https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, December 18, 2016

மாவோ செகுவாரா ஆரம்ப வாசகர்களுக்கான புத்தகங்கள்




எழுத்தாளர் மருதன் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் ரிபோர்ட்டர் பத்திரிக்கை துறையிலிருந்து 10 ஆண்டுகளாக பல புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் சார்பில் எழுதி வந்துள்ளார் . 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூரில் இன்பஜோதிவிலாஸ் என்ற புத்தகக்கடையில் அவரது இருபுத்தகங்களை காஸ்ட்ரோ - லெனின் வாங்கியதாக நினைவு. கிண்டிலில்( KINDLE) தமிழ் பத்தகங்கள் வருவதாக எங்கள் வீட்டு இரு இளைஞர்கள்  (கார்த்தி நிர்மலிடம் சொல்லி) மூலம் எனக்கு தெரிய வந்ததுமுதலில் என்னை கிண்டிலில் கவர்ந்த தமிழ் புத்தகம் ராமச்சந்திர குஹா எழுதியுள்ள புத்தகம். இந்தியாவின் நவீன சிற்பிகள் பற்றிய எளிய குறிப்புகளும் இன்றுள்ள சூழலில் தேவைப்படும் அவர்களது முக்கிய ஆக்கங்களுமானது. பின்னர் மருதனின் இரு புத்தகங்களை மூன்று நாட்களில் படிக்க முடிந்தது. கிண்டிலில் கண்ணுக்கு சிரமம் இல்லாமல் படிக்க முடிகிறது. கிண்டில் உபயம் நிர்மல்.
மருதனின் புத்தகங்கள் ஒன்று மாவோ வாழ்க்கை, மற்றது செகுவாரா வாழ்க்கை. மிக எளிய நடை. பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுத்து நடை. எனக்கு காமிக்ஸ் போல் பட்டாலும் மாணவர்களுக்கு மாவோவை, காஸ்ட்ரோவை, செகுவாராவை எளிய வகையில் அறிமுகப்படுத்தும் புத்தகங்களாக இருக்கும்ஆரம்பநிலை வாசகர்களுக்கும் கூட மருதன் புத்தகங்கள் உதவலாம். அவர்  Private Life of Mao( மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் படித்துவிட்டு  டாக்டர் ஒருவரிடம் பிரைவேட் லைபை படிக்க பரிந்துரைத்ததாக செய்தி) Unknown Story of Mao, கனவிலிருந்து போராட்டத்திற்கு- செகுவாரா போன்ற புகழ்வாய்ந்த புத்தகங்களை மருதன் ரெபெரன்ஸில் காட்டியுள்ளார். 2002ல் சே கனவிலிருந்து போராட்டம் புத்தகம்  ரூ 300க்கு விடியல் வெளியிட்டது. அப்புத்தகம் வந்தவுடன் 5 புத்தகங்கள் எனக்கு அனுப்பப்பட்டன. திருவாரூர் கல்லூரிக்கு அப்புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.    NFTE மாநில செயலர் பொறுப்பில் இருந்த ஆர்.கே ஒன்றை பெற்றுக்கொண்டது நினவிற்கு வருகிறது.

தற்போது சுவாரஸ்யமான  எழுத்து முறையிலிருந்து விடுபட்டு ஆழமாக எழுதி வருவதாக மருதன் குறிப்பிட்டுள்ளார். ஏராள புத்தகங்களை எழுதிவரும் அவரது பணி தொடரட்டும்.

No comments:

Post a Comment