https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, September 15, 2016

நினவு சுழல்
தோழ்ர் எஸ் வி ராஜதுரை எழுதியுள்ள எழுத்துக்களை எரித்தல் – கருத்துக்களை ஒடுக்குதல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். NCBH வெளியிட்டுள்ளது. கலை-இலக்கிய-வரலாற்று குறிப்பு கட்டுரைகள். தோழர் ரகுபதி எனது பணிஓய்விற்கு வாழ்த்துக்களை இப்புத்தகம் மூலம் தெரிவித்தார். தோழர் SVR எழுத்துக்களை எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் கே.வெங்கட்ராமன் அறிமுகப்படுத்தினார். தோழர் KV அப்போது CITU/CPM திருவாரூர் மாவட்டக்குழுவின் முன்னணி தலைவர்களுள் ஒருவர். 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பான திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர். அவர் கொடுத்த புத்தகம் அந்நியமாதல். அப்போது விவசாய இயக்கத்தின் தலைவரும், மாவட்ட செயலராக இருந்தவரும், பின்னாட்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான தோழர் கோ. வீரையன் (GV) காவேரி புத்தக நிலையம் என்ற ஒன்றை இடதுசாரி புத்தகங்கள் விற்பனைக்காக வைத்தார். அங்கு வாங்கி படிப்போம். 
ஆரம்பத்தில் பேராசியர் ராமசாமியும், நானும் NEWAGE வாங்கக்கூடியவர்களாக இருந்தோம். Prof VRக்கு தா.பா தலைமையில் திருமணமாகியிருந்தது. வீடுகளுக்கு வரக்கூடிய அளவு பழக்கம் இருந்தது. திருவிக கல்லூரிக்கு அவர் பேச அழைக்கப்படுவார். பேரா வி ஆர் அக்கூட்டங்களில் எனக்குக் கூட வாய்ப்பளித்திருக்கிறார். வி ஆரும், நானும் இணைந்து புதிய கல்விக்கொள்கை குறித்த பிரசுரம் கொணர்ந்தோம். அவரால் பிறை அறிவழகன் போன்ற பல பேராசிரியர்கள் அறிமுகமானார்கள். பேரா வி ஆர் தான் டெரி ஈகிள்டன் போன்ற மார்க்சிய இலக்கிய விமர்சகர்களையும் அறிமுகப்படுத்தினார். கல்லூரி நூலகத்திலிருந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படிக்க உதவியவர். பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகி ஓய்வு பெற்றார்.
பேரா பிறை கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றவர். தமிழகத்தில் நுகர்வோர் இயக்கத்தை வீச்சாக கொண்டு சென்றவர். CPI தலைவர் தோழர் மகேந்திரனுக்கு பேராசிரியராக இருந்தவர் . இடதுசாரி இயக்கங்களுக்கு இணையாக உலகமயமாதல் எதிர்ப்பு கருத்தரங்களை பெருமளவில் ஊர்தோறும் திட்டமிட்டு நடத்தியவர். பல அரங்குகளில் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரியார் பற்றாளர். திராவிட இயக்க தொண்டர். அவரது புதல்வன் BSNL திருவாரூரில் அதிகாரியாக இருக்கிறார்.
நியுஏஜ் 7 ஆக உயர்த்தினோம். பேரா கெளதமன், பேரா சுகுமார்,ரகு, வீஆர், நான் உள்ளிட்டவர் செலவை பகிர்வோம். மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வெங்கட்ராமனுக்கு ஒன்றை கொடுப்போம். அங்கிருந்து people’s Democracy பெறுவேன். அந்த அலுவலகத்தில் எனக்கு என்று பெட்டியில் அனைத்து பத்திரிகைகளும் போடப்பட்ட காலமது. பேரா கெளதமன் தொழிற்சங்க இயக்கங்களில் கல்லூரி இயக்கங்களில் துடிப்பாக செயல்பட்டவர். அனைவருடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர். கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். பேரா சுகுமார் தீவிர படிப்பாளி. கோவை ஞானியைப்போல படிப்பதற்கு ஆட்களை வைத்துக்கொண்டுதான் படிக்க முடியும். பார்வையற்றோர் அகில இந்திய இயக்கத்தில் வழிகாட்டிவந்தார்.
புலவர் அ.ப.பாலையன் கலை இலக்கிய பெருமன்றத்தின் மூத்த தலைவர். சங்க இலக்கியங்கள் குறித்தும் திறனாய்வு செய்துவருபவர். அவர் மூலம் வி எஸ் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலிருந்து ஏராள புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. தோழர் வேதையன் AITUCல் இணையற்ற தலைவராக இருந்தார். தலைவர் A M கோபுவின் நெருங்கிய சகா. தோழர் நல்லகண்ணு அவர்கள் CPI மாநில செயலராக இருந்தபோது ஜனசக்தி கட்சிக்கடிதம் முதல் பக்கத்தில் வேதையனை பாராட்டி எழுதியிருந்தார். தொழிற்சங்க கூட்டமைப்புக்கு வழிகாட்டியாகவும் பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். திருவிக குறித்த அரும்பெரும் செய்திகளை தொடர்ந்து சொல்லி வருகிறார். தனித்தமிழ்- இயற்றமிழ் பயிலகம் உயர் அறிஞர் சரவணத்தமிழர் அவர்களுடன் சக பயணியாக இருந்தவர். இவர்களின் பெரும் முயற்சியால் போராளி PLOT உமாமகேஸ்வரன் அவர்களுடன் கூட்டம் பேச முடிந்தது. 
தோழர் S V ராஜதுரை தமிழுக்கு 60க்கும் மேற்பட்ட ஆழ்ந்த படைப்புகளை வழங்கியுள்ளவர். கடும் உழைப்பாளி. மார்க்சிய- பெரியாரிய- அம்பேத்காரிய அறிஞர். அவருடன் நேரிடை பழக்கம் எனக்கு இல்லை. தொலைபேசியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருக்கிறேன். ரகுவிற்கு பழக்கம் உண்டு. ஒருமுறை சென்னை TR Publicationல் ஹலோ போட்டதாக நினைவு. திருச்சி மோகன் பால்சாமி போன்றவர்கள் எஸ்வி ஆர் திருச்சி பாரதிதாசன் உயராய்வில் இருந்தபோது தொடர்ந்து பழகி விவாதிக்க முடிந்ததை சொன்னார்கள். தற்போது NCBH விளக்கக்குறிப்புகளுடன் கம்யூனிஸ்ட் அறிக்கை, சர்வதேச தொழிலாளர் சங்கம்( மொழிபெயர்ப்பு) ஆகிய இரு எஸ்விஆர் படைப்புகளை கொணர்ந்துள்ளது. மேலே நான் குறிப்பிட்ட அனைத்து பெருமகனார்க்கும் எனது நன்றி- வணக்கம்.

No comments:

Post a Comment