https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, August 23, 2019

Ordnance factories Strike


      இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள்  வேலைநிறுத்தம்
-    ஆர். பட்டாபிராமன்



இராணுவத் தளவாட உற்பத்தி ஊழியர்கள் (Ordnance factories) தங்களது ஒருமாத வேலைநிறுத்தத்தை  கடந்த ஆகஸ்ட் 20 அன்று துவங்கியுள்ளார்கள். ஆர்ட்னஸ் பாக்டரிகளை கார்ப்பரேஷன் ஆக்கும் அரசின் முயற்சியை கைவிடக்கோரியே இந்த வேலைநிறுத்தம்.  முன்பிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பல்வேறு காலங்களில் இது குறித்த உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றனர். நாயர் கமிட்டியாக இருந்தாலும் -கேல்கர் கமிட்டியாக இருந்தாலும்  கார்ப்பரேஷனாக்குவது எனும் பரிந்துரை தந்தபோது பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி,  கே அந்தோணி ஆகியவர்கள் ஊழியர் தரப்பை கலந்தாலோசிக்காமல்  முடிவெடுக்க மாட்டோம் என்கிற வாக்குறுதியை தந்தனர். மறைந்த மரியாதைக்குரிய பரிக்கர் கூட 2015ல் இந்த உறுதிமொழியை நல்கினார்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி கொள்கை என்பதை அவ்வப்போது அரசாங்கம் அறிவித்துவருகிறது. அவ்வாறு ஒன்றை நகல் அறிக்கையாக 2018 மார்ச்சில் பா.. அரசாங்கம் முன்வைத்து பொதுக் கருத்தையும் கேட்டது. அதில் கார்ப்பரேஷன் ஆக்குவது என்கிற பாலிசி முடிவு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
Boosting OFB and Public sector  : 15.3 Ordinance factories will be professionalized  to make them competitive and improve their productivity
15.2 OFB/DPSUs will be encouraged to increase their productivity and timely execution of orders by addressing issues...
15.1 Govt will support infusion of new technology/ machineries to enable them take up advanced manufacturing of futuristic weapons..
 15.4 disinvestment of minority stake in DPSUs will be pursued
 ஆனால் இறுதி செய்யப்பட்ட கொள்கை அறிக்கையில் மேலே கூறப்பட்டவைகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்  கூடுதலாக
 16.3 OFB/DPSUs will be mandated to outsource a minimum of 50% of their work content by 2025.
16.4 Ordnance  Factories will be corporatised to make them competitive and improve their productivity 
என்பதும் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பார்வைக்கு வந்த நகலில் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு இறுதி அறிக்கையில் தெரிவித்து அதன் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் கேள்விக்குள்ளாக்கும் செயலாகியுள்ளது.
2019 ஜூலை மத்தியில் பாதுகாப்பு உற்பத்தி துறை இலாகா Department of Defence Production அறிவுறுத்தப்பட்டு  அதிஅவசரமாக தளவாட பாக்டரிகளை  இலாகாவிலிருந்து பிற பாதுகாப்பு பொதுத்துறைகள் போன்று கார்ப்பரேஷனாக்குவதற்கு காபினட் குறிப்பு தயாராகி  அமைச்சகங்களுக்கு இடையிலான கருத்துக் கேட்பிற்கு விடப்பட்டுள்ளது.

 AIDEF- INDWF- BPMS  என்கிற மூன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும்  ஒரு மாத கால வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கொடுத்தன. அதிகாரிகள் சங்கங்கள்,  நிர்வாக பணியாளர் சங்கங்களும் ஆதரவை தந்துள்ளன.  இலாகா அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை பலனைத் தரவில்லை. அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை பாரதிய சங்கம் சந்தித்து முடிவை மறுபரீசீலனை செய்யக்கோரியது.   Things are in advance stage மற்றவர்களுடன் கலந்துபேசி  சொல்வதாக அவரும் தெரிவித்துள்ளார். முறையான ஒப்பந்தம் இல்லாமல் போராட்டத்தை முடிவிற்கு கொணர இயலாது என சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள்  Coporatisation of  Ordanance Factories  என்பதை ஏன் எதிர்க்கிறோம் என்பதை எழுத்துபூர்வமாக தந்துள்ளனர். அதில் முக்கியமாக  BSNL  அனுபவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கு சம்பளம் வருமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதையும்  தெரிவித்துள்ளனர். OFB  யின் 218 ஆண்டுகால புகழ், அதன் கேந்திர முக்கியத்துவம், இராணுவ சேவைகளுக்கு பல்வேறு போர்களில் அதன் பங்களிப்பு போன்றவற்றையும், பாக்டரிகள் உற்பத்தி ஆர்டர் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும்  சங்கத்தலைவர்கள்  தோழர்கள் ஸ்ரீகுமார், சீனிவாசன், முகேஷ் சிங் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கார்ப்பரேஷன் என்றாக்கி சந்தை விளையாட்டுகளில் இராணுவத்தளவாட உற்பத்தியை நிறுத்துவது தேசப்பாதுகாப்பிற்கு குந்தகமானது என்பதையும் தலைவர்கள் அழுத்தமாக கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலாகாவிலிருந்து பொதுத்துறைக்கு சென்றவர்கள் பணிநிலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளவுகளையும் தலைமை கணக்கில் கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றுள்ள நிலையிலேயே அரசின் பட்ஜெட் எஸ்டிமேட்டில் தெரிவிக்கப்படும் நிதியானது திருத்தப்படும் எஸ்டிமேட்டில் வெட்டப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்கிற நிலை உருவாகியுள்ளது. ரூ 15000 கோடி ஒதுக்கீடு இருந்தால்தான் உற்பத்தி இலக்குகளையும் குறித்தநேர டெலிவரிகளையும், குவாலிட்டி கருவிகளையும் பாக்டரிகளால் தரமுடியும் என்பது உணரப்படாமல் இருக்கிறது. கார்ப்பரேஷன் என்றாக்கி அரசாங்கம் தன் பொறுப்பிலிருந்து வெளியேறப்பார்க்கிறது. நிர்வாக செலவு 30 சதம் என்பது அதிகம் என்று பேசுகிறது.
உண்மையில் ஊழியர் செலவு என்பது 9 சதமாகத்தான் இருக்கிறது. 1-1-17 அன்று கணக்கீட்டின்படி Ordanance Factories Sanctioned Strength 1,19,968.  Actual Strength is 70810.  அதாவது இடைவெளி 49.7 சதமாகவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை என்பது நாடாளுமன்ற கமிட்டியே சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சமாகவும் இருக்கிறது. இருக்கின்ற ஊழியர்களைக்கொண்டு, ஒப்பந்த ஊழியர்களுடன் தரமான நம்பற்குரிய இராணுவக்கருவிகள் செய்து தரும் ஊழியர்களின் மனநிலையை கார்ப்பரேஷன் ஆக்குவது பாதிக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊழியர் சங்கங்கள் மிகப்பொறுப்புடன் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள்  Fire, Pumping, Drivers  வருகைப்பதிவில் ஒப்பமிடாமல் பணி செய்யலாம் என விலக்கு கொடுத்துள்ளனர். அரசாங்கமும் போராட்டத்தை முடிவிற்கு கொணர முயற்சிக்கவேண்டும். போராட்டம் வெல்லட்டும். ஒருவேளை அரசாங்கம் பிடிவாதமாக கார்ப்பரேஷனை திணித்தால் BSNL  பென்ஷன் அனுபவம் மற்றும் அதன் நிதி ஆதாரத்தன்மை போன்றவற்றை தலைவர்கள் கணக்கில் கொள்வார்கள் எனக் கருதுகிறேன். வாழ்த்துகள்!
22-8-19

No comments:

Post a Comment