Skip to main content

Responsibility for Payment of Wages CLRA Act ch 5


THE CONTRACT LABOUR (REGULATION AND ABOLITION) ACT, 1970
ACT NO. 37 OF 1970

Chapter 5
21. Responsibility for Payment of Wages
- (1) A contractor shall be responsible for payment of wages to each worker employed by him as contract labour and such wages shall be paid before the expiry of such period as may be prescribed.

(2) Every principal employer shall nominate a representative duly authorized by him to be present at the time of disbursement of wages by the contractor and it shall be the duty of such representative to certify the amounts paid as wages in such manner as may be prescribed.

(3) It shall be the duty of the contractor to ensure the disbursement of wages in the presence of the authorized representative of the principal employer.

(4) In case the contractor fails to make payment of wages within the prescribed period or makes short payment, then the principal employer shall be liable to make payment of wages in full or the unpaid balance due, as the case may be, to the contract labour employed by the contractor and recover the amount so paid from the  contractor either by deduction from any amount payable to the contractor under any contract or as a debt payable by the contractor.

அதிகாரபூர்வ அரசு தமிழாக்கம்

ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச்) சட்டம் 1970
சட்ட எண் 37/ 1970

அத்தியாயம் 5
21. கூலி கொடுப்பதற்கான பொறுப்பு
21.1 தம்மால் ஒப்பந்த தொழிலாளராக வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு வேலையாளுக்கும் கூலி கொடுப்பதற்கு ஒப்பந்தக்காரர் ஒருவர் பொறுப்புடையராவார், மற்றும் அத்தகைய கூலி வகுத்துரைக்கப்படலாகும் காலளவு கழிவுறுதற்கு முன்பு கொடுக்கப்படுதல் வேண்டும்.

21.2 முதன்மை வேலைக்கமர்த்துநர் ஒவ்வொருவரும், தம்மால் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்டுள்ள சார்பாற்றுநர் ஒருவரை ஒப்பந்தக்காரரால் கூலி கொடுக்கும் காலத்தில் முன்னிலையாகுமாறு நியமனம் செய்தல் வேண்டும், மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் முறையில் கூலியாகக்கொடுக்கப்பட்ட பணத்தொகைகள் பற்றி உறுதிச்சான்றளிப்பது அத்தகைய சார்பாற்றுநரின் கடமையாக இருத்தல் வேண்டும்.

21.3 முதன்மை வேலைக்கமர்த்துநரின் அதிகாரமளிக்கப்பட்ட சார்பாற்றுநரின் முன்னிலையில் கூலி கொடுப்பதை உறுதிசெய்து கொள்வது ஒப்பந்தக்காரரின் கடமையாக இருத்தல் வேண்டும்.

21.4 வகுத்துரைக்கப்பட்ட கால அளவிற்குள் கூலியைக் கொடுப்பதற்கு ஒப்பந்தக்காரர் தவறுகிற அல்லது குறைவாகக் கொடுக்கிற நேர்வைப் பொறுத்தவரையில், அப்போது ஒப்பந்தக்காரரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு கூலியை முழுமையாக கொடுப்பதற்கு, நேர்வுக்கேற்ப, கொடுக்கப்படாது நிலுவையிலுள்ள பாக்கித்தொகையைச் செலுத்துவதற்கு முதனமை வேலைக்கமர்த்துநர் கடப்பாடுடையவராக இருத்தல் வேண்டும். மற்றும் அவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தொகையை ஒப்பந்தக்காரரிடமிருந்து, ஒப்பந்தம் எதன்படியும் ஒப்பந்தக்காரருக்கு செலுத்தத்தக்க பணத்தொகை எதிலிருந்தும், கழிவு செய்வதன் வாயிலாகவோ அல்லது ஒப்பந்தக்காரரால் செலுத்தத்தக்க ஓர் உறுகடனாக வசூல் செய்யப்படுதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு