பட்டாபியின் கீழ்கண்ட 5 புத்தகங்கள் www.freetamilebooks.com குழுவினரால் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. விழைவுள்ளவர் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். தமிழ் உலகில் விலை ஏதுமின்றி கருத்துக்களை கொண்டுசெல்லவேண்டும் என்கிற விழைவில் தமிழ் ஆக்கங்களை சில இளைஞர்கள் மின்னூல் வடிவில் தங்கள் பெரும் உழைப்பை செலுத்தி கொண்டுவருகின்றனர். அந்த இளம் தோழர்களுக்கு எனது வாழ்த்தும் நன்றியும். இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை இந்நண்பர்கள் இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வழி செய்துள்ளனர். 60 லட்சத்திற்கு மேற்பட்ட பதிவிறக்கங்களுக்கு அவர்களின் உழைப்பு பயன்பட்டுள்ளது. எனது சிறிய உழைப்பும் இப்புத்தகங்களை எழுதுவதில் உள் உறைந்து இருக்கிறது. மகத்தான தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நான் ஒரு பொருட்டானவன் அல்லன் என்றாலும்
போராளிகளின் சிந்தனைகள் 4419
பகவத்கீதை பன்முகக் குரல்கள் 3341
ஹெகல் துவங்கி 2155
மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி 1424
நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் 400
பதிவிறக்கங்களை பெற்றுள்ளன. இவ்வைந்து புத்தகங்களும் 11739 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன். இதில் 200 பேர் படித்திருந்தால் கூட இன்றுள்ள சூழலில் அவர்களுக்கு நான் கடமைப்பட்டவனாகிறேன். என் அன்பை தெரிவிக்கிறேன். பலருக்கும் நேரம் பெரும் பிரச்சனையே. எஞ்சி வாழப்போகும் காலத்தில் ஏதோ ஒரு வகையில் சமூகப் பயன்பாடு இருக்கவேண்டுமே என்கிற ஆர்வத்தில் செய்யப்பட்ட முயற்சியாக எனது புத்தகங்களை பார்க்கலாம். பீற்றிக்கொள்வதற்கு ஏதுமில்லை.

Comments
Post a Comment