70 ஆண்டுகளுக்கு முன்னர் ...
விடுதலைக்குப் பின்னர் உட்கட்சி விவாதங்களின் அடிப்படையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தனது Draft Programme of the CPI என்பதை 1951ல் வெளியிட்டது. 16 பக்கங்களில் அச்சடிக்கப்பட்ட ஆங்கில பிரசுரம் ஏப்ரல் 1951ல் இரண்டு அணாவிற்கு பம்பாயிலிருந்து வெளியானது. மே, ஜூன் என அப்பிரசுரம் அடுத்தடுத்த பதிப்புகளையும் கண்டது. பிபின் சந்திரா போன்ற வரலாற்றாய்வாளர்கள் இந்த பிரசுரத்தை மிக முக்கிய விவாத பொருளாக தான் எடிட் செய்த The Indian Left Critical Appraisals என்ற பெரிய புத்தகத்தில் செய்திருப்பார். அவர் எழுதிய அந்த அத்தியாயம் A strategy In crisis- The CPI Debate 1955-56 என்பதாகும். ஆர்வமுள்ளவர் தேடி படித்துவிடமுடியும். அந்த டிபேட்டிற்கு மேற்கண்ட 1951யை அவர் ஆதாரமாக்கி பேசியிருப்பார்.
மேற்கண்ட நகல் திட்டம் இந்தியாவில் வந்தபோதே - பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது திட்டத்தை Independent, Democratic and Prosperous Pakistan- Programme of the Communist Party of Pakistan என 1950ல் கொண்டு வந்தனர். 18 பக்கங்களைக்கொண்டு அதன் அச்சு வெளியீடு வந்தது. அதுவும் 2 அணா என வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு திட்டங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பிடியில்தான் இந்நாடுகள் என்கிற முடிவிற்கே வந்தன. சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பின. அப்படி தாங்கள் உணர்வது ஏன் என்பதற்கான ஆதாரங்களை நியாயங்களை இரு திட்டங்களும் எடுத்து வைத்தன. ஒன்று அன்றிருந்த காங்கிரஸ் அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. மற்றது முஸ்லீம்லீக் மீதான கேள்விகளை அவநம்பிக்கையை வெளிப்படுத்தியது. இரு திட்டங்களும் புதிய அரசாங்கங்கள் பிரிட்டிஷ் தொடர்புகளை அறுத்துக்கொள்ளவேண்டும் என்றன. அதாவது Total freedom from Imperialism.
தொழிலாளர், விவசாயி, மத்தியதர வர்க்கம் வாழ்க்கைத்தர உயர்விற்கான திட்டமிடுதல் என்பதை இரு திட்டங்களும் வலியுறுத்தின. பாகிஸ்தான் கட்சி திட்டம் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், நவாப்கள் எதிர்த்து people`s democratic government of workers, peasants and middle classes- People's Democracy என்றது. இதற்காக ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக முன்னணி கட்டவேண்டியதை பேசியது. சீனாவில் கம்யூனிஸ்ட்கள் பெற்ற வெற்றி கண் முன் நிற்கிறது என்று சொல்லி அத்திட்டம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தது
The Communist Party of Pakistan asks the people who are honest and want to see their country free should look at our actions and if they think that this is the party which is sincere, courageous, correct and brave enough to fight for the rights of the people and democracy than they should support us. They should become a member of the party and help the party morally and financially.
அதேபோல் மதநம்பிக்கை குறித்து பாக் கட்சி இவ்வாறு உறுதிமொழியை- கூடவே தன் சமூகம் பற்றிய இயல்பையும் சொல்லியது. சமூகத்தில் நிலவும் கருத்தமைவுகள் குறித்த புரிதல் பற்றி அது பேசியது
The Communist Party of Pakistan accepts and follows the principle of freedom of conscious, faith, religion and all the practices of faith according to every culture and tradition.
The Communist Party of Pakistan not only accepts the rights of conscience but also fights against any kind of aggression, suppression, hate or any activity against the religious freedom of any individual, group or minority. The Communist Party of Pakistan gives assurance to all minorities to struggle with them for their equal rights and conscience.
At the same time, the Communist Party of Pakistan tries to understand the nature and history of the ideas and concepts about faith which are prevailing in our society.
உருதுவில் எழுதப்பட்ட திட்டம் தோழர் அலி ஜாபர் சைதியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று சோவியத் பிராவ்தாவில் அக்டோபர் 27 1950ல் வெளியாகியிருக்கிறது. அந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் அச்சாக்கத்திலிருந்து மேலே சொல்லப்பட்டவை எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கட்சியின் நகல் அனைவருக்கும் வாக்குரிமை என்பது வந்தாலும் இந்த தேர்தல்கள் கண் துடைப்பே என வரையறுத்தது. It is deception to say under the new constitution the masses or the Govt elected by them can work their way to freedom and hapiness என்கிற பார்வையையும் வைத்தது.
திட்டம் பல கடமைகளை வரையறுத்துக்கொண்டது
தேசிய இனங்கள் எனும் பிரச்னையில் கீழ்கண்ட புரிதலை வெளிப்படுத்தியது.
The Right of all nationalities to self determination. The Republic of India will unite the peoples of various nationalities of India not by force but by their voluntary consent to the creation of a common state
மொழிப்பிரச்னையை இவ்வாறு முன்வைத்தது
Right of People to receive instruction in their own national language in schools; use of the national language in all public and state institutions. The Use of Hindi as an all India State language will not be obligatory.
மதசார்பின்மை என்பதற்கு இவ்வாறு தனது கடமையை திட்டம் வைத்துக்கொண்டது
separation of the State from all religious institutions. the State to be a secular State.
கல்வி பொறுத்தவரை 14 வயதுவரை அனைவருக்கும் இலவச கல்வி என சொல்லப்பட்டது. மருத்துவ சேவை என்பதில் நாடு முழுதும் people's health service என முன்மொழியப்பட்டுள்ளது.
அன்று நாட்டின் வெகுஜனங்களின் பொருளாதார நிலைகளை கணக்கில்கொண்டு சோசலிச மாற்றங்கள்- not demanding establishment of socialism or socialistic transformations என முடிவிற்கு திட்டம் வந்தது. மக்கள் ஜனநாயக அரசாங்கம் உருவாக்க திட்டம் என்றது. ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக முன்னணிக்கு தொழிலாளர்- விவசாயி- மத்தியதர வர்க்கம்- அறிவுத்துறையினர்- தேசிய முதலாளிகளிடம் திட்டம் வேண்டுகோள் விட்டது.
இந்த திட்டத்தை guided by teachings of மார்க்ஸ்- எங்கெல்ஸ்- லெனின் - ஸ்டாலின்
அமுல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை திட்டம் வெளிப்படுத்தியது. சீனாவின் வெற்றி கண் முன்னே. இந்தியாவும் மக்கள் ஜனநாயக திட்டப்படி உலக அரங்கில் அமைதி வளம் மகிழ்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையை திட்டம் பறைசாற்றியது.
#கம்யூனிஸ்ட்கட்சி #CPI
Comments
Post a Comment