Skip to main content

Mahatma Gandhi and One World மகாத்மா காந்தியின் ஓர் உலகம்




Mahatma Gandhi and One World    publication Division  ND
மகாத்மா காந்தியின் ஓர் உலகம்  தமிழில் கே. மோகன்  சென்னை
பப்ளிகேஷன் டிவிஷன்  Mahatma Gandhi and One World    என்கிற சிறு வெளியீட்டை 1966ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2ல் கொணர்ந்தது. அப்பிரசுரம் 1994, 2005ல் மறுபதிப்புகளை கண்டது. அய்ம்பது ஆண்டுகளை கடந்த நிலையில் அதன் தமிழாக்கம் காந்தி கல்வி நிலையம்- பப்ளிகேஷன் டிவிஷனால் 2018 மார்ச்சில் வெளியிடப்பட்டுள்ளது. மோகன் அவர்களின் தெளிந்த மொழிபெயர்ப்பிற்கு பாராட்டும் வாழ்த்துக்களும்..
ஆங்கிலத்தில் 34 பக்கங்கள் கொண்ட நூல் விலை ரூ 30.  தமிழில் 51 பக்கங்கள் ரூ 80.
காந்தியுடன் நெருக்கமாக இருந்தவர்களும், விவாத திறன் மிக்க தங்கள் அளவில் புகழ் பெற்றவர்களுமான டாக்டர் ராதாகிருஷ்ணன்,கமலாதேவி,கலேல்கர், கிருபாளனி, திவாகர், ஹுமாயூன் கபீர், நிர்மல் குமார் போஸ் ஆகிய எழுவரின் சிறு கட்டுரைகளின் தொகுப்புதான் இப்பிரசுரம். நான் பார்த்த ஆங்கிலப் பிரதியில் எடிட்டிங் லலிதா குரானா என போடப்பட்டிருக்கிறது. தமிழாக்கப்பிரதியில் ஆசிரியர்கள் சஞ்சய் கோஷ், அனுஜ் சர்மா என வெளியிடப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் ஓர் உலகம் எனும் பார்வையை ஏழு கட்டுரை ஆசிரியர்களும் தங்கள் மொழியிலும் மகாத்மாவின் மேற்கோள்கள் துணையுடனும் விளக்குகின்றனர். காந்தியின் தேசியம், தேசப்பற்று என்பது எவ்வாறு சர்வதேசியம்,  மானுடப்பற்றுடன் முரணின்றி செல்கிறது என்பதுதான் நூலின் மையமான செய்தி. இந்தியாவின் விடுதலை என்பது மானுடவிடுதலையுடன் தொடர்புள்ள ஒன்று என்பதில் காந்திக்கு இருந்த உயர்நம்பிக்கையை கட்டுரையாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். வெறுப்பற்ற அன்பின் வழியிலான உலக சகோதரத்துவத்தை, நாடுகளின் சுயேட்சைத்தன்மை கெடாத தோழமை நெருக்கத்தை உல்க அமைதியை வன்முறை ஒழித்த அகிம்சை வழியில் நிலைநாட்ட இயலும் என்கிற அவரது ஓயாது ஒலித்த குரல் அனைத்து பக்கங்களிலும் எதிரொலிப்பதை படிப்போர் உணரமுடியும்.
காந்தி கல்வி நிலையத்தில் பொறுப்பேற்று செயல்பட்டுவரும் நண்பர்  ஆசிரியர் மோகன் எளிய வகையில் சொற்செட்டுடன் மொழிபெயர்த்துள்ளார். புதன்கிழமை கூட்டங்களில் அவரை பார்த்திருக்கிறேன். நேரிடை பழக்கம் இதுவரை இல்லை. அவரது பணி சிறக்க வாழ்த்துகள்! Nation என்பது தேசியம் என ஓர் இடத்திலும், Nationalism என்பது நாட்டுப்பற்று என ஓர் இடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூலில் காகாசாகேப் கட்டுரையுடன் இடம்பெற்ற காந்தியின் மேற்கோள்கள் தமிழ் பதிப்பில் அங்கு இடம் பெறாமல் கிருபளானி கட்டுரையுடன் இடம்பெற்றுள்ளன.
மூல நூலின் சில பகுதிகளும் அதற்கான மோகன் அவர்களின் மொழியாக்கமும் கீழே கொடுத்துள்ளேன். குறைவான விலையில் கிடைக்கும் புத்த்கம் என்பதால் பலரும் வாங்கி படிக்க இயலும் என கருதுகிறேன்.


