https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, November 6, 2016
பலரோ சிலரோ ஒருவர் குறித்து பெருமிதத்துடன் புகழ்வதும்- சிலரோ பலரோ அதே நபர் குறித்து இகழ்வதும் தவிர்க்கமுடியாத ஒன்றே. தோழர் லெனினுக்கும் இது நிகழ்ந்தது. சோவியத் புரட்சி- ஆட்சி , உலகத்தின் பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளி என புகழப்பட்டதும் அனார்க்கிஸ்ட்கள், நோம் சாம்ஸ்கி போன்றவர்கள் கூட லெனினை விமர்சித்து வருவதும் நடந்து வருவனவாகவே இருக்கிறது. நூற்றாண்டு என்பதால் இது குறித்து நாம் அதிகம் தெரிந்து கொள்ளமுடியும். பரேஷ் சட்டோபாத்யாய் கனடா க்யூபெக்கில் உள்ள மார்க்சிய ஆய்வாளர். The marxian concept of capital and soviet experience-Paresh Chattopadhyay என்ற புத்தகமும் எழுதியவர். பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்திய கட்டுரை ஒன்று Party problematic in Revolution: Some Random Remarks பிராண்டியர் இதழில் படிக்க நேர்ந்தது .அக்கட்டுரையில் ஜெர்மன் வரலாற்றாசிரியர் OSKAR ANWEILER அவர்களின் சோவியத் இயக்கம் குறித்த ஆய்வு புத்தகம் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அதை தேடும் முயற்சி பலனளித்து 360 பக்கங்களை கொண்ட The Russian Workers peasants and Soviet councils 1905-1921  OSKAR ANWEILER படிக்க துவங்கியுள்ளேன்.
 பிராண்டியர் இதழ் கல்கத்தாவிலிருந்து வருகிறது. திருவாரூரில் இருந்தபோது பல ஆண்டுகள் வீட்டிற்கு வந்து இதழ். பேராசிரியர் . மார்க்ஸ் அவர்கள்தான் எனக்கு  பிராண்டியர் முகவரி தந்து உதவியவர். மார்க்ஸ் அவர்கள் தமிழகம் அறிந்த களப்போராளி-Public Intellectual எதையும்  focussed ஆக சொல்லியும் எழுதியும் வருபவர். ஏராள புத்தகங்களை எழுதியுள்ளார். பின்நவீனத்துவம் குறித்து எனக்கு புரியாமல் இருந்தபோது தன் கடிதம் மூலம் எனக்கு புரிதலை தந்திருந்தார். பேரா . மார்க்ஸ் அவர்களுக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.
 பிராண்டியரில் எனது கட்டுரை ஒன்றும் வந்தது. நியுஏஜ்ஜில் எழுதிக் கொண்டிருந்தபோது பிராண்டியருக்கு எழுதலாமே என்ற முயற்சிக்கு பிராண்டியர் ஆதரவு தந்ததற்கு எனது நன்றிமரியாதைக்குரிய தோழர் சி. இராஜேஸ்வரராவ் (பொதுச் செயலர்  சி பி அய்) அவர்களுடன் மூன்று நாட்கள் இருக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாய்ப்பை நல்கிய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கட்சிக்கும் என் மீது நம்பிக்கை வைத்து அப்பொறுப்பை ஒப்படைத்த திருவாரூர் மறைந்த தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றி. தோழர் ராஜேஸ்வருடன் இளைஞனுக்கே உள்ள ஆர்வத்தில் நக்சல் இயக்கம்-தன்னார்வ இயக்கம் மற்றவை விவாதித்த போது அவர்தான் நியுஏஜ்ஜிற்கு எழுது என பணித்தார். அவர் மறைந்த பின்னர்தான் சில கட்டுரைகளை எழுத முடிந்தது. இதேபோல் வேறு ஒரு நல்வாய்ப்பும் கிட்டியது. சி பி அய்யின் புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரும்  குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சிவிரெட்டி அவர்களின் இளைய சகோதரரும் ஆகிய  தோழர் நீலம் ராஜசேகர ரெட்டி அவர்களுடன் முழுமையாக ஒருநாள் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது soocial Science probings முதல் இதழ் வந்திருந்த நேரம். அவர்தான் ஆசிரியர்.  CPIM தோழர்கள் Social Scientist பத்திரிக்கையை சிறப்பாக பல ஆண்டுகள் நடத்திக்கொண்டிருந்த நேரம். Science Probings தோழர்களை வாங்க வைக்க மத்தியதர வர்க்க தோழர்கள்முயற்சி செய்ய வேண்டும் என தோழர் ராஜசேகர ரெட்டி அறிவுரை செய்தார். சில இதழ்கள் வந்து மிக சிறந்த பத்திரிக்கையாக வரவேண்டியது நின்றுபோய்விட்டது.
இந்நேரத்தில் மிக முக்கிய தஞ்சை தலைவர் தோழர் கே எஸ் கே அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் கல்லூரியிலிருந்து அப்போதுதான் வேலைக்கு சேர்ந்த நேரம். ஜெகன் கூட்டம்... என்னை பேச சொன்னபோது இங்கிலீசில் உளறினேன். ஜெகன் நீ இங்கே தங்கி வேலை செய்யறதா இருந்தால் தமிழில் பேசு என்றார். கே.எஸ் கே   Dialectics புத்தகத்தை கொடுத்து படி என்றார். ஆங்கிலம்தானே என்று நினைத்து வாங்கிய எனக்கு புரிந்தது ஆங்கிலம் படிக்கத் தெரிந்தாலே எல்லாம் புரிந்து விடாது என்பது. கே எஸ் கே தான் மிகச் சிறந்த அப்போது பெரிதும் நாங்கள் படிக்க காத்துக்கிடக்கும்   PartyLife அறிமுகப்படுத்தினார். மார்க்சிய அரிச்சுவடியில்  சேர உதவிய தோழர் கே எஸ் கேவுக்கு எனது அன்பு நன்றி.

2017 மார்க்சிய உலகில் பெரும் விவாதங்கள் நடைபெறவேண்டிய ஆண்டு. ருஷ்ய புரட்சி 100 படிப்பினைகள், நக்சல்பாரிகள்-50 படிப்பினைகள், சீனா கலாச்சார புரட்சி-50 படிப்பினைகள் என விவாதம் பெருக போகிறது. உடல் ஆரோக்கியம் ஒத்துழக்கின்றவரை இந்த நீண்ட பயணத்தில் சில மைல்கள் பயணிக்க உத்தேசம்.

No comments:

Post a Comment