in Soviet system that appeal to our  idealism. But practically, if reports be true, the experiment of working class rule on communistic lines, more or less after the teachings of Marx, has not been able to make that new heaven and new earth which we have been promised by every socialist or Communist of the Marxian school  என்று அக்டோபர் 1924 லேயே எழுதும் அளவிற்கு அவர் நிலைமைகளை புரிந்தவராக இருந்தார்.
பிபின் எழுதிய  The New Economic Menance to India  லெனின் அவர்களின் சொந்த நூலக அறையில் இருந்தது என அறியும்போது பிபின் எழுத்துக்கள் மீதான மரியாதையை அதன் உள்ளடக்கத்தை நம்மால் உணரமுடியும். டால்ஸ்டாய், லெனின் போன்றவர்கள்  philosophical anarchists  என்கிற  விமர்சன கருத்தை பிபின் வைத்திருந்தார். லண்டனில் வாழ்ந்த புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் சாபுர்ஜி சக்லத்வாலாவுடனும் பிபின் அவர்களுக்கு பழக்கம் இருந்தது.
1901லேயே அவர் காங்கிரஸ் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களை திரட்ட வேண்டும் எனக்குரல் கொடுத்தவர். கல்கத்தாவில் தொடர்ந்து பலதரப்பட்ட தொழிலாளர் கூட்டங்களில் உரையாற்றியவர். அஞ்சல், மில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனைகளில் தலையிட்டு உரையாற்றியவர். உழைப்பை நேசிப்போம் கூலி அதன் உடன் விளைவுதான் என்பார் பிபின். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருந்த அஜாய்கோஷ் பிபினை  அவரின் நூற்றாண்டு விழாவின் போது பாராட்டி சொல்கிறார்  A nationalist of indomitable will- a true liberal, he dedicated himself to the nation's cause according to his own understanding and convictions
1928ல் அவர் முசோலினியின் பாசிசசம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஜனநாயகத்திற்கு முசோலினியின் கரும்படை பெரும் ஆபத்து என்றார். முசோலினி பெரும் எதேச்சதிகாரி என்றார். காட்டுமிராண்டிதனத்தால்தான் அவர்களது ஆட்சி நிலைக்கிறது என்கிற விமர்சனம் அவரிடம் இருந்தது.
இன்று அரசியல் வானில் கடவுள் போல் காட்சி தருபவர்கள் நாளை இரார்.    காந்தியையும் சுயராஜ்ய கட்சியினரையும் ஒருசேர எதிர்த்து வந்ததன் காரணமாக அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனது . சி ஆர் தாஸ் போன்றவர்களேகூட தொடக்கத்தில் பிபினுடன் இருந்து ஆரம்ப அரசியலை கற்றார்கள்  1923ல் சுபாஷ் வங்க மாநிலக் கமிட்டி செயலராக இருந்தபோது பிபின் காங்கிரசிற்கு வந்தால் இருகரங்கொண்டு வரவேற்பதாக கூறினார்.
நேருவும், பிபினும் ஒருவரைப்பற்றி ஒருவர் நல்ல மதிப்பீடுகளை கொண்டிருக்கவில்லை. நேரு நினைப்பதையெல்லாம் பேசிவருபவர் என்கிற கருத்து பிபினுக்கு இருந்தது. 1908ல் லண்டனில் நேரு உட்பட 10பேர் மட்டுமே இருந்த கூட்டத்திலேயே அவர் பத்தாயிரம்பேர் திரண்ட கூட்டம்போல் நினைத்து கத்திப் பேசினார். ஏதும் புரியவில்லை என்கிற பதிவை நேரு தந்தார். தனக்கு லாலாஜி உரைகள்தான் பிபினைவிட வசீகரிக்கின்றன என தந்தை மோதிலாலுக்கு நேரு எழுதினார். மோதிலாலுக்கும் பெங்கால் உணர்ச்சிபெருக்காளர்களை பிடிக்காமல் இருந்தது.
நாகரீகத்தின் இலக்கு  ’மனித நேர்த்தி’  எனப்படுவதற்குத்தான் என்று 1911ல் பிபின்பால் எழுதினார்.. அது உடல் மன வளர்ச்சி மட்டுமல்ல நெறி, ஆன்மீக வளர்ச்சியுமானது. சமுக முழுமையின் அங்கம் என்கிற தன்மையில் சமுக அலகான மனித நேர்த்தியுமாக இருக்கவேண்டும்.” எம். என் ராய்  ஆரம்பத்தில் மார்க்சிய பிடிமானங்களிலிருந்து பிபினை விமர்சித்திருந்தாலும் , பின்னர் அவரின் காரணகாரிய அறிவுமுறை சார்ந்த மனிதாபிமான கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டார். மார்ச் 1911ல் லண்டனில் பிபினை பேட்டி எடுத்த ஃபென்னர் பிராக்வே என்பார் அவரை தேசிய சிந்தனையின் முதல் தீர்க்கதரிசி என புகழ்ந்தார்.

அடுத்து வந்த சில ஆண்டுகள் அவர் தனிமைப்பட்டு வாழ்ந்து  மே 20, 1932ல் மறைந்தார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை தனது மே 22 1932ல்  Democracy's ingratitude என தலைப்பிட்டு புகழஞ்சலி செய்தது. " Democracies are notoriously ungrateful. They use men to the utmost limit for their physical and mental power and then discard them and throw them on the scarp heap. Younger men striving for personal success are for ever trying to throw down the elders, and in their turn they learn something of the cruelty with which popular parties destroy their leaders when their usefulness is held to be at an end. This is not peculiar to India.
 நமது சிந்தனாமுறையில் அவ்வப்போது மீள்கண்டுபிடிப்புகளுக்கும் நாம் வரவேண்டும். மறுவிளக்கங்கள்- விவரிப்புகள், மறு சரிகட்டல்கள் என நமது செய்முறைகள் அமையவேண்டும் என்பார் பிபின்.
                   
Ref:
  1. Social Political Ideas of Bipin Chandra Pal-Amalendu Mookerjee
  2. Makers of Modern India- T V Parvate       
  3. Memories of My Life and Times-B C PAL
             
             
             
             

              

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...