Skip to main content

இஸ்த்வான் மீசாரஸ் Istvan Meszaros


இஸ்த்வான் மீசாரஸ் (1930-2017)

                                               -ஆர். பட்டாபிராமன்

 நம் காலத்தின் மகத்தான மார்க்சிய சிந்தனையாளர் இஸ்த்வான் கடந்த அக்டோபர் 1, 2017ல் மறைந்தார். ஹங்கேரி மார்க்சிய மரபில் வந்தவர் இஸ்த்வான். அங்கு டிசம்பர் 19, 1930ல் பிறந்தவர். தாயார் விமானகட்டுமான ஆலை ஊழியர். குழந்தை உழைப்பாளராக இஸ்த்வான்  அங்கு செயல்பட நேர்ந்தது.
 கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதன் மாற்றம் 1949ல் ஏற்பட்ட நிலையில் கல்விக்கு உபகார சம்பளம் கிடைக்கப்பெற்றார். புடாபெஸ்ட் கல்லூரி சென்றார் மீசாரஸ். அக்காலத்தில் ஸ்டாலின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஜார்ஜ் லூகச்சிற்கு ஆதரவு நிலையை இஸ்த்வான் எடுத்ததால் கல்லூரியிலிருந்து அவர் வெளியேற்றப்படவேண்டும் என்கிற நிலையை நிர்வாகம் எடுதத்து. ஆனால் அங்கு செயல்பட்டுவந்த கல்லூரி கவுன்சில் அவரை வெளியேற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட்டது. தேசிய தியேட்டர் குரூப் ஒன்றின் நிகழ்வை கடுமையாக ஆதரித்த நிலையை பார்த்த மார்க்சிய சிந்தனையாளர் லூகாச் இஸ்த்வானை தனது உதவியாளராக இருந்து பணியாற்ற அழைத்தார்.
 ஹங்கேரி எழுத்தாளர் அவைகளில் 1950-56 ஆண்டுகளில் இஸ்த்வான் தீவிரமாக பங்கேற்று வந்தார். கலை இலக்கியத்தின் தேசியத்தன்மை என்கிற அவரின் கட்டுரை இலக்கிய அமைப்புகளில் விவாத அடிப்படையானது. கலாச்சாரத்துறைகளில் பணியாற்றிய தோழர்கள் உதவியுடன் லூகாச், மீசாரஸ் ஆகியோர்  Consciousness  என்கிற பத்ரிக்கையை துவக்கினர்.
 இஸ்தவான் மீசாரஸ் பாரிசில் டோனெடெல்லா மோரிசியை சந்தித்து பிப்ரவரி 1956ல் மணம் புரிந்துகொண்டார்.  லூகாச் மேற்பார்வையில் தனது டாக்டர் பட்ட ஆய்வை மீசாரஸ் முடித்தார். புடாபெஸ்ட் பல்கலையில் அவர் அசோசியியேட் பேராசிரியராக வருவதற்கும் லூகாச் உதவினார். லூகாச் மறையும் காலம்வரை (1971) அவர்கள் வலுவான தொடர்புகளை வைத்திருந்தனர்.

 மீசாரஸ் ஹங்கேரியைவிட்டு வெளியேறி இத்தாலி டூரின் பல்கலைகழகம், லண்டன் பெட்போர்ட் கல்லூரியில் பணிபுரிந்தார். பின்னர் சூசெக்ஸ் பல்கலையில் தத்துவத்துறை பொறுப்பில் இருந்தார். 1971ல் மார்க்சின் அந்நியமாதல் குறித்த ஆய்விற்காக பாராட்டப்பட்ட அவர் ஐசக் டாயிட்சர் நினைவு பரிசை பெற்றார்.
பின்னர் டொரொண்டோ யார்க் பல்கலையில் முதுநிலை பேராசிரியாக சேர்ந்தார். கனடாவில் விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர் ஆபத்தானவர் என அங்கு உணரப்பட்டார். பெரும் அறிஞர்கள் எழுப்பிய எதிர்ப்பை அடுத்து விசா கொடுக்கப்பட்டது.  சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சூசெக்ஸ் பல்கலைக்கே திரும்பினார். 1995ல் ஹங்கேரியன் அறிவியல் அகாதமிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அவரது புகழ்வாய்ந்த பெரும் உழைப்பில் உருவான படைப்பான   Beyond Capital  வெளியானது. வெனிசூலாவின் சாவோஸ் அதை பாராட்டி பாதை திறந்துள்ளது- உலகம் தனது எதிர்வினை ஆற்ற கருவி கிடைத்துள்ளது எனப் பேசினார். 1990கள் துவங்கி புகழ்வாய்ந்த மன்த்லி ரிவ்யூ குழுவினருடன் நெருங்கி செயல்பட்டு வந்தார் மெசாரஸ். ஹாரி மாக்டப், ஜான் பெல்லமி ஆகியோருடன் தோழமை நெருக்கம் பலப்பட்டது. 2008 ல் வெனிசூலா அரசின் உயர் கெளரவ விருது அவரது விமர்சனாபூர்வ சிந்தனை முறைக்காக வழங்கப்பட்டது.

