https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, December 15, 2016

NEWAGE + PEOPLES DEMOCRACY


நியுஏஜ் தொடர்ந்து வரக்கூடிய வார இதழ். டெல்லியிலிருந்து சி பி அய் கட்சியால் கொணரப்படும் பத்ரிக்கைடிசம்பர் 4-10 2016 இதழ் அதன் வால்யூம் 64 இதழ் 49யை காட்டுகிறது. என் போன்றவர்களே 35 ஆண்டுகளுக்கு மேலாக  படித்து வருகிற இதழ். புகழ்வாய்ந்த தலைவர்கள் டாங்கே, புபேஷ்குப்தா, ஹிரன்முகர்ஜி, இந்திரஜித் குப்தா, இந்திரதீப் சின்ஹா, ராஜசேகர் ரெட்டி, பரதன் , கிருஷ்ணன், பலராம், அகமது போன்றவர்கள் ஏராள கட்டுரைகள் தந்துள்ளனர். புபேஷ் எழுதிய பாலிமிக்ஸ் கட்டுரைகளை நாங்கள் விரும்பி படித்தோம். பெரோஸ்ட்ராய்கா-கிளாஸ்னாட் காலத்தில்  எதிரிரும் புதிருமான  கட்டுரைகள் இடம் பெற்றன. இந்திய அரசியலில் தொழிலாளி வர்க்கத்திற்கு - விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இந்திய அரசியலை இடதுசாரி ஜனநாயக பக்கம் திரும்ப வைப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிற இதழ். தனி இதழ் ரூ7 ஆண்டு சந்தா ரூ 350  தற்போது சமீம் ஃபைசீ எடிட்டராக இருக்கிறார்.
டிசம்பர்  4 இதழில் காஸ்ட்ரோ பிடலுக்கு புகழஞ்சலி  சில பக்கங்களில் இடம் பெற்றுள்ளது. தோழர்கள் ராஜா, வல்லப் சென்குப்தா தோழர் காஸ்ட்ரோ  குறித்த அனுபவ பதிவுகளை தந்துள்ளனர். அம்பேத்கார்-அரசியல் அமைப்பு சட்டம் காப்பது அறநெறிகள் குறித்தும் ராஜா கட்டுரை இடம் பெற்றுள்ளது. மோடி அரசின் 500/1000 பிரச்சனையால் மக்கள் அவதி, எதிர்கட்சி அமைப்புகளின் போராட்டங்கள் குறித்து பல்வேறு பக்கங்களில் செய்திகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் பெண்களின் சர்வதேச மாநாடு ஏதென்ஸ் நகரில் முடிந்தது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் குறித்தும் அன்னி ராஜா எழுதியுள்ளார்.


பீப்பிள்ஸ் டெமாக்ரசி  சிபிஎம் கட்சியின் வார இதழ். டெல்லியிலிருந்து வருகிறது.  தற்போது அதன் வால்யூம் 50 என்பது குறிப்பிடப்படுகிறது. கருத்து  கொள்கை வேறுபாடுகள் காரணமாக கட்சி உருவாக்கத்தின் பின்னர்  வெளிவரத்துவங்கிய இதழ். 70-80கள்வரை கடுமையான விமர்சனங்களை நியுஏஜ்- சிபிஅய் மீது வெளியிட்டு வந்த இதழ். 1980கள் துவங்கி பெரும்பாலும் ஒத்த சிந்தனைகளை  அரசியலை இருபெரும் இடதுசாரி பத்திரிக்கைகளும்  வெளியிட்டு வருகின்றன. புகழ்வாய்ந்த தலைவர்கள் நம்பூதிரிபாட், ரணதிவே, பசவபுன்னையா, சுர்ஜித், ஜோதிபாசு போன்றவர்களின்  கட்டுரைகள் வந்த இதழ். தற்போது பிரபாத் பட்னாயக், பிரகாஷ் காரத், யெசூரி போன்றவர்களின் பல சிறப்பான கட்டுரைகள் வரக்கூடிய இதழ். என் போன்றவர்களே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக படித்துவரும் இதழ். இளம் வயதில் தோழர் பசவபுன்னையா கட்டுரைகள் மிக நீளமாக வருகிறதே என பேசிக்கொள்வோம். மிக ஆழமாக அரசியல் நிலைமைகளை- பொருளாதார குறிப்புகளை அலசும் வார பத்ரிக்கை . தொழிலாளி வர்க்கம்- விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுக்கும் இதழ். தற்போது தோழர் பிரகாஷ் காரத் எடிட்டராக இருக்கிறார்.
டிசம்பர் 11 இதழ் பிடல் குறித்த புகழஞ்சலி செய்திகளை தந்துள்ளது. சி டி யு அகில இந்திய மாநாடு முடிவுகள் குறித்த கட்டுரையை அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹேமலதா தந்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாடுதழுவிய சத்துணவு தொழிலாளர்கள் கூடி நடத்திய போராட்டம் குறித்த கட்டுரை ஒன்று பதிவாகியுள்ளது. குடிசைத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான அன்றாட கூலி பெறும் தொழிலாளர்கள் மோடியின் 500/1000 கொள்கையால் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட்டிற்கு முன்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பது வழக்கமாக உள்ளது. அரசு நிராகரித்தாலும் கூட சில அழுத்தங்களை தொழிற்சங்கங்களால் செய்யமுடிகிறது. இம்முறை மத்திய சங்கங்கள் கொடுத்த குறிப்பின் நகல் இவ்விதழில் இடம் பெற்றுள்ளது ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர வேலைகளில் அமர்த்தினால் சமஊதியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரி 5 லட்சம்வரை கூடாது என்பதும் கோரப்பட்டுள்ளது. BSNLEU பொதுசெயலர் தோழர் அபிமன்யு டிசம்பர் 15  வேலை நிறுத்தம் குறித்து எழுதியுள்ள கட்டுரையும்  இவ்விதழில் வந்துள்ளது.

No comments:

Post a Comment