Skip to main content

இந்தியாவில் வரிவிதிப்பு திசை

 

                   இந்தியாவில் வரிவிதிப்பு திசை

இந்த தகவல் கட்டுரை ஓர் ஆய்வுக்கட்டுரையல்ல. 2021 பட்ஜெட்வரை update  செய்யப்பட்டதுமல்ல. விமர்சன கட்டுரையுமல்ல. முந்திய சில ஆண்டுகளில் வரிவிதிப்பும் வரியாக பெற்றதும் எவ்வாறு அமைந்தன என்பதைச் சொல்லும் சிறு கட்டுரை. எனது புரிதலுக்காக எழுதிப்பார்த்த கட்டுரை என சொல்லலாம்.

நவீனவகைப்பட்ட வரிவிதிப்புமுறையை பிரிட்டிஷ்  நிர்வாகம் 1922ல் முறைப்படுத்தி அறிமுகப்படுத்தியது. விடுதலை இந்தியாவில் 1961 வருமானவரி சட்டம் வந்தது.

 இந்திய அரசியலமைப்பு சட்டம் 7வது ஷெட்யூல் கொடுக்கும் அதிகாரப்படி மத்திய மாநில அரசாங்கங்கள் வரிவிதிப்பை செய்கின்றன. விதி 246 மத்திய பட்டியல் லிஸ்ட் 1க்குரியதை செய்திட நாடாளுமன்றத்திற்கும், லிஸ்ட் 2க்கானதை மாநில சட்டமன்றங்களுக்கும் தருகிறது. லிஸ்ட் 3  Concurrent list  என்றாலும் சட்டவிதி 254ன்படி இறுதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு தந்துவிடுகிறது.  GST  2017ல் 101வது சட்டதிருத்தம் மூலம் வந்தது. இதற்கான அதிகாரம் 246  A ல் உருவாக்கப்பட்டது. அதே போல அதற்குரிய கவுன்சில் அமைக்கும் அதிகாரமும் ஏற்படுத்தப்பட்டது..



வரிவிதிப்பில் நேரடிவரி, மறைமுகவரி என்ற இரு பெரும் பிரிவில் பொதுவாக வரியினங்கள் அமைந்துள்ளன. நேரடிவரியில் வருமானவரி, கார்ப்பரேட்வரி,  வெல்த் வரி வந்தால், மறைமுகவரியில்  sales, Excise, Customs, service tax  வந்தன.

GST is a single tax policy on supply of goods and services from the manufacturer to the ultimate consumer என்று அறிமுகமானது.: கீழ்கண்டவரிகளை அது உள் இழுத்துக்கொண்டது - subsumed at the central level.

1. Additional Excise Duty

2. Service Tax

3. Central Excise Duty

4. Additional Customs Duty commonly known as countervailing duty and

5. Special Additional Duty on Customs

 

At the state level, the following taxes are being subsumed:

1. Subsuming of State Value Added Tax/Sales Tax

2. Entertainment Tax

3. Octroi and Entry Tax

4. Purchase Tax

5. Luxury Tax, and

6. Taxes on lottery, betting and gambling

வரி சீர்திருத்தம் என்பதற்காக 1991ல் ராஜா செல்லையா கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர் 2002ல் கேல்கர் குழுவும், 2013ல் ஷோம் குழுவும் சில மாற்றங்களைக் கொடுத்தன.

1980-81 ல் நேரடி வரி 2817 கோடியாக இருந்தால், மறைமுகவரி 9909 கோடியாக திரட்டப்பட்டது. அவ்வாண்டில் மொத்தவரி 12276 கோடி., 2016-17ல் நேரடிவரி 8,49818 கோடி,  மறைமுகவரி 861515 கோடி, மொத்தவரி 1711333 கோடியாக  மாற்றமடைந்ததைப் பார்க்கிறோம்.

1981ல் மொத்தவரியில் நேரடிவரி 22 சதம் எனில் மறைமுகவரி 78 சதமாக இருந்தது. இதுவே 2017மார்ச்சில்  49.66 சதம் மற்றும் 50.34 சதமாக மாறுகிறது. 2015 மார்ச்சில் பார்க்கும்போது மொத்தவரியில் நேரடிவரி 56 சதம்  மறைமுகவரி 44 சதமாக இருந்தது. இந்திய வரிவிதிப்பில் மறைமுகவரி மிக உயர்ந்து இருந்த நிலைமாறி நேரடி- மறைமுகவரி வீதங்கள் ஏறத்தாழ சமநிலை என்கிற நிலை 2017 மார்ச்சில் வந்தது. 2009ல் நேரடிவரி 55 சதமாகவும் மறைமுகவரி 45 சதமாகவும் இருந்ததையும் பார்க்கமுடிந்தது.

 1999- 2004 ஆகிய 5 ஆண்டுகளில் ’2 லட்சம்- 5 லட்சம் வருவாய் பிரிவினர் 38 சதம் அதிகமாகியிருந்தனர். 10 லட்சத்திற்கும் மேலான பிரிவில் 16 சத அதிகரிப்பு நடந்தது. 2014-18 ஆண்டுகளில் மட்டும் வரிகட்டுவோர் எண்ணிக்கை 25 மில்லியன் கூடியது. மார்ச் 2018ல் 6.86 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்தனர். தாக்கல் செய்தவர் மக்கள் தொகையில் 5 சதமானவர் எனலாம்.

 CBDT 2017  விவரப்படி 1980-81ல் கார்ப்பரேட் வருமானவரி 1337 கோடியெனில், தனிநபர் வருமானவரி 1440 கோடியாக இருந்தது. 2016-17ல் கார்ப்பரேட்வரி 484924 கோடியெனில்  தனிநபர் வருமானவரியில் 349270 பெறப்பட்டுள்ளது.

  GDP Tax ratio  என நேரடிவரிவிதிப்பில் பார்த்தால் முதல் 40 ஆண்டுகள் 2 சதம் என்பது பொதுவாக மாறாமல் இருந்துள்ளது. 1990கள், அடுத்து வந்த 2000 ஆண்டுகளில் 6.39 வரை உயர்ந்து 5.6 என வீழவும் செய்தது. மறைமுகவரியில் GDP Tax ratio  பார்த்தால் முதல் 40 ஆண்டுகளில் 4 சதம் துவங்கி 13.5 சதம்வரை சென்றது. 1990களில் 11 சதமாக குறைந்தது. 2012-13ல் 4.77 ஆக இருந்து16-17ல் 5.79 ஆக உய்ர்ந்தது.

Total tax GDP Centre and states என்பது 16-17ல் 17.60  சதமாக சொல்லப்பட்டுள்ளது. இதை 2030ல் 23 சதமாக உயர்த்த நினைக்கிறார்கள். இந்த விகிதாச்சாரம்  இங்கிலாந்து, கனடாவில் 37 சதமாகவும், பிரிக்ஸ் நாடுகளில் 20 சதத்திற்கு மேலாகவும், அமெரிக்கா, ஜப்பானில் 28 சதமாகவும் சொல்கின்றனர். சீனாவில் 20 சதமாக இருக்கிறது.

 இந்தியாவில் தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட்  நேரடிவரிகளைவிட மறைமுக  Goods and services Tax  சார்ந்த முறையே  தீவிரமாக செயல்படுகிறது. 2015-16ல் மோடி சர்க்கார்  சில நடவடிக்கைகளை எடுத்தது.

Wealth tax abolished

 The corporate tax was lowered from 30 per cent to 25 per cent in a phased manner beginning 2016-17.

 Recommendation of finance commission allocating 40 per cent of central taxes to states accepted

Rate of service tax increased from 12.36 per cent to 14 per cent

இந்த நடவடிக்கைகள் கார்ப்பரேட்களுக்கு சாதகமானவை என்கிற கடுமையான விமர்சனம் எழுந்தது.

2001ல் 334261 கம்பெனிகள் வரி செலுத்தினால்- 2014ல் 707771 கம்பெனிகளும் 2016-17ல் 764410 கம்பெனிகளும் செலுத்தியுள்ளன. தனிநபர் எனப் பார்த்தால் 2.06 கோடியிலிருந்து 5.92 கோடியாக வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியாவில் பதிவான கம்பெனிகளில் 50 சதம் வருமானவரி தாக்கல் செய்வதில்லை என்கிற செய்தியும் இருக்கிறது. ஒருகோடிக்குமேல் வருவாய் உள்ளவர்  taxbase பெருகாமல் இருப்பதையும் காணமுடிகிறது.

மறைமுகவரி குறைவது என்பதுதான் ஒரு நாட்டில் பெரும்பான்மையான சாதாரண மக்கள் வரிச்சுமையிலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்பதின் அளவுகோலாக இருக்கிறது. நேரடிவரி கொடுங்கோன்மை என்பதும் ஓர் அரசின் வரிக்கொள்கை குறித்த பார்வையை உலகிற்கு வெளிப்படுத்தும். எப்பகுதி வலிமையாக  vocal  ஆக இருக்கிறதோ  அதைப் பொறுத்தும் அரசியல் சூழலைப் பொறுத்தும் வரிவிதிப்பு விகிதங்கள் மாறுவதை அவதானிக்கலாம்.

 

( இந்த கட்டுரைக்கான விவரங்கள் ISEC Working Paper 448 Tax Revenue in India Trends  (2019) by  Pratap singh  ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ளது)

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...