யு.ஆர் அனந்தமூர்த்தி இந்தியாவின் புகழ்வாய்ந்த இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர். அவரின் சம்ஸ்கரா உலகப்புகழ் பெற்றது. சாகித்ய அகாதமியின் தலைவராக இருந்தவர்.ஞானபீடம் பெற்றவர். மோடி ஆட்சிக்கு வந்ததை கொடுங்கனவாக நினைத்து வருந்தியவர். வெளிப்படையான கருத்துக்களால் பெரும் அவமதிப்பை சந்தித்தார். மரணத்திற்கு முன்னர் மிக சிறந்த புத்தகம் ஒன்றை அவர் நமது சமுகத்திற்கு கொடுத்து சென்றுள்ளார். 2014ல்
HINDUTA OR HIND SWARAJ என்பது கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்றது. காந்தியின் புகழ்வாய்ந்த ’நூற்றாண்டை கண்ட’ ஆக்கமான Hind Swaraj- Indian Home Rule மற்றும் வினாயக் தாமோதர் சாவார்க்கர் வழிகாட்டிய Essential of Hindutva ஆகிய
இரண்டையும் அனந்தமூர்த்தி ஒப்பீட்டு காந்தியின் ஆக்கம் ஏன் தனக்கு சிறந்து விளங்குவதாக எடுத்துரைக்கிறார். திரு மோடியை பெரிதும் விரும்பக்கூடியவர்களை கூட நிதானப்படுத்தும் அற்புத ஆக்கமாக அனந்தமூர்த்தியின் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கோட்சே காந்தியை படுகொலை செய்ததும், அதை நியாயப்படுத்தி கொடுத்த வாக்குமூலமும் அனந்தமூர்த்தியால்
தரப்பட்டுள்ளது. சாவர்க்கரின் எழுத்துக்கள்தான் கோட்சேவாவை தூண்டியதாக அனந்தமூர்த்தி பதிவு செய்கிறார். சாவர்க்கர் தனது 1857 முதல் சுதந்திரப்போர் புத்தகத்தை மராத்தியில் எழுதி அது பிரான்ஸ், ஜெர்மன் என எந்த நாட்டிலும் பதிப்பிக்கபடமுடியாமல் போகி பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில அரசு எவ்வளவு உளவு பார்த்தாலும் கண்டுபிடிக்கப்படமுடியாமல் வெளிக்கொணரமுடிந்த பெருமிதத்தை முந்திய ஜனசங்கத்தினர் பெருமிதமாக சொல்லுவார்கள். அனந்தமூர்த்திகூட தான் சிறுவயதில் சாவர்க்கர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார். அவருக்கு திரு.அத்வானி போன்றவர்களிடம் கூட பழக்கம் இருந்தது. ஆனாலும் மோடி குறித்த விமர்சனங்களை வைத்ததால் கடும் கண்டனத்திற்கு ஆளானர்.
காந்தியின் பார்வையில் அனைத்து மதங்களும் தன்னளவில் நிறைவு கொண்டவையல்ல. அவருக்கு தன் மதம் முக்கியம் என்பது போலவே மற்றவர்க்கு அவரவர் மதம் முக்கியம் என்பதில்- UNIVERSAL MAN கருத்தாக்கத்தில் நின்றார்.
நான் ஆளப்பிறந்தவன் என்கிற சத்ரிய பார்வையை சாவர்க்கர் வழங்குவதாகவும் கட்டுப்படாத மற்றவரின் இருப்பை அது தொந்திரவு செய்யும் என அனந்தமூர்த்தி பேசுகிறார். ரூ 200க்கு கிடைக்கிறது. இன்றுள்ள இந்திய சூழலில் பொருட்படுத்தி படிக்கவேண்டிய புத்தகம் என எனக்குப்படுகிறது.
Comments
Post a Comment