https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, December 27, 2016

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL

SPECIFIED BANK NOTE (SBN) WITHDRAWAL
நவம்பர் 8 இரவு பிரதமர் மோடி அரசாங்கம் தனது  அதிரடி அறிவிப்பின் மூலம் ரூ 500, ரூ 1000 தாள்கள் செலாவணியாகாது- செல்லத்தக்கவையல்ல என நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. டிசம்பர் 30வரை தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி சேமிப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றார். நோக்கம் குறித்தும் - சரி தவறு- மக்கள் துன்பம் பற்றி ஏராள கட்டுரைகள்- மீடியாக்களில் விவாதங்கள் தினம் நடத்தப்பட்டுவருகின்றன. மக்கள் வாய்ப்புள்ளவற்றை கவனித்து வருவர். போராட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் சில தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
 மார்ச் 2016வரை 500, 1000 கரன்சி 14.18 லட்சம் கோடி மதிப்பில் புழக்கத்திற்கு விடப்பட்டிருந்தது. நவம்பர் 8 வரை கணக்கிட்டால் 15.44 லட்சம் கோடி என பாரத வங்கியின் பொருளாதார ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது . மார்ச் வரை தாள்கள் எண்ணிக்கை  என பார்த்தால் 1507.7 கோடி தாள்கள் 500 ஆகவும், 632.6 கோடி தாள்கள் 1000 ஆகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது மொத்த ரொக்கத்தில் 86 சதம். ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி நவம்பர் 10-27 18 நாட்களில் 8.44 லட்சம் கோடி மதிப்புள்ள 500, 1000 வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் அறிவிப்புப்படி 10 லட்சம்கோடி வரலாம். டிசம்பர் 30க்குள் 13 லட்சம் கோடி அளவில் வந்துவிடலாம் என்கிறார்கள். எனவே ரொக்கப்பணம் அப்படியே கருப்புபணம் என பேசப்பட்டது ஏமாற்று என ஆகலாம். வங்கி டெபாசிட்டில் வந்த பின்னர் அந்த வெள்ளைப்பணத்தில் கருப்புப்பணம் கண்டுபிடிப்போம் என்கிறது அரசாங்கம் .புரியவில்லை.
அடுத்து மக்கள் அவதி. நீள் வரிசை. சிலரின் சாவு என்கிற வேதனையெல்லாம் மாபெரும் அரசிற்கு பெரிய விஷயமாக இருக்காது.

பாவம் ரிசர்வ் வங்கி. பலிகடாவாகியுள்ளதுகடந்த நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான வேலை நாட்களீல் தாங்கள் 5,92,613 கோடி மதிப்பில் செலாவணி ஆகக்கூடிய கரன்சியை கவுண்டர்களுக்கும், ஏடிஎம்களுக்கும் கொடுத்ததாக டிசம்பர் 21 அன்று அதன் உதவி அட்வைசர் மூலம் அறிவிப்பை கொடுத்துள்ளது. அதாவது கட்டுகட்டாக 6லட்சம் கோடி மதிப்பிற்கு ரொக்கத்தை வங்கிகளுக்கு பட்டுவாடா செய்திட அனுப்பியுள்ளதக தெரிவிக்கிறதுதாள்களின் எண்ணிக்கை என பார்த்தால் 2260 கோடி தாள்கள். இதில் 10, 20, 50, 100 க்கான மொத்த எண்ணிக்கை தாள்கள் 2040 கோடி . புதிய 2000, 500 தாள்கள் 220 கோடி.  ஒப்பீட்டு பார்த்தால் மக்கள் கஷ்டம் புரியும்மோடியும் அமைச்சர்களும் பழைய அரண்மனை ராணி போல் கேக் இல்லயெனில் ரொட்டி சாப்பிடலாமே என பேசி வருகிறார்கள். ரொக்கமற்ற பரிவர்த்த்னை. அதற்கு லாட்டரி லக்கி பரிசு என..
500, 1000 மதிப்புகளில் ஏறத்தாழ 2200 கோடி தாள்கள்- 14 லட்சம் கோடி மதிப்பில் செல்லாது என அறிவிக்கப்பட்டு  வெறும் 6 லட்சம் கோடி மதிப்பில் 10,20,50,100, 500, 2000 புதிய புழக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலும் புதிய 2000, 500 தாள்கள் வெறும் 220 கோடிதான். அதாவது முன்பு இருந்த புழக்க எண்ணிக்கையில் 10 சதவீத எண்ணிக்கை தாள்கள்சில மாதங்களில் சற்று கூடுதலாக அச்சிடப்பட்டால் கூட 30 சத எண்ணிக்கையை எட்டலாம். மீதி முழுக்க மொபைல் வங்கி, நெட்பேங்கிங், காசோஅலி பரிவர்த்தனை மூலமே ந்டைபெறவேண்டும் என்கிறது அரசாங்கம். இந்த 35 நாட்களில் பேடிஎம் என்கிற நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பல மடங்கு பெற்றுவிட்டட்து. 400 கோடிக்கு மேல் கமிஷன் சம்பாதித்து விட்டது. ஜியோ பாரத வங்கி இணைந்து மொபைல் வங்கியை ப்ரொமோட் செய்கிறார்கள். வலுத்தவன் எல்லாம் தனது மொபைல் வங்கியை பயன்படுத்து என ஆதாயம் பார்க்க நினைக்கிறான். பிஎஸ்என் எல் கூட பாரத வங்கியுடன் முயற்சிக்கிறது.

மார்க்ஸ்பசுவை வணங்கிறான் குரங்கை கும்பிடுகிறான்.. அவனிடம் முதலாளித்துவம் வளர்க்க  பிரிட்டன் முயற்சி குறித்து’ 160 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். ஆமாம் ஆச்சர்யமாக இருக்கிறது. வலதின் அரசியல் ஒருபக்கம் படு மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுமாகவும் மற்றொருபுறம் அதிரடி கார்ப்பரேட் முதலாளித்துவ சந்தையுடன் எவனையும்- கிராம மனிதனையும் கட்டிப்போடுவது என்பதாகவும் இருக்கிறது. இதுதான் இந்தியவகை முதலாளித்துவம் போலும்முதலாளித்தும் எல்லா நாடுகளிலும் எல்லா நேரங்களிலும் பிரபுத்துவ சிந்தனைகளை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தன் வளர்ச்சிக்கு தொந்திரவு இல்லையெனில் இருந்து விட்டு போகட்டும் என அனைத்து  பூர்வோத்திர அம்சங்களையும் விட்டுவிடுகிறது. இனி எல்லாமே’ பே ட்டி எம்’ தான். இல்லையென்றால் பட்டினிதான்.

1 comment: