https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, May 28, 2020

நேருவின் மதசார்பின்மை


நேருவின் மதசார்பின்மை

        ஆர்.பட்டாபிராமன்

இந்தியாவில் மேற்குவகைப்பட்ட புரிதலான செக்யூலரிசம் என்பது பெரும் மக்களை கவ்விப்பிடிக்கவில்லை. இங்கு மேற்கு கல்விகற்ற ராஜாரம் மோகன் ராய், தயானந்தர், அரவிந்தர், திலகர் எல்லோருமே இந்து மறுமலர்ச்சி கருத்துக்களை விதைத்தவர்கள். காந்தியிடம் எந்த வறட்டுத்தன மதப்பார்வையில்லாவிடினும் மதம் என்பதிலிருந்து விலகிய பார்வையை அவர் வைக்கவில்லை. அனைத்து மதங்களுக்குமான மரியாதை என்பதில் உடன்பட்டு நின்றார். இந்துமுஸ்லீம் ஒற்றுமை என்பது அவரது மிக முக்கிய நிகழ்ச்சிநிரல்.
நேரு தான் வறட்டுக்கோட்பாடுகளின் பிடியில் சிக்கிவிடக்கூடாது எனக் கருதியவர். தன் மனதில் பல குரூப்ஸ் உண்டு என்றவர். மிக முக்கியமாக காந்தி ஒரு குரூப்- மார்க்சியம், லிபரலிசம் போன்றவை மற்ற குரூப்கள் என்றவர் நேரு.

நேருவிற்கு பழமையை முழுமையாக முறித்துக்கொள்ள முடியாது என்பது தெரியும். ஆனால் அதற்காக அதன்மீது கண்மூடிய பக்தி தேவையில்லை என நேரு கருதினார். அதே நேரத்தில் Nationalism is essentially a group memory of past achievements, traditions and experience என்பதை அவர் ஏற்றிருந்தார். தாகூரின் synthetic universalism என்பதில் ஏற்பு இருந்தது. கலாச்சார பன்மைத்துவம்- அவைகளின் கூட்டிணைவு என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்திய வரலாறை "the gradual growth of a composite culture of the Indian culture" என்ற வகையிலேயே அவர் புரிந்துகொண்டார். அவரை மதவிரோதி என அழைக்கமுடியாது. அவரிடத்தில் தனிக் கடவுள்  பக்தி  என ஏதுமில்லை. சடங்குகளும் கோட்பாடுகளும் நிறைந்த, அமைப்பாக்கப்பட்ட மதம் குறித்த அச்சம் அவரிடமிருந்தது. மானுட வளர்ச்சிக்கு அவை தடைகளாக நிற்கும் என அவர் அஞ்சினார். ஒழுக்கத்தையும் நன்னெறிகளையும் போதிப்பதால் மதம் என்பதை மனித வாழ்விலிருந்து அகற்றுவது கடினமானது என்பதை அவர் உணர்ந்திருந்தார். மனிதனை நல்வழிப்படுத்தும் திசையில் தனிமனித தேவைக்கான ஒன்றாக மதத்தை அவர் கருதினார்.
If religion deals not with dogmas and ceremonials but with the higher things of life, there should be no conflict with science or inter se between religions. It must be the high privilege of India to help in bringing about this synthesis என அவர் தெரிவித்தார்..
இந்தியாவில் வகுப்புமோதல் நமது கொள்கைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பேராபத்தானது. அதை நாம் முறியடித்தே ஆகவேண்டும். பல்வேறு பிரிவினர் வாழ்கிற நாட்டில் ஒவ்வொருவரும் மற்றவரின்  நம்பிக்கைகளை, பழக்கங்களை மதித்து நடந்தால்தான் நல்லிணக்கம் நிலவும். நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியும் நல்லிணக்கமும் அவசியத் தேவைகளாகின்றன என அவர் உறுதியாக நம்பி செயல்பட்டார்.
இந்தியாவில் வகுப்புவாதம் என்பது மத சம்பந்தமான பிரச்சனையல்ல. அது அதிகாரம், பொருளாயத பலன்களை உயர் மத்திய தட்டு பெறுவதற்கான முயற்சி என்றே தனது அனுபவ வாயிலாக அவர் வந்தடைந்தார்.
The so-called communal question was not a religious question, but a political question of upper middle class and their demand for additional jobs and seats in legislature.
நேருவிற்கு மதவிவகாரங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது மிக முக்கியமாக இருந்தது (neutrality of the state in religious matters). எந்த ஒரு நாடும் அதிகாரபூர்வ மத அரசாக Theocratic state இருப்பதின் ஆபத்துக்களை நன்கு உணர்ந்தவராக நேரு இருந்தார். இந்திய மக்கள் தொகையில் 10 சதமாக இஸ்லாமியர் இருக்கையில், பெரும்பான்மை பெயரில் மத அடிப்படை அரசை நிறுவுவது பெரும் குழப்பத்தையும் தீமையையுமே விளவிக்கும். நிர்வாகம் பெரிதும் பாழ்படும் என்ற பார்வை அவரிடம் தொழிற்பட்டது.
 நேரு பொதுவாக மதவிவகாரங்களில் தலையிடாமையே சரியானது எனக் கருதி செயல்பட்டவர். அவரிடம் கல்வி நிறுவனங்களில் மதபோதனைகள் அவசியம் என இந்துக்கள் சிலர் வலியுறுத்தியபோது, கிறிஸ்துவர், முஸ்லீம் அல்லாத பகுதிகளில் கூட பைபிள், குரான் படிப்பது அவசியம் என்று சட்டம்போடக்கூடத் தயார்- அது ஏற்புக்குரியதா என அவர்களிடத்தில் யதார்த்த நிலைமைதனை புரியவைத்தார்.
  மதசார்பின்மையின் முக்கிய பண்பே வகுப்புவாத தனிச்சலுகை காட்டாமல் இருப்பதே (secularism demands that there should be no favouritism on communal, sectarian or class basis)  என்கிற ஆழமான விளக்கம் அவரிடம் கிடைக்கும் . பல்வேறு வழிபாட்டுமுறைகள், ஆலயங்கள், மசூதிகள், மாதாகோயில்கள் இருக்கிற நாட்டில் சகிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. அவரின் மதம் குறித்த இந்த சகிப்புத்தனமை ஆள்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. அவர் சகிப்புத்தன்மை என்பதில் காந்தியைப் போன்றே பேசினார் என சொல்லலாம். பிறமத தூஷணை- புண்படுத்தல் கூடாது என்றே நேருவும் சொல்லிக்கொடுத்தார்.
We can find the image of God in everyman, in  every idol, in every temple, every Mosque and in every church and so, nobody should dare insult that image of God whether in a Muslim or Christian or in a Hindu"
 நாட்டின் பிரிவினை சூழலில் செக்யூலர் ஸ்டேட் அமைவது என்பதில் நேரு காட்டிய உறுதிப்பாடு  மெச்சத்தகுந்தது. நம்மால் இறையியல் மற்றும் ஏதேனும் ஒரு மதம் சார்ந்த அரசாங்கத்தை உருவாக்க முடியாது. வகுப்புவாதமற்ற, செக்யூலர் ஜனநாயக அரசாங்கத்தையே நம்மால் நினைத்துப்பார்க்க முடியும் என அவர் வெளிப்படையாக பேசினார்.
We cannot think of any state which might be called a communal or religious state. We can only think of a secular, non-communal, democratic state in which every individual to whatever religion he may belong, has equal rights and opportunities.  இதை அக்டோபர் 1947 பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்தினார்.
செக்யூலரிசம் எனும் மதசார்பின்மையுடன் தனிநபர் சுதந்திரம் என்பதை அவர் பொருத்தவேண்டியவராகவும் அவர் இருந்தார். இந்தியாவில் தனிநபர் என்கிற வகையில் மக்கள் பெற்றுள்ள மத சுதந்திரம் எந்த ஒரு மதத்தின் மீதான விசேஷ கரிசனம் பாற்பட்டதல்ல. தனிநபரின் சுதந்திரம் என்கிற கரிசனம்பாற்பட்டது என்கிற புரிதல் அவசியமாகிறது. நேருவிற்கு மத சுதந்திரம் என்பதுடன் மதமே வேண்டாம் என்பவர்களின் சுதந்திரமும் சேர்த்துதான் செக்யூலரிசமாகிறது.
அரசியல் அமைப்பு சட்ட விதிகள் 25 மற்றும் 26 குறித்து நீதிமன்ற விளக்கங்கள் ஏராளம் வந்துள்ளன. தேசியக்கொடி வணக்கம் கூட வழக்கானது- தீர்ப்பானது. மதம் என்பது அவை சொல்லும் சடங்கு உட்பட நடைமுறை செயல்களும் சார்ந்தவைதான் என்பது போன்ற தீர்ப்புகளும் வந்தன. பசு கொலை பிரச்சனையானது. முழுமையாக பசுவதை தடை நம்மை ஒருமத அரசாக மாற்றிவிடும்  என  நீதிபதி கஜேந்திரகட்கரே சொல்லவேண்டியிருந்தது.
 ”…the claim of the majority community for total ban on cow-slaughter "amounts to converting the secular democracy of India into a theocratic state; and that is a position which no secularist in the country will accept." 
காந்தியிடம் இதற்கு மிக அறிவார்ந்த பக்குவமான விளக்கம் கிடைக்கிறது. மதம் சொல்லும் தடைகள் அந்த மதம் சம்பந்தப்பட்டவர்க்கு மட்டுமே- அது உலகத்திற்கல்ல. இந்தியா இந்துக்களுக்கான நிலம் மட்டுமல்ல- இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சிக்கள் என பலர் வாழும் பூமி. இங்கு பசுவதை தடை என்றால் பாகிஸ்தான் உருவ வழிபாட்டு தடை என்பர்.
The Hindu religion prohibits cow slaughter for the Hindus, not for the world. The religious prohibition comes from within. Any imposition from without means compulsion. Such compulsion is repugnant to religion. India is the land not only of the Hindus, but also of the Musalmans, the Sikhs, tbe Parsis, the Christians and the Jews and all who claim to be Indian and are loyal to the Indian Union. If they can prohibit cow slaughter in India on the religious grounds, why cannot the Pakistan Government prohibit, say, idol worship in Pakistan on similar grounds."
 பொருளாதார காரணிகள் சார்ந்து என பிரச்சனை ஒன்றை பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கும் அதையே மதக்காரணியாக குறுக்கி நடவடிக்கை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ளவேண்டும் என நேரு கேட்டுக்கொண்டார். இதை தெளிவுபடுத்தி ஆகஸ்ட் 7 1947ல் ராஜேந்திரபிரசாத்திற்கு நேரு எழுதினார்.
மதப்பிரச்சாரம் என்பதை ஏற்ற நீதிமன்றம் மதமாற்றம் செய்துவைப்பது ஒருவருக்கு அடிப்படை உரிமையல்ல என்றது. புத்தரின் 2500 ஆண்டுகள், துளசிதாசரின் 400வது ஆண்டு, ஹிஜ்ரி சகாப்தத்தின் 1400 ஆண்டுகளுக்கு பொதுநிதியை செலவு செய்தது கூட 1975ல் வழக்கானது. விமர்சனமானது. அது தேசத்தின் மரபுகளை இளம் தலைமுறையினர் அறிய செய்தல் என்பதற்கான ஏற்பாடு என பதில் தரப்பட்டது.
ஹிரன் முகர்ஜி 1960ல் நேரு குறித்த புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் நேருவின் செக்யூலர் டெமாக்ரசி குறித்து விவாதித்திருக்கிறார்.
குறுகிய வகுப்புவாத எண்ணங்களை நாம் வளர்த்துவிடக்கூடாது. எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள். மக்களிடம் குறுகிய எண்ணங்கள் நிறைந்துவிட்டால் சிறந்த இந்தியா என உலகால் கொண்டாடப்படமுடியாத ஒன்றாக நாடு ஆகிவிடும் என மிக முக்கிய எச்சரிக்கையை ஆகஸ்ட் 15 1947ல் நேரு விடுத்தார். நான் பொறுப்பில் இருக்கும்வரை இந்தநாடு இந்துநாடு என ஆகிவிடாது என்கிற உறுதிமொழியை அவர் நாட்டுமக்களனைவருக்கும் ஒரு சேர தந்தார்.
பிப்ரவரி 18 1953ல் மிக முக்கியமான கருத்தை அவர் அனுபவரீதியாக உணர்ந்து வெளியிட்டார். ஜனநாயகத்தை மிகவும் நேசித்தாலும், எப்போதுமே பெரும்பான்மையினர்தான் சரி என்பதை தன்னால் ஏற்கமுடியாது என தெரிவித்தார். ”I am not prepared to accept the statement that the largest number of people are always right"  இதை அவர் மக்கள் அவையில் தைரியமாக வெளிப்படுத்தினார். கம்யூனல் பிரச்சனை ஒன்றிற்கான பதிலாகவே இக்கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.
வகுப்புவாதத்துடன் ஜனநாயகம் ஒத்துப்போகவே முடியாது என்பதை நன்கு அறிந்தவராக நேரு இருந்தார். அம்பேத்கரையும் காந்தியையும் அரவணைத்துக்கொள்ளும் வலது வகுப்புவாத சக்திகள் நேரு மீது தொடர்ந்து விமர்சனம் செய்வதை நாம் காணமுடியும்.
  வகுப்புவாத படுகொலைகள் அனுபவங்களுக்கு பின்னால் வகுப்புவாதிகள் பழமையிலும் இல்லை- நிகழ்காலத்திலும் இருக்கமாட்டார்கள். அவர்கள் அந்தரத்தில் தொங்கக்கூடியவர்கள் என நேரு விமர்சித்தார்.
1959ல் கேரளாவில் இ எம் எஸ் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகலைப்பில் உடன்பட்டவராக நேரு இருந்ததை ஹிரன்முகர்ஜி உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களும் விமர்சனபார்வையுடனேயே பார்த்தனர். பல்வேறு தலைவர்களை ஒப்பிடுகையில் சிறந்தவராக விளங்கிய நேரு சில தருணங்களில் புதிராக விளங்கினார் என்கிற மதிப்பீட்டை ஹிரன் தருகிறார்.
நேரு அவர்கள் கட்சித்தலைமையைதாண்டிவந்து தேசியத்தலைமை ஏற்று நல்லெண்ணம் கொண்டவர்களை எல்லாம் உள்ளடக்கிய அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் கோரினார். அனைத்து அம்சங்களிலும் வேறுபடுகிற நாம் எவ்வாறு பொதுப்பாதை ஒன்றை காண இயலும் என நேரு பதில் அளித்தார்.
  As Jayaprakash, for whom I have always had a good deal of affection, is entirely opposed to both my domestic and foreign policies, I do not quite know how both of us  together will chalk out a common path. If this so between us two, what  of a larger crowd?  We are all, I suppose rather lonely persons, sometimes doubting what we ourselves say or do..என நேருவின் பதிலை ஹிரன்  மேற்கோள் காட்டுகிறார்.
வகுப்புவாத  பைத்தியக்காரர்களையும் வைத்துக்கொண்டுதான் நாம் நகர்ந்து முன்னேறவேண்டும். அவர்களின் பாதை ஆபத்தானது. வெறுப்பின்பாதையது. அது இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன், சீக்கியர் என எந்த பெயரில் வந்தாலும் ஆபத்தானது என்றார் நேரு. மதசார்பின்மை குறித்த அம்சத்தில் நேருவின் பாத்திரத்தை பாராட்டியே சொல்கிறார் ஹிரன். மதசார்பின்மையில் பலகுறைகளை நாம் காண்கிறோம் எனில் அதற்கு நிலவும் சூழலைத்தான் குறை சொல்லவேண்டும். அதை சரியாக உணர்ந்து தீர்க்கவே ஜவஹர் விழைந்தார்.