DR.S.Radhakrishnan
Nationalism is not the highest concept. The highest concept is world community
தேசியம் என்பதுதான் மிக உயர்ந்த கொள்கை என்பது இல்லை. உலகச் சமுதாயம் என்பதே மிகவும் உயர்ந்த ஒன்று
Are we prepared to surrender a fraction of our national sovereignty for the sake of world order? Are we prepared to submit our disputes and quarrels to arbitration, to negotiation and settlement by peaceful methods?
நாம் நம் தேசத்தின் இறையாண்மையில் ஒரு துளியையாவது உலக அமைதிக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?நம்முடைய சண்டை சச்சரவுகளை, பேச்சுவார்த்தை, அமைதியான முறை, நடுவரான ஒருவரின் தீர்ப்பு என்ற வழிமுறைகளில் தீர்க்க முயற்சிக்கிறோமா?
An outer crisis is a reflection of an inward chaos, and if the chaos inside the minds and hearts of men is not removed, we cannot bring about a more satisfactory world order.
வெளியே நாம் காணும் குழப்பங்களுக்கு காரணம் நம் மனதினுள் இருக்கும் ஒழுங்கற்ற நிலையே. மனித மனத்திலும், இதயத்திலும் இருந்து கொண்டிருக்கும் குழப்பங்களை, மேலும் நல்ல முறையில் தீர்க்காவிட்டால், உலக அமைதி என்பதை நமால் ஏற்படுத்த முடியாது.
Kamaladevi Chattopadhyay
‘’ For me, patriotism is the same as humanity. I am patriotic because I am human and humane”
என்னைப் பொறுத்தளவில் தேசப்பற்று என்பதும் மனிதச் சமுதாயம் என்பதும் ஒன்றுதான். நான் மனிதனாகவும் மனிததன்மையோடும் இருப்பதாலேயே தேசப்பற்று உள்ளவனாக இருக்கிறேன்.
It is impossible for one to be an internationalist without being a nationalist……It is not nationalism that is evil. It is the narrowness, selfishness, exclusiveness which is the bane for modern nations, which is evil…  Mahatma Gandhi
தேசியவாதியாக இல்லாது சர்வதேசியவாதியாக ஒருவரால் இருக்கமுடியாது….. நாட்டுப்பற்று என்பது தீயதல்ல. நவீன நாடுகளின் குறுகிய, சுயநலமான, தன்னிச்ச்சையான போக்குதான் தீயது… மகாத்மா காந்தி
J B Kripalani
As the loyalty to the family does not conflict with the loyalty to the nation, so loyalty to the nation need not conflict with loyalty to humanity
எப்படி நாம் குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பது நம் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதற்கு எதிரானதில்லையோ அதுபோலத்தான் நம் நாட்டின் மீதான விசுவாசம் உலக மக்கள் சமுதாயத்தின் மீதான விசுவாசத்திற்கு முரணானதல்ல.
If therefore, men have to serve humanity, they can do so most conveniently and effectively through their immediate neighbours. But they need not serve them in a manner which causes injury to their more distant neighbours.
மனித சமுதாயத்திற்கே சேவை செய்ய விரும்புபவர்கள், மிக எளிதான, சிறப்பான முறையில், தங்களின் அருகாமையில் உள்ளவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் அதனைச் செய்ய முடியும். அதேநேரத்தில் தொலைவில் உள்ளவர்கள் பாதிக்கும்படியான சேவையைச் செய்யாமல் இருக்க வேண்டும்.
  I make no distinction between man and man. To me humanity is one”- Gandhi
மனிதனுக்கு மனிதன் இடையே எந்த ஒரு வித்தியாசமும் நான் பார்ப்பதில்லை. எனக்கு மனித சமுதாயமே ஒன்றுதான்
R R Diwakar
For Gandhi, man was the measure of all things. The basic purpose of human life was to reach higher and  yet levels of consciousness – man was mind and consciousness more than body and senses.
மனிதன்தான் எல்லாவற்றிற்கும் அளவுகோல் என்றார் காந்தியடிகள். மனித வாழ்க்கையின் அடிப்படையான குறிக்கோளே, உயர்ந்த மேலும் உயர்ந்த பிரக்ஞை நிலைகளை நோக்கிப் பயணிப்பதுதான். மனிதன் என்பவன் உடலோ, உணர்ச்சிகளோ அல்ல, மனமே மனிதன்.
Humayun Kabir
“ I do not want my house to be walled in on all sides  and my windows to be stuffed. I want the cultures of all lands to be blown about my house as freely as possible. But I refuse to be blown off my feet by any. I refuse to live in other people’s houses as an interloper, a beggar or a slave”  Gandhi
என் வீட்டு ஜன்னல்கள்மூடப்பட்டு, வீட்டைச் சுற்றி எல்லா பக்கத்திலும் சுவர் எழுப்புவதை நான் விரும்பவில்லை. உலகின் எல்லா திசைகளிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களின் இதமான காற்று சுதந்திரமாக வீடு முழுவதும் வீசிச் சென்றபடியே இருக்கட்டும். ஆனாலும் அக்காற்றின் வேகத்தினால், எதற்காகவும் என் கால்களை நழுவவிடமாட்டேன். மற்றவரின் வீட்டில் வசிப்பதைபோல ஆக்ரமித்தவனாகவோ, பிச்ச்சைகாரனாகவோ, ஓர் அடிமையாகவோ நான் வாழ மாட்டேன்
Nirmal Kumar Bose
A general belief is current among historians and political scientists that Gandhi was a nationalist leader by which is meant that he tried to promote the interests of the rising bourgeoisie in India, those who are generous sometimes concede the point that he might have been concerned about the interests of the masses, but the way in which he worked with the INC actually led to the promotion of the interests of the upper classes.  Moreover, he was afraid of violence and scotched the revolutionary zeal of the masses whenever their resistance tended to break out into violence. Indeed violence is natural in the revolt of the masses against classes. In opposing violence Gandhi did not infact intend to promote the interests of the former in opposition to those of later.
This is a point of view which is however very far from correct.
தற்கால வரலாற்றாளர்கள் அரசியல் அறிவியலாளர்கள் இடையே காந்தி ஒரு தேசியவாதத் தலைவர் என்ற பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. இதன் பொருள், வளர்ந்துவரும் பெருமுதலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்தார் என்பதுதான். சிலர், சற்று பரந்த மனமுள்ளவர்கள் என்ற நினைப்பில், காந்திஜி பொதுமக்கள் நலனில் ஆர்வம் காட்டினார் என்பதை மறுக்கமுடியாது, ஆனால் காந்தி இந்திய தேசிய காங்கிரசை நடத்திச் சென்றமுறை, மேல்தட்டு மக்களின் நலனைக்குறித்தே இருந்தது என்றும் கூறுகிறார்கள். மேலும் அவருக்கு வன்முறை மீது அச்சமே இருந்தது, புரட்சி செய்யும் மக்களின் வேகம் எப்போதெல்லாம் உச்சத்தை தொட்டதோ, அப்போதெல்லாம் அடக்கிவிட்டார். முக்கியமாக புரட்சிக்காரர்களின் எதிர்ப்பு வன்முறைச் செயல்களை வெடிக்கச்செய்துவிடும் என்று தோன்றும்போதெல்லாம் அப்படி நடந்துகொண்டார் என்கிறார்கள். ஒரு வர்க்கத்திற்கு எதிராக பெருவாரியான மக்கள் புரட்சி செய்யும்போது வன்முறை இயல்பானதுதான். ஆனால் வன்முறையை எதிர்க்கும்போது காந்தியடிகள் முதலாளிமார்களின் விருப்பத்தைத்தான் பூர்த்தி செய்ய விரும்பினாரே தவிர பின்னவருக்கு ஆத்ரவாக நடந்துகொண்டதேயில்லை
இதுபோன்ற நிலைப்பாடு உண்மைநிலைக்கு முற்றிலும் மாறானது.
Gandhi was firmly of the opinion that if violence were used instead of non violence, power would eventually gravitate into the hands of a dominant minority who are in possession of the instruments of violence. This is a contingency which he wanted to guard against by always keeping the organization of the masses within the bounds of non violence.
அகிம்சைக்கு பதிலாக வன்முறையைத் தேர்ந்தெடுத்தால், அதிகாரம் என்பது ஆதிக்கம் செலுத்தும் வன்முறை ஆயுதங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கும் சிறிய குழுவின் கைகளில் போய்விடும் என்று காந்தியடிகள் உறுதியாக நம்பினார். இதிலிருந்து காப்பதற்காகத்தான் பெருவாரியான மக்கள் அமைப்புகள் அகிம்சை வழியில் செயல்படவேண்டும் என்றார்




Comments

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...