சாதிக்கு எதிராக காந்தி
- ஆர். பட்டாபிராமன்
(புத்தக அறிமுகம் ஜூலை
4 2018ல் சென்னை காந்தி கல்வி நிலையத்தில் உரையாக வழங்கப்பட்டது. இங்கு எழுத்து வடிவில் தரப்படுகிறது)
Gandhi Against Caste அம்பேத்காருக்கு சமர்ப்பணம் ஆகியுள்ள புத்தகம். ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2017ல் வெளியிட்ட புத்தகம். ஆசிரியர் நிஷிகாந்த் கோல்கே. Dr Nishikant Kolge திரிபுரா பல்கலை பேராசிரியர். காந்தி ஆய்வுகளில்
ஈடுபட்டு வருபவர். தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். was Gandhi a Racist, Gandhi's criticism on
industrialistaion, modernity, was Gandhi a champion of caste system, Ambedkar
the philosopher, A response to Arundati Roy’s Doctor and saint, Gandhi's
interpretation of Religion God politics, Merging religion with politics,
Gandhi's concept of swaraj போன்றவை அவரின்
சில கட்டுரைகள். IIT Madras department of
humanitiesல் அவரின் டாக்டர் பட்ட ஆய்விற்காக 2014ல் அவர் எழுதியது Gandhi Against
Caste என்ற புத்தக வடிவம் பெற்றுள்ளது.. இதுவரை போதுமான அளவு வெளிக்கொணரப்படாத காந்தியின் சாதிக்கு எதிரான ஸ்டார்டிஜி குறித்த விரிவான ஆய்வே நோக்கம் என்கிறார் ஆசிரியர்.
புத்த்கம் 5 பிரிவுகளாக உள்ளது. சாதிக்கு எதிரான சண்டையில் காந்திக்கு ஏதாவது செயல்தந்திரம் இருந்ததா, காந்தி எதற்காக நின்றார், எதை அடைய எத்தனித்தார், மூன்று நான்கு பிரிவுகளில் அவரிடம் பரிணமித்து வந்த
சாதி ஒழிப்பு செயல்தந்திரம். அய்ந்தாவதில் அம்பேத்கார், ஆர்ய சமாஜ் காந்தி அணுகுமுறைகள் குறித்த விமர்சன பார்வை வைக்கப்படுகிறது. அடுத்து அருந்ததிராய்க்கு பதில் என்ற வகையில் அவர் எழுதிய கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னுரையை ராஜ்மோகன்காந்தி எழுதியுள்ளார்.
ராஜ்மோகன் காந்தி தனது முன்னுரையில் கோல்கே தர்க்கரீதியாக துல்லியமாக ஆய்வை நகர்த்துகிறார் என்கிறார். எனது நடத்தை நடவடிக்கைகளிலிருந்து உணரமுடியாத ஒன்றை எனது வார்த்தைகளிலிருந்து பெறமுடியாது என்கிற காந்திய வாக்கியம் கோல்கேவை அவரது நடைமுறை அன்றாட செயல்பாடு குறித்து ஆய்விட வைக்கிறது. காந்தியடிகளின் முன்பின் முரணான சீரற்ற கருத்துக்கள் மூன்றுவகையால் உருவாகியிருக்கலாம். அவரது சிந்தனை முரண், காலம்போக ஏற்பட்ட மாற்றம், அல்லது அவரின் செயல்யுக்தி வகைப்பட்டதாக இருக்கலாம். கோல்கே செயல்யுக்தி என்கிற முடிவிற்கு வருகிறார். இங்கு ஸ்ட்ராடஜி என்பது ஏதோ
சாதுர்யமான ஒன்றல்ல- not skillfull meeans திறமையான வழிமுறைகள், குறிப்பிட்ட வழிகளில் மற்றவரை நிதானமாக செயல்பட்டு ஏற்க செய்திடும் வகை. இதை காந்தியே தெளிவுபடுத்துகிறார். எனக்கு கருத்து இருப்பது வேறு அதை மற்றவர் மீது வலிந்து திணிப்பது என்பது வேறு. எனக்கு 125 ஆண்டு வாழ வாய்ப்பிருந்தால் இந்துக்களை முழுமையாக இணங்க செய்ய முடிந்துவிடும் என்கிற நம்பிக்கை இருப்பதாக
1947ல் அவர் தெரிவித்தார்.
கோல்கே பொறுத்தவரை காந்தி ஸ்ட்ராடிஜி கொண்டவர் என நிரூபிப்பது கூட கடினமான ஒன்றேயாகும். (Here
strategy is not any clever or unfair act
but skillful means- persuading towards a particular direction- but it is difficult to prove that he had that
approach of strategist).
தனது அரசியல் நிலைப்பாட்டில் பலம்கூடக்கூட அவர் இந்துக்களிடம் வைக்கும் கோரிக்கைகளின் உக்கிரம் அதிகமானதாக ராஜ்மோகன் குறிப்பிடுகிறார்.(As on consolidating his political positions his
reforms stand and demands becoming tougher).
தனது 12ஆம் வயதிலேயே சாதிக்கு எதிரான போராட்ட உணர்வு எழும்பத்துவங்கிவிட்டதாக காந்தி குறிப்பிடுவார். அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை நாம் பட்டியலிட்டுக்கொள்ள இயலும். தீண்டாமை ஒழிப்பு, சாதி உயர்வு தாழ்வு இல்லை, வர்ண பேதமில்லை, அனைவருக்கும் பள்ளி, நீர்நிலை குளம், கிராமத்தொழில் வாய்ப்பு, ஹரிஜன் ஒதுக்கீடு, சாஸ்திரங்களின் லிமிடேஷன், சேர்ந்து உண்பது, கல்ப்பு மணம், சம்ஸ்கிருத மாயை கலைப்பு, கீழ்னோக்கிய இயக்கம் திரள்தல் என அவரது போராட்ட எல்லைகள் விரிவாகவே இருந்தன. அவருக்கு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபதல் அல்ல சுயராஜ்யம். இணக்கத்துடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்காகன கூட்டுமுயற்சியின் திறமையும்கூட(For
him Swaraj is not only collective
freedom from alien rule- collective capacity of individuals to live together in
harmony). அவருக்கு நன்னெறியையும் காரண காரிய அறிவிற்கும் உதவிடாத சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை.
முதல் பிரிவு Chapter 1 Was there a strategy in MKG’s approach to
fight against caste system?
காந்தி தன்னை போர்வீரர் களப்பணியாளர் என அழைத்துக்கொள்வார்.
