https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, October 15, 2016

ஆனந்த் டெல்டும்டே எழுதிய Anti Imperilaism and Caste Annihilation 2005ல் வெளியானது. அப்புத்தகம்  தோழர் எஸ் வி ராஜதுரை மொழியாக்கத்தில் தமிழில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’ என 2009ல் விடியல் பதிப்பகத்தால் கொணரப்பட்டுள்ளது. டெல்டும்டே  அம்பேத்காரிய மார்க்சிய அறிஞர். IITயில் பணிபுரிபவர். அம்பேத்கார் பேரன் என்ற அடையாளத்தைவிட தனது சுய சிந்தனை செயல் அடையாளங்களுடன்  திகழ்ந்து வருபவர். தலித்-மார்க்சிய இயக்கங்களின் போதாமையை தொடர்ந்து நட்புடன் விமர்சித்து வருபவர் . இரு இயக்க ஒத்திசைவிற்கு கருத்துக்களை முன்வைத்துவருகிறார். சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக களப்பணியாற்றி வருகிறார்.

 இப்புத்தகம் 260 பக்கங்களே ஆனாலும் மிகுந்த கவனத்துடன் படிக்கவேண்டிய புத்தகம். தலித்- மார்க்சிய இயக்கஙகளுக்களின் நடைமுறை- சித்தாந்த உரையாடல் நிரம்ப இடம் பெற்றுள்ள புத்த்கம். 10 பகுதிகளையும் ஒருவரால் படிக்க முடியாமல் போனாலும் Ch 2. சாதிதான் பிரச்சனை, 3. சாதி பற்றிய இடதுசாரிகள் புரிதல், 7. சாதியும் வர்க்கமும்  9. செய்யவேண்டியதென்ன போன்ற நீள் கட்டுரைகள் தலித் மற்றும் மார்க்சிய இயக்கத்தார்கள் படித்து விவாதிக்க வேண்டிய பகுதிகளாக எனக்குப் படுகிறதுஇடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவ்சியமென கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே.. 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை- பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாக தெரியவில்லை என கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார். நேற்று 14-10-2016 சம்பத் அவர்கள் ஆங்கில இந்து நாளிதழிலும் ஜெய்பீம் லால் சலாம் ஓத்திசைவு இயக்கங்களை பரிந்துரைத்திருந்தார். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இரு இயக்க  ஒத்திசைவு- இணை இயக்கங்கள் சமுக மாற்றத்தில் முன்னேற்றத்தில் பெரும் பங்களிக்கும் என்பதே இன்றைய சூழல்.

No comments:

Post a Comment