 சோசலிசத்திற்கான மாற்றம் என்பதை கடினமான மலையேற்றம் என்பதுடன் ஒப்பிட்டு பேசினார் மீசாரஸ். சார்த்தர் , லூகாச் குறித்து எழுதினார். கருத்தியலின் சக்தி, சோசலிசமா காட்டுமிராண்டித்தனமா, மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி, சமுக அமைப்பும்  உணர்வு வடிவங்களும், வரலாற்று கட்டத்தின் சவாலும் சுமையும், சமூக கட்டுப்பாட்டின் அவசியம் போன்ற புகழ் வாய்ந்த ஆழமான படைப்புக்களை சிந்தனை உலகிற்கு விட்டு சென்றுள்ளார் மீசாரஸ்.
சோவியத் வகைப்பட்ட சமுகத்திலும் காபிடல் சிஸ்டம் அப்படியே இருந்ததாக  கருதினார் இஸ்த்வான்.  Communal production  என்பதில் ஈர்ப்பு ஏற்பட்டுத்தான் சாவோஸ் கம்யூன் கவுன்சில் என்பதை வெனிசூலாவில் பரிசோதித்தார்.   The entire capital system and its State must be challenged in their inner functioning and from both within the core of productive order..  இதற்கு மாற்றாக  Communal system of social metabolic production  என அவர் பேசிவந்தார். புரட்சிகர மாற்றத்திற்கு முக்கிய ஏஜென்சியாக நிற்கவேண்டிய தொழிலாளிவர்க்கம் எவ்வாறு அந்நியமாகியுள்ளது என்பதை இஸ்த்வான் பேசினார் சோசலிச கட்டுமானம் என்பதற்கு வழிகாட்டி என்கிற புகழுக்கு உரியவரானார் மீசாரஸ்..
அந்நியமாதல் என்பது நமது காலத்தில் விதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்கிற கருத்தை அவர் ஆழமாக வெளியிட்டுவந்தார்.  The state that we must conquer in the interest of humanity's survival is the state we know it, viz the state in general in its existing reality, as articulated in the course of history, and capable of asserting itself only in its antagonistic modality both internally and in its international relations  என்கிற விளக்கத்தை இஸ்த்வான் தந்தார்.
பராளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகம்  குறித்து விமர்சனபூர்வ பார்வையை அவர் வைத்திருந்தார். மக்களுக்கு அந்த ஜனநாயகம் பெரும் பலன்களை தரவில்லை என்கிற முடிவிற்கு இஸ்த்வான் வந்திருந்தார்.  Few- Many- All  என்பதை எடுத்து சொல்லி அனைவருக்கும் என பேசும் சிலரின் பிரதிநிதித்துவம் பலரையும் வெளியில் வைக்கிறது என்றார். The question of substantive democracy is a matter of the vital decision making processes in all domains and at all levels of the societal reproduction process, on the basis of substantive equality. And that requires the radical alteration of the social metabolism as a whole, superseding its alienated character and the alienating superimposition of overall political decision making by the state over society. That is the only sense in which substantive democracy can acquire and maintain its meaning.  சாரமான ஜனநாயகம் என்பதற்கான  அவரது விளக்கமாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
சோவியத் வீழ்ச்சி நடந்து 20 ஆண்டுகளுக்கு பின்னரும் சோசலிச கட்டுமானம் என அவர் பேசுவது சரியா என அவரிடம் கேட்கப்பட்டபோது 20 ஆண்டுகள் என்பதெல்லாம் வரலாற்றில் பெரும் கட்டமல்ல என்றார். பாவூஃப் போன்றவர்கள் சமத்துவ சமூகம் என பேசத்துவங்கி 200 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. குடிமகன் என்கிற வகையில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சம் உரிமைகள் என அவர்கள் பேசினர். எனவே வரலாற்றின் சவால் என்பது பட்டுப்போகிவிடாது. அரைகுறை அவசர தீர்வுகளால் அவற்றின் தோல்விகளால் அவை நிகழ்ச்சிநிரலிருந்து இல்லாமல் போய்விடாது என்கிற சோசலிச கட்டுமான திட்டம் குறித்த நம்பிக்கையை அவர் வலுப்படுத்தினார்.
 இஸ்த்வான்  இங்கிலாந்தில் 2017ல்  மறைந்தபோது  அவருக்கு வயது 86. இஸ்த்வான் எழுத்துக்கள் கடினமானவையாக தோன்றினாலும் கருத்தூன்றி படிப்போர் அவரது எழுத்துக்களை தமிழுக்கு கொணரும்போது சோசலிச கட்டுமானம், முதலாளித்துவ முறை, அரசு குறித்த விளக்கங்களுக்கு மேலும் ஆழமான புரிதலை அவர் நமக்கு தருவார். தமிழ் உலகில் செயல்பட்டுவரும் முன்னணி மார்க்சிய அறிஞர்கள் இஸ்த்வான் கருத்தாங்களை  தமிழுக்கு கொணர்ந்தால் இடதுசாரி இயக்கங்களில் அவை புதிய தாக்கத்தை உருவாக்கும் என நம்பலாம்


Comments

  1. Really a difficult and much impregnated ideas superimposed lines even from the two lines that were quoted

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா