குஜராத் கோப்புகள் என்ற புத்தகம் இளம் பெண் பத்திரிகையாளர் ரானா அயூப் ஆல் பல அபாயங்களை ஆபத்துக்களை எதிர்கொள்ளும் கடும் போராட்டத்திற்கு பின்னர் எழுதப்பட்டுள்ளது. இன்று மீண்டும் குஜராத் கலவரங்களை பற்றிய விவாத சூட்டினை ரானா புத்தகம் அதிகப்படுத்தியுள்ளது. ரானா மைதிலிதியாகி என்ற பெயரில் மோடி முதலமைச்சராக- அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்த 2010ல் அகமதாபாத்தில் 8 மாத காலம் தங்கி உயிரை பணயம் வைத்து சேகரித்த ரியல் திரில்லர் பேட்டிகள்- மாநில அரசின் உயர் அதிகாரிகளின் மனதிறப்புகள்-அரசாங்க எஸ்டாபிலிஷ்மெண்ட் தான் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க நடத்திய மனசாட்சியில்லா அதர்ம செயல்கள்- அதிரடி கொலைகள் என சம்பவங்களின் அடுக்காக பதிவிடப்பட்டுள்ளது. இந்திய மனோதர்மம்- தர்ம சாஸ்திரம் என கொள்கை பிரகடனங்கள் செய்வர்கள் தமக்கு அரசியல் எதிரி- பண்பாட்டு எதிரி என பிறரை அழித்தொழிக்கும் அடாவடிகள் கோப்புகளில் பதிவாகி வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவோர்- அவ்வாறு நடந்திருந்தால் அவை கண்டிக்கவும் அம்பலத்தப்படுத்தவும் தகுந்தவையே என சொல்வதில்லை.
இப்புத்தகம் குறித்த அமர்வு ஒன்றை தோழர் பீட்டர் அக் 8 2016ல்(மாலை) பல்லாவரத்தில் அமைத்துள்ளார். பீட்டர் தனது சிந்தனை பேரவை மூலம் இது போன்ற டாபிகல் அமர்வுகளை 40க்கும் மேற்பட்டு நடத்தியுள்ளார். அவரின் தொடர் முயற்சி வியக்கதகுந்தது. கடந்த மாதம் தனது பெரும் உழைப்பால் சிறையில் பல்லாண்டுகளாக வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க அமர்வு ஒன்றை எக்மோரில் ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு மார்க்சிய அறிஞர்களும் தோழர் முத்தரசனும் அதில் பங்கேற்றனர். சிந்தனை பேரவையில் கட்சி சார்ந்த- கட்சி சாராத மார்க்சிய பெருமக்கள், மனித உரிமை இயக்க போராளிகள் என பலரையும் பயன்படுத்தி வருகிறார் பீட்டர். அமர்த்யாசென் ஆக்கங்கள் குறித்து நான் கூட உரையாற்றியதாக நினைக்கிறேன். தோழர் பீட்டர் சென்னை பெருநகர AITUC தலைவர்களுள் ஒருவர். கண்டோன்மெண்ட் தொழிற்சங்க பொதுச் செயலராக இருந்தவர். அதன் அகில இந்திய பேச்சுவார்த்தை ஜேசிஎம்மில் இருந்தவர். தோழர் ஜெகனை தங்கள் சங்கத்திற்கு தலைவராக வேண்டும் என வற்புறுத்தி
வைத்திருந்தவர் தோழர் பீட்டர். குடவாசல் சார்லஸ் என்ற சிறுகதை எழுத்தாளரின் சகோதரர். பீட்டரின் பன்முகப்பணி
தொடர்ந்து சிறக்கட்டும்!
Comments
Post a Comment