கொள்கையாளர் டாக்ரினர் என காட்டிக்கொள்ளமாட்டார். யுத்தபுரிதலுடன் செயல்படுபவர் என்பார்
(பூனா செப்4 1924). சிறந்த தளபதி காலம் இடம் பார்த்துதான் போர் அறிவிப்பார். இதை தன்
கைநழுவி எதிரிக்கு போய்விட அனுமதிக்க மாட்டார் என்பார்( 15 நவ 1939)
அவரது எழுத்துக்களில் சாதி, வர்ணம் குறித்த உயர் மதிப்பீடுகள்
இல்லாமல் இல்லை. இயற்கையான நிறுவனங்கள் போல் கருதினார். இந்து மத உடைவை அவை தடுப்பதாக
நம்பினார். முறைப்படுத்தப்பட்டால் பயன் அளிக்கும் என்றுகூட கருதினார். அதே நேரத்தில்
கடுமையான விமர்சனங்களை வைக்காமல் இல்லை. காந்திக்கு எதிர் காந்தி என்பது எளிதான ஒன்றே
என ஜோசப் லேலிவெல்ட் சொல்வார். சாதிக்கு எதிராக உக்கிரமான நேரிடை தாக்குதலை காந்தி
தராமை என்பது தந்திரோபாயம் (டாக்டிக்ஸ்) என நந்தா, சுகர்கோட்டட் பில்ஸ் என ராஜ்மோகன்
காந்தி, அவரது செயல்பாட்டை கொண்டே அவரை மதிப்பிடவேண்டும் என ராகவன் போன்றவர் சொல்கின்றனர்.
எனவே கோல்கே அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஆசிரம வாழ்க்கையை விவாதிக்கிறார்.
இந்துக்களின் சாதி விதிகளில் 4 அடிப்படைகளாக உள்ளன. தீண்டாமை-
தொட்டால் தீட்டு, சேர்ந்து உண்ணாமை, அகமணம், தந்தைவகைப்பட்ட குலத்தொழில் இந்த நான்கையும்
அவர் அனுசரிக்கவில்லை. சிறுவயதில் உகா அனுபவம், தென்னாப்ரிக்காவில் கஸ்தூர்பா, மாதவிலக்கி
தள்ளிவைப்பு இல்லை, நாயக்கர் எனும் தலித்தை உடன் அழைத்துவருதல், இந்தியாவில் லட்சுமி
தலித் குழந்தையை தத்து எடுத்தல், வார்தாவில் கோவிந்த் என்பார்தான் சமைத்து தருபவர்
போன்றவற்றை கோல்கே குறிப்பிட்டு சொல்கிறார்.
தென்னாப்ரிக்காவில் போலக் கிறிஸ்துவப் பெண்ணிற்கு ஹென்றிபோலக்
யூதரை மணமுடித்தல் சேர்ந்து தன்னுடன் தங்க வைத்தல், மகன் ராம்தாஸ் வேறு சாதிப்பிரிவில்
மணம், தேவதாஸ் வேறு வர்ண மணம், ஆசிரமப் பெண் லட்சுமிக்கு பிராமண பையன் மணம் ஆகியவை
அவரால் ஏற்கப்பட்டே நடந்தன. அதே போல் உடல் உழைப்பிற்கு மரியாதை, கழிப்பறை சுத்தம்,
துவைத்தல், செருப்பு தைத்தல், தையல், விவசாயம் என அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்தல்-
தொழில் கல்விக்கு முன்னுரிமை என உடல் உழைப்பின் மேன்மையை கொண்டாடுதல் இருந்தது.
தனது அறிவைற்கு பாதகமாக பேசும் சாஸ்திரங்களை ஏற்காமை. கடவுளிடமிருந்து
ஏதும் நேராக வரவில்லை. இரு வடிகட்டல்களுக்கு பின்னர்தான் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன.
தீர்க்கதரிசிகள், விரிவுரையாளர்கள் என வடிகட்டல்கள். நான் கோயிகளுக்கு செல்வதில்லை.
தேவையை உணர்வதில்லை.. (MKG “ I cannot let a scriptural text supercede my reason..
nothing comes from God directly.. they suffer from a process of double
distillation- human prophet then thro interpretation of commentators.. my seat
of authority- he pointed his chest.. lies here. Hardly ever prayed in temples less visits “ I do not vist temples and I felt no need to
go ( March 19 1933) An idol does not excite any feeling of veneration in me )(oct
6 1921)
சைவ உணவு, பிரேயர் என்பதை நடைமுறையாக வைத்திருந்தார். அங்கும்
உருவ வழிபாடு இருக்காது. அனைத்துமத பிரார்த்தனைகள், சொற்பொழிவு, புனித புத்தகங்களிலிருந்து
சில விளக்கம் என்பதாக பிரார்த்தனை நேரம் இருந்தது.
அவரது நடைமுறையில் வைதீகத்தன்மை (ஆர்த்தோடாக்சி) இல்லை. அவர்
புரட்சிகரமாக நடந்துகொள்ளாமல் இருக்கலாம் சீர்திருத்தவாதியாக இருந்தார். 1904ல் போனிக்ஸ் ஆசிரமம், 1910ல் டால்ஸ்டாய் பண்ணை, இந்தியாவில்
1915ல் அகமதாபத் அருகில் கோச்ராப் சபர்மதி சத்யாக்கிரக ஆசிரமம், 1936 வார்தா சேவாகிராம்
போன்ற ஆசிரமங்களின் நோக்கம் அன்றாட செயல்பாடுகள், அனுசரிப்புகளை கோல்கே விவரிக்கிறார்.
முதல் ஆசிரமம் இந்திய ஒப்பினியனுக்கு நிதிதிரட்ட, இரண்டாவது சத்தியாக்கிரக போராளிகளுக்கு
குடும்பத்திற்கு உதவிட, மூன்றாவது நான்காவது சத்தியாக்கிரக போராட்டமுறை பழக்கிட,. அவரது
ஆசிரமத்தில் பலதரப்பட்டவர் பல சாதியினர், மதத்தினர் சேர்ந்தே இருந்தனர். ஒன்றாக உணவு,
பிரார்த்தனை. உடல் உழைப்பில் பல்வேறு வேலைகளில் சுழல் முறையில் ஈடுபட்டனர். அங்கு குலத்தொழில்முறை
அனுசரிக்கப்படவில்லை. வர்ணாஸ்ரமம் இல்லை. கலப்பு
மணம்கூட நடந்தன. இந்து - டெண்டுல்கர் மணம் நடந்தது.. “ Ashram is the measuring rod people can judge
me “
என்றார் காந்தி.
தலித் விமர்சகர்கள் அவர் பார்ப்பனர்க்கு மேலான பனியாவாக இருக்கிறார்.
வர்ணாஸ்ரமம் ஆதரிக்கிறார். மூதாதையர் தொழில் என்கிறார். நவீனதொழில்முறையாவதை விமர்சிக்கிறார்.
கர்மா என்கிறார் என்ற விமர்சனங்களை வைத்துவருகின்றனர். ஆனால் காந்தி ஈழவர் கூட்டத்தில்
உங்கள் வரலாற்றை நீங்களே நிர்மாணியுங்கள் மனிதன்தான்
அவனது வரலாற்றை உருவாக்குபவன் என்று உற்சாகப்படுத்தினார். வைதீகத்தை ஆசார அனுஷ்டானங்களை
அதனிடத்தில் விட்டுவிடுங்கள் என்றார் (13-3-1925
ezhava meet varkalai)
Ch 2 What did Gandhi stand for and what did he
intend to achieve?
அவர் உத்தியியலாளர். அவரது சீரற்றதன்மையே (inconsistency)
அவரது உத்தி என்கிறார் கோல்கே . Yes strategist- His
inconsistencies are the basic strategy
இந்தியா வந்தவுடன் இங்குள்ள இந்துக்கள் இன்னும் தயாராக இல்லாத
நிலையை கண்ணுற்றார். எனவே நிதானகதியில் மாற்றங்கள் உருவாக்கம் எனும் உத்தியை அவர் மேற்கொண்டார்.
அவரது சுயராஜ்ய தூண்கள் தீண்டாமை ஒழிப்பு, இந்துமுஸ்லீம் ஒற்றுமை, காதி. அவர் வர்ணாஸ்ரமம்
நான்காவது தூண் என ஒருபோதும் சொல்லவில்லை ஏற்கவும் இல்லை. அவர் கோட்பாட்டைவிட நடைமுறை செயல்பாட்டிற்கு முக்கியத்துவம்
தந்தார். அறிவின் தாகத்திற்காக ஏதும் செய்பவராக இல்லை. செயல்தான் அவர் தளம். (His importance of practice over theory- Oxymoron ‘ Practical Ideaist’ . He did not do
anything for intellectual quest or did nothing as armchair philosopher.) காந்தி ”
I am not built for academic writings. Action is my domain என்பார்.
தென்னாப்பிரிக்காவின்
21 ஆண்டுகள் அவருக்கு வெகுஜனமக்களை திரட்டும் பெரும் பயிற்சியை தந்தது. அந்த உத்தியை
அவர் கற்றார். இந்தியாவில் பிறந்தேன் தென்னாப்பிரிக்காவில் உருவானேன் என்பார். நிறபேதம்,
தலைமைத்துவம், விவாத திறன், பத்திரிக்கை அனுபவம், சத்தியாக்கிரகம், இந்துமுஸ்லீம் ஒற்றுமை,
தீண்டாமை எதிர்ப்பு, பிரம்மசர்யம், பெண்களை பொது இயக்கத்தில் பங்கேற்க வைத்தல் ஆகியவை
மிக முக்கிய பயிற்சிகளாயின.
அவரது 1909 இந்து சுயராஜ் பல வாசிப்புகளுக்கு இடம் தந்த ஆக்கம்.
தத்துவ பின்புலம் கொண்டது, உத்தி சார்ந்த, தேசிய தடம் கொண்ட, நாகரீகங்களின் மோதலை உணர்த்தும்
படைப்பது போன்ற வாசிப்புகள் உள்ளன. வெறும் தேசிய உரையாடலில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதுடன் உரையாடலை அப்படைப்பு நிறுத்திக்கொள்ளவில்லை. இங்கிலிஸ்தானுக்கு
பதில் இந்துஸ்தான் அல்ல என்பார் காந்தி. இந்தியாவின் பண்டைத்தன்மைதான் என்ற புகழ்பாடலோ, மேற்கின்
அனைத்தும் மோசம் என்கிற பாரபட்ச விமர்சனமோ இல்லை. அவர் மருத்துவமனைகள், ரயில் போன்றவற்றை
பயன்படுத்தாமல் இல்லை. அவரது மூத்த குரு கோகலே , அவரது சீடர் நேரு மேற்கு கல்விபின்புலம்
கொண்டவர்களே. அவர் இந்தியாவை இருண்ட காலம் நோகி அழைத்து செல்ல திட்டமிடமில்லை. அவரது
சுயராஜ்ய புத்தகத்தின் சான்றாதார புத்தகங்களில்
இரண்டு மட்டுமே இந்திய ஆசிரியர்களுடையது
அவரைப்பொறுத்தவரை அரசு என்பது ஆன்மா அற்ற எந்திரம் என்கிற
பார்வை பலமாக இருந்தது. அது வன்முறையின் உருண்டு திரண்ட வடிவமாககூட அவர் பார்த்தார்.
தனிமனித கெளரவம் என்பதன் அடிப்படையை உணர்வது என்ற சரடு அவரிடம் ஓடியது..
அந்தோணி பரேல்
அவரது சுதந்திரம் பற்றிய பார்வையை மிகப்பொருத்தமாக வர்ணிக்கிறார் . ”gandhian freedom and self
rule means national independence,political, economic freedom of the individual
and spiritual freedom or self rule. Though each distinguishable, together
inseparable”- Anthony Parel . அவரது
தேசபக்தி என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டிஷ் கொடுங்கோன்மை போன்றதே
இந்திய கொடுங்கோன்மையும் என்று வெளிப்படையாக பேசியவர் காந்தி. இந்தியாவில் லட்சக்கணக்கானோரை
தீண்டாமை கொடுமையில் ஆட்படுத்தும் நமக்கு அந்நியரிடம் நீதி கேட்க என்ன உரிமை என்றவர்.
