https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, February 4, 2020

தீரன் தியாகி ராஜகுரு


தீரன் தியாகி ராஜகுரு 
                                  
                             முன்னீடு

சிவராம் ஹரி ராஜகுரு பகத்சிங்குடன் தூக்குமேடை ஏறிய தியாகி. பகத்சிங் ராஜ்குரு சுக்தேவ் என மூவர் பெயரும் பொதுவாக அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது. பகத்சிங் குறித்து - அவரது ஆளுமை குறித்து ஏராளம் பேசப்பட்டுள்ளது - எழுதப்பட்டுள்ளது – உணரவைக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் ராஜ்குரு, சுக்தேவ் குறித்து போதுமான அளவு பேசப்படவில்லை- எழுதப்படவில்லை.

பகத்சிங் ஆளுமை மேலானது என்பதில் சந்தேகமில்லை.  பகத்சிங்கில் அவர்களும் அடக்கம் என்பதுடன் நிற்காது அந்த ஆளுமைகளின் உருவாக்கம் மற்றும் உயரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் - அவர்களையும் தேடவேண்டும் என்ற எண்ணத்துடன் வெளிவந்தவை மிகக்குறைவே.  தமிழில் ராஜ்குரு குறித்தும், சுக்தேவ் குறித்தும் கொஞ்சமாவது எழுதிப்பார்க்கவேண்டும். பலதரப்புகளிலிருந்து வரலாற்றைத் தேடும் மாணவர்களுக்கு உதவியாக சில பக்கங்களாவது தரவேண்டும் என்ற முயற்சியால் ராஜ்குரு பற்றி படித்தறிந்த செய்திகள் சிறு பிரசுர வடிவில்  இங்கு தரப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர்களாகிய அவர்களின் தேடல்- தெளிவு- விளையாட்டுத்தனம்- பொறுப்பான நகர்வுகள்- தேசபக்தி- தியாகம் செய்வதில் இருந்த போட்டி உணர்வு ஆகியவற்றை ராஜ்குருவின் வாழ்க்கை நிகழ்வுகளின் வழியே வெளிக்கொணர இப்பிரசுரத்தில் முயற்சிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தியாகம் மெச்சத்தகுந்தது. ஆனால் வழிமுறை விவாதத்திற்குரியது. அது ஒன்றே சரியான முன்மாதிரி என காட்ட முடியுமா- வன்முறை வழிப்பட்ட எதுவும் எதை இறுதி இலக்கு என வைக்கிறதோ அதை அடைந்தவுடன் ஒடுக்குமுறை கருவியாகாமல் இருக்குமா – அகிம்சை வழி ஏற்குமா  போன்றவை தீவிர விவாதத்திற்குரியவை. இங்கு ராஜ்குரு வாழ்க்கை அவர்களது தோழர்களுடன் இணைந்து பேசப்பட்டுள்ளது.

 2-2-2020                          ஆர்.பட்டாபிராமன்



முன்பு ’இளைஞர்களுக்கு பகத்சிங்’ மற்றும் ’பகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி’ என்கிற இரு நீள் கட்டுரைகளை எழுதி இணையத்தில்  வெளியிட்டிருந்தேன்.

 வி என் தத்தா அவர்கள் எழுதிய காந்தியும் பகத்சிங்கும் என்ற நூல் தோழர் அக்களூர் இரவியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராள விவரங்களுடன் வந்துள்ளது. சந்தியா வெளியிட்டுள்ளனர்.

மேற்கூறிய தமிழ் ஆக்கங்களுடன் ராஜ்குரு குறித்த இச்சிறு பிரசுரமும் சேர்கிறது. இணையத்தில் கீழ்கண்ட இணைப்பில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.

https://archive.org/details/1converted_202002
            or
https://ia601405.us.archive.org/1/items/1converted_202002/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%811-converted.pdf



No comments:

Post a Comment