https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, February 18, 2016




நாஞ்சில்நாடனின் எப்படிப்பாடுவேனோ கட்டுரை தொகுப்பை பிப் 1 அன்று குடந்தை விஜய் மயிலாடுதுறை கூட்டத்தின்போது தந்தார். அவர் தந்த இரு புத்தகங்களில் ஒன்றை நீதியரசர் வெ ராமசுப்பிரமணியத்தின் கம்பரில் சட்டம் முடித்திருந்தேன். நாஞ்சிலை படிக்க துவங்கியுள்ளேன். இரசிக்கமுடிகிறது. எனக்கு பத்தாண்டுகள் மூத்தகுடியாக இருக்கலாம் அவர். அவரது கல்லூரி சேரும் சூழல் எனக்கும் பரிச்சயமான ஒன்றே. மனம் திறந்து பேசுகிறார். நியாயம் கேட்கிறார். ஆனால் அதிகமாக கோமண கோவம் ஏன் என தெரியவில்லை. நமது தமிழ்சொற்களின் கிட்டங்கியை காக்க வேண்டுமே என்ற தவிப்பு எழுத்துக்களில் நிரம்பி கிடைக்கிறது. இயற்கை நேசம் வேண்டாமா என்ற ஆதங்கம் தெரிகிறது. நல்ல தொகுப்பு. தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டும் -படிப்பவர்க்கு பலனே.

மன்மோகன்சிங் குறித்த சஞ்சயா பாரு ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் உள்ள தகவல்களை என் துணைவியாரிடம் பகிர்ந்துகொண்டபோது  வெறும்  gossip  போல இருக்கிறதே என்ற கருத்தை அழகாக தெரிவித்தார். Top Bureacrats மத்தியில் இருக்ககூடிய அரசியல் வெளிப்படுத்தப்படுகிறது. தான் அடைய விரும்பும் ஒன்றை அடைய( தகுதி இல்லை என சொல்ல முடியாதவர்கள் கூட) எப்படி வினையாற்றுகிறார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment