இந்திய சமுகம் குறித்த மேம்பட்ட புரிவுணர்வுத் தேடலில் மனம் லயித்திருக்கிறது. எம் என் ராய், லோகியா, பெரியார் போன்றோர் மட்டுமல்ல, சாவர்க்கர் போன்றோரின் எழுத்துக்களையும் மீண்டும் வாசிக்க விழைவுள்ளது. 1925 முதலான குடியரசு தொகுப்புகள் சில கீற்று தளத்தில் கிடைக்கிறது. லோகியாவை முழு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.கம்யூனிஸ்ட்கள்- சோசலிஸ்ட்கள்- சுயமரியாதைஇயக்கம்- அம்பேத்காரியம் ஆகியவற்றின் எழுத்துக்கள் ஊடான விவாதங்களை புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அருந்ததிராயின் Annihilation of caste உரைதனை பார்க்கவேண்டும்.
German Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸ் குறிப்பு சிதறல்கள் - ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...
Comments
Post a Comment