பட்ஜெட் 2021-22 சில குறிப்புகள்
பாரதிய
ஜனதா கட்சியின் மோடி அவர்கள் ஆட்சி பட்ஜெட்டில் சில மாற்றங்களைக் கொணர்ந்தது. ரயில்வே
தனி பட்ஜெட் நீக்கப்பட்டது. பிப்ரவரி 1 பட்ஜெட் எனத் தேதிமாற்றம் வந்தது. இம்முறை paperless- digital budget என்றனர்.
காங்கிரஸ்
காலமானாலும் தற்போதுள்ள பா ஜ க காலமானாலும் போடப்படும் பட்ஜெட்டில் ஒன்றுமேயில்லை என்பதும்- சொர்க்கபுரிக்கு பட்ஜெட் ஏணிப்படி என்பதும் மிகைப்படுத்தப்பட்ட statements
என்றே சொல்லலாம். எந்த பட்ஜெட்டிலும்
ஆதரவாக பேசுவதற்கும் விமர்சனங்களுக்கும் இடம் இருக்கும்.
இந்த
பட்ஜெட்டில் வருகிற 2021-22க்கான செலவினங்களுக்கு 35 லட்சம் கோடி (3483236) தேவை என
முன்மொழிவுகளை நிதி அமைச்சர் வைத்துள்ளார். அமைச்சரவைவாரியாக, திட்டங்கள்வாரியாக, மாநில
பகிர்வுகள் என allocation செய்யப்படுகிறது. உண்மையாக ஆகப்போகிற செலவு கூடலாம்-
குறையலாம்.
Allocation
எப்படி செய்யப்பட்டுள்ளது- யாருக்கு சாதகமானது- பாதகமானது என்கிற விவாதம் விமர்சனங்கள்
இதைப்பொறுத்து எழுகின்றன. வருகிற மாதங்களில் செலவினம் எதில் வெட்டப்படுகிறது என்கிற
நடைமுறை சார்ந்து விமர்சனங்கள் வரலாம். உதாரணமாக
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்றால் அதன் பயனாளிகள் அன்றாட உழைக்கும்
மக்கள்- இதில் செய்யப்படும் நிதி ஒதுக்கிடு - உண்மையான செலவு என்பது எப்போதும் கூர்மையாக
கவனிக்கப்பட்டு விவாதம்- விமர்சனங்களுக்கு இடமளிக்கும்.
அரசாங்க ஊழியர் எனில் அவர்கள் ஊதியத்தின் பகுதியாக ஊதிய அரிப்பைத் தடுக்கும் கிராக்கிப்படி நிறுத்தம்-
செலவின வெட்டு என வரும்போது அது விமர்சனத்திற்கு உள்ளாகும். பாதுகாப்புத்துறை செலவினங்கள்
கூடினாலும்- குறைந்தாலும் விவாதம் விமர்சனம் பெருகும். கொரோனா காலம் என்பதால் ஹெல்த்
பட்ஜெட் ஒதுக்கீடுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதில் விமர்சனங்கள் எழும். இதேபோல்
கல்வி, ஊரக மேம்பாடு விஷயங்களை சொல்லலாம்.
இந்த
35 லட்சம் கோடி செலவிற்கு அரசாங்கம் வருவாயைப் பெறவேண்டும். அதற்கு வரியினங்கள், வரியற்ற
இனங்கள் வருவாய், கடன் பெறுதல் ஆகியவற்றை அரசாங்கம்
நம்புகிறது. வருகிற ஆண்டில் ரிசிப்ட்ஸ் என்கிற வகையில் வருவாய் 20 லட்சம் கோடி
(1976424) எதிர்பார்க்கப்படுகிறது. மீதி 15 லட்சம் கோடி (1506812) Borrowings மூலம் என அறிவித்துள்ளனர். வருவாய் பற்றாக்குறையை
ஜி டி பி யில் சொல்கின்றனர்.
வருவாய்
என்பதற்காக Finance Bill ல் வரி முன்மொழிவுகளை
செய்கின்றனர். வருமான வரியில் மத்தியதர- மாதந்திர வருவாய் பிரிவினருக்கு மாற்றம் ஏதுமில்லை-
ஏமாற்றம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முக்கியமாக இம்முறை Agri and infra dev cess என பெட்ரோல் டீசலில் லிட்டருக்கு ரூ 2.50, ரூ 4
போட்டுள்ளனர். இதனால் சாதாரணமக்களுக்கு சுமை கூடியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த உயர்விற்கு இணையாக எக்சைஸ் ட்யூட்டி வெட்டு இருப்பதால் சாதாரண மக்கள் செலவு கூடாது
என்கிற பதில் அரசாங்க தரப்பில் தரப்பட்டுள்ளது.
கஸ்டம்ஸ்
மாற்றம் காரணமாக மொபைல், பட்டு, பருத்தி, ஆட்டோ பகுதியில் விலை கூடலாம். நுகர்வோர்
பாதிப்புக்குள்ளாகலாம்.
கொள்கை முடிவுகளாக இன்ஸ்யூரன்ஸ் பகுதியில் அந்நியநேரடி
மூலதனம் அனுமதி 49 % லிருந்து 74 % ஆக்கப்பட்டுள்ளது.
49 சதம் வந்தபோது காங்கிரசை பா ஜ க விமர்சித்தது. இந்த அரசின் முடிவு விமர்சனங்களுக்கு
உள்ளாகும் -ஆர்ப்பாட்ட இயக்கங்கள் பெருகும்.
பங்குவிற்பனை
என்பது பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் தீவிரத்தன்மை வெளிப்படும்போது விமர்சனக் கணைகள்
அதிகரிக்கும். இவ்வாண்டில் Air India,
IDBI, Pawan hans பங்குவிற்பனை முற்றுறும் என தெரிவித்துள்ளனர். எல் அய் சியில் ஐ பி
ஒ நடைபெறும். பொதுக்காப்பீட்டு நிறுவனம் ஒன்றும், இரு வங்கிகளும் தனியார்மயமாக்கப்படும்.
அரசாங்கம் பொதுத்துறையில் startegic
disinvestment policy ஒன்றை வகுத்து ஏற்றுள்ளது.
நான்கு துறைகள் தவிர பிற தனியார்மயம் நோக்கி அழைத்து செல்லும் கொள்கையாக அது இருக்கும்
போன்ற அறிவிப்புகள் போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும். மாநிலங்கள் பங்குவிற்பனை செய்தால்
அம்மாநிலங்கள் incentivised எனக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஆசைப்படும் மாநிலங்கள் இந்த வலையில் சிக்கலாம்.
Labour
and employment குறித்த அறிவிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மாநிலம் விட்டு
வெளிமாநிலங்கள் சென்று பிழைப்போருக்கு ஏதுமில்லை என்பது விமர்சனம். அரசாங்கம் அவர்களுக்கு
எங்கிருந்தாலும் செல்லத்தக்க ரேஷன்கார்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். GIG workers, construction workers என அனைவரின் டேட்டாக்கள் உருவாக்கப்படும். ஹெல்த்,
ஹவுசிங், இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களில் அவர்கள் இணைக்கப்படுவர் என்கிற பதிலை தந்துள்ளது.
இதில் உடனடி நிறைவு வராது.
கடுமையான
குளிர் சூழலில் தலைநகர் வாயிலில் ( ஜனவரி 26 ஒரு பகுதியினரின் அத்துமீறல் நீங்கலாக)
அமைதியாக நாட்கணக்கில் போராடிவரும் விவசாயிகள் பிரச்னை தீர்விற்கு அறிவிப்பு இல்லை
என்பதும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
தேர்தல் என்பதால் குறிவைத்து தமிழ்நாடு, மே.வ, கேரளா
மாநிலங்களில் சாலைக் கட்டுமான திட்டங்களுக்கு
ஒதுக்கீடு என விமர்சனம் எழுந்துள்ளது. அறிவிக்கப்பட்டவை தேர்தல் காலத்திற்கு பின்னர்
வருகிறதா அமுலாகிறதா எனப் பார்த்தால்தான் உண்மையான நோக்கம் வெளிப்படும்.
சென்ற
20-21 பட்ஜெட்படி பார்க்கும்போது Large Ministries 13 மொத்தசெலவில் 53 சதம் எடுத்துக்கொள்கின்றன. Top 15 schemes வருவாய் ஒதுக்கீட்டில் 13 சதம் எடுத்துக்கொள்கின்றன. பாதுகாப்பு 4.71 லட்சம் கோடி, உள்துறை 1.67 லட்சம்
கோடி, விவசாயம் 1.42 லட்சம் கோடி ( இதில் பி எம் கிசான் திட்டம் 75000 கோடி சேர்கிறது-
ரூ 6000 திட்டம்), நுகர்வோர்- உணவு- பொது விநியோகத்துறைக்கு 1.22 லட்சம் கோடி ( இதில்
உணவு மான்யம் தான் முக்கிய செலவினம்), ஊரகத்துறைக்கு 1.22 லட்சம் கோடி ( இதில்தான்
வீடு, சாலை திட்டங்கள் வருகிறது. 50 சதம் மகாத்மா காந்தி வேலைத்திட்ட செலவாகிறது),
ரயில்வே 2.25 லட்சம் கோடி ( இதில் ஊதியம்- பென்ஷன் செலவினம் 66 சதமாகிறது), மேலே சொல்லப்பட்ட
அமைச்சர்துறைகள்தான் லட்சம் கோடிக்கு மேல் செலவினங்களை கொண்டவை. அதேபோல் 50 ஆயிரம்
கோடிக்கு மேல் கொண்டவைகளாக மனிதவளம் 99 ஆயிரம் கோடி ( இதில் கல்வி, மதிய உணவு போன்றவை),
சாலை போக்குவரத்து 91 ஆயிரம் கோடி, டெலிகாம் 66432 கோடி உள்ளிட்டவை வந்தன. இம்முறை
ஹெல்த் அலோகேஷன் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
வருவாய்
செலவினங்களை விட இம்முறை மூலதன செலவினங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். சென்றமுறையைவிட
29 சதம் capital expenditure ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பங்குவிற்பனையில் 2019-20ல் உண்மையில் பெற்றதைவிட 3.5 times இம்முறை ’இலக்கு நிர்ணயித்துள்ளது’ அடையமுடியாத
ஒன்று என்கிற பார்வையும் தீவிர சீர்திருத்த ஆர்வலர்களால் வைக்கப்படுகிறது. வருமானவரி
மூலம் 5.61 லட்சம் கோடி எதிர்பார்த்துள்ளனர். கார்ப்பரேட்வரி 5.47 லட்சம் கோடி என காட்டியுள்ளனர்.
இவையெல்லாம் அரசிற்கு வரவேண்டும். செலவினங்கள் வெட்டப்படாது என்பதற்கு எந்த அரசாங்கமும்
உத்தரவாதம் தருவதில்லை.
பொருளாதார
எண்களை அரசியல் பார்வையில் வைத்து எடைபோடும்போது பா ஜ க ஆதரவாளர்களால் நூற்றாண்டில்
சிறந்த பட்ஜெட் போன்ற உச்ச புகழாரங்கள் செய்யப்படுகின்றன. பா ஜ க ஆட்சியை விமர்சிக்கும்
அரசியல் வட்டாரங்களில் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட்
என்கிற கடும் விமர்சனங்களும் வருவதைக் காண்கிறோம். 2013ல் சிதம்பரம் போட்ட பட்ஜெட்டை
அருண்ஜேட்லியும், சுஷ்மா சுவராஜ் அவர்களும் கடுமையாக விமர்சித்தனர். இந்த பட்ஜெட்டை
சிதம்பரம் விமர்சித்துள்ளார்.. இரண்டு தரப்பிலும் போடப்பட்ட பட்ஜெட்களை முன்பும் சரி,
இப்பொழுதும் முதலாளித்துவ ஆதரவு பட்ஜெட் என்றே இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர்.
வளர்ச்சியை
முன்வைத்து பட்ஜெட் என்கின்றனர். இதனால் வேலை வாய்ப்புகள் (முதலாளித்துவ வளர்ச்சிக்கு
உகந்த சூழலில்- லேபர் சட்டங்கள் உட்பட்ட அம்சங்களில்) உருவாக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. வளர்ச்சி
பெருகினாலும் அசமத்துவம் வளர்வது தவிர்க்க முடியாதது என்பதும் பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.
6-2-2021
Comments
Post a Comment