 If there are lacunae in India's secularism and many defects still in its working, the blame devolves on our conditions and our own faults which were felt and sought to be rectified by none more genuinely and staunchly than by Jawaharlal Nehru  என ஹிரன் முகர்ஜி எழுதியுள்ளார்.
நாடுபிரிவினை ஆன வலிமிகுந்த தருணத்தில் நேரு நேரில் சென்று நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துகொண்டிருந்தார். சமாதானத்தையும் காரணகாரிய சிந்தனையையும் சுமந்து அவர் சென்றார் (Played the role of Cociliator and the voice of reason)  என ஜக்ரியா சொல்கிறார். இருபக்கத்திலிருந்தும் மக்களின் பெரும் இடப்பெயர்வு நடந்தேறியது. 90 லட்சம் சீக்கியர்களும், இந்துக்களும் பாகிஸ்தான் (மேற்கு மற்றும் கிழக்கு) பகுதிகளிலிருந்து இந்தியா வந்தனர். இந்தியப் பகுதியிலிருந்து 60 லட்சம் முஸ்லீம்கள் பாகிஸ்தான் சென்றனர். பிரிவினை காலத்தில் பலியானவர்கள் மதிப்பீடு 8 லட்சம் வரை சென்றது.
இந்தியாவில் திட்டமிட்ட கலவரங்களில் அகலிகள், ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் முன்நின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை- சாவின் நெடி, இரத்த வாடை இன்னும் வீசுகிறது என நேரு மவுண்ட்பாட்டனுக்கு எழுதினார் (There was still an odour of death, a smell of blood and burning human flesh).
 நேரு லியாகத் உடன் சேர்ந்து பார்வையிட சென்றபோது I am sick with horror  என்றார். எட்வினா மவுண்ட்பாட்டன் உட்பட நிவாரணப் பணிகளில் இறங்க வேண்டியிருந்தது. நேரு படேலிடம்  we cannot encourage this business of Muslims leaving India என்றார். இந்தியாவின் அனைத்து முஸ்லீம்களையும் பாகிஸ்தானால் தாங்கமுடியாது என எடுத்துரைத்தார்.
டில்லியில் மட்டும் அகதிகள் முகாமில் 1.2 லட்சம் இஸ்லாமியர்கள் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை ஆங்காங்கே குடியேற்றினால் ஏற்படும் விளவுகள் பற்றியும்  ghettos  ஆக வைப்பது குறித்தும் படேலுடன் தொடர்ந்து நேரு விவாதிக்கவேண்டியிருந்தது. அவர்கள் டில்லியிலேயே மறுகுடியமர்வு செய்யப்படவேண்டும் என்பதில் நேரு உறுதியாக இருந்தார்.
 காந்தியின் படுகொலையை தொடர்ந்து இந்துமகாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. பிப்ரவரி 1948ல் சாவர்க்கரும் கைது செய்யப்பட்டார். அமைச்சராக இருந்த ஷியாமா பிரசாத்திடம் கலவரங்கள் தனியும்வரையாவது இந்து மகாசாபாவின் காவிக்கொடியை அமைச்சர் வீட்டில் இறக்கிவையுங்கள் என்பதை ஷியாமா ஏற்கவில்லை.
When communal violence broke out in East and West Bengal in the winter of 1949, Patel’s preferred solution was once again large-scale population exchanges. Instead, in April 1950, Nehru was able to persuade the Pakistan Prime Minister Liaquat Ali Khan to sign the ‘Delhi Pact’ with him, which asserted the right of minority communities in both India and Pakistan to equality of citizenship irrespective of religion – an underlining of Nehru’s victory over Patel on the issue of nationality for Muslims in India.  என சொல்கிறது ஜகாரியாவின் பதிவு.
இந்து மகாசாபவும் வகுப்புவாதமும் என்கிற கட்டுரை ஒன்றும் நேருவின்  Recent Essays புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. நேரு பனாரஸ் பல்கலையில் நவம்பர் 12, 1933 ஆற்றிய உரைதான் அது.
 இந்து மகாசபாவின் பிரிவான ஆர்யகுமார் சபா இந்திய நாட்டில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை ஒழித்து இந்து ராஜ்யத்தை உருவாக்கவேண்டும் என பேசி வருகிறது. மகாசபாவின் தேசியம் என்னெவென்று நமக்கு புரிகிறது.  தேசியம் என்கிற உருவில் குறுகிய வகுப்புவாதமே தவிர வேறல்ல. அந்நிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும். சோசலிசத்தை எதிர்த்தும் இந்து மகாசபா தலைவர்கள் பேசிவருகிறார்கள். அவர்களின் சந்தர்ப்பவாத முட்டாள்தனத்தை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியமுள்ளது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.
அவரது உரைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இப்பொழுதெல்லாம் தினசரி பத்திரிகைகள் என்னை விமர்சித்து எனக்கு டானிக் தந்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் எனது நன்றி மட்டுமே எனச்சொல்லி அதனை நேரு எதிர்கொண்டார்.  வருகிற விமர்சனங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல நேரு விரும்பவில்லை. தனிநபர் தாக்குதலில் இறங்காமல் பொறுப்புடன் பதில் தர அவர் நேரம் எடுத்துக்கொண்டார்.
ஆர்யகுமார் சபா அப்படி ஒரு தீர்மானத்தை இயற்றவில்லை என்கிறார்கள். அப்படி இயற்றாமல்  வந்த தகவல் அடிப்படையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க நேரு தயங்கவில்லை. அதே நேரத்தில் இந்து மகாசபா வகுப்புவாத அமைப்பு என்று சொன்னது சரியே என்றார். முஸ்லீம் வகுப்புவாதம் பற்றி ஏன் பேசவில்லை என விமர்சித்தவர்களுக்கு, தான் இந்து பார்வையாளர்கள் மத்தியில் பேசும்போது அவர்களின் பெயரால் நடத்தபடும் அமைப்பின் பிற்போக்குத்தனத்தை சுட்டிக்காட்டவேண்டியது கடமை என உணர்ந்ததாக தெளிவுபடுத்தினார்.
 ஆகா கான் போன்ற தலைவர்களையும் அவர் விமர்சிக்காமல் இல்லை. வட்டமேஜைக்கு சென்ற முஸ்லீம் தலைவர்களின் நடவடிக்கைகளையும் பிற்போக்கானது என்ற விமர்சனத்தை நேரு முன்வைத்தார்.
அரசியல்வகைப்பட்டு ஏற்க தகுந்த பொதுப்புள்ளிகள் இருந்தால் வகுப்புவாதிகளுடன் கூட வேலை செய்யமுடியும். ஆனால் முற்றிலும் எதிர்மறைத்தனமை என்றால் அது சாத்தியமாகாது- போராடவேண்டியும் இருக்கும் என்கிற பதிலையே நேருவிடம் நாம் பெறுகிறோம்.
”..personally I think that it is generally possible to cooperate with communalists provided the political objective is the same. But between progress and reaction, between those who struggle for freedom and those who are content with servitide, and even wish to prolong it, there is no meeting ground.. Honest  communalism is fear ; false communalism is political reaction ”
இரண்டுவகை வகுப்புவாதத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. காங்கிரஸ் நடவடிக்கையில் சற்று தொய்வு ஏற்படும்போதெல்லாம் இந்து மகாசபா விமர்சனம் என்ற பெயரில் தனது பிற்போக்கு கொள்கைகளை முன் நிறுத்தும்.  It must be remembered that the communalism of a  majority must of necessity bear a closer resemblance to nationalism than the communalism of a minority group. One of the best test of its true nature is whole relation it bears to the national struggle.  என நேரு எழுதியிருந்தார். பெரும்பான்மை வகுப்புவாதம் தேசிய சாயலை கொள்ளும். ஆனால் தேசியப்போராட்டம் என வரும்போது அதன் முகம் வெளிப்படும் என்றார் நேரு.
பாய் பரமானந்தஜி அவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பால் இந்துகளுக்கு நட்டம் எனப்பேசுவது தேசவிரோதமில்லையா என கேள்வி எழுப்பினார் நேரு. அவர் இந்து தேசியவாதம் எனப் பேசிவிட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைப்பு என நடைமுறையில் இருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை நேரு முன்வைத்தார். நேரு இந்து மாநாடு ஒன்றில் மூஞ்சே பேசியதையும் (மே 17, 1933) சுட்டிக்காட்டினார். அவர்கள் மகாத்மாவுடன் ஒத்துழைப்பு என்பது இல்லை என்கின்றனர். சட்டரீதியானது எதுவோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பது என அறிவித்து ஒத்துழையாமைக்கு எதிராக நிற்கின்றனர் என்பது நேரு முன்வைத்த விமர்சனம்.
”The Mahasabha never had any faith in the kind of non coopeartion which Mahatma Gandhi has been preaching and Practising. It believes in the eteral Sanatan Law of stimulus and response, namely responsive cooperation. The Mahasabha holds that whatever may be the Constitution of the legislatures, they should never be boycotted"  வகுப்புவாதிகள் எவ்வாறு பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதிலும் விடுதலை போராட்ட இயக்கத்திற்கு ஒத்துழைக்காமலும் இருந்தனர் என்பதை மற்ற தேசியத்தலைவர்களைவிட நேருவே அதிகமாக வெளிக்கொணர்பவராக இருந்தார்.
 மக்களின் துன்பங்களை போக்கும் அவர்களின் ஆவல்களுக்கான போராட்டங்களில் இந்து மகாசபா நிற்காமல் தனக்கான உலகம் என ஒன்றில் நின்றுகொண்டிருக்கிறது.
இன்று வகுப்புவாத அமைப்புகள் பின்னால் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் வகுப்புவாத மோதல் என்றால் ஏராளமானவர் இரையாகிவிடுவர். இவர்கள் மக்கள் கோரிக்கைக்காக நிற்கிறார்களா என்ற கேள்வியையும் நேரு எழுப்பினார். இந்து முஸ்லீம் சீக்கியர்கள் என பல்வேறு பகுதியினரின் இணைவில்தான் தேசியம் உருவாகிறது. இதன்பொருள் அவரவர் கலாச்சார தன்மைகள் ஒழியவேண்டும் என்பதல்ல என நேரு அக்கட்டுரையில் விளக்கி செல்கிறார்.
 உயர்ந்த சிந்தனையாளர்கள் பலர் மதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதை தாம் அறிந்தாலும் தன்னை இந்து- இஸ்லாம்- கிறிஸ்துவம் என எம்மதமும் ஈர்க்கவில்லை என அவர் இந்தியாவை கண்டுணர்தலில் எழுதியிருந்தார். அவை மூடநம்பிக்கைகளையே, வறட்டுக்கோட்பாடுகளையே சார்ந்து இயங்குகின்றன. அறிவியல் வெளிச்சம் அங்குபடுவதில்லை.
"Religion, as I saw it practised, and accepted even by thinking minds, whether it was Hinduism or Islam or Buddhism or Christianity, did not attract me," … seemed to be closely associated with superstitious practices and dogmatic beliefs, and behind it lay a method of approach to life's problems which was certainly not that of science."
ஒழுங்கமைக்கப்படும் மதம் என்பது தன்னை பயமுறுத்துவதாக நேரு குறிப்பிடுவார். அதை பலநேரங்களில் கண்டித்தே அவர் பேசிவந்துள்ளார். வறட்டுத்தனம், மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான நம்பிக்கை மற்றும் சுரண்டலுக்கு துணைப்போவதாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து அவர் தன் அறிவியல் பார்வையை முன்வைத்துக்கொண்டிருந்தார்.


No comments:

Post a Comment