முதல் உலகப்போர்,சோவியத் புரட்சி நடந்த சூழல், லெனின் , ட்ராட்ஸ்கி போன்றவர்களின் பங்களிப்பு, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வருதல் தொடர்ந்த கோர்பசாவ் காலம் வரையிலான சோவியத் நாடு குறித்த உரையாடல்கள்- மார்க்சியர், மார்க்சியர் அல்லாதவர்களின் எழுத்துக் குவியல் ஏராளம் உள்ளன. நூற்றாண்டு என்பதால் அவை மறுவாசிப்பிற்கு உள்ளாகும் . புதிய கருத்துக்கள், 20ஆம் நூற்றாண்டு சோசலிச கட்டுமான அனுபவங்களிருந்து தற்போது நடந்துவரும் 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் குறித்த் உரையாடல்களை செழுமைபடுத்திக் கொள்வது என்பதும் மார்க்சிய வட்டரங்களில் பெரிதாக நடந்து வருகிறது. அதில் சிறிய அளவிலாவது பயணிக்க வேண்டும் என்ற விழைவு உள்ளது. உலகை குலுக்கிய 10 நாட்கள் -ஜான் ரீடு வருவஹற்கு முன்பாகவே லூசி ப்ரயண்ட் அம்மையார் எழுதிய ருஷ்யாவில் ஆறு செம்மாதங்கள் வெளியானது. நேரமுள்ளவர்களும் தெரிந்து கொள்ள விரும்புவர்க்கும் உதவியாக கீழே அப்புத்தகம் தரப்பட்டுள்ளது(Face Bookல்)
German Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸ் குறிப்பு சிதறல்கள் - ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...
Comments
Post a Comment