கம்பனில் சட்டமும் நீதியும் என்னிடம் தோழர் குடந்தை விஜய்யால் பிப் 1 அன்று தரப்பட்டது. பிப் 12 அன்று அதை முடித்தேன். நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியனின் சொற்பொழிவு புத்தகமாகியுள்ளது. இன்றுள்ள நீதிமுறை சொல்லாட்சிகளை- அவற்றின் பொருண்மைகளை கம்பன் பாடல்களில் பொருத்திப் பார்த்திட்ட பெரும் முயற்சியாக புத்தகம் வந்துள்ளது. பெரும் உழைப்பு- ஆனால் தொழில் சார்ந்த அறிவாற்றல்- அனுபவம்- தமிழ்அறிவு - கம்பன் பாடல்கள் மீதான பயிற்சி அனைத்தும் ஒருசேர கைகொடுத்துள்ளது.
நீதி பரிபாலன- சட்டமுறையிலான ஆட்சி- மன்னவனின் கடமை - போர் நியாயங்கள், புலன் விசாரணை- ரெமிஷன் எனப்படும் தண்டனைக் குறைப்பு, சாட்சியியல் எனப்படும் எவிடென்ஸ் முறை- தற்காப்பு எல்லை- மாசுடை மனம் எனப்படும் மென்ஸ் ரியா- சட்டமுரண்கள் களையும் திறன், டிப்ளமாடிக் இம்யூனிட்டி, மதுவிலக்கின் பெருமை பொன்ற ஏராள அம்சங்கள் 22 பெரிய, சிறிய பகுதிகளாக விவாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் இன்றுள்ள ஜூரிப்ருடென்ஸ் எல்லாம் கம்பனில் என ஏற்றி சொல்லுதல் நடந்துள்ளது என்றாலும் அது தூக்கலாக தெரியவில்லை. நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்திய குடந்தை விஜய் ஆரோக்கிய ராஜ்-அவர்களுக்கு நன்றி
Comments
Post a Comment