டிசம்பர் 29 அன்று
விருதுநகரில் மிக முக்கிய கருத்தரங்கம் ஒன்றை CPI 90 ஆண்டுகள் நிறைவின் முகத்தான் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் போற்றப்படவேண்டிய இரு ஆளுமைகளான சிங்காரவேலர், ஜீவா அவர்களின் பங்களிப்பை
அவர்களின் முழு எழுத்துக்களை தங்களது கடும் உழைப்பால் தொகுத்த புலவர் வீரமணி மற்றும்
பேரா அரசு ஆகியோர் முதன்மை உரையாற்றினர்.தோழர்கள் தோதாத்ரி, பொன்னீலன், ஆனந்தகுமார்,
ராஜா, சுதாகர்ரெட்டி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் பெரியார்
என மூன்று ஆளுமைகள் குறித்தும் அம்பேத்கார் குறித்தும் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
பேரா அரசு பெரும் முயற்சியுடன் தனது உரையை focused ஆக தந்தார்.
நிகழ்த்தப்பட்ட உரைகளில் சிங்காரவேலர் குறித்த பதிவுகளில்
மிக முக்கியமாக விடுபட்டதாக நான் கருதுவது அவரின் புரிதலான நமது சோசலிசம் போல்ஷ்விசம்
அன்று- வன்முறை வழிப்பட்டதன்று- ஜனநாயக தன்மையுடனான இந்துஸ்தான் பஞ்சாயத்து.. பஞ்சாயத்துவழிப்பட்ட
மக்கள் நிர்வாகம் என்பதும், மனித முன்னேற்ற திட்டத்தில் சுத்தம்- ஆரோக்கியம் குறித்த
இணைப்பும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிக முக்கியமானதாக
இருந்தது. பேரா அரசின் மைய செய்தியாக பெரியார் கொள்கை நிலைப்பாடுகளில் இடதுசாரிகள்
விமர்சனம் மோதல் என்பது நடைமுறை வேறுபாடு என புரிந்து கொள்ளப்படாது மோதலாகி இரு இயக்க
வீழ்ச்சிக்கும் கூட வழியானது என்பதாக இருந்தது.
Comments
Post a Comment