சுதந்திரம் பெற உங்களை தகுதிப்படுத்திக்கொள்வீர் எனக்கோரியவர்
காந்தி. அது கீழிருந்து துவங்குகிறது. அது கூட்டாக அந்நியர்களிடமிருந்து விடுதலைப்பெறுவது
மட்டுமல்ல- தனிநபர்கள் கூட்டாக இணக்கமாக வாழ்வதற்கான சக்தியும்கூட.( make yourself fit for
swaraj- Swaraj begin at the bottom- by each for himself should be experienced-
Not mere collective freedom from alien rule- but the collective capacity of the
individuals to live together in harmony)
கடமைகள் உரிமைகள் விவாதத்தில் அவர் எச் ஜி வெல்ஸ் இடம் கடமைகளை செய்வோம் உரிமை வந்து
சேரும். என்னைவிட அதிக உரிமை பெற்ற நபர் யார் எனக் கேட்டார். மனிதனை கெட்ட சாத்தான்
என எண்ணவேண்டாம் என்பார். அடிப்படை மனித சாரம் என்கிற ஒற்றுமை இழையை அவர் கண்டார்.
அவரைப்பொறுத்தவரை லைசென்ஸ் என்பது சுயநலம் சார்ந்த ஒன்று. அவரின் பொருளாதார கருதுகோள்கள்
எளிமையானவை. தானே ஏற்றுக்கொள்ளும் எளிய வாழ்க்கைமுறை. தன்னிறைவு சுயதிருப்தி அவரைப்பொறுத்தவரை Economic freedom is ability
to minimize one’s needs. அவரது
இலட்சிய சமூகம் சுய ஆட்சி கொண்ட தனிநபர்களின் கூட்டுத்தொகுதி (His ideal society
can be perceived as a group of self ruled autonomous individuals).
தேச வாழ்வில் சுயக்கட்டுப்பாடு என்பது அன்றாட நிகழ்வானல்
பிரதிநிதித்துவம் என்பது பெரிய விஷயமல்ல என்பார் (.a state of enlightened
anarchy in which each person will become his ruler. He will conduct himself in
such a way that his behavior will not hamper the well being of his neighbours.
In an ideal state there will be no political institution and therefore no
political power ( Jan 1939 CWMG Vol 68 p 265)”)
where is varnashram in it இதில் எங்கு வர்ணாஸ்ரம் இருக்கிறது என கோல்கே வினவுகிறார்.
அவரிடம் ஆண்ட்ரூஸ் விடுதலை போராடத்தை விடுத்த நிலையில்தானே
தீண்டாமை எதிர்ப்பு என்கிற பொருட்பட எழுதியபோது காந்தி வருத்தமுற்றார். சுதந்திர
போராட்டத்தைவிட பெரியது. அரசியல்வேலையில்லாமல் சமூக வேலைஇருக்கமுடியாது என்பதால் அரசியல்
வேலையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். சமூக வேலைக்கு உதவும் அளவிற்குத்தான் அரசியல்வேலை
என்றார்.(Whether
struggle for UT a subset no -problem of untouchability- caste system
bigger one than that of gaining
independence- no way less or subordinate to political work. My social work
impossible one without the political work. I took the later only to the extent
that it helped the former.” lr to CF Andrews )
Protecting individual from
dissolution either in a pre modern totality or modern bureaucratic state. நாகரீகம் என்கிற பெயரிலோ பழமை என்கிற பெயரிலோ தனிமனிதமுறிவு
உடைவு கலைப்பு என்பதை அவர் நிராகரித்தார்
Ch 3 Evolving strategy to abolish caste system
அவரின் இலட்சிய சமூகத்தில் தனிநபர் சுதந்திரம் முக்கியத்துவம்
பெறுகிறது. அங்கு சாதியோ வர்ணமோ அடிப்படையில்லை. அவரின் போராட்டத்தில் சாதி எதிர்ப்பு
தனித்த ஒன்றல்ல. விடுதலைப்போராட்டத்தின் ஊடானதான ஒன்று ஒன்று மற்றதிற்கு துணைநிற்பதாக
இருக்கிறது.
கோல்கே அவரின் 1915-20, 20-27, 27-32, 32-45 மற்றும்
1945-48 காலகட்டத்தில் அவரின் தீண்டாமை எதிர்ப்பு, சாதி, வர்ணம், சனாதனம், சாஸ்திரங்கள்,
சேர்ந்துண்ணல், கலப்புமணம் ஆகியவை குறித்த அவரது உத்திகள் பேசப்படுகின்றன. அனைத்துமே
விடுதலைப்போராட்டம் என்கிற பின்புலம் சார்ந்து நிற்கின்றன. His evolving strategy a
continuous pattern of behavior a way of life containing occasional tactic( like
fast)
1918வரை அவருக்கு காங்கிரசில் பெருமளவு முக்கியத்துவம் இல்லை.
1917ல் சப்ஜக்ட் கமிட்டிக்கு நுழைய 3 வாக்கு மட்டுமே பெற்று போகமுடியவில்லை. அவர் அன்னியின்
ஹோம்ரூலில் இல்லை. 1918 பம்பாய் கூட்டத்தில் மாண்டேகு செம்ஸ் விவாதத்தில் அவர் இல்லை.
ஆனால் செம்ஸ்போர்ட் அழைப்பை ஏற்று யுத்த ஆளெடுப்பில் ஈடுபட்டார். படேலுடன் அதற்காக
தினம் 20 மைல் பயணித்தார். சாந்தி நிகேதன் சென்றபோது ஏன் பிராமண சமையல்காரர் என வினவினார்.
வேறு ஆசிரமம் ஒன்றில் உடல் உழைப்பை பற்றி வலியுறுத்தினார். ஹரித்வாரில் தூய்மை சுகாதாரம்
சர்க்காவின் முக்கியத்துவம் பற்றி உரையாடினார்.
அகமதாபாத் கோசார்ப்
ஆசிரமத்தில் சர்க்காவை அவசியமாக்கினர்- 1915 செப்டம்பரில் தலித் குடும்பம் சேர்ந்ததால்
பலர் வெளியேறினர். உறவினர் மகன்லால் உட்பட. . பணம் வருவதும் நின்றது. சமூக பகிஷ்காரம்
என்ற பேச்சும் வந்தது. அவர் அப்போது 46 வயதில் இருந்தார். தான் இந்துமதத்தை அழிக்க
வரவில்லை. தூய்மைபடுத்தவே முயற்சிப்பதாக தெரிவித்தார். தானும் சனாதனிதான் என்றார்.
ஆசிரம பள்ளிகளை நிறுவினார்.
1919 ரெளலட் அடுத்து
அக்டோபரில் பஞ்சாப் கிராமங்களுக்கு சென்றார். கிலாபத் இயக்கத்தை தீவிரப்படுத்தினார்.
தனது இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு என்பத்ற்கு அரசியல் அவசியம் என்றார்.
கடவுளின் படைப்பில் பாவ மனிதன் ஏது என்றார். தொட்டால் தீட்டு என்பதற்கு மத ஆதாரமில்லை
என்றார். அப்போது அவர் உணவு, திருமணம் பற்றி பேசவில்லை. தீண்டாமை இருந்தால் சுயராஜ்யத்திற்கு நாம் தகுதி பெற்றவராக மாட்டோம்
. சாதிமுறை முறைப்படுத்தப்பட்டால் பயன்தரும் நிறுவன வடிவமே என தெரிவித்தார். அகமணமுறை
ஒருவகை சுயக்கட்டுப்பாடு என்றார். (In 1918
his purest service to Hinduism is
telling people to reject the notion that
touching bangis is sin..untouchability is a sin crime- destroy this serpant or
devoured by it. Still untouchability is there are we fit for swaraj?)
அவர் காங்கிரசை சம்பிரதாய சட்டவடிவம் என்பதிலிருந்து மக்கள்
திரள் இயக்கமாக்கியவர். வன்முறையற்ற அகிம்சைவழியில் ஏழைகளும் எதிர்த்து நிற்கமுடியும்
என்பதை அவரால் உணர்த்தமுடிந்தது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று அங்கு நம்பூதிரிகளுடன்
விவாதித்தார், நாராயணகுருவை சந்தித்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் விவாதித்தார். தீண்டாமையை
கொண்டாடுவது இந்து மத அழிவிற்குரியது என்றார். சுயராஜ்ய பிரச்சனையைவிட இது பெரியது
என்றார். அவர்களுக்கு குளம், சாலை, கல்விக்கூடம் செல்ல பயன்படுத்த தடைகூடாது. சமஉரிமைகள்
கொடுக்கப்படவேண்டும் என்றார்.
நால்வர்ணம் என்பதை ஏற்றே பேசிவந்தார். தன்னை சனாதனி என அழைத்துக்கொண்டார்.
1921 தமிழக சுற்றுப்பயணத்தில் திண்டுக்கல்லில் செப் 1921ல் சனாதனி என்கிற வகையில் தீண்டாமை
அவசியமில்லை என நான் சொல்வேன் என்கிறார். அதற்கு சாஸ்திரங்களில் இடமில்லை. நால்வர்ணம்
என்றாலும் எந்த வர்ணமும் மற்றவர் குணம் முற்றிலும் அற்றவராக இல்லை என்றார். உணவு, நீர்நிலை,
திருமணம் போன்றவற்றில் நாம் அனுசரிப்பவை முக்கிய விதிகள் இல்லை என்றார். அவரது செல்வாக்கால் 1929 காங்கிரஸ் செயற்குழு கோயில்
நுழைவு கமிட்டி ஒன்றை அமைத்தது.
மணிலால் முஸ்லீம் பெண் ஒருவரை மணமுடிக்க கோரியபோது கூடாது
என்றார். அவசியமற்ற பிரச்சனைகள் வரலாம் என்றார். அவர் 1932ல் உபசாதிகள் எதற்கு என்றார்.
சாஸ்திரங்களில் சாதிக்கு இடமில்லாதபோது ஏன் இவ்வளவு சாதிகள் என்றார். Caste is an
excrescence just like UT upon Hinduism . இந்துமதத்தில் ஏற்பட்ட மிகை வளர்ச்சி தேவையற்ற
சதை என்றார்.
Chapter 4
Evolving Strategy 1932-48.
அவரது 1932 பட்டினிப்போர் மிக முக்கியமானதாக உன்னத நோன்பாக
பியாரிலாலால் வர்ணிக்கப்படுகிறது
சைமன் கமிஷன் தாழ்த்தப்பட்டவற்கு ஒதுக்கீடு என சொன்னது. முதல்
வட்டமேஜைக்கு காங்கிரஸ் செல்லவில்லை. அம்பேத்கார், சீனிவாசன் சென்றனர். இரண்டாவதில்
காந்தி பங்கேற்றார். தனி வாக்காளர் தொகுதி ஏற்கமுடியாதென்றார் 1931-செப்-நவ நடந்த மாநாட்டில்
முடிவு எட்டப்படாததால் பிரதமர் ராம்சேவிடம் விடுவது என்பதை ஏற்றனர். பிரதமர் ராம்சே
தனது அவார்டை ஆகஸ்ட் 17 1932ல் தந்தார். எதிர்ப்பை தெரிவித்து காந்தி கடிதம் எழுதினார். செய்தது சரி
என பிரிட்டிஷ் பதிலைத்தந்தது.
அறிவித்தபடி காந்திசெப் 20 1932ல் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
அடுத்தநாள் பத்திரிகை பேட்டியில் பொதுத்தொகுதியில் இட ஒதுக்கீடு ஏற்கலாம் கோயில் நுழைவை
வலியுறுத்தலாம் என்றார். சாதி இந்து தலைவர்கள் மாளவியா தலைமையில் கூடினர். அம்பேத்காருடன்
பேச்சுவார்த்தை நடந்தது. பிறப்புவழிதீண்டாமை அனுசரிக்கக்கூடாது. பொது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும்
என்கிற தீர்மானம் இயற்றப்பட்டது. அம்பேத்கார் தனக்கு முன் நிற்கும் பெரும் பிரச்சனையை
வெளிப்படுத்தினார். காந்தி உயிர் என்பதை நிராகரிக்க முடியவில்லை.(.BRA told “
There was before me a duty as apart of common humanity to save Gandhi from sure
death. There was before me the problem of UT- Political rights which the PM had
given them”)
அம்பேத்கார் கூட்டுத்தொகுதிகளை ஏற்கலாம் 197 இடங்கள் என்றார்.
பிரிட்டிஷ் அரசு 78 என்று சொல்லியிருந்தது. பேச்சுவார்த்தையில் 148 ஏற்கப்பட்டது. ராஜாஜி,
சாப்ரூ, ஜெயகர் உதவினர். காலம் 10 ஆண்டுகள்- பின்னர் விவாதித்து முடிவு என்றனர் அரசாங்கம்
செப் 26 1932 ல் பூனா உடன்பாட்டை ஏற்க காந்தியின் உண்ணாநோன்பு முடிந்தது.ராஜாஜியும்
அமபேத்காரூம் தங்கள் பேனாக்களை மாற்றிக்கொண்டனர் என்பதை ராஜாஜி தன் அம்பேத்காருக்கு
மறுப்பில் தெரிவிக்கிறார். பின்வந்த ஆண்டுகளில் 1945-46ல் அம்பேத்கார் இதை கடுமையாக
விமர்சித்தார். அதற்கு ராஜாஜி, சந்தானம் போன்றவர்கள் பதிலை எழுதினர்.
Dali
scholars claim that Gandhi’s fast deprived them a lifelong saving instrument
for transforming themselves into a political force- separate electorates only
for real political force. நேரு, ஈஎம் எஸ் போன்றவர்கள் கூட தேவையற்ற டைவர்சன் என்றனர்.
காந்திக்கோ இந்துமத பிளவை காக்கவேண்டும். காந்திக்கு என்ன நோக்கம் என கோல்கே ஆய்வு
செய்கிறார்.
why then deliberately
gone on fast?
a. to reassure
his political authority- reviving the failing civil disobedience movement
b. BRA’s
growing popularity a threat- used award as an opportunity
c. To bring
social awakening among caste hindus- to drive his anti caste movement
d. chosen as
right moment to lauch decisive attack on UT- striking the root
e. Dandi march
strategy against British and award fast strategy against UT
உடனடியாக ஹரிஜன் சேவா சங்கம் பிர்லா, தக்கர்பாபா பொறுப்பில்
உருவாக்கப்பட்டடது. 1933 ஹரிஜன் வார இதழ்- இந்தி, குஜராத்தி, தமிழ், உருது, பெங்காலி,
ஆங்கிலம் போன்ற மொழிகளில் கொணரப்பட்டது.
ஆத்ம சுத்தியுடன்
தீண்டாமை ஒழிப்பு பணி நடைபெற காந்தி விரும்பினார். இதற்காக 21 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டார்(fast
for 21 days may 8-28 1933 self purification). தேவதாஸ்- லஷ்மி திருமணம் இக்காலத்தில்
நடைபெற்றது.
மிக முக்கிய ஹரிஜன யாத்ராவை 1933 நவம்பர் 5 முதல் ஆகஸ்ட்
2 1934 வரை 12500 மைல் தூரம் நடத்தினார். தினம் 50 மைல் பயணித்தார். தனிப்பட்ட அனுபவங்களைப்
பெற்றார். ஒரிஸ்ஸாவில் பெளரிஸ் சாதிப்பிரிவினர் பிற ஸ்வீப்பருடன் சேர்ந்து
உண்ண மறுப்பை கண்ணுற்றார். சில இடங்களில் காந்திக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.
நாக்பூரில் முட்டை வீசினர். பனாரசில் உருவம் எரித்தனர். பூனாவில் குண்டு வீசினர். அவர்
பூனா சென்ற ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. பீகார் பகுதிகளில் கல்வீசப்படது. பல இடங்களில்
இந்து தர்ம விரோதி என துண்டறிக்கைகள் வீசப்பட்டன.
பம்பாய் காங்கிரஸ் கூட்டத்திற்கு 1934 அக்டோபரில் சென்றார்.
ஆனால் விவாதங்களில் லயிக்கவில்லை, காங்கிரசிலிருந்து விலகினார். 1934-39 ஆண்டுகளில்
வார்தாவிலிருந்து செயல்பட்டார். சேவாகிராம் என்பது ஹரிஜன் குடியிருப்பு பகுதி. 1936
காங்கிரஸ் கூட்டத்தை கிராமப்பகுதியில் பைஸ்பூரில் நடத்த வைத்தார். பங்கேற்கும் தலைவர்களும்
தொண்டர்களுமே சுத்தம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். பங்கிகளை கூலிக்கு அமர்த்தவில்லை
(Be minister of cleanliness said MKG)
தனது 6வது மகன் என தலித் இளைஞன் கோவிந்தை ஏற்றார். அவரால்
சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொண்டார். கோவிந்தனுக்கு வெட்ட மறுத்த முடிதிருத்துவோரிடம்
கசந்து தான் போவதை நிறுத்திகொண்டார். வார்தாவில் 1937ல் கல்வி மாநாட்டை கூட்டினார்.
7-14 வயது இலவசகல்வி. தலமட்ட தேவைகளை அனுசரித்த பாடமுறையை காங்கிரஸ் அரசாங்கம் செய்ய
வற்புறுத்தினார்.
1942 ஜூலையில் காங்கிரஸ் செயற்குழு வார்தாவில். பூர்ணசுயராஜ்,
தீண்டாமை ஒழிப்பு- போராடுவோம் என பேசினார். பம்பாயில் ஆக 8 1942 இந்தியாவை விட்டு வெளியேறு.
அக் 9 கைதுபடலம் தொடங்கியது. அரசாங்கம் போராளிகளை தாக்கி ஒடுக்க முனைந்தது. மார்ச்சில்
1942 கிரிப்ஸ் தூது வந்து தோல்வியடைந்தது. வேவல் 1945 ஜூலையில் சிம்லா கூட்ட அழைப்பு
விடுத்தார். இங்கிலாந்தில் லேபர் கட்சி ஜுலையில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. காந்தியின் நண்பர்
பெதிக் லாரென்ஸ் புதிய அரசு செயலர் பொறுப்பேற்றார்
நிஷிகாந்த் தனது
ஆய்வின் முடிவாக வகைபடுத்துகிறார்.
காந்தி சிறுவயதிலிருந்தே தீண்டாமை எதிர்ப்பு உணர்வில்.
1916-20ல் தொடாமை எதிர்த்து, 1920-27களில் பள்ளி போன்ற பொது உரிமைகளுக்காக போராடியது,
1927-32களில் ஆலய நுழைவிற்காக, 1932-45ல் இவை அனைத்தையும் தொடர்தல், ஆலய நுழைவு பில்
1934- அரசு விலக்கம், ஹரிஜன சேவா சங்கம் சார்பில் புத்தகம். துணி,பொருளாதார வளர்ச்சி,
கல்வி பரப்புதல், ஸ்காலர்சிப், 12500 மைல் நீண்ட பயணம், அவரது 1942 கான்ஸ்டிட்யூஷன்
விளக்கத்தில் அதை குற்றம் என சொல்லப்படும் என்கிறார் (1942” The constitituion
which I could influence would contain provision making observance of UT any
shape or form an offence. Ut will have seats reserved in elected bodies to
their proportion ( 19th july 1942). அவர் இவ்வாறு தீண்டாமை தீட்டு மனத்தடை என்பதிலிருந்து,
அமைப்புரீதியாக தீண்டாமை ஒழிப்பை தீவிரப்படுத்துவது, அவசியம் எனில் அரசின் துணையுடன்
கூட ச்ய்வது என்ற நிலைக்கு பயணிக்கிறார்.
. In 1934 “ Castes are a human manufacture, daily
weakening and have to go ( 12th Jan 1934). In 1935 Caste has to go “ The present
caste system is the very antithesis of varnashrama. The sooner the public
opinion abolishes it better ( 11th Nov 1935) என அவரின் evolving
strategy யை பட்டியலிடுகிறார் கோல்கே.
வர்ணா பிறப்பல் மட்டுமே அல்ல நடத்தையால் உறுதியாகிறது..varna
is determined by birth, but can be retained only by observing its obligations.
Born Brahmin fails to reveal the attributes, he can’t be called so fallen from
brahminhood. On the other hand not born as Brahmin but reveals attributes of a
Brahmin will beregarded as Brahmin ( 23rd sep 1934) என சொல்லும்போது மூதாதையர் தொழில் என்பதிலிருந்து
அவர் வேறுபடுகிறார் (Here he made the idea of heredity redundant). வர்ணம் என பேசினால் ஒரு வர்ணம் போதும் அனைவரும்
சூத்திரர்களாக இருப்போம் என்கிற downward mobility கட்டுகிறார்.
உணவு- திருமணம் என்பதில் 1916ல் கட்டுப்பாடுகள் தேவை என்று
பேசிய அவர்- பின்னர் அவை விதியல்ல- உபசாதிக்கள் மணக்கலாம் என்கிறார். Not opposing
per se “ If I suggest that you should
go the extent of interdining / marriage to you with Harijans I would not be
violating truth.. but no compulsion on this matter 9 20th ap 1937 speech). திருமணம்
என்றாலே மணமகனோ மகளோ ஒருவராவது ஹரிஜனாக இருக்கவேண்டும் என்கிறார். அவ்வாறில்லாத திருமணங்களுக்கு
போவதை நிறுத்திக்கொள்கிறார்.(His ideal mixed marriage is with harijan on one
part. “ shudra girl possessing the qualities of a Brahmin girl marrying a
Brahmin boy is not a mixed marriage).
ஹரிஜன சேவா சங்க விவாதத்தில் (1946) “ He is
personally for inter dining- maariage. If you do it I appreciate you” என சொல்கிறார். He stopped going marriages if one was not
from UT from 1945- even refused to go for coworkers family.. For him an ideal
marriage is if one of the parties from UT.
அவர் அம்பேத்கார் கருத்திற்கு இணையாக வந்து சேர்கிறார்
அவரது முறை Continuity with tradition and articulating
the struggle என்பதாகவும் அதற்கு இந்து சாதியாரின்
ஆதரவைக்கோருவதாகவும் ( and pleaded support of caste hindus for that) இருந்தது.
அடுத்து அவரின்
முக்கிய பங்களிப்பு கீழ்நோக்கிய இயக்கம்.
The uniqueness in his strategy in being free from the logic of
sanscritisation விவேகானந்தர்கூட சமஸ்கிருதம் படி என ’மேல்நோக்கி செல்ல’ என அழைப்பவராக இருந்தார். காந்தி Uniqueness in
refusing to accept the superiority of Brahminical tradition, culture customs.
தலித்கள் அவரை பிராமண
பனியா சிந்தனாவதியாக, தலித் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டவராக, ராமராஜ்யம்
போன்ற சிம்பல்களை பயன்படுத்தியவராக பார்த்தனர். அவரது செயலோ எழுத்தோ பிராமணியம் மீதான நம்பிக்கை
எதையும் உணர்த்தவில்லை
கிராம்சிய மேலாண்மை கருத்தாக்கத்தில் அவர் பிராமண கலாச்சார
மேலாண்மைக்கு எதிராக நின்றார் என்கிறார் நிஷிகாந்த் (In Gramscian terminology
MKG’s struggle can be viwed as a hegemonic struggle- to erase hegemony or
ideological influence from the minds and hearts of common people. Using the same symbol for counter hegemonic methods..
a dichotomy in his method.. traditional idea of advaita but argued equality of
human beings in modernized sense.)
Chapter 5
Critical analysis of BRA MKG arya samaj
காந்தி பிரிட்டிஷ் எதிர்த்து மட்டுமல்ல சாதி எதிர்ப்பிலும்
பெரும் உத்திகொண்டவராக இருந்தார். சாதி சீர்திருத்தம், தலித்கள் எழுச்சி, காந்திய முறைகள்
என மூன்று வடிவங்களில் சாதி எதிர்ப்பு வெளிப்பட்டது. இதைல் அம்பேத்கார், காந்தி இணைவு
அவசியமாகிறது (Synthesis of BRA and MKG
need of the hour. Rodrigue “ They differed in their understanding of modernity
assessing traditions, proposing options for india and the world. Across
disagreements there was much united them not merely on issues and concerns but
substantive positions as well”)
ஆர்யசமாஜ் சுத்திகரண இயக்கம் தனது கம்யூனல் குணத்தை இழந்து
எழவில்லை என்கிறார் கோல்கே(Arya samaj shuddi had its communal character)
அம்பேத்கார் 1891-1956
அவர் பகிஸ்கிரித் ஹிதகாரி சபை 1924, பம்பாய் சட்டமன்றம் 1927 10 ஆண்டுகள்,
1927ல் மகத் சத்தியாகிரகம், 1930 நாசிக்கில் காலாராம் ஆலய நுழைவு,. 1936ல் ஐ எல் பி கட்சி, 1942 ல் செட்யூல்ட்
பெடெரேஷன், ஜூலை 1941 வைஸ்ராய் நியமித்த பாதுகாப்பு கமிட்டி, 1942 வைஸ்ராய் கவுன்சிலில்
லேபர் அமைச்சர், பின்னர் விடுதலை இந்தியாவில் சட்ட அமைச்சர். அரசியல் அமைப்பு சட்ட
வரைவுகுழு தலைமை. என பரிணமித்து வந்தார். His strategy is civic equality,
economic political empowerment and so clash with the other titan MKG என சொல்கிறார்
கோல்கே.
காந்திக்கு இருபகுதியும் பாதிக்கப்பட்டவர்களே (விக்டிம்). (For MKG caste system based on false
consciousness- brutalization of Ut and dehumanized caste Hindus so both are
victims- so every individual to overcome caste prejudices.) ஆனால் அம்பேத்கார் அதை
ஏற்கவில்லை. Mkg analysis shallow- not just removing the notion- caste
hierarchies real in wealth, power,
knowledge and other sources- all apportioned as per hierarchies என அம்பேத்கார் கருதினார். அவரின் சாதி ஒழிப்பில்
BRA” The
Hindus observe caste not because they are inhuman or wrongheaded. They observe
caste because they are deeply religious. People are not wrong in observing
their caste. In my view what is wrong is their religion, which inculcated the
notion of caste..the real remedy is to destroy the belief in the sanctity of
sastras “ ( annihilation) என எழுதினார்.
காந்தி சாஸ்திரங்களை விமர்சனபூர்வமாக பார்த்தாலும் ’அழி ஒழி’
என சொல்லவில்லை. தனிநபர் மற்றும் சமூகம் திருந்தி ஏற்படவேண்டிய அவசியமான மாற்றம் என
விழைந்தார். அரசு உதவி சட்டம் எல்லாம் பெருமளவு உதவாது என காந்தி கருதினார்.(the
problem is not to inspire the Ut but
educating the upper castes to step down their upper pedestral “ what ever
appears low in them is a reflection of our terrible lowness”). தனி அடையாளம் கோருவது
சமூக மோதலை அதிகரித்துவிடும். தேவையற்ற போட்டி சூழலை உருவாக்கும். அதிகாரம், செல்வம்
சேர்க்க முண்டியடித்து செல்வது நிகழும் என்றார் காந்தி (He thought separate
identity will increase the present problems into antognism unnecessary
competition and compulsive rush to accumulate wealth power etc).
அம்பேத்காருக்கு அரசியல் சட்டபாதுகாப்பு, அரசின் தலையீடு
அவசியம். அவருக்கு இரு தனித்த அடையாளங்கள் அவசியமாயின. தனித்த அரசியல் சக்தி எனும் அடையாளம், தனித்த சமூக
மத அடையாளம். எனவே அவரது இயக்கம் பிராயசித்த இயக்கமல்ல- சுயமரியாதை கொண்ட தன்கையே தனக்கு
உதவி இயக்கம் (No commonality existing / he detached his fight of upliftment
from the general entire community upliftment.. Interests are irreconcilable. He
acted on 2 directions- creating separate political identity by projecting Ut as
most exploited and marginalized minority community and separate socio religious
identity by conversion to overcome
social stigma- ensuring social equality. The movement cannot be for self
purification.. he stood for self help removal of injustice by the actions of
sufferes. “No borrowed or hired person who does not belong to your class can
further your welfare by the least
degree” and so his method creating self confidence self respect and rejected
the patronizing idea)
காந்திக்கு மேற்குமயம் நவீனமயம் சுரண்டலின் வேறுவடிவமே தவிர
அதை நீக்காது என்றார்.westernization/ modernization was not a method of
emancipation but a changed form of exploitation not a choice between
emancipation and exploitation but a choice between different traditions of
exploitations
ஆர்ய சமாஜ் வேதகாலம் திரும்புவோம்-.காயத்ரி கற்போம் என்றது.
சுத்திகரணம் என பேசியது. ஆனால் காந்தி stood for downward mobility- give up pride
caste superiority accept voluntary simplicity- movement with the character of
penance.
காந்தி போராட்டத்தில் காணப்படும் லிமிடேஷன் என நிஷிகாந்த்
பட்டயலிடுகிறார்
ஏற்றத்தாழ்வான பொருளாதார முறையை அது பெரிதாக பேசவில்லை.
சாதி வெறும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அரசியல்
பொருளாதார ஏற்பாடாகவும் இருந்தது
எனவே அதிகார வெளியில்
மாற்றம் என்பதும் அதில் தேவை என்கிற புரிதல் இல்லை. அரசின் பங்கை குறைத்து மதிப்பிடுதல்,
நீண்டகால திட்டமாக ஏதும் இல்லாமை. பெரும்பாலும் சுய நடைமுறை சார்ந்த பரிசோதனைகள். மற்றவரை
ஏற்க செய்ய எடுக்கநேரும் நீண்டகாலம் . தலித்களை உற்சாகப்படுத்தாமல் நம்பிக்கை அழிப்பிற்கு
உள்ளாதல், அவர்கள் passive object ஆக வைக்கப்பட்டதாக உணர்தல். இதை டி ஆர் நாகராஜின்
புத்தகம் மிகச்சரியாக விளக்கும்.
(16. Limitations
and strengths continuing relevance
a. Failed to
qn and address the highly unequal economic structure and power equation created
by the caste system
b. Failed to
understand Caste system is not just a state of mind- also a turbulent political
and economic management
c. Failed to
understand that the removal of caste system would also involve restructuring of
the highly unequal economic and power
relationship.. without R/s this, the mission of abolishing caste system
could not be accomplished
d. Failed to
understand the role of state and the process of the westernization/
modernization
e. Failed to
develop any long term method to garner state support or to speed up the process of modernization to
eradicate the false consciousness
f. the
methods were personal example, argument, persuasion – so its own limitations
g. Significant
limitation of his evolving strategy was that it demoralized the UT- It was
paternalistic- made thaem passive objects without their own individuality /
agency
h. He thought
of assuring self respect in their jobs traditionally assigned- not worked out
any plan to enhance their self confidence
i. Two
weakness did not have any clear path to
continue to fight against caste system- the second one its slowness given the
size of india)
மெரிட்ஸ் என பார்த்தால் நிதானமாக மெதுவாக இருந்தாலும் சமூக
அமைதியை அடிப்படையாக் கொண்டு, சுதந்திர போராட்ட ஒற்றுமையை சிதற அடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட
இயக்கம் என சொல்லலாம்..
நிஷிகாந்த் புத்தகத்துடன் குமரப்பா அவர்கள் தொகுத்த Removal of
Untouchability, பிரபு தொகுத்த Caste must go,
நாகராஜன் அவர்களின் Flaming Feet and Other Essays, அம்பேத்கார் அவர்களின் க்யூபெக்
சர்வதேச மாநாட்டிற்கான குறிப்பு Ambedkar Presentation at Canada Conference 1942,
What Congress Gandhi have done, ராஜாஜியின் Ambedkar Refuted, K.சந்தானம் அவர்களின் Ambedkar Attacks-
critical examination, Rajmohan’s rejoinder to Arundhati Roy போன்றவற்றையும் இணைத்து வாசிக்கும்போது காந்தியின்
சாதிப் போராட்ட புரிதல் கூடுதலாகும். அம்பேத்கார்- காந்தி இணைவு இந்திய சமூகத்தின்
ஜனநாயக அடித்தளத்திற்கு பெரும் பலம் கூட்டும் என்றே உணரவேண்டியுள்ளது
Comments
Post a Comment