பிபின் சந்திரபால் (1858-1932) காந்திக்கு முன்னரான முப்பெரும் இணைத்லைவர்கள் லால்-பால்-பால் வரிசையில் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர். தேசிய சிந்தனையை கட்டியமைத்த வீரத்தலைவர். புரட்சிகர கருத்துக்களின் தந்தை என அவர் காலத்திலேயே பெயர் பெற்றவர். ஆங்கிலேயே கல்வி மட்டுமல்லாது பெர்ஷிய- சமஸ்கிருத பின்புலமும் நிறைந்தவர்..படிப்பாளி- பேச்சாளர்- எழுத்தாளர்- பத்திரிகைவாதி- கல்வியாளர். ”அய்ரோப்பிய சிந்தனை மேம்பட்டது- இந்திய சிந்தனை முறை தாழ்ந்தது - இந்தியாவிற்கென வரலாறு ஏதுமில்லை- காட்டுமிராண்டி நாகரிகத்துடன் மிருகங்களை வணங்குபவர் என்ற எழுத்து முறைகளுக்கு எதிராக” அப்போதிருந்த தேசியத் தலைவர்கள் போராடவேண்டியிருந்தது.பிபின் அதனை விரிவாக செய்தார். இந்தியாவின் தொனமையை பேசினார். இந்து கலாச்சாரத்தின் மேலான சிந்தனைமுறையை எடுத்து விளக்கினார். ஆனால் இன்றுள்ள இந்துத்துவ வாதிகள் முறையைப் போன்று பிறறை தாக்கி அழிப்பது என்ற வகையில் இல்லாமல் நமது மேம்பட்ட மரபை பிரிட்டிஷ்காரர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் 1911ல் எழுதிய புத்தகம் The Soul Of India-இந்தியாவின் ஆன்மா. பிரிட்டிஷ் குழந்தைகளுக்கு அன்புடன் விளித்து எழுதப்பட்ட கடித நடை. இந்திய தத்துவ மரபும்- சிந்தனை முறையும் விவாதிக்கப்படுகின்றன. பொதுவாக ஆரியமேன்மை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய தாக்கம் குறித்தும் அதே நேரத்தில் இரண்டும் சமவாழ்வு வாழ்ந்து வந்த நிலையும் விவரிக்கப்படுகின்றன. புத்தமதம் விவாதிக்கப்படுகிறது. அய்ரோப்பிய சிந்தனமுறைக்கும் இந்து சிந்தனைமுறைக்கும் உள்ள வேறுபாடு பெருமளவில் விவாதிக்கப்படுகிறது. தேக-மன-புத்தி சுத்தம் பேசப்படுகிறது நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க பத்திரிகைகள், பிரிட்டிஷ் பத்திரிகைகள், ஏராள அறிவியல் நூல்கள் எல்லாவற்றையும் பிபின் பெற்று படித்து உள்வாங்கி பிரிட்டிஷாருடன் கூர்மையான விவாதம் நடத்தியிருக்கிறார். தேசபக்தி, அறிவியல் பார்வை , அடுத்தவரை புண்படுத்தாத மதபக்தி , சுய கலாச்சார பெருமிதம், பொருளாதர அறிவு பிரமிக்க வைக்கிறது.
The Soul Of India வில் நடை பல இடங்களில் poetic ஆக- அவரின் பெரும் மேதாவிலாசத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. அவரின் இந்திய வரலாற்று அறிவு குறித்த விமர்சனத்தை ரொமிலா தாப்பர், இர்பான் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. வைஷ்ணவ நண்பர்களுக்கு மிக இதமான புத்தகமாக இருக்கும் ராதையும்- கிருஷ்ணனும் கொண்டாடப்படுகிறார்கள். விலையும் ரூ150க்குள்தான் இருக்கும்
Comments
Post a Comment