சாகித்ய அகாதமி கர்நாடகா இலக்கிய பிதாமகன் மஸ்தி வெங்கடேஷ் அவர்களின் சிறுகதைகள் சிறிய தொகுப்பு(137 ப்க் ரூ 35 1998 பதிப்பு) தமிழ் வடிவ ஒன்றை இப்போதும் விற்றுவருகிறது. 2016 ஜனவரி ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் ரூ 20க்கு கிடைக்கிறது. 14-1-16 அன்று வாங்கினேன். அன்று மாலையே ஒரே மூச்சில் என்பார்களே அவ்வாறு படித்து முடித்தேன். நமக்கு தெரிந்த குசேலன் கதை, சேக்ஸ்பியர், டால்ஸ்டாய் என எல்லோரும் கதைக்கப்படுகிறார்கள். சிக்கவீர ராஜேந்திரனை 10 ஆண்டுகளுக்கு முன்பு என் துணைவியார் படித்துவிட்டு அற்புதம் என சொன்னது நினவிற்கு வருகிறது
German Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸ் குறிப்பு சிதறல்கள் - ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...
Comments
Post